Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
96
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 12

"ஹாய் குட் மார்னிங் சென்னை! எல்லா இல்லத்தரசிகளும் நீங்க கட்டிட்டு வந்த உங்க அருமைக் கணவனை டாடா காட்டி வீட்டிலிருந்து வேலைக்குத் துரத்திவிட்டாச்சா? அப்புறம் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்... நீங்க எல்லாம் இப்பதானே உங்க அம்மா உங்களை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பிவிட, தூங்கும் பொழுது போட்ட அந்த நைட்டியோடயே பல்லைத் துலக்காமல் அம்மா போட்டுத் தந்த டீயைக் குடிச்சிட்டு இருக்கீங்க... எப்படிச் சரியாக் கண்டுபிடிச்சிட்டேன் பாருங்க! என்று துள்ளலுடன் ஒலித்த குரல் சிறிதாக சிரிப்புச் சத்தம் கேட்டு ஓய்ந்தபின் என் குரலைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் ஹாப்பி மதர்ஸ் டே!" என்றவன் சிறு இடைவெளியின் பின்,

“பிரண்ட்ஸ்! இன்னைக்கு என் பொண்டாட்டி எனக்கு டீயைக் கொடுத்து எழுப்பிவிடும்போது, நானும் ஹாப்பி மதர்ஸ் டேன்னு சொன்னேன். அவங்க அதுக்கு என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க... நான் அப்படியே நடுங்கிப் போயிட்டேன்! நீங்களும் இப்படித்தானே உங்க அம்மாக்கோ, பொண்டாட்டிக்கிட்டயோ சொல்லிட்டு அசடு வழிஞ்சிங்க?

“ஆனா அப்புறம்தான் நிதானமா யோசிச்சுப் பார்த்தேன்... அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்னு! வருஷம் முன்னூத்தி அறுபத்தஞ்சு நாளும் நமக்காக ஓயாம உழைக்கிற அவங்களுக்கு, ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லிட்டு மத்த நாள் எல்லாம் கண்டுகாம இருக்கிறது எவ்வளவு பெரிய தப்பு?”

"பாவம் அவங்களும் வீட்டு வேலை, பிள்ளைகளைப் பார்க்கிறதுன்னு நாள் முழுதும் இழுபறியா இருக்காங்க. அவங்களுக்குச் சரியான ஓய்வு கொடுக்காம, வெறும் வாயால ஹாப்பி மதர்ஸ் டேன்னு சொன்னா கடுப்பு வராதா? சோ... நான் இன்னைக்குப் பின்னேரம் என் பொண்டாட்டியைக் கூட்டிட்டுச் சாப்பிடப் போறேன். அவளுக்குப் பிடிச்ச படத்துக்குக் கூட்டிட்டுப் போகப்போறேன். நீங்களும் உங்க அன்பானவங்களை எங்கேயாவது கூட்டிட்டுப் போங்களேன்... அவங்களும் சந்தோஷப்படுவாங்க!" என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த மித்ரன்,

சட்டெனக் குரலை மாற்றி, "என்ன பிரண்ட்ஸ்... ஆர்.ஜே பேசிக்கிட்டே இருக்கானே தவிர, இன்னும் பாட்டே போடலையேன்னு வருத்தப்படுறீங்களா? இதோ உங்களுக்காக, இந்தத் தினத்துக்கான சிறந்த பாடல்! குடும்பத்துக்காகவும், இந்த நாட்டுக்காகவும் ஓயாம உழைக்கிற எல்லா அம்மாக்களுக்காகவும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திலிருந்து ‘நீயே நீயே' என்ற பாடல் இதோ உங்களுக்காக..." என்று அவன் முடிக்க, பாடலின் இசை மெல்லத் வானொலியில் ஊடுருவி வெளியே ஒலிக்கத் தொடங்கியது.

வானொலியில் அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்க, அவன் சொன்னது போலவே தான் நறுமுகை வீட்டிலும் நடந்தது. நறுமுகையை எழுப்பிவிட்டு, அவள் கையில் தேநீரைத் தந்துவிட்டுப் போன பூங்குழலிக்கு, "ஹாப்பி மதர்ஸ் டே அம்மா!" என்று வாழ்த்துச் சொன்னாள் நறுமுகை.

"சரிதான் போடி... வேலையைப் பாரு" என்று செல்லமாகச் சலித்துக்கொண்டு அவர் சமையலறைக்குள் நகர, நறுமுகை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தேநீரை ரசித்தபடி அந்தச் சாக்லேட் குரலில் லயித்திருந்தாள்.

அவளருகே அமர்ந்து வானொலியில் ஒலித்த அந்தப் பாடலையும், மித்ரனின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த யாழினி, "நாமளும் சினிமாவுக்குப் போவோமா?" என்று ஆசையாகக் கேட்டாள்.

"நீ முதல்ல மாப்பிள்ளைக்கிட்ட அவங்க வீட்டுப் பிரச்சனை சரியாகிட்டான்னு கேளு" என்று பூங்குழலி நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டியபடி தனக்கான தேநீருடன் வந்தவர், நேற்று ஜவுளிக்கடையில் நடந்த ரகளையை அவரால் இன்னும் மறக்க முடியவில்லை.

"அம்மா... மித்ரன் சொல்லியிருக்கார்... ரிதன்யா ஒரு மணிநேரம் பேசாமல் விட்டாலே அவர் அண்ணா ஓடிப்போய் சமாதானப்படுத்திடுவாராம். நேற்று எங்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போயிட்டு, சாப்பிட்டு முடிஞ்சதும் முக்கியமான வேலைன்னு கிளம்பினார் தானே? அது கண்டிப்பா ரிதன்யாவைத் தேடிப் போய் சமாதானப்படுத்தத்தான் இருக்கும்" என்றாள் யாழினி சற்றே வருத்தத்துடன்.

"என்னடி இந்தப் பொண்ணு இப்படி இருக்குதே? கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு திமிர் பிடிச்சு ஆடுது... உன் கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாம நிம்மதியா நடந்திடுமா?" என்று பூங்குழலி கவலையுடன் கேட்க,

"அம்மா... எனக்குக்கூட டாக்டர் சாரோட கல்யாணம் பேசாம நின்றால் என்னன்னு தோணுது" என்று பட்டென்று சொன்னாள் நறுமுகை.

பூங்குழலி அதிர்ந்து மகளைப் பார்க்க, "இல்லம்மா... டாக்டர் சார் ரொம்ப நல்லவர். ஆனா அந்த ரிதன்யா கூடச் சேர்ந்து அவர் படுற கஷ்டத்தைப் பார்க்கும்போதுதான் பாவமா இருக்கு" என்று தன் எண்ணத்தைத் தெளிவுபடுத்தினாள் நறுமுகை.

பூங்குழலி மற்றும் யாழினியின் எண்ணமும் அப்படித்தான் இருந்தாலும், நான்கு வருடமாகக் காதலித்த பெண்ணின் உறவை ஒரே நாளில் வெட்டிவிட்டு, அவனை எப்படி அதிலிருந்து வெளியே வரச் சொல்ல முடியும் என்ற எதார்த்தம் புரிந்ததால், அதை வெளியே சொல்ல முடியாமல் ஒருவிதத் தயக்கம் அங்கே நிலவியது.

“இன்னொரு வீட்டைப் பற்றிக் பேசாமல் உங்க வேலையைப் பாருங்க” என்று நெடுமாறன் காய்கறி வாங்கிய பையுடன் வீட்டுக்குள் நுழைய,

இன்று நறுமுகைக்கும் யாழினிக்கும் சேர்ந்து லீவு கிடைத்திருக்க, அதை வீட்டிற்குள் சும்மா உட்கார்ந்து பொழுதைக் கழிக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்த நறுமுகைக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது.

அந்த ஆர்வத்துடனேயே, “அப்பா... பேசாமல் அத்தான் குடும்பத்தை இன்னைக்கு இரவு நம்ம வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டால் என்ன?” என்று கேட்டாள் நறுமுகை.

“ஆமாங்க... இப்ப வளர்பிறைக் காலம் தொடங்கிடுச்சு தானே? சம்பந்தி வீட்டுக்காரங்களைச் சாப்பிடக் கூப்பிடுவோம்" என்று நேற்று நடந்த நிகழ்வால் ஆனந்தி கவலையோடு இருப்பாரே என்று எண்ணி பூங்குழலியும் நறுமுகைக்குப் பரிந்து பேசினார்.

நெடுமாறனுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தாலும், “திடீர்னு சொன்னால் எப்படி? அவங்க ஃப்ரீயா இருக்கணுமே...” என்று கேட்க,

“அவங்க எல்லோருக்கும் இது ஒரு மாற்றமாக இருக்கும்ப்பா, வரச் சொல்லுவோம்...” என்று யாழினியும் தன் பங்குக்கு தங்கையின் யோசனை சரி என்பது போல ஆமோதித்தாள்.

“சரி இருங்க, சம்பந்திக்கிட்டயே கேட்டுப் பார்க்கிறேன்" என்று நெடுமாறன் தன் மொபைலை எடுத்து நடராஜனுக்கு போன் பண்ணினார்.

மறுமுனையில் போனை எடுத்த நடராஜன், “சொல்லுங்க சம்பந்தி...” என்றார், குரலில் நேற்றைய சோர்வு இன்னும் மிச்சமிருப்பது நன்றாகவே தெரிந்தது.

“வணக்கம் சம்பந்தி, ஒன்னுமில்லை... இன்னைக்கு ராத்திரி உங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்குச் சாப்பிட வாறீங்களா? சும்மா சாதாரணமா ஒரு சின்ன விருந்துதான். வளர்பிறை வேற தொடங்கிடுச்சு, அப்படியே எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசலாம்னு நினைச்சோம்" என்று நெடுமாறன் அழைக்க,

நடராஜன் ஒரு கணம் யோசித்தார். நேற்று கடையில் நடந்த பிரச்சனையில் ஆனந்தியும் பிள்ளைகளும் இன்னும் கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருந்தார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு அழைப்பு அவர்களுக்கு நிம்மதியைத் தரும் என்று தோன்றியது.

“நிச்சயமா வாறோம் சம்பந்தி... எங்களுக்கும் ஒரு நல்ல மாற்றமா இருக்கும். ஆனந்தியும் நேத்துல இருந்து கொஞ்சம் சோர்வாதான் இருக்கா, அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நாங்க எல்லாரும் இன்னைக்கு நைட் கண்டிப்பா வர்றோம்" என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

போனை வைத்த நெடுமாறன், நறுமுகையைப் பார்த்து, “சரிடா, அவங்க எல்லாரும் வாறேன்னு சொல்லிட்டாங்க.” என்றவர் மனைவியிடம் , “இன்னைக்கு நைட்டுக்கு என்ன சமையல்னு பூங்குழலி நீயே பார்த்துப் பண்ணிடு" என்றார்.

மாலை வேளையில் நெடுமாறன் வீட்டுக்குக் கிளம்ப நடராஜன் குடும்பம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சகாயனின் காரின் சத்தம் வெளியே கேட்கவும், "பெரியவன் வாறான் போல இருக்கே..." என்று நடராஜன் வாசலை எட்டிப் பார்த்தார்.

தலையைத் தடவியபடியே, முகத்தில் அப்பட்டமான சோர்வுடன் சகாயன் உள்ளே வர, அவனைக் கண்டதும் மித்ரனும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வழக்கமாக வாரத்தின் இந்தத் குறிப்பிட்ட நாளில் சகாயன் ரிதன்யாவைக் கூட்டிக்கொண்டு பீச்சுக்குப் போகும் வழக்கம் வைத்திருந்தான். அப்படி இருக்க, அவன் அங்கே போகாமல் இவ்வளவு சீக்கிரம் சோர்வோடு வீட்டுக்கு வந்ததைக் கண்டு, மித்ரன் தன் தங்கையிடம் மெதுவாக, "இன்னும் பிரச்சனை முடியலை போலடி..." என்று முணுமுணுத்தான்.

அதற்கு மித்ராவோ, "அவ இவனைச் சும்மா விட மாட்டா... நல்லா சுத்தல்ல விட்டுட்டு இருப்பா!" என்று கோணலாக உதட்டை மடித்துச் சொன்னாள். ரிதன்யாவின் பிடிவாத குணம் அவளுக்கு நன்றாகத் தெரியுமல்லவா?

மகன் உள்ளே வருவதைப் பார்த்த ஆனந்தி, "என்னப்பா சகாயன்... இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட? முகம் ஒரு மாதிரியா இருக்கே, உடம்புக்கு ஏதும் முடியலையா?" என்று பதற்றத்தோடு கேட்டார்.

சகாயன் சோஃபாவில் அப்படியே சாய்ந்து அமர்ந்தபடி, "ஒன்னுமில்லைம்மா... கொஞ்சம் அலைச்சல், அதான் தலைவலி" என்றவன் வீட்டில் அனைவரும் கிளம்பும் கோலத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு, "என்ன எல்லாரும் எங்கேயோ கிளம்புறீங்க போல?" என்று கேட்டான்.

வழக்கமாக இந்த நாளில் சகாயன் ரிதன்யாவைத் தேடித்தான் போவான் என்பதால், மகனுக்கு இன்று மாலை நேரமிருக்காது என்று அவனிடம் நெடுமாறன் வீட்டுக்குச் சாப்பிடப் போவதைப் பற்றிச் சொல்லாமல் விட்டிருந்தார் நடராஜன்.

"அது... சம்பந்தி விடியப்போன் பண்ணியிருந்தார். இன்னைக்கு ராத்திரி அவங்க வீட்டுல சாப்பாடு... எங்களை எல்லாம் வரச் சொன்னாங்க. உனக்கு இன்னைக்கு வேற வேலை இருக்கும்னு நினைச்சுதான் உன்கிட்ட சொல்லலைப்பா..." என்று ஆனந்தி மெதுவாக இழுத்தார்.

அண்ணன் எப்படியும் ரிதன்யாவிடம் பேசப் போய்விடுவான் என்று நினைத்த மித்ரனும் மித்ராவும், அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு இன்று ரிதன்யாவைச் சமாதானப்படுத்தும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. அவளது எல்லை மீறிய பேச்சும், தன் குடும்பத்தாரை அவள் மதிக்காத குணமும் நேற்று அவனுக்குள் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அதனால், "பரவாயில்லைம்மா... எனக்கொன்னும் இன்னைக்கு வேற வேலை இல்லை. நானும் வாறேன்... ஒரு பத்து நிமிஷம் இருங்க, டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுச் சகாயன் தன் அறையை நோக்கிச் சென்றான்.

அவன் உள்ளே போனதும் மித்ரன், "என்னடி இது... அண்ணன் ரிதுவைச் சமாதானப்படுத்தப் போகாம நம்மகூட வாறேன்னு சொல்றான்? எனக்கு என்னவோ ஆச்சரியமா இருக்கு!" என்று வியப்புடன் சொல்ல,

"இருடா... அவ இவனை நல்லா சுத்தல்ல விட்டிருப்பான்னு நான் சொன்னது நிஜம்தான் போல. ஆனா அண்ணனுக்கு இப்பதான் கொஞ்சம் புத்தி வந்திருக்குன்னு நினைப்போம். அவ பின்னாடி ஓடாம இன்னைக்கு நம்மகூட வர்றதே பெரிய விஷயம்தான். சீக்கிரம் கிளம்பு" என்றாள் மித்ரா சற்றே நிம்மதியுடன்.

தன் அறைக்குள் சென்ற சகாயன், கட்டிலில் அப்படியே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். வழக்கமாக இந்த நேரத்தில் ரிதன்யாவின் போன் கால்களும் மெசேஜ்களும் வந்து குவியும். ஆனால் இன்று அவனிடமிருந்து எந்த முயற்சியும் இல்லாததால், அவளும் தன் திமிரில் அமைதியாக இருந்தாள். அந்த அமைதி அவனுக்குப் பாரமாக இல்லாமல், இன்றுதான் தான் நிம்மதியாக மூச்சுவிடும் உணர்வைத் தந்தது.

நான்கு வருடங்களாகக் காதலித்தாலும், ஒவ்வொரு முறையும் அவளது கோபத்திற்கும் பிடிவாதத்திற்கும் முன்னால் அவனே வளைந்து கொடுத்துச் சமாதானம் பேசிப் பழகியிருந்தான். ஆனால், நேற்று தன் குடும்பத்தையே அவள் இழிவுபடுத்திப் பேசியதற்குப் பிறகு, அவளுக்குப் பின்னால் ஓடக் கூடாது என்று தீர்மானம் பண்ணியிருந்தான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom