Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 18
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
747
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 24
இன்றைய எபிசோட் சற்று பெரியது. அதனால் இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன்... எபிசோடின் தொடர்ச்சி கீழே இருக்கும். அதையும் சேர்த்துப் படித்துவிடுங்கள்.

அமைதியின் உருவமாய்த் தன்முன் அமர்ந்திருந்த அஞ்சலியைப் பார்த்த பிரதாப்பால்‌ இன்னும் நம்பமுடியவில்லை.

தன் வருங்கால மனைவியின் தோழியாக வலம்வந்த அஞ்சலிதான் அத்தனை அரக்கத்தனமான கொலைகளைச் செய்தாளா?

நம்பித்தான் ஆக வேண்டும் என்பதைப்போல், சில மணி நேரங்களுக்குமுன் அவள் வீட்டில் கிடைத்த மருத்துவக் குறிப்புகளும், வீட்டின் பின்னால் மறைவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கும், அவள் கணவன், குழந்தையின் புகைப்படங்களும், அதனுடன் மனநல மருத்துவர் ரகோத்தமன் கொடுத்த அவளின் சைகோபதி என்ற மனப்பிறழ்வு குறைப்பாட்டின் விளக்கமும் அவள்தான் குற்றவாளியென உறுதிப்படுத்த உதவியிருந்தது.

ஒரு பெண்! கீரையை ஆய்வதுபோல் கொலைகளைச் செய்துவிட்டு, தங்களை இத்தனை நாட்களும் நாயாக அலைய வைத்திருக்கிறாள். மூத்த அதிகாரிகளுக்கும், பத்திரிகைகாரர்களுக்கும், மக்களுக்கும் பதில்
சொல்ல முடியாமல் திணற வைத்து, தன் கண்முன்னே சாதுவாய் நடமாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.

பிரேஸ்லெட்டை கேட்டு தனக்கே மிரட்டல் விடுத்து, அவனின் சரிபாதியாக வரப்போகிறவளை கடத்தி, தனக்குச் சவால்விட்டதை நினைக்கும்போது, அந்தக் காவல்காரனின் இரத்தம் சூடேறியது. தாடை இறுக, கையை முறுக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் ஏசிபி பிரதாப் சக்கரவர்த்தி.

விசாரணை அறையில் அவனுடன் திலீப்பும், ஆரவியும் இருக்க, அந்த அறையில் நடக்கப்போகும் விசாரணையை வெளியே இருந்து பார்த்தவாறு பார்த்திபன், கதிரவன், திவாகர், கேசவன், அவர்களுடன் விஷயமறிந்து உடல்நிலை இன்னும் சீராகாத நிலையிலும் வந்திருந்த சிவராமும் நின்றிருந்தனர்.

“எதுக்காக இந்த எட்டுக் கொலைகள் அஞ்சலி?” தன் சொந்த கோபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தான் பிரதாப்.

“எட்டா? கணக்குத் தப்பா சொல்றீங்க ஏசிபி சார். பத்துக் கொலைகள்! காவல்காரர் கணக்கில் கரெக்டா இருக்கணும். உங்க போலீஸ் ரெக்கார்டில் குறிச்சு வச்சுக்கோங்க. அஞ்சலி மாதேஷ் என்பவர் செய்த‌ கொலைகளின் எண்ணிக்கை பத்து என்று!”

சிறு பிள்ளைக்குப் பாடம் நடத்துவதுபோல், தன்னைத் திருத்தியவளை, கனல் கண்களால் கண்டான்.

கலிவரதன், பொன்னியின் வழக்கு விபரம் தெரிய வந்தபோதே, அவன் அனுமானித்ததுதான். அதிலும் கலிவரதனின் வீட்டில்தான் மாதேஷூம் குடியிருந்து, தற்கொலை‌ செய்து இறந்திருக்கிறான் என்று அறிந்த தகவல்களை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டு இணைக்க,‌ அந்தக் காவல்காரனுக்குப் போதுமானதாக இருந்தது.

அவளின் வாயிலிருந்தே உண்மையை அறிந்துகொள்ள அவன் போட்ட கணக்கு தப்பவில்லை.

“சோ, கலிவரதன், பொன்னிதான் உன் முதல் கொலை கணக்கு. அவங்கதான் நீ சைகோபதியா உருமாறக் காரணமா இருந்தவங்க. என் கெஸ் உண்மைனா உன் மாதேஷும், உன் குழந்தையும் இறந்துபோகக் காரணம் அவங்கதான், கரெக்ட் கீதாஞ்சலி மாதேஷ்?” உன் ஆணிவேர் வரை நான் ஆராய்ந்து வைத்திருக்கிறேன் என்பதை அவளுக்குப் புரிய வைத்தான்.

மாதேஷ் பற்றிய விவரம் தெரிய வந்தபோது, அவனின் மனைவியின் பெயர் ‘கீதா’ என்றே இருந்தது. அதனால்தான் ஆரம்பத்தில் உடனே அஞ்சலியின் மீது சந்தேகம் வந்திருக்கவில்லை. ஆனால், நைனிகாவை காணவில்லை என்ற தகவல் அறிந்து அவளைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான், மீண்டும் மனோகரின் டைரியை நன்றாகப் படித்துப் பார்த்த கதிரவனிடமிருந்து, மாதேஷின் மனைவி பெயர் “கீதாஞ்சலி” என்று மனோகர் ஒரு இடத்தில் எழுதி இருப்பதாகத் தகவல் வந்தது. அந்தக் கீதாஞ்சலி ஒருவேளை டியூஷன் சென்டரில் வேலை பார்க்கும் அஞ்சலியாக இருக்குமோ? என்று பிரதாப்பிற்குச் சந்தேகம் வந்தது. அந்த டீ கடைக்காரர் அஞ்சலியுடன்தான் நைனிகா சென்றாள் என்று சொன்ன தகவலில், அஞ்சலியின் மீதான சந்தேகம் வலுக்க, உடனே அவளின் வீட்டிற்குச் சென்றான். அவனின் சந்தேகம் சரிதான் என்பதுபோல் அங்கே நைனிகாவை கட்டிப்போட்டு வைத்திருந்தாள் அஞ்சலி. அனைத்திற்கும் காரணம் அஞ்சலி என்று பிடிபட, உடனே அவளின் கழுத்தைப் பிடித்திருந்தான்.

“அட! சபாஷ் ஏசிபி சார்! நீங்களும் உங்க டீமும் சுறுசுறுப்பாகத்தான் வேலை பார்த்திருக்கீங்க. எஸ், கீதாஞ்சலி மாதேஷ் நான்தான். ஆனால், பாருங்க… இத்தனை கண்டுபிடிச்ச நீங்க, உண்மையான குற்றவாளியான என்னை விட்டுட்டு ஒரு அப்பாவியைப் பிடித்து உங்க கஸ்டெடியில் வச்சிருக்கீங்களே. அது சரியில்லையே சார். மனோகர் அண்ணா எந்தத் தவறும் செய்யாதவர். அவரை வெளியே விட்டுருங்க. எல்லாக் கொலைகளையும் நான் மட்டும்தான் தனியா செய்தேன்”

“பத்துக் கொலைகளைத் தனியொருத்தியா செய்தியா? அதுவும் மூன்று இரட்டை கொலைகள்? நம்ப முடியலையே கீதாஞ்சலி. இப்ப நான் சொல்ற கணக்கு சரியா இருக்கா பார். நீயும், மனோகரும் சேர்ந்துதான் எல்லாக் கொலைகளையும் செய்திருக்கீங்க. அதனால்தான் மனோகர் ‘நான்தான் கொலைகளைச் செய்தேன்’னு கமிஷ்னர் முன்னிலையில் வாக்குமூலம்‌ கொடுத்திருக்கான். கொலை செய்யப் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் மனோகருக்கு உரிமையான ட்யூசன் சென்டரில் கிடைத்தது. உன்னைக் காப்பாத்த அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனைக் காப்பாத்த நீ சரண்டராகியிருக்க. இது எங்கோ இடிக்குதே கீதாஞ்சலி. உனக்காக அவன்… அவனுக்காக நீ…”

“பிரதாப்!” அவ்வளவு நேரம் காட்டிய நிதானத்தைப் பறக்கவிட்டு, கண்களில் கொலைவெறி தாண்டவமாட, ஆக்ரோஷமாகக் கத்தினாள் கீதாஞ்சலி.

“நீயும் ஒரு சாதாரண ஆண்னு நிரூபிச்சுட்ட பிரதாப். அண்ணன், தங்கை மாதிரியான உறவை தப்பா பேசிய… உன்னை… சும்மா விடமாட்டேன் பிரதாப். இப்படிப் பேசுற வாயை அப்படியே தை‌ச்சு… உதிரம் சொட்ட சொட்ட உன் உயிரை உருவி எடுத்தால்தான் நீ இப்படிப் பேச மாட்ட…” தன்னிலையை மறந்து வெறிவந்தவள் போலக் கத்தி, அவனை நோக்கி எழுந்து வர முயன்றாள் கீதாஞ்சலி.

ஆனால், அவளால் இருக்கையை விட்டு அசைய கூட முடியவில்லை. தன் விசாரணையை ஆரம்பிக்கும் முன்பே அவளின் கைகளை நாற்காலியோடு இணைத்து கை விலங்கை போட்டுவிடச் சொல்லியிருந்தான் பிரதாப். சைக்கோத்தனமாக அத்தனை பேரை கொன்றவளிடம் சர்வசாதாரணமாக விசாரணையை நடத்திவிட முடியாதே.

அதேநேரம், குடும்பமாக வாழ்ந்த ஒருத்தி கணவன், குழந்தையை இழந்தபின் இவ்வளவு வெறியோடு கொலைகளைச் செய்திருக்கிறாள் என்றால், அவளின் ஆரம்பப்‌புள்ளி பாதிப்புப் பலமானதாக இருந்திருக்கும் எனப் பிரதாப் அனுமானித்தான். மற்ற கொலைகளுக்குக்கூட, அவள் இலகுவாக உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால், அவள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட உண்மையான காரணத்தைச் சொல்லாமல்கூட மறைக்கலாம். அதனாலேயே‌ மனோகரை வைத்தே அவளை ட்ரிக்கர் செய்திருந்தான் பிரதாப்.

அவளைப் பேச வைக்கும் சிறு முயற்சி அது! அதற்கே அவள் இவ்வளவு வெறிக் கொண்டு தன்னைத் தாக்க நினைக்கிறாள் என்றால், அவளின் மனநிலை பாதிப்பு அவளுக்கு எந்தளவு இருக்கிறது என்பதைப் புரிய வைப்பதாய்!

அவனை வந்து தாக்க முடியாத ஆத்திரத்தை அடக்க முடியாமல் போராடியபடி, “நல்லா கேட்டுக்கோ பிரதாப், எனக்காக என் மாதேஷ்! மாதேஷுக்காக நான்! எங்களோட பொக்கிஷமா எங்க நிலா பாப்பா! நாங்க எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தோம்னு உனக்குத் தெரியுமா? என் மாதேஷ் எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்று கண்கள் பளபளக்க ஆவேசமாகக் கத்தியவள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தாள்.

*****

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மனோகர் அந்தக் காம்பவுண்டுக்குள் நுழைந்த பைக்கின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

ஜீன்ஸ், சட்டையில், கேசம் பறக்க, பைக்கை ஓட்டி வந்துகொண்டிருந்தாள் கீதா. அவளின் பின்னால் ஒரு கையில் குழந்தையை அணைவாகப் பிடித்தவாறு, இன்னொரு உள்ளங்கையில் கட்டுடன் அமர்ந்திருந்தான் மாதேஷ்.

அவளை வியந்து பார்த்த மனோகர், மாதேஷின் கையில் கட்டை பார்த்ததும் எழுந்து அருகில் வந்தான்.

“கையில் என்னாச்சு மாதேஷ்?” கேட்டவாறு கீழே இறங்க சிரமப்பட்ட மாதேஷின் கையிலிருந்து குழந்தையை வாங்கினான்.

“வர்ற வழியில் ஒரு வண்டிக்காரன் இடிச்சிட்டான். மாதேஷ் புறங்கையில் அடிப்பட்டுருச்சு அண்ணா. அதான் ஹாஸ்பிடலில் கட்டு போட்டு கூட்டி வர்றேன்” என்றாள் கீதா. அவளின் முழுபெயர் கீதாஞ்சலி என்றே சான்றிதழ்களில் இருந்தாலும், கீதா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டாள்.

“உனக்குப் பைக் நல்லா ஓட்டத் தெரியுதே கீதா, எப்ப கத்துக்கிட்ட?”

“நாங்க இரண்டு பேரும் லவ் பண்ணும்போது மாதேஷ்தான் எனக்குக் கத்துக்கொடுத்தார்”

“எனக்குத் தெரியவே இல்லையே”

“எப்பவாவது ஓட்டுவதுதான் அண்ணா”

“நானும்தான் லவ் பண்ணேன். இதெல்லாம் பாவனாவுக்குக் கத்துக்கொடுக்கணும்னு எனக்குத் தோணலை பாரு”

“எனக்குப் பைக் ஓட்ட ஆசை என்பதால் நானே கேட்டுக் கத்துக்கிட்டேன் அண்ணா. அதையே பாவனாவும் பழகணும்னு இல்லையே” என்றவாறு குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

“நீ உன் இடம் விஷயமா இன்னைக்கு யாரையோ பார்க்க போகணும்னு சொன்னியே, என்னாச்சு மனோ?” மாதேஷ் கேட்க,

“அது ஒன்னும் வேலைக்காகலை மாதேஷ். நம்ம ஹவுஸ்ஓனர் அங்கிள்தான் ஹெல்ப் செய்றதா சொல்லியிருக்கார்” என்றான் மனோகர்.

மாதேஷ், மனோகர் இருவரும் திருமணம் ஆவதற்கு முன் ஒரே வீட்டில்தான் பேச்சுலராகத் தங்கியிருந்தனர். மாதேஷ் முதலில் திருமணம் செய்ய, அருகிலே இருந்த போர்ஷனுக்குத் தனியாகக் குடிபோயிருந்தான்‌ மனோகர். சில மாதங்களுக்கு முன்தான் மனோகரும் அவன் காதலித்த பெண்ணான பாவனாவை வீட்டினரின் எதிர்ப்பை மீறி மணந்திருந்தான். அவனின் காதல் திருமணத்தில் உறவும், நட்புமாக மாதேஷும், கீதாவும்தான் கலந்துகொண்டு நடத்தி வைத்திருந்தனர்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே குழந்தை சிணுங்க, கீதா வீட்டை நோக்கி சென்றாள்.

அந்தக் காம்பவுண்டுக்குள் நடுவில் ஒரு வீடு ஒய்யாரமாக இருக்க, அதன் இருபக்கமும் இரண்டு இரண்டு போர்ஷன் வீதம் இருந்தன. நடுவில் இருந்த வீட்டில் அந்த வீடுகளின் உரிமையாளர் கலிவரதனும், அவரின் மனைவி பொன்னியும் இருந்தனர்.

அந்த வீட்டுடன் இணைந்திருந்த வீட்டின் கதவை கீதா திறந்தபோது, பொன்னி தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சத்தம் வெளியே கேட்டது.

“என்ன கீதுமா குழந்தை ரொம்ப அழறா? பசிக்குதா? ஃபீட் செய்தியா?” மாதேஷ் வீட்டிற்குள் வந்தபோது குழந்தையின் அழுகை சத்தம் அதிகமாகியிருக்க, வினவினான்.

“வந்ததும் ஃபீட் பண்ணேன். அப்புறமும் அழறா”

“வண்டிக்காரன் இடிச்சபோது பயந்துட்டாளோ? நான் கவனமாத்தான் வண்டி ஓட்டினேன். அப்படியிருந்தும்… நல்லவேளையா உங்க இரண்டு பேருக்கும் எதுவும் ஆகலை. ஆனால், பாப்பா பயந்திருப்பா. அவளை என்கிட்ட குடு.” மகளை வாங்கித் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவாறு நடந்தான் மாதேஷ்.

ஆனாலும் குழந்தை கத்தி அழ, “ஏய் கீதா, பிள்ளையை ஏன் இப்படிக் கத்த விடுற? நிம்மதியா டிவி பார்க்க முடியாம ஒரே சத்தமா இருக்கு. உன் மகளை வாயை மூட சொல்லு” ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டிலிருந்து கத்தினார் பொன்னி.

இரண்டு வீட்டையும் ஒரே சுவர்தான் இணைத்திருந்தது. ஜன்னலை திறந்து வைத்தால், அவர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் நன்றாகக் கேட்கும்.

குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் வெளிக்காற்று வரட்டும் என்று சற்று முன்புதான் கீதா ஜன்னலை திறந்து வைத்திருந்தாள்.

உடனே பொன்னிக்கு மூக்கில் வியர்த்திருந்தது. பொன்னி எதற்கெடுத்தாலும் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். அவரின் சத்தத்தைத் தவிர, மற்ற குடித்தனக்காரர்களின் வீட்டிலிருந்து சிறு சத்தமும் அவருக்குக் கேட்டு விடக்கூடாது. அவரின் குரல்தான் அங்கே ஓங்கி ஒலிக்க வேண்டும்.

கலிவரதன் பொன்னி தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்களுக்கு மற்ற குழந்தைகளின் மீது பிரியம் உண்டாகும். பொன்னியோ முற்றிலும் வேறுவிதம். அவருக்குக் குழந்தை இல்லை என்பதாலே மற்றவர்களுக்குக் குழந்தை இருப்பதைப் பார்த்து வயிறெரிவார்.

“குழந்தைன்னா அழத்தான் செய்யும். பச்சக்குழந்தையோட வாயை எப்படி மூடுவது? நீங்க வேணா உங்க காதை மூடிக்கோங்க” இங்கிருந்து ஜன்னல் வழியாகப் பதிலுக்குக் கத்தினாள் கீதா.

“அவங்கதான் புரியாம சத்தம் போடுறாங்கன்னா நீயும் ஏன்மா இப்படி? அமைதியா இரு!” அவளைத்தான் அடக்கினான் மாதேஷ்.

“இல்லை மாதேஷ், வரவர ஹவுஸ் ஓனரோட அட்டூழியம் அதிகமாகிட்டே போகுது. நமக்கு கல்யாணமாகி நான் இங்கே வந்தபோது என்கிட்ட நல்லாத்தான் பேசினாங்க. நம்ம நிலா பாப்பா பிறந்ததிலிருந்து அவங்க நடந்துக்கிறது ஒன்னும் சரியில்ல. பிள்ளை அழுதால்கூட அதைப் பெரிய குறையா சொல்லி இப்படித்தான் சத்தம் போடுறாங்க”

“ஹவுஸ் ஓனர்னா அப்படித்தான் கீதுமா. நாமதான் அனுசரிச்சு போகணும். நீ முதலில் ஜன்னலை மூடு!” என மாதேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “ஏய் கீதா… வெளிய வாடி!” பொன்னி வாசலில் நின்று கத்தினார்.

இருவரும் அழுதுகொண்டிருந்த குழந்தையுடன் வெளியே வர, “என்ன சொன்ன, என் காதை மூடணுமா? என் வீட்டில் குடியிருந்துகிட்டு என்கிட்டயே எகத்தாளமா பேசுவியா? ஒரு குட்டிச் சாத்தானை பெத்துப் போட்டிருக்க. அது எந்த நேரம் பார்த்தாலும் வீல்வீல்னு கத்திக்கிட்டே கிடக்கு. மனுஷ மக்கா நிம்மதியா பக்கத்துல இருக்க முடியலை. வீட்டை வாடகைக்கு விட்டுட்டு உங்களோட பெரும் போராட்டமா இருக்கு எங்களுக்கு. ஒழுங்கு மரியாதையா இருக்கணும்னா இருங்க. இல்லனா வீட்டை காலி பண்ணிட்டு போய்க்கிட்டே இருங்க. இங்க நான் வச்சதுதான் சட்டம். வாயை மூடுன்னு நான் சொன்னா மூடியாகணும், புரியுதா?” கடுமையாக எச்சரித்தார் பொன்னி.

“என்ன, எங்க பாப்பா உங்களுக்குக் குட்டிச் சாத்தானா? என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க வீட்டில் வாடகைக்கு இருந்தா எங்க பிள்ளையைத் தப்பா பேசுவீங்களா?” குரலை உயர்த்தி‌ கோபத்தைக் காட்டினாள் கீதா.

“கீதுமா, பிரச்சினை வேணாம்”
மாதேஷ் தடுக்க, “என்ன மாதேஷ், நம்ம நிலா பாப்பாவை குட்டிச் சாத்தான்னு சொல்றாங்க. கேட்டுட்டு சும்மா இருக்கச் சொல்றீங்க?” அவனிடமும் கோபப்பட்டாள்.

“என்ன பொன்னி, நாடகத்தைப் பார்க்காம இங்க நின்னுட்டு இருக்க?” வெளியே சென்றுவிட்டு வந்த கலிவரதன் மனைவியிடம் கேட்க, பொன்னி விஷயத்தை‌ சொன்னார்.

“இதுக்கா அவங்களை வீட்டை காலி செய்யச் சொன்ன? குழந்தை இருக்கும் வீடு அப்படித்தான் இருக்கும்.‌ பிரச்சினை பண்ணாம போய் நாடகத்தைப் பாரு. நீயும் கீதாவை உள்ளே கூட்டிட்டு போ மாதேஷ்” நடுவராக நின்று பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தார் கலிவரதன்.

வீட்டிற்குள் வந்த கீதா கணவன் மேல் கோபமாக இருந்தாள்.

“கீதுமா” மாதேஷ் சமாதான அழைப்புவிடுக்க, கடுமையாக அவனை முறைத்தாள்.

“கோபப்படாதேடாமா. அவங்க அப்படித்தான்னு தெரியும். நாமும் பதிலுக்குப் பதில் பேசினால் பிரச்சினைதானே வளரும்? அதான் உன்னை அமைதியா போகச் சொன்னேன்”

“அவங்க எப்ப பார்த்தாலும் நம்ம பிள்ளையைக் கரிச்சு கொட்டிட்டே இருக்காங்க மாதேஷ். குட்டிச் சாத்தான்னு சொல்றாங்க. அப்புறமும் கேட்டுட்டு சும்மா இருக்கச் சொல்றீங்களா? எல்லாத்துக்கும் அமைதியா போகணும்னு அர்த்தமில்லை மாதேஷ். பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகணும்.” என்றாள் வெடுக்கென்று.

“சரி, பேசலாம். இப்ப பாப்பாவை கவனி, விடாமல் அழறாள்‌ பாரு” பேச்சை மாற்றிப் பிள்ளையை அவளிடம் கொடுத்தான்.

கோபம் குறையாமல் மகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அமைதியான குணமுடைய மாதேஷ் எந்த வம்பிற்கும் செல்லமாட்டான். எதிர் எதிர் குணங்கள் ஈர்ப்பதுபோல் அவனை அறிந்துதான் கீதா காதலித்தாள்.

இருவருமே ஒருவர் மீது ஒருவர் அபரிமிதமான அன்பு கொண்டவர்கள்தான். கீதா கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோது ஒரு விபத்தில் பெற்றவர்களை இழந்தபின், அவளின் வாழ்வில் வந்தவன்தான் மாதேஷ். அவளுக்கு அனைத்துமே அவனாகிப் போய், காதலில் கசிந்துருகி, கணவன் மனைவியாகி, இப்பொழுது ஒரு பெண் குழந்தைக்குப் பெற்றவர்களும் ஆகியிருந்தனர்.

அவர்கள் வாழ்வு எந்தவித இன்னல்களும் இல்லாமல் இனிமையாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. கணவன் மனைவிக்குள் ஊடல் வரும்போது கூட, கீதாதான் கோபத்தைக் காட்டுவாள். மாதேஷ் அவளை அமைதியாக எதிர்கொள்வான்.

இணைக்கு இணையாக இணையரும் கத்தினால், அங்கே சண்டை வலுக்கவே செய்யும். ஆனால், சாந்த சொரூபியாக மாதேஷ் அவளிடம் அன்பை மட்டுமே திருப்பித் தரும்போது அவள் எப்படிக் கோபத்தைக்‌ காட்டுவதாம்?

அன்றும் அதுவே நடந்தது.

குழந்தை உறங்கியதும், ஊடலில் கீதா திரும்பிப் படுத்துக்கொள்ள, அவளைப் பின்னாலிருந்து நெருங்கிய மாதேஷ், “கீதுமா” இரகசிய அழைப்புவிடுத்தான்!

பதிலில்லை அவளிடம்!

“நம்ம நிலா பாப்பா பிறந்து எட்டு மாதமாகியும், அவளுக்கு இதுவரை எதுவுமே தங்கமா வாங்கிப் போடலைன்னு செயினும், நம்ம நிலாவுக்குப் பொருத்தமா முழுநிலவு டாலரும், அதில் ஒரு பக்கம் என் இன்ஷியலும், இன்னொரு பக்கம் உன் இன்ஷியலும் பதித்து, இன்னைக்குத்தான் ஆசையா வாங்கிட்டு வந்தோம். வரும் வழியிலேயே சின்னதா ஆக்ஸிடென்ட், அடுத்தடுத்துப் பிரச்சினை... இன்னைக்கு எதுவுமே சரியில்லை. வீட்டுக்கு வந்ததும், பாப்பாக்கு அந்தச் செயினைப் போட்டு, அவள் கூட நாமும் விதவிதமா போட்டோ எடுக்கணும்னு ஆசையா இருந்தேன், நடக்கலை. மனசுக்கு கஷ்டமா இருக்கு கீதுமா” மாதேஷ் வருத்தமாகப் பேச, கணவனின் சோகம் பொறுக்கவில்லை மனைவிக்கு.

கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் கணவனின் பக்கம் திரும்பிப் படுத்தவள், “நிலா பாப்பாக்கு நாளைக்குச் செயின் போட்டு நாம போட்டோ எடுக்கலாம் மாதேஷ்மா. இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? ஓனரம்மா பேசியது தப்பு! அதுதான் எனக்குக் கோவம் வந்துருச்சு” என்றாள் கீதா.

“ஓனரம்மா கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், கலிவரதன் அங்கிள் ரொம்ப நல்லவர் கீதுமா.”

“அதனால்தான் அவர் வந்து பேசியதும் நான் அமைதியா வந்துட்டேன். ஆனால், அதுக்காக எப்பவும் அமைதியா இருக்க மாட்டேன் மாதேஷ். எனக்குச் சப்போர்டா பேசலைனாலும் என் வாயை மூட சொல்லாதீங்க”

“சரி, சரி… நான் வேறவிதமா உன் வாயை மூட வைக்கிறேன்” என்றவன் மனைவியின் இதழில் அழுத்தமாய் முத்தம் வைத்து சமாதான உடன்படிக்கைக்கு அச்சாரம் வைத்தான்.

“இன்னைக்கு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? ஆனால், இந்தக் கை…” கட்டுப்போட்ட கையை மாதேஷ் காட்ட, “ஹாஸ்பிடலில் வச்சு கழற்றிய உங்க பிரேஸ்லெட் என் பேக்கில் இருக்கு மாதேஷ். அது இல்லாம உங்க கை வெறுமையா இருக்கு. கை சரியானதும் மறக்காமல் போட்டுக்கோங்க” என்றாள் கீதா.

“நான் என்ன சொன்னால், நீ…” மாதேஷ் கேட்க, அவனைப் பார்த்து குறும்புடன்‌ கண்சிமிட்டிய கீதா, “ஆசைக்கு அணை போடக்கூடாது மாதேஷ்மா” குழைவாகச் சொன்னவள், தானே கணவனை நெருங்கினாள்.

மறுநாள் குழந்தைக்கு வாங்கிய செயினை அவளுக்குப் போட்டு அழகுப் பார்த்து அவளுடன் விதவிதமான புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

*****
“கவிதையான குடும்பம்தான் உன்னோடது கீதாஞ்சலி.‌ ஆனால், பொன்னிதான் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினையை உண்டாக்கியதுபோல் தெரியுது. நல்லவராக இருந்த கலிவரதனை ஏன் நீ கொல்லணும்? அதுவும் ஆசிட்டை அவர் கண்ணில் ஊத்தி, உடலில் பல இடங்களில் குத்தி?” யோசனையுடன் கேட்டான் பிரதாப்.

“இந்த உலகத்தில் என் மாதேஷ், மனோகர் அண்ணா மாதிரி வெகு சிலரை தவிர, எவனுமே நல்லவன் இல்லை பிரதாப். நீ உட்பட!” இகழ்ச்சியாகச் சொன்ன கீதாஞ்சலியின் கண்களிலிருந்து திடீரெனக் கண்ணீர் வெளியேற ஆரம்பித்தது.

“உயிருக்கு‌ உயிரான இரண்டு உயிர்களை ஒரே நேரத்தில் இழந்து நிர்க்கதியா‌ நிற்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா பிரதாப்? அதுவும் சந்தோஷமான வாழ்க்கை சிதைந்து, திடீரென எல்லாம் மாறி அதன் காரணம் ஏன் எதுக்குன்னு தெரியாமல் குழம்பி தவித்து, உண்மை தெரியவரும்போது எதுவுமே செய்யமுடியாமல், கண் முன்னாடி அவங்க உயிர் கொஞ்ச கொஞ்சமா போவதை‌ பார்ப்பது… நரகம் பிரதாப்! அந்த நரகத்தை நான் கண்முன்னால் பார்த்தேன் பிரதாப்!” கீதாஞ்சலியின் குரலொலி உடைந்து சிதறியது.

****
“நிலா பாப்பாக்கு நான் ஃபீட் செய்வதில் உங்களுக்கு என்னதான் பிரச்சினை மாதேஷ்? எதுக்கு நீங்க இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?”ஆதங்கமாகக் கீதா கேட்க,

“நான் சொன்னதைச் செய்வதில் உனக்கு என்ன பிரச்சினை கீதா? பாப்பாவுக்கு ஒரு வயசு ஆகப்போகுது. இன்னும் ஏன் அவளுக்கு ஃபீட் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிற? நிறுத்துன்னு சொன்னால் நிறுத்தேன்” சிடுசிடுப்புடன் சொன்ன கணவனை நம்ப முடியாமல் பார்த்தாள் கீதா.

அவனுக்கு இப்படிக்கூடப் பேசத்தெரியும் என அவளுக்கு இப்போதுதான் தெரியும். காதலித்த காலத்திலிருந்து ‘கீதுமா’ என அன்பாக அழைத்து, அன்பை மட்டுமே பிரதிபலிப்பவனின்‌ பேச்சிலும், செயலிலும் கடந்த சில நாட்களாகப் பெரும் மாற்றம். எப்போதும் பதற்றத்துடனே இருந்தான். அவள் விசாரித்தால் கோபப்பட்டான். ‘அலுவலகத்தில் பிரச்சினையா?’ எனக் கேட்டால் மௌனம் சாதித்தான்.

ஏன் எதற்காக இப்படி இருக்கிறான் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

“பாப்பா பிறந்து பத்து மாதங்கள்தான் ஆகுது மாதேஷ். ஒரு வயசுவரை ஃபீட் பண்ணலாம்னு நாம பேசியதுதானே? இப்ப ஏன் இப்படி மாத்தி பேசுறீங்க?” கீதா கேட்க,

“நான் சொன்னதை மட்டும் செய் கீதா. சும்மா என்னை எதிர்த்துப் பேசாதே!” கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஒரே நாளில் நிறுத்த முடியாதே? மெல்லத்தானே நிறுத்த முடியுமென, குழந்தை அழுதபோது கீதா படுக்கையறையில் அமர்ந்து அமுதூட்ட, அப்போது உள்ளே வந்த மாதேஷ், “கீதா நான் அவ்வளவு சொல்லியும் என்ன பண்ற?” கத்தியவாறு அருகில் வந்து வெடுக்கென்று அவளின் மடியிலிருந்த பிள்ளையைத் தூக்கியவன், அவளின் முந்தானையை நேராக இழுத்துவிட்டு, குழந்தை அழுததையும் பொருட்படுத்தாமல் வெளியே தூக்கிச் சென்றான்.

மார்பில் வலி எடுக்கத் திகைத்து அமர்ந்திருந்த கீதா, குழந்தை இன்னும் அழுதுகொண்டிருக்கவும் வெளியே வந்தாள்.

“ஸாரி பாப்பா. உனக்கு அப்பா பால் காய்ச்சி தர்றேன். அதைக் குடிக்கலாம்” மகளைச் சமாதானம் செய்தவாறு அடுப்பில் பாலை காய்ச்சிக்கொண்டிருந்தான்.

“உங்க மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மாதேஷ்? குழந்தைக்கு ஃபீட் செய்யும்போது இப்படித்தான் பிடுங்கிட்டு வருவீங்களா? அவளை என்கிட்ட கொடுங்க, நான் பார்த்துக்கிறேன்” கீதா கோபமாக மகளைக் கேட்க,

“கொடுக்க முடியாது கீதா. நான் திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடா சொல்வது, நான் என்னடா கேட்பதுபோல ஃபீட் பண்ற. அவளுக்கு நான் பாலைக் காய்ச்சி கொடுத்துக்கிறேன். நீ போ!” முகம் சிவக்க மகளை அவளிடம் தர மறுத்தான்.

“நீங்க நடந்துகொள்வது எதுவும் சரியில்லை மாதேஷ்!” மனைவி குற்றம்சாட்டியதை பொருட்படுத்தாமல் மகளுக்குக் காய்ச்சிய பாலை கொடுப்பதில் கவனமாகியிருந்தான்.

அன்று இரவு கூடத்தில் மாதேஷ் இரண்டு படுக்கைகளை விரித்து, ஒன்றில் குழந்தையைப் படுக்க வைத்து, அருகில் சாய்ந்தான். சமையலறை வாசலில் நின்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் கீதா.

“படுத்து தூங்கு கீதா” அவளின் தனிப்படுக்கையைச் சுட்டிக்காட்டினான்.

“இந்த வீட்டில் என்னதான் நடக்குது மாதேஷ்? நானும் பார்த்துட்டே இருக்கேன், பத்து பதினைந்து நாளா நீங்க செய்வது எல்லாமே ரொம்பக் குழப்பமாகவும், புரியாத புதிராகவும் இருக்கு. பெட்ரூமில் கட்டில் இருக்கும்போது நாம ஏன் இப்ப இங்கே வந்து தரையில் படுக்கணும்? அதுவும் தனித் தனியா?” கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டான் அவளின் கணவன்.

கீதாக்குக் கோபமாக வந்தது. அழுகையும் வந்தது. இப்படி மௌனமே பதிலாகத் தருபவனின் மீது எதையாவது தூக்கி எறிய வேண்டும்போல் இருந்தது. கண்களை இறுக மூடி, இழுத்து இழுத்து மூச்சை விட்டுத் தன்னைக் கட்டுப்படுத்த போராடியவள், அப்படியும் கோபத்தைக் குறைக்க முடியாமலே தனியாகக் கிடந்த படுக்கையில் சென்று படுத்துக்கொண்டாள்.

அவள் கோபம் கொண்டால் சமாதானம் செய்ய வரும் மாதேஷ் வரவே இல்லை. அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்த நாட்களும் அதுவே தொடர, வீட்டில் நிம்மதியின்மை நிலவியது. கண்ணீரால் கீதாவின் தலையணை நனைந்தது.

“மாதேஷ் உங்ககிட்ட எதுவும் சொன்னாரா அண்ணா?” ஒரு நாள் கீதா கேட்க, சோக முகமாக இருந்தவளைக் குழப்பமாகப் பார்த்தான் மனோகர்.

திடீரென அவள் இப்படிக் கேட்டது புரியவில்லை அவனுக்கு.

“என்ன விஷயமா கீதா?” என்று கேட்டவனிடம் என்ன சொல்வாள்? வீட்டில் கணவன் தன்னிடம் வேறுபாடாக நடந்துகொள்கிறான் என்பதை இவனிடம் அவளால் சொல்ல முடியவில்லை.

“அது… வேலை விஷயமா? அவர் வேலை பார்க்குமிடத்தில் எதுவும் பிரச்சினையான்னு” நண்பனிடம் எதுவும் மனம்விட்டு பேசியிருப்பானோ எனக் கேட்டாள்.

“இல்லையே கீதா. அவன் என்னிடம் சரியா பேசியே ஒரு வாரத்துக்கு‌ மேல இருக்கும்.‌ நான் என் இடம் விஷயமா கலிவரதன் அங்கிள் கூட அலைஞ்சிட்டு இருக்கேன். நைட்டும் மாதேஷை நான் பார்க்கலையே. நான் வேணா அவனை விசாரிக்கிறேன்.”

“இல்லைண்ணா… நான் சும்மாதான் கேட்டேன். நீங்க மாதேஷிடம் எதுவும் கேட்க வேணாம்ணா” என்று சொல்லிவிட்டுக் கீதா சென்றுவிட்டாலும், என்றும் இல்லாமல் கீதா கேட்டபின் அப்படியே விட்டுவிடாமல், நண்பனை சந்தித்து விசாரித்தான்.

“என்ன மாதேஷ், வேலை எல்லாம் எப்படிப் போகுது?”

“அதெல்லாம் நல்லாத்தான் போகுது மனோ”

“அப்படியா? அப்ப வேற என்ன பிரச்சினை?

“என்ன? என்ன பிரச்சினை? எனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே” மாதேஷ் சட்டென்று பதற்றமடைந்திருந்தான்.

“எதுக்கு நீ இவ்வளவு டென்சனாகுற? நான் நார்மலாத்தானே கேட்டேன்?” மனோகர் சந்தேகத்துடன் கேட்க,

“ஒன்னுமில்லையே… ஆனா நீ ஏன் என்ன பிரச்சினைன்னு கேட்ட?”

“அது கீத்…” ஆரம்பித்து, சட்டென்று பேச்சை நிறுத்தியவன், “உன் முகமே சரியில்லையே. அதான் கேட்டேன்.” என்றான்.

“இல்லை, நீ கீதான்னு ஏதோ சொல்ல வந்த. என்ன சொல்ல வந்த? கீதா பத்தி என்ன தெரியும் உனக்கு?” அவனை உலுக்கி கேள்வி கேட்டான்.

மாதேஷ் வித்தியாசமாக நடந்து கொள்வதைப் பார்த்து மனோகர் அதிர்ச்சியானான். என்னாச்சு இவனுக்கு?

“மாதேஷ், என்னடா? கீதா முகமும் சரியில்லை, நீயும் எப்படியோ இருக்க. அதைக் கேட்டால்…”

“அவ்வளவுதானா? வேற இல்லையே?” தளர்ந்து கேட்டான்.

“வேற என்ன இருக்கு?” சந்தேகம் துளிர்க்க மனோகர் கேட்க,

“வேறெதுவும் இல்லையே…” என்ற மாதேஷ் அங்கிருந்து நகர, அவனை நிறுத்திய மனோகர், “எதுவும் பிரச்சினைனா சொல்லு மாதேஷ். பார்த்துக்கலாம், நான் இருக்கேன் உன் கூட” என்றான்.

கண்கள் கலங்கின மாதேஷூக்கு. உடனே மறைத்துக்கொண்டவன், “எதுவும் இல்லை மனோ” என்று சொல்லிவிட்டு சென்றவன் ஏதோ யோசித்ததுபோலத் திரும்பி வந்து, “நீ… நீ ஏன் வேற வீடு மாறிப் போகக் கூடாது மனோ? இங்கேயே எவ்வளவு நாள் இருப்ப? வேற நல்ல வீடு பார்த்துப் போயேன்” என்றான்.

“இதென்னடா இப்படிச் சொல்ற? இங்கேயே வசதியாத்தானே இருக்கு. இப்ப ஏன் வீடு மாறணும்?”

“அது… உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இங்கே இருக்காதே மனோ! சீக்கிரம் காலி செய்து இங்கிருந்து போயிடு” அங்கேயே நின்றால் இன்னும் கேள்வி கேட்பானோ எனச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றிருந்தான் மாதேஷ்.

“இவனுக்கு என்னாச்சு? திரும்ப இன்னொரு நாள் விசாரிக்கணும்” தனியாக நின்று புலம்பினான் மனோகர். ஆனால், அப்படி விசாரிக்கக் கூடிய சந்தர்ப்பத்தையே மாதேஷ் அவனுக்குக் கொடுக்கப் போவதில்லை என்பதை அவன் அறியவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் சென்ற நிலையில் இரவு உறங்கிக்கொண்டிருந்த கீதாக்கு ஏதோ சத்தம் கேட்பது போலிருக்க, விழித்துப் பார்த்தாள். உறங்காமல் இங்கே அங்கே என அறைக்குள் ஏதேதோ தேடிக்கொண்டிருந்தான் மாதேஷ்.

“என்ன தேடுறீங்க மாதேஷ்?”

“ஒன்னுமில்லையே” திடுக்கிட்டு விரைந்து படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டான்.

தன் படுக்கையிலிருந்து எழுந்து அவனின் அருகில் வந்தமர்ந்த கீதா, “உங்களுக்கு என்னதான் ஆச்சு‌ மாதேஷ்? என்கிட்ட சொல்லுங்களேன். உங்க கீதுமா தானே நான். நீங்க நடந்துகொள்வதை எல்லாம் பார்த்தால் எனக்கு ரொம்பப் பயமா இருக்கு மாதேஷ். உங்களுக்கு எதுவும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்க. நாம இரண்டு பேரும் சேர்ந்தே அதைச் சமாளிப்போம்.” மனம் கலங்க சொன்னாள்.

“ஏன் ஆளுக்கு ஆள் என்ன பிரச்சினைனே கேட்கிறீங்க? அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றேனே. இப்ப எதுக்கு நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்க? உன் படுக்கைக்குப் போ…” கோபத்துடன் விரட்டினான்.

அதிர்ந்து பார்த்த கீதாக்கு மூளை கலங்கும்போல் இருந்தது. மாறும் வானிலையாகக் கணவனின் நடவடிக்கைகள் அவளை மேலும் மேலும் குழப்பத்திலும், கவலையிலும் தள்ளின.

ஒருவேளை உடல் ரீதியாக எதுவும் பிரச்சினையோ? அதனால்தான் தன்னிடம் சொல்ல முடியாமல் தனியாகத் தவிக்கிறானோ? தான் அவனைத் தவறாக நினைப்போம் என மறைக்கிறானோ? என யோசித்தாள். ஆனால், இதுநாள்வரை அவனுடன் வாழ்ந்த அந்தரங்க வாழ்க்கை ‘இல்லை, அப்படி இருக்காது’ என்பதை மனம் எடுத்துச் சொன்னாலும், ஒருவேளை அதனால்தானோ தன்னைத் தனியாகப் படுக்கச் சொல்கிறான் என நினைத்தவள், பட்டென்று அவனின் மீது சாய்ந்து படுத்து அணைத்திருந்தாள்.

“உங்களுக்கு எதுவும் ‘அந்த’ மாதிரி பிரச்சினைனா கூட என்கிட்ட தயங்காமல் சொல்லுங்க மாதேஷ். நான் தப்பா நினைக்க மாட்டேன். இப்ப எத்தனையோ ட்ரீட்மெண்ட் இருக்கு. சரி பண்ணிடலாம்” என்றாள் ஆறுதலாக.

அவனோ, சட்டென்று அவளை உதறியவாறு எழுந்து தள்ளிப் போனான். “ஏய், என்ன பண்ற? இங்கிருந்து போ! என்‌ பக்கத்தில் வராதே! இப்ப எதுக்கு நீ என் பக்கத்தில் வந்து கட்டிப்பிடிச்ச? தள்ளிப்போ” ஆவேசமாகக் கத்தியவன் பரபரவெனக் கண்களால் இருட்டில் அந்த அறையில் எதையோ தேடினான்.

அவன் உதறி தள்ளியதிலேயே உயிரற்றவள் போல் உறைந்து போனாள் கீதா. அவளின் மாதேஷிடமிருந்து இப்படிப் புறக்கணிப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளின் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் வெளியேறியது.

“இன்னும் என்ன இங்கேயே உட்கார்ந்திருக்க? எழுந்து போ” விரட்டினான்.

அத்தனை நாட்கள் அவர்கள் வாழ்ந்த அன்னியோன்யமான வாழ்க்கை அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பது போலிருந்தது.

வீட்டில் நிலவிய அசாதாரண நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக, கணவனும், மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அஞ்சியவர்கள்போல் விலகி நின்றனர். அவர்களுக்கு நடுவிலிருந்த குழந்தையால் கூட அவர்களை இணைக்க முடியவில்லை.

மாதேஷின் மாற்றத்தால் உண்டான மனக்குழப்பத்தால் மட்டுமில்லாமல், திடீரெனத் தாய்ப்பாலை நிறுத்தியதால் இரண்டு மூன்று நாட்களாகவே கீதாக்கு உடல்நிலை வேறு படுத்தியது. அதிலும் அன்று எழுந்துகொள்ளக் கூட முடியாமல் காய்ச்சலாக இருக்க, படுக்கையில் சுருண்டு கிடந்தாள்.

அன்று மாலையளவில் வெளியே சென்றுவிட்டுவந்த மாதேஷ் நிதானமாகவே இல்லை. இன்னும் அலைக்கழிப்புடன் இருந்தான். காய்ச்சலாகக் கிடந்த மனைவியைப் பார்த்தாலும் அவளுக்கு எதுவும் உதவி‌ செய்யாமல் ஏதோ யோசனையிலேயே இருந்தான். இருவரும் தன்னைக் கவனிக்காததால் குழந்தை வீறிட்டு அழ, குழந்தையை வெறித்துப் பார்த்தான்.

“மாதேஷ், என்னால் முடியலை. ரொம்பக் காய்ச்சலா இருக்கு. என்னைப் பார்க்கலைனாலும் பரவாயில்லை. நம்ம பாப்பாவை கவனிச்சுக்கோங்க, ப்ளீஸ்!” என்று கெஞ்சிய மனைவியையும் விழியகலாமல் பார்த்தான்.

எதுவும் பேசாமல் எழுந்து குழந்தையைத் தூக்கியவன், சமையலறைக்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் சுடச்சுட ஒரு பாத்திரத்துடன் வந்து, “கீதுமா, எழுந்திரி சூடா கஞ்சி வச்சேன். குடிக்கலாம்” என்று மென்மையாக அழைத்தான் மாதேஷ்.

யுகங்களாய்‌ தோன்றிய நாட்களுக்குப்பின் அவனின், ‘கீதுமா’ என்றழைப்பு அவளை உடைத்துப்போட்டது. கண்ணீருடன் அவனையே பார்த்தாள்.

குழந்தையுடன் அவளின் எதிரே அமர்ந்து, கண்ணீரை துடைத்துவிட்டவன், “அழாதே கீதுமா! ஸாரி, நான் உங்கிட்ட அப்படிக் கோபப்பட்டிருக்கக் கூடாது! நீ என்ன பண்ணுவ? பாவம்! நான்தான் புரியாமல் ஏதோ தப்புப் பண்ணிட்டேன். உன்னைத் திட்டியிருக்கக் கூடாது, உதறியிருக்கக் கூடாது, கத்தியிருக்கக் கூடாது! ஏதோ புரியாம பண்ணிட்டேன், மன்னிச்சுடு. இனி அப்படிப் பண்ண மாட்டேன், காட் பிராமிஸ்!” என்றான் கெஞ்சலாக.

கீதா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். இவ்வளவு நாட்கள் ஏன் அப்படி நடந்துகொண்டான். இப்போது எப்படி இப்படி மாறினான்? எதுவும் புரியவில்லை.

“நான்தான் ஸாரி சொல்றேன்ல? உன் மாதேஷை நீ மன்னிக்க மாட்டியா?” உருக்கமாகக் கேட்டான்.

“எனக்குன்னு உங்களையும், நம்ம பாப்பாவையும் தவிர வேற யார் இருக்கா மாதேஷ்? எனக்கு எல்லாமே நீங்க மட்டும்தானே! உங்களை மன்னிக்காம நான் என்ன பண்ண போறேன்? ஆனா, இனி இப்படி நடந்துக்காதீங்க மாதேஷ்! வலிக்குது மாதேஷ்! உங்க கீதுமாவுக்கு ரொம்ப வலிக்குது!” என்று அவனின் மார்பில் சாய்ந்து கதறினாள் கீதா.

அவனின் உடல் விறைத்து உடனே தளர்ந்தது. ஒரு கையால் குழந்தையையும், மறு கையால் மனைவியையும் அணைத்துக்கொண்டான், சற்று அழுத்தமாகவே!

அதில் குழந்தை சிணுங்க, அவளோடு மனைவியையும் சமாதானம் செய்தான்.

“சரி, சரி அழாதே கீதுமா! என் கீதுமாவுக்கு எந்த வலியையும் தர மாட்டேன், வர விடவும் மாட்டேன்! அவளுக்கு நிம்மதியை மட்டும்தான் தருவேன். இந்த மாதேஷை நீ நம்புற தானே?” என்று கேட்டான்.

“கண்டிப்பா மாதேஷ்!” என்றாள் கீதா.

அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தவன், மகளையும் உச்சி முகர்ந்தான்.

“உனக்கு ரொம்பக் காய்ச்சலா இருக்கு போலிருக்கே கீதுமா. முதலில் கஞ்சியைக் குடி!” என்று அவளுக்குக் கொடுத்தவன், தானும் ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டான்.

“நீங்களும் ஏன் கஞ்சி?”

“நம்ம மூனு பேருக்கும் ஒரே சாப்பாடுதான், குடி கீதுமா” என்றவன் அவள் குடிப்பதை பார்த்துக்கொண்டே, குழந்தைக்கும் கொஞ்சம் கொடுத்து, தானும் குடித்தான் மாதேஷ்.

கீதாக்கு கஞ்சியைக் குடிக்கும்போதே உமட்டிக்கொண்டு வந்தது. அவள் ஓங்கரிக்க, “என்னாச்சு கீதுமா?” பதறி கேட்டான்.

“குடிக்கவே முடியலை‌ மாதேஷ். வாந்தி வர்ற மாதிரி இருக்கு.” என்றாள்.

“காய்ச்சலினால் இருக்கும். இன்னும் கொஞ்சம் குடிச்சுடுமா, ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாக.

முயன்று கீதா குடிக்க, மீண்டும் குழந்தைக்குக் கொடுத்து மீதி இருந்ததை மொத்தமாக வாயில் சரித்துக்கொண்டான் மாதேஷ்.

கீதாவால் ஓங்கரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இருந்த இடத்திலேயே கடகடவென அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தபோது, மாதேஷின் கையிலிருந்த குழந்தை மயங்கி தந்தையின் கைகளிலேயே சரிந்தாள்‌.

“நி…லா… பா…ப்பா… என்னாச்சு?” வாந்தி எடுத்ததும் கீதா பிள்ளையைப் பார்த்து பதற, “நம்ம நிலா பாப்பா நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிட்டா கீதுமா” என்ற மாதேஷின் கண்களும் சொருக ஆரம்பித்தன.

“மாதேஷ்… நிலா… என்னாச்சு உங்களுக்கு?” இருவரையும் பார்த்துக் கீதா துடிக்க, “நீ… நீயும் கஞ்சியைக் குடிச்சிட்டு எங்களோட வந்துடு கீதுமா. இந்த உலகத்தில் இருக்காதே. வந்துடு… உனக்காகத்தான்… நான்… விஷம்… இந்த முடிவு…” அவன் திணற,

“ஐயோ! என்ன பண்ணீங்க மாதேஷ்? நிலா பாப்பா…” கதறியபடி தலைச்சுற்ற தள்ளாடி எழுந்தவள் சமையலறைக்குச் சென்றாள். அங்கே விஷப்பாட்டில் இருக்க, அதைப் பார்த்து அழுதபடி, தண்ணீரில் உப்பை அதிகமாகப் போட்டு கரைத்து எடுத்து வந்து, மயக்கமாக இருந்த குழந்தையின் வாயிலும், கணவனின் வாயிலும் ஊற்றினாள். அவனோ குடிக்க மாட்டேன் என மறுத்தவன், அவளையும் கஞ்சிக் குடிக்கச் சொல்லி மன்றாடினான்.

“மாதேஷ்… குடிங்க மாதேஷ்! ஏன் இப்படிச் செய்தீங்க மாதேஷ்? பாப்பா…” கணவனைப் பார்ப்பதா? குழந்தையைப் பார்ப்பதா? புரியாமல் தவித்து இரண்டு பேரையும் அடுத்தடுத்து கவனித்து உப்பு நீரை புகட்டினாள். ஆம்புலன்ஸுக்கும் அழைத்தாள்.

அவளுக்கும் தலையைச் சுற்றியது. உடனே அவள் வாந்தி எடுத்தால் அவளுள் விஷம் வீரியத்துடன் இறங்கியிருக்கவில்லை.

குழந்தைக்கு உப்பு நீர் உள்ளே இறங்காமல் வெளியேற… அவளின் துடிப்பை பரிசோதித்த கீதாவின் இதயத்துடிப்பு நின்று துடித்தது.

“ஐயோ நிலா பாப்பா போய்ட்டியே!” எனக் கத்தினாள், கதறினாள், துடித்தாள்.

அதற்குமேல் தொடர்ந்து பிள்ளைக்காக அழக்கூட முடியாமல், மயங்கி தரையில் கிடந்த கணவனைக் கவனித்தாள். அவளுக்குத் தெரிந்த இன்னும் சில முதலுதவிகளைச் செய்தாள். அதன் பலனாய் லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தான் மாதேஷ்.

“ஏன் மாதேஷ் இப்படிப் பண்ணீங்க? நம்ம பாப்பா நம்மை விட்டு போயிட்டா. ஏன் அவளைக்‌ கொன்னீங்க?” அவனைப் பிடித்து உலுக்கினாள்.

அவனின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது.

“நீ… நீயும்… எங்களோட…”

“ஏன் மாதேஷ் இப்படி?”

“அது… அது… அந்தக் கலிவரதன்… ரொ…ம்ப ரொ…ம்ப மோ…சம்… அவன் என்று திணறியவாறு நடந்ததைச் சொன்னான்.

***எபிசோடின் தொடர்ச்சி கீழே உள்ளது தொடர்ந்து படியுங்கள் 👇
 
மாதா மாதம் வீட்டு வாடகையைக் கலிவரதனிடம் பணமாகக் கொடுப்பது மாதேஷின் வழக்கம். அந்த மாதம் சில காரணங்களால் இரண்டு நாட்கள் தாமதமாகியிருக்க, அன்று கொடுத்துவிட வேண்டும் எனக் கலிவரதன் வீட்டிற்கு வெளியே நின்று கதவை தட்டினான். ஆனால், கதவு திறந்துகொண்டது.

அங்கிள் என்று அழைக்கப்போனவன் அங்கே கூடத்தில் இருந்த தொலைக்காட்சியில் தெரிந்த காட்சியில் அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

தொலைக்காட்சியில், படுக்கையறையில் அமர்ந்து, குழந்தைக்கு அமுதூட்டிக்கொண்டிருந்த அவனின் மனைவி கீதா அல்லவா இருந்தாள். அதுவும், அவள் அன்று உடுத்தியிருந்த உடை.

“நீங்க வாடகை கொடுத்துட்டு வாங்க மாதேஷ். பாப்பா தூக்கத்துக்குச் சிணுங்க ஆரம்பிச்சிட்டாள். அவளைத் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சற்றுமுன் படுக்கையறைக்கு அவள் சென்றதை பார்த்துவிட்டுதானே வந்தான். அதன்பின்னான காட்சி… வீட்டு ஓனரின் தொலைக்காட்சியில் நேரடியாக! அவன் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது.

அவனைப் பார்த்துவிட்ட கலிவரதன் வேகமாகத் தொலைக்காட்சியை அணைத்தார்.

“என்ன… என்ன இது… என் கீதுமா… இங்க இப்படி‌… எப்படி?” விரைந்து அவரின் அருகில் சென்று மாதேஷ் துடித்துப்போய்க் கேட்டான். அவனின் நாடி நரம்புகளெல்லாம் துடித்தன.

தன் அதிர்ச்சியிருந்து அவன் வெளியே வரும்முன்னே…

“எல்லாம் பார்த்துட்ட போல. இனி மறைக்க ஒன்னுமில்லை மாதேஷ். லைவ் ஷோ பார்க்கிறயா?” என்று கிண்டலாகக் கேட்ட கலிவரதன், மீண்டும் தொலைக்காட்சியைப் போட, அதில் தங்கள் ரூமில் வேறுயாருமில்லையே என்ற நினைவில், கீதா குழந்தைக்கு அமுதூட்டிவிட்டு, உள்ளாடையைச் சரி செய்து கொண்டிருந்தது இங்கே தெரிந்தது.

“ஐயோ! கீதா!” மாதேஷ் துடித்துக் கத்தியபடி அங்கேயிருந்த தண்ணீர் ஜாடியை தூக்கி தொலைகாட்சியின் மீது விட்டெறிய அது கீறல் விட்டு அணைந்து போனது.

“அடடே! உனக்குக் கோபம் எல்லாம் வருமா மாதேஷ்? இப்பதான் உன்னை இப்படி ஒரு கோபத்தோட பார்க்கிறேன். பொண்டாட்டியோட மானத்துக்கு ஒன்னுனா புள்ளைப்பூச்சி புருஷன் கூடப் புயலாவான்னு இப்பதான் புரியுது மாதேஷ். ஆனா பாரு நீ இந்த டீவியை உடைச்சுட்டா மட்டும் போதுமா?” என்று வக்கிர சிரிப்புடன் கேட்டார் கலிவரதன்.

ஆத்திரம் பொங்க அவரின் சட்டையைப் பிடித்த மாதேஷ், “யோவ்! என் வீட்டுப் பெட்ரூமில் நடப்பது இங்கே எப்படி? என் கீதுமா…” அதற்குமேல் கேட்க முடியாமல் திணறினான் அந்த அப்பாவி கணவன்.

அவனின் கையை விலக்கியக் கலிவரதன் “இதுமட்டும் இல்லை மாதேஷ், இன்னும் இருக்கு பார்க்கிறயா?” கேலியாகக் கேட்டபடி அவரின் கைப்பேசியில் இருந்த சில காட்சிகளைக் காட்டினார். அது அவர்களின் அப்பட்டமான அந்தரங்கம்.

“ஆஆ…” அதிர்ச்சி தாங்காமல் அலறிக் கத்தினான்.

“கத்தாதே மாதேஷ்! வெளியே விஷயம் தெரிந்தால் உனக்குத்தான் அவமானம்.” அலட்டிக்கொள்ளாமல் சொன்ன கலிவரதன், “அப்புறம் பல நாள் உங்க வீட்டில் ராணி ராஜியம் போல” என்று கண்சிமிட்டி கலிவரதன் கேட்க, முகத்திலேயே அடித்துக்கொண்டு அழுதான்.

அவனுக்கு அந்த நொடி அதிர்ச்சியில் என்ன மாதிரியான எதிர்வினை காட்டுவது என்றே தெரியவில்லை.

“உன் பொண்டாட்டி கீதா ரொம்ப அழகு மாதேஷ். அவள் அப்பப்ப மார்டன் ட்ரெஸ் போடுவதைப் பார்த்திருக்கேன். ஆனால், அவளுக்கு அதெல்லாம் நல்லாவே இல்லை. அதுவும் பேண்ட், ஷர்ட் சுத்தமா பிடிக்கலை. அவள் சேலை கட்டி, பூ வைத்து அலங்கரித்து அழகா நளினமா நடந்து நைட் உன் பக்கத்தில் வருவாளே… அப்படியே அவள் என் பக்கத்தில் வருவதுபோல் இருக்கும் மாதேஷ்!” என்று கலிவரதன் இளித்துக்கொண்டே கூற, அவரை அடிக்கப் பாய்ந்தான் மாதேஷ்.

அவனிடமிருந்து லாவகமாக விலகி அவனைப் பிடித்துத் தள்ளிவிட்ட கலிவரதன், “நீ எல்லாம் அவளுக்கு மேட்சே இல்லை மாதேஷ். அதுவும் உன்னை விட உன் பொண்டாட்டி கொஞ்சம் வளர்த்தி. அவளுக்குக் கொஞ்சமும் பொறுத்தமில்லாத உன்னைப் போய்க் கட்டிக்கிட்டு… ம்ப்ச், தப்பு பண்ணிட்டாள். அதில் எனக்கு ரொம்பக் குறை மாதேஷ்…” என்ற கலிவரதன், இன்னும் என்னென்னவோ பேசினார்.

மாதேஷை காதலித்தபோது கீதா அவனைப் பார்க்க அங்கே வரும்போதே கலிவரதனுக்கு அவளின் மீது ஒரு கண்ணாம்.

அதனால் மாதேஷுக்குத் திருமணம் நடந்தபோது, வீட்டிற்கு வெள்ளை அடிக்க அவரே முன் வந்தாராம். “என் வீட்டில் பேச்சுலரா தங்கியிருந்த உனக்காக இது கூடச் செய்ய மாட்டேனா மாதேஷ்? நீ வேலைக்குப் போயிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.

அப்போதே அவனின் படுக்கையறையில் ரகசிய கேமிராவை அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்துவிட்டாராம். அவன் திருமணம் முடிந்து கீதாவுடன் வாழ ஆரம்பித்த நாளிலிருந்து, அவர்களின் ஒவ்வொரு தருணத்தையும் இவர் இங்கேயிருந்து பார்த்துக்கொண்டிருந்தாராம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்.

கேட்டவனுக்கு, காணொளியை பார்த்தவனுக்கு எப்படி இருக்கும்? இப்படி ஒன்று வீட்டில் இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தால்தானே கேமிரா இருந்ததை தேடி அறிந்திருப்பான். கலிவரதனின் பெரிய மனிதத் தோரணை, நல்லவன் என்ற முகத்தை மட்டும் வெளிப்படையாகக் காட்டியதை எல்லாம் நம்பி ஏமாந்தல்லவா போனான். இப்படி அடிமுட்டாளாக இருந்திருக்கிறோமே என்று நினைத்த மாதேஷ் அவ்விடத்திலேயே உயிரோடு மடிந்து போனான்.

“ஏன்… ஏன் இப்படிச் செய்தீங்க? உங்களைப் போய் எவ்வளவு நல்லவருன்னு நினைச்சேன். நீங்க போய்…” என்று மாதேஷ் கதறிக்கொண்டிருந்தபோது,

“யாருங்க அது சும்மா கத்திட்டே இருப்பது? பிரஷர் கூடிப்போச்சுன்னு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன். தூங்க முடியாமல் ஒரே சத்தம்…” சிடுசிடுவெனக் கேட்டவாறு நிதானமாக எழுந்து வந்த பொன்னி, தொலைக்காட்சி உடைந்திருப்பதைப் பார்த்து, “ஐயோ! ஐயோ! என் டிவியை எந்தப் பாவிப்பய உடைச்சான்? நாடகம் பார்க்க முடியாதே!” நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தினார்.

“இந்தப் பாவிதான்! இவனும், இவன் பொண்டாட்டியும் செய்த லீலைகளை நான் பார்த்துட்டேனாம். போட்டு உடைச்சுட்டான்.” கலிவரதன் சாதாரணமாகச் சொல்ல,

“பகலிலுமா?” என்று பொன்னியும் இலகுவாகக் கேட்க, அவரை அதிர்ச்சியாய் பார்த்தான் மாதேஷ்.

அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்தால் பொன்னிக்கும் எல்லாம் தெரியும் என்பதை எடுத்துரைப்பதாய்!

“இதெல்லாம் எதுக்குன்னு கேட்டியே மாதேஷ். இதோ இவளுக்கு ஒன்னும் முடியாது. வயசாகிப் போச்சுன்னு என்னைப் பக்கத்திலேயே விட மாட்டா. நான் இன்னும் புதுமாப்பிள்ளைதான். எனக்கு ஆசை அதிகம். அவளால் ஈடுகொடுக்க முடியலைன்னு எப்படியும் போன்னு என்னை விட்டுட்டா. அப்பப்ப நான் வெளியே பார்த்துக்கிறதுதான். ஆனா, அது மட்டும் எனக்குப் போதலை. குடும்பப் பெண்கள் மேல கை வச்சால், எனக்கு ஊருக்குள் இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போகுமே. ஆனால், அதுக்காக என் ஆசையையும் அடக்கணுமா என்ன? அதான் ஒரு கிளுகிளுப்பா வீட்டிலேயே லைவ் ஷோ பார்த்து…” என்று வக்கிரமாய்க் கண்ணைச் சிமிட்டினார்.

“மத்த வீடியோ எல்லாம் அவ்வளவு நல்லாயில்லை மாதேஷ். எல்லாம் செயற்கையா நடிக்கிறாங்க. இதுனா இயற்கையா… புருஷனும், பொண்டாட்டியும் அப்படியே…” என்று கண்கள் சொருக கலிவரதன் காட்டிய முகப்பாவனை அருவருப்பாய்!

“உன்னைச் சும்மா விட மாட்டேன்டா… உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கோபமாகக் கலிவரதனின் சட்டையைப் பிடித்தான் மாதேஷ்!

“உன்னால் என்னை என்ன செய்ய முடியும் மாதேஷ்? என் மயிரை கூடப் புடுங்க முடியாது. என்னோட பவர் என்னன்னு உனக்குத் தெரியுமா? எனக்குப் பெரிய பெரிய அரசியல்வாதிகள் கூடத் தெரியும். நீ மூச்சுக் கூட விட முடியாமல் பண்ணிடுவேன்!” கலிவரதன் கடுமையாக மிரட்ட, மாதேஷ் அதிர்ந்து நின்றான்.

“நான் நினைச்சா இந்த வீடியோவை இப்பவே நெட்ல சுத்தவிடுவேன். எனக்குத் தெரிந்த பெரிய பெரிய ஆளுங்களுக்குக் காட்டி, சொளையா காசு பார்ப்பேன். நீ கற்பனை செய்ய முடியாத இடத்தில் கூட இந்த வீடியோவை சுத்த விட என்னால் முடியும். உன் பொண்டாட்டியை கேட்கலையே… அதுவரை சந்தோஷப்பட்டுக்கோ. நீ ஓவரா துள்ளினா அதுவும் கேட்பேன்!” மிரட்டலும் வக்கிரமுமாகக் கலிவரதன் எச்சரிக்க, மாதேஷூக்கு‌ கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

ஆனாலும் அவனால் முடிந்தளவு மிரட்ட முயன்றான். ‘போலீஸூக்கு போவேன்’ என்றால் ‘அங்கேயும் எனக்கு ஆட்களைத் தெரியும். அவர்களும் வீடியோவை பார்ப்பார்கள்’ என்றார்.

வேறு யாரிடமாவது சொன்னால், “அவனுக்குத்தான் அவமானம்” என்றார். “வீட்டை விட்டு போவேன்” என்றால், “நீ கிளம்பிய மறுநொடி அத்தனையும் நெட்டில் சுழற்சியில் சுத்தும்” என்றார்.

“உன் பொண்டாட்டிகிட்ட சொன்னா… அவள் நாண்டுக்கிட்டு செத்துடுவா மாதேஷ்” என்றார்.

இப்படி ஒரு விஷயம் என்று அவன் மூச்சு விட்டால் கூட, விபரீதம் பயங்கரமாய் இருக்கும் என்று எச்சரித்தார்.

மான அவமானத்துக்கு அஞ்சிய சாதாரண மனிதனாய் உருகுலைந்து போனான் மாதேஷ். அவனின் அந்தப் பயத்தைத் தன் ஆயுதமாகப் பயன்படுத்தினார் கலிவரதன். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அவன் வாயை அடைக்க வேண்டுமென்றால், மிரட்டல்தான் சரி என்ற கலிவரதனின் சூழ்ச்சியில் வீழ்ந்து போனான் மாதேஷ்.

அதன்பின்தான் வீட்டில் அவனின் நடவடிக்கைகள் மாறின. தன்னுடைய இயலாமையைக் கோபமாய் அவனின் மனைவியிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தான். ஆனால், அதற்கும் அவனுக்கு வலித்தது. ஒன்றுமறியாத அவளைப் போய்த் தான் கொடுமை படுத்துவதாய் உணர்ந்தான்.

இப்படி ஒரு இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஏதேதோ யோசித்தான். எந்த வழியும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைத்த கடைசி வழி குடும்பத்துடன் இறந்து போவதுதான்.

இதோ, அவனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.

அவன் திக்கி திணறி உயிருக்கு போராடியபடி உரைத்தவைகளைக் கேட்டுத் துடித்துப் போனாள் கீதா.

“ஸா…ரி… கீ…துமா… என்…னால் அவ…னோ..ட… போரா…ட மு…டியலை. நீ… நீ..‌ போ‌யி…டு..‌.” என்ற மாதேஷின் உயிர்நாடி மெல்ல அடங்கிப் போனது.

****
மயான அமைதி நிலவியது அவ்வறையில்!

ஆரவி கண்களைச் சிமிட்டி திரும்பிக்கொண்டாள்.

தலையைக் குனிந்து அமர்ந்திருந்த கீதாஞ்சலியின் உதடுகள் முணுமுணுத்தன.

“போயிட்டாங்க… என்னை விட்டுப் போயிட்டாங்க… மொத்தமா… காத்தா கரைஞ்சு…” அழுகையுடன் சொன்னதையே‌ சொன்னாள் கீதாஞ்சலி.

சில மணித்துளிகள் அவளை அழவிட்டு, “ஸாரி பார் யுவர் லாஸ் கீதாஞ்சலி!” என மனிதாபிமானத்தைக் காட்டிய பிரதாப், “அதனால்தான் கலிவரதனை கத்திரிக்கோலால் பலமுறை குத்தி, கண்ணில் ஆசிட்டை ஊத்தி கொன்னியா?” எனக் கேட்டான்.

“யெஸ்! யெஸ்! எங்க அந்தரங்கத்தை அணுஅணுவா ரசித்தவனைச் சும்மா விடலாமா? என் உயிரானவங்களை இழந்து சில நாட்கள் இரவு பகல் புரியாம பித்துப் பிடித்ததுபோல் இருந்தேன். சில நாட்கள் மயக்கத்தில் இருந்தேன். மனோகர் அண்ணாதான் என்னை ஹாஸ்பிடலில் சேர்த்து பார்த்துக்கிட்டாங்க. என் மாதேஷ், என் நிலா பாப்பாவுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் மனோகர் அண்ணாதான் செய்தாங்க.

என் உடல் தேறியதும், என்னை வேறொரு வாடகை வீட்டில் தங்க வச்சாங்க‌. தனிமையில் ஒவ்வொரு நாளும் அந்தக் கலிவரதனை ஏதாவது செய்யணும்னு எனக்குள் வெறியேறிப்போய் இருந்தது.

ஒரு ஆறு மாசம் கடந்தப்ப ஒரு நாளை தேர்ந்தெடுத்தேன். அந்தப் பொன்னி அன்னைக்கு ஒரு டெத்துன்னு எங்கயோ போயிட்டா. அதுதான் அவ புருஷனை டெத்தாக்க சரியான நேரம்னு திட்டம் போட்டு போனேன். அந்த ஏரியா எனக்கு அத்துப்படி! மத்த போர்ஷனில் இருப்பவங்களும் எப்ப வீட்டில் இருப்பாங்க. எப்ப வெளியே போவாங்கனு எனக்குத் தெரியும். அதையே யூஸ் பண்ணி சரியான நேரமா அந்த நாய் வீட்டுக்குப் போனேன். அதுவும் அவனுக்குப் பிடிக்காத பேண்ட் ஷர்ட் ட்ரெஸில், இன்னும் என்னை வளர்த்தியா காட்ட ஹீல்ஸ் எல்லாம் போட்டு, தலைமுடியை கிராப் வெட்டி, ஒரு ஆம்பளை போலப் போனேன்.

“என்னைப் பார்த்துட்டு முதலில் அவனுக்கு அடையாளமே தெரியலை. அப்புறம் நான்னு தெரிந்ததும் பல்லை இளிச்சிட்டு, “கீதா, நீயா? வாமா… என்னமா இப்படி நடந்திருச்சு? நானும் பொன்னியும் அன்னைக்குன்னு பார்த்து சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போயிட்டோம். திரும்பி வந்தா இப்படி நியூஸ் காதில் விழுது. துடிச்சுப் போயிட்டோம். நீயும் மயக்கத்திலேயே ஹாஸ்பிட்டலில் கிடந்த. வருத்தம் தெரிவிக்கக் கூட என்னால் முடியாம போச்சேமா. இந்த மாதேஷ் பய ஏன் இப்படிப் பண்ணான்? மனோகர்கிட்ட கேட்டதுக்கு ஏதோ கடன் பிரச்சினைன்னு எங்ககிட்டயும், அக்கப்பக்கத்திலும் சொன்னான். அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பாங்களா? என்கிட்ட உதவி கேட்டுருந்தால், நான் உதவி பண்ணிருப்பேனே”ன்னு எனக்கு விஷயமே தெரியாது நினைச்சிட்டுப் பேசினான்.

“எப்படி நானும் என் புருஷனும் ஒன்னா இருந்த வீடியோவை நெட்டில் விட்டு, அந்த மாமா வேலைக்குச் சன்மானமா கிடைத்த பணத்தை வைத்து, எங்களுக்கு உதவி செய்திருப்பியோன்னு நக்கலா நான் கேட்டதும், அவன் முகத்தில் ஈ ஆடலை. அதுவும் கொஞ்ச நேரம்தான் அப்புறம், வக்கிரமா என்னைப் பார்த்து,

“உனக்கு எல்லாம் தெரியுமா? நல்லதா போச்சு. இப்பவும் உங்க வீடியோ என்கிட்ட பத்திரமா இருக்கு. அதை இப்ப கூட என்னால் நெட்டில் விட முடியும். அப்படி நான் செய்யாம இருக்கணும்னா…” சொல்லி இளிச்சுட்டே என் பக்கத்தில் வந்தான். அவனிடம் நைட்ரெஸ் ஆக்ஸைடை யூஸ் பண்ணேன். அவன் சத்தம் வெளியே கேட்காம இருக்க, டீவி சத்தத்தைக் கூட்டி வச்சேன். அவன் அரைகுறை உணர்வா இருக்கும்போது என்னோட வெறி தீரும் மட்டும் அவனைக் குத்தினேன். அவன் கண்ணை ஆசிட் ஊத்தி குருடாக்கினேன்.‌ அவன் துடிதுடிச்சு சாவதை ரசிச்சுப் பார்த்தேன். என் மாதேஷும், நிலா பாப்பாவும் என்னைப் பார்த்துச் சந்தோஷமா சிரிச்சாங்க பிரதாப்” என்று கண்களை மூடி இரசித்துச் சொன்னவளின் இதழோரமும் புன்னகை!

“அவன் வீட்டில் இருந்த எங்க வீடியோவை எல்லாம் தேடி எடுத்து அழிச்சேன். அதோட என்னோட வேலை முடியலை. அவள் புருஷனை பத்தி தெரிஞ்ச பிறகும் அவனுக்கு உடந்தையா இருந்த பொன்னியை மட்டும் சும்மா விடலாமா? அவளுக்கும் ஏதாவது தண்டனை கொடுக்கணுமே. எதையும்‌ குறையா விடக்கூடாதே. அவள் புருஷன் செத்ததும் காலியா இருந்த இன்னொரு போர்ஷனில் இருக்காள்னு தெரிந்தது. துக்கம் விசாரிக்கிற மாதிரி பிளான் பண்ணி போகணும்னு போனேன். என் நைட்ரெஸ் செல்லத்தை அவளுக்குக் கொடுத்து மிரட்டி அவளையே அவள் கையை அறுத்துக்கிட்டு தற்கொலை செய்ய வைச்சேன். என்னை விட்டுடுன்னு அரைகுறை மயக்கத்திலும் என்கிட்ட கதறினா. அவளோட கதறல் எனக்கு இன்பமா இருந்தது பிரதாப்.”

“பொன்னிக்கு மட்டும் ஏன் அப்படி?”

“ஆக்சுவலா.. அவள் புருஷனை மாதிரி துடிக்கத் துடிக்க அவளைச் சாகடிக்கணும்னு தான் நினைச்சிருந்தேன். அவள் வாயைத் தைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அந்த வாய்தானே என் நிலா பாப்பாவை குட்டிச் சாத்தான்னு சொல்லுச்சு. அவள் புருஷன் தப்புச் செய்தபோது அந்த வாய்தானே தட்டிக் கேட்கலை? அந்த நாறவாய்க்குத் தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், நான் நினைச்சபடி செய்ய முடியலை.

ஏற்கெனவே போலீஸ் கலிவரதன் கேஸை விசாரிச்சுட்டு இருந்தாங்க. மனோகர் அண்ணாகிட்ட விசாரணை செய்திருக்காங்க. என்னையும் கூட விசாரிக்கணும்னு போலீஸ் பேசிக்கிட்டதா அண்ணா மூலமா கேள்விப்பட்டேன். அப்படியே போலீஸ் வந்து என்னை விசாரிச்சாலும், நானும், அண்ணாவும் பேசி வச்ச மாதிரி கடன் தொல்லையால்தான் மாதேஷ் தற்கொலை முடிவை எடுத்தார். அங்க இருந்தால் எனக்கு அவங்க நினைவு வருதுன்னு வீட்டை காலி செய்தேன்னு சொல்ல ரெடியா இருந்தேன். என்னை வந்து அவங்க விசாரித்தபோது அதைத்தான் நானும் சொன்னேன்.”

“நீயும், மனோகரும் பேசி வச்சா? அப்ப மனோகருக்கு கலிவரதன் பற்றிய உண்மை தெரியுமா?” என்று பிரதாப் கேட்க,

“தெரியும். அன்னைக்கு நான் ஆம்புலன்ஸுக்கு மட்டும் போன் பண்ணலை. மனோகர் அண்ணாவுக்கும் போன் பண்ணேன். அப்ப வெளியே எங்கயோ போயிருந்தவர் மாதேஷ் உண்மை சொன்னபோது வந்து கேட்டுட்டார்.”

“அப்ப கலிவரதனை நீ கொன்ன விஷயம்?”

“அவன் செத்தபிறகுதான் அண்ணா வந்து கேட்டார், சொன்னேன். நீ செய்தது தப்புன்னு சொன்னார், கண்டிச்சார். அவரிடம் பொன்னியையும் கொலை செய்யப் போறேன்னு சொன்னால் கண்டிப்பா விடமாட்டார். அதோட போலீஸை அதுக்கு மேல சமாளிக்க முடியாதோன்னு பயந்தார். அதான் பொன்னியை எப்படி எல்லாம் கொல்லணும்னு ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் அடக்கிக்கிட்டு, அவளே தற்கொலை செய்ததுபோலச் செய்தேன். அவ உயிரை அவளை வச்சே எடுக்க வைப்பதிலும் ஒருவித தனி ருசி இருக்குது பிரதாப்” என்று லயித்துக் கூறினாள் கீதாஞ்சலி.

அவள் எவ்வளவு கொடூரமானவளாக மாறியிருக்கிறாள் என்பதைக் கண்கூடாக அவளின் பாவனையில் கண்டான் பிரதாப்.

“பொன்னி செத்ததும், அண்ணா என்னைப் பார்த்து ரொம்பப் பயந்தார். என்னை டாக்டர் ரகோத்தமனிடம் அழைச்சிட்டு போய் ட்ரீட்மென்ட் எடுக்க வைத்தார். அதில் எனக்குச் சரியாயிடுச்சுன்னுதான் டாக்டரும், அண்ணாவும் நம்பினாங்க. என் மனநிலையை மாத்த அவங்க ட்யூசன் சென்டருக்கு என்னை வேலைக்கு வரச்சொன்னாங்க. நான் கல்யாணத்தின் போது பார்த்துட்டு இருந்த வேலையை நிலா பாப்பாவுக்காக விட்டிருந்தேன். அதோட படிச்ச படிப்புக்கு சம்பந்தம் இல்லாம நான் எப்படிப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பதுன்னு தயங்கினேன்‌. ட்யூசன் தானே… நீ நல்லா படிக்கிற பொண்ணு. உன்னால் முடியும்னு அண்ணா நம்பிக்கை கொடுத்தார். அதோட, அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால் என் மனநிலைக்கு மாற்றம் வரும்னு சொன்னார்‌. ‘கீதா’ அடையாளம் வேணாம். இனி நீ ‘அஞ்சலி’யா மட்டும் இரு. அப்பதான் கலிவரதன், பொன்னி கேஸில் மாட்டாமல் இருக்க நல்லதுன்னு சொன்னார். நானும் என்னோட அடையாளத்தை மாத்திக்கிட்டு அஞ்சலியா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். நல்ல டீச்சரா இருந்தேன்‌.”

“ஆனாலும், என்னைச் சுற்றி நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டபோது என்னால் என்னையே கண்ட்ரோல் செய்ய முடியலை. என் வேட்டையை ஆரம்பித்தேன். கலிவரதனையும் பொன்னியையும் எப்படி எல்லாம் கொல்லணும்னு நினைச்சேனோ அதை எல்லாம், மத்தவங்க மூலமா நிறைவேத்திக்கிட்டேன். முக்கியமா வாயை தைப்பதை…” என்று அவள் நிறுத்த,

“நீ படிச்ச பிஎஸ்சி சர்ஜிக்கல் அசிஸ்டன்ட்ஸ் படிப்பு தான் நீ நேர்த்தியா வாயை தைக்கப் பழகிய காரணம், அப்படித்தானே கீதாஞ்சலி?” என்று கேட்டான். அவள் பிடிப்பட்டதுமே அவளின் படிப்பு விவரங்கள், முன்பு என்ன வேலை பார்த்தாள் என்பதை எல்லாம் திலீப் தகவலறிந்து வந்து சொல்லியிருந்தான்‌.

“யெஸ்,‌ அதோட ஒவ்வொன்னா… நேர்த்தியா தடயம் இல்லாம, மாட்டிக்காம என்னென்ன செய்யலாம்னு‌ கத்துக்கிட்டு உங்க போலீஸ் டிப்பார்மெண்டாலேயே என்னை நெருங்க முடியாததுபோல என் அடையாளத்தை மாத்திக்கிட்டுக் கனக்கச்சிதமா கொலைகளைச் செய்தேன்” என்றாள்.

“உன்னைக் கிட்டத்தட்ட நாங்களே நெருங்கிட்டோம் கீதாஞ்சலி. மனோகர் தான் நடுவில் புகுந்து எங்களைக் குழப்பிவிட்டான்” என்று கோபத்துடன் சொன்னான் பிரதாப்.

“அது நான் மாட்டிக்கக் கூடாதுன்னு அண்ணா அப்படிச் செய்துட்டார். அவரோட மாமியார் மாமனாரை கொன்னுட்டு நான் எஸ்கேப் ஆகும்போது நைனி மட்டும் என்னைப் பார்க்கலை, அண்ணாவும் பார்த்துட்டார். அதனால்தான் அவர் நிதானமாய் இருந்தார். தனியா வந்து என்கிட்ட சத்தம் போட்டார். அப்புறம் என்னைத் தப்பிக்க வைக்க, என் வீட்டில் இருந்த நான் கொலை செய்யப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அவர் டியூஷன் சென்டருக்கு மாத்தினார். நான் தடுத்தும் அவர் கேட்கலை. எனக்குப் பதிலா அவர் போலீஸில் மாட்டினால் நான் திருந்திடுவேன்னு அவர் நினைச்சார். நானே நிறுத்திடுறேன்ணா. இனி யாரையும் கொல்ல மாட்டேன்னு நான் சொன்னதை அவர் நம்பலை.

எனக்கு நல்லது செய்வதா நினைச்சு, என்கிட்ட சொல்லாமலே அவர் அந்த முடிவெடுத்துட்டார். அவர் மேல உங்க கவனம் எல்லாம் திரும்பணும்னுதான் இரண்டு நாட்கள் தலைமறைவா இருந்தார். அவரின் முடிவை மாத்த நினைச்சேன். நான் செய்த கொலைகளுக்காக அவர் மாட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அவரைக் காண்டாக்ட் பண்ண முயற்சி செய்தேன். ஆனால் என்கிட்டயும் அவர் பேச மறுத்தார். எப்படி அவரை மாட்டவிடாமல் தப்பிக்க வைக்கிறதுன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, நீங்க அவரைப் பிடிச்சிட்டீங்க.” என்றாள் வருத்தமாக.

“எனக்கு ஒரு சந்தேகம் கீதாஞ்சலி. கலிவரதன் எடுத்த அந்த வீடியோவை அவர் மட்டும்தான் பார்த்தாரா? இல்ல, அவரோட சங்கத்து ஆளுங்களும் பார்த்தாங்களா?” என்று பிரதாப் கேட்க,

“சங்கத்து ஆளுங்களா? அவங்க யாரு?” என்று புதிதாகக் கேட்பதுபோல் கேட்டாள்.

“என்ன தெரியாததுபோலக் கேட்கிற? கலிவரதன், செல்வநாயகம், மதனகோபால், ரகுராம் எல்லாரும் பழைய ஒரு சங்கத்தில் அங்கத்தினர்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது எனக்கே புதுத் தகவல். நான் அவங்களை எதுக்காகக் கொன்னேன்னு ஏற்கெனவே சொல்லிட்டேன் பிரதாப். ஒருவேளை எனக்கே தெரியாமல் அவங்க எங்க வீடியோவை பார்த்திருந்தால், அவங்களை நான் கொன்னதும், கொன்ன விதமும் சரிதானே பிரதாப்?” என்று கொடூர புன்னகையுடன் கேட்டாள்.

“ரகுராம் வீட்டில் அந்தக் கேமமைல் டீ தூள் எப்படி வந்தது கீதாஞ்சலி? அதை உனக்கு நைனி தானே கொடுத்தாள்? அவளை மாட்ட வைக்க அதை வச்சு பிளான் செய்தியா?”

“ரகுராம், வத்சலா கூட நல்லா பழக ட்ரை செய்தபோது, வயசாச்சே சரியா தூக்கம் வராம இருந்தால், இந்த டீயை போட்டு குடிங்கன்னு பாசமா கொடுத்து பேசிட்டு வருவேன். அன்னைக்கு நான் அவங்க வீட்டுக்குப் போனபோது அந்த டீயை போட்டு குடிச்சிட்டு, இப்ப எல்லாம் இதைக் குடிச்சதும் நல்லா தூக்கம் வருதுன்னு சிரிச்சிட்டே சொன்னவங்களை… மொத்தமா தூங்க வச்சேன். அன்னைக்குன்னு பார்த்து நைனி அவளேதான் குறுக்கே வந்தாள்” என்று தோளை குலுக்கி அலட்சியம் காட்டினாள் கீதாஞ்சலி.

மேலும் அவளிடம் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டு வாக்குமூலம் வாங்கினான். அனைத்தும் ரெக்கார்ட் ஆகியிருக்க, விசாரணை முடிந்ததும் எழுந்தான் பிரதாப்.

“என்னோட பிரேஸ்லெட் எங்கே பிரதாப்? அது எங்கிட்ட கொடுத்துடு. என் உயிரானவங்க ஞாபகார்த்தமா என்னிடம் இருந்தது அது. என் நிலாவோட டாலரை வேற அதில் கோர்த்திருந்தேன். பொன்னியை கொன்னபோது அதில் பாதி உடைந்தபோதே என் மனசும் உடைந்தது. இப்ப மொத்தமா உங்கிட்ட தொலைச்சுட்டு நிக்கிறேன். அது எனக்கு வேணும் பிரதாப். அது இதோ… இங்கே இருந்தால்தான்… இங்கே… இயல்பா துடிக்கும் பிரதாப்” முதலில் தன் மணிக்கட்டையும், அடுத்ததாகத் தன் இதயத்தை‌யும் சுட்டிக்காட்டிய கீதாஞ்சலியின் விழிகள் இறைஞ்சின.

“அதுவும் ஒரு ஆதாரம் கீதாஞ்சலி.” என்ற பிரதாப் மறுப்பாகத் தலையசைத்தபடி வெளியே நடக்க ஆரம்பிக்க, திலீப்பும், ஆரவியும் பின்னால் செல்ல,

“பிரதாப்… ஏசிபி சார்…” கீதாஞ்சலியின் கெஞ்சல் குரலும் அவனைப் பின் தொடர்ந்தது.

“சார், ஒரு சந்தேகம்‌… சைக்கோ கில்லர்ஸ் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரே பேர்ட்டனை ஃபாலோ பண்ணுவாங்க. ஆனால், கீதாஞ்சலி அவங்களைக் கொன்ன காரணங்களும், கொலை செய்த விதமும் வேறுபடுதே” வெளியே வந்ததும் திலீப் சொல்ல,

“கீதாஞ்சலிக்கு இருக்கும் சைகோபதி பிரச்சினைதான் அதுக்குக் காரணம் திலீப். சின்னச் சின்ன வேறுபாடுகள் இருந்தாலும், அதன் முடிச்சு அனைத்தும் கீதாஞ்சலி அவள் வாழ்க்கையில் சந்தித்தவைகளோடு ஒத்துப்போகுது. அவளை ட்ரிக்கர் செய்ய அதில் ஏதாவது ஒரு காரணமே போதும்.” என்றான் பிரதாப்.

“உண்மைதான் சார். செல்வநாயகத்திடம் வசுமதியிடம் சந்திரா அனுபவித்தது கலிவரதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை ஞாபகபடுத்தி இருக்கும்.

மதனகோபால் விஷயத்தில் கேமிரா, அப்புறம் வாடகைக்கு இருந்தவங்களை விரட்டிவிட்டது.

தனபால், தண்டபாணி விஷயத்தில் பாதிப்படைந்த பிள்ளைகளைத் தன்னோட இறந்த குழந்தையோட இணைத்து பார்த்திருப்பாள்.

மனோகரோட மாமியார் மாமனாரை கொல்ல, அவளுக்கு அவ்வளவு உதவிகள் செய்தவனின் வாழ்க்கை கெட அவர்கள் காரணமாக இருந்ததே போதும்.” என்றான் திலீப்.

“கரெக்ட் திலீப்!” என்ற பிரதாப்பின் முகத்தில் ஒரு தொடர் கொலை வழக்கு முடிவுக்கு வந்த நிம்மதி நிலவியது!
 
எழிலன்பு எழுதிய அத்தியாயம் ❤️
 
இன்பா அலோசியஸ் அவர்கள் எழுதியது
 
கீதாஞ்சலி செய்தது தப்பேயில்லை
 
இந்த episode 24 நர்மதா சுப்பிரமணி யம் அவர்கள்
 
நர்மதா சுப்ரமணியம் எழுதியது இது.....

சூப்பர் எல்லாம் connect ஆகிட்டு
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 24 Pre Final)


கீதாஞ்சலி செய்ததுல தப்பே இல்லை, இந்த கலிவரதன் பொன்னி மாதிரி ஆளுங்களையெல்லாம்
இப்படித்தான் வாயை தைச்சியும், கண்ணை நோண்டியும் மரணத்தை கொடுக்கணும்.


பட்.. இந்த காமரா வைச்சு அவங்க அந்தரங்கத்தை எல்லாம் படமா பார்த்ததை மாதேஷ் கீதாஞ்சலி கிட்ட சொல்லியிருந்தா, அவளே சூப்பரா ஐடியா கொடுத்து கலிவரதனோட ட்ராப்ல இருந்து வெளியே வர ஏதாவது ஐடியா கொடுத்திருப்பா போல, ஏன்னா திட்டம் போட்டு மாட்டிக்காம கொலை பண்ணத் தெரிஞ்சவளுக்கு, அவன் கிட்டயிருந்து எப்படி தப்பிச்சு தங்களோட வாழ்க்கையை காப்பாத்திக்க முடியும்ங்கிற வழியையும் அவளே கண்டு பிடிச்சிருப்பாத்தானே...?
இந்த மாதேஷ் முட்டாள் தான் கோழை மாதிரி தானும் செத்து அந்த சின்னஞ்சிறு சிசுவையும் சாகடிச்சிட்டான். அட்லீஸ்ட், மனோகர் கிட்டயாவது சொல்லியிருக்கலாம். மனோகர் அப்பவே கேட்டான் தானே, ஏதாவது பிரச்சினையான்னு.
தவிர, இந்த கலிவரதனோட பொன்னி ரெண்டு பேரோட நடவடிக்கையைப் பார்த்தால்
தங்களோட மத்த குடித்தனக்காரரோட டே டு டே நிகழ்ச்சிகளையெல்லாம் டைரக்ட் டெலிகாஸ்ட்டா நிதைக்கும் பார்ப்பாங்க போலவே, அப்படின்னா மனோகர் அவனோட மனைவி பாவனா வீட்டு விஷயத்தையும் பார்த்திருப்பாங்க தானே..?
ஒரு பெண்ணால என்ன செய்ய முடியும் கத்தி அழறதை தவிரன்னு... கீதாஞ்சலியை மாதேஷ் அண்டர் எஸ்டிமேட்
பண்ணியிருந்தாலும், அட்லீஸ்ட் அவன் நண்பன் மனோகரன் கிட்டயாவது உண்மையைச் சொல்லி உதவி கேட்டிருக்கலாம். தன்கும் தன் குழந்தைக்கும், மனைவிக்கும் விஷம் கொடுத்து சாகத் துணிஞ்ச தைரியம், ஏன் தன்னோட வாழ்க்கையை காப்பாத்திக்க வாழ வரலைன்னு புரியலை..
லைக் லைஃப் இஸ் மிஸ்டிரியஸ் போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Latest threads

Top Bottom