Writer✍️
- Joined
- Sep 25, 2025
- Messages
- 100
- Reaction score
- 97
- Points
- 28
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 17
சகாயன், மித்ரன் இருவருக்குமான மணவறைகளும் பக்கத்துப் பக்கத்திலேயே, ஒரே மேடையிலேயே போடப்பட்டிருந்தன. ஒரே மேடையில் இரண்டு மணவறைகள் போடப்பட்டிருந்ததால், சடங்குகள் செய்யும் பெரியவர்கள் மற்றும் பெற்றோர் எல்லோரையும் மேடைக்குக் கீழே, முதல் வரிசையிலேயே உட்கார வைத்திருந்தார்கள்.
மண்டபத்தில் இருந்த அனைவருமே கல்யாணப் பதற்றத்திலும் பரபரப்பிலும் சுற்றிக்கொண்டிருக்க, ரிதன்யாவோ அத்தனை மமதையில் அமர்ந்திருந்தாள்.
மண்டபத்தில் இருந்த அனைவருமே கல்யாணப் பதற்றத்தில் சுற்றிக்கொண்டிருக்க, ரிதன்யாவோ அத்தனை திமிரோடு அமர்ந்திருந்தாள்.
கடந்த சில நாட்களாக இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பின்னும், தன்னை விடாமல் கைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கும் சகாயனின் காதலைக் கண்டு அவளுக்குள் மமதை இன்னும் கூடியிருந்தது. அந்தத் திமிரில், மேடைக்கு வந்த நடராஜனையோ, ஆனந்தியையோ அவள் மதிக்கவே இல்லை. அவர்கள் பக்கமாகத் திரும்பக் கூட இல்லாமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அலட்சியமாக அமர்ந்திருந்தாள்.
ஆனால் சகாயனோ, அவள் வந்து தன் பக்கத்தில் அமர்ந்த பின்னும், அவளை ஒரு புல்லையும் பூண்டையும் பார்ப்பது போல அத்தனை சாதாரணமாகப் பார்த்துவிட்டு, எதிலுமே ஒட்டாதாற்போல் அமர்ந்திருந்தான்.
அவனுக்குப் பக்கத்து மணவறையில் அமர்ந்திருந்த மித்ரனோ, யாழினி தன் அருகில் வந்து அமர்ந்ததும், அவளது கையைத் தன் மாலையின் மறைவில் யாருக்கும் தெரியாமல் மெதுவாகப் பிடித்துக் கொண்டான்.
தாலிகட்டும் நேரத்தில் தன் அக்காவுக்கு உதவுவதற்காக, நறுமுகை யாழினியின் நீண்ட சடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, இரு மணவறைகளுக்கும் நடுவில்... அதாவது சகாயனின் மிக அருகில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மித்ராவோ தன் அண்ணி யாழினிக்கு நாத்தனார் முடிச்சுப் போடுவதற்காக ஆயத்தமாக நின்றிருந்தாள்.
நாதஸ்வரச் சத்தம் ஒலிக்க, ஐயர் உரத்த குரலில், "கெட்டிமேளம்..." என்று சொன்ன அடுத்த நொடி, ரிதன்யாவின் கழுத்தில் தாலிகட்டுவதற்குப் பதிலாக, சட்டென்று மறுபக்கம் திரும்பிய சகாயன், தன் அருகில் அக்காவுக்கு உதவி செய்ய அமர்ந்திருந்த நறுமுகையின் கழுத்தில் மின்னல் வேகத்தில் தாலியைக் கட்டினான்! யாருக்கும் தடுத்து நிறுத்த ஒரு நொடி கூட அவகாசம் கொடுக்காமல், அவனே விறுவிறுவென மூன்று முடிச்சுகளையும் போட்ட பின்னரே நிமிர்ந்து பார்த்தான்.
மண்டபமே அந்த அதிர்ச்சியில் அப்படியே சமைந்தி போயிருக்க, பக்கத்தில் தாலிகட்டத் தயாராக இருந்த மித்ரனும் தாலியைக் கட்டாமல், திகைப்பின் உச்சியில் தன் அண்ணாவை அப்படியே பார்த்தது பார்த்தபடி நிற்க, அவனுக்குத் தாலியைக் கட்டும்படி தன் கண்ணாலேயே ஜாடை காட்டினான் சகாயன்.
அண்ணனின் ஜாடைக்குக் கட்டுப்பட்டு மித்ரனும் யாழினியின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான். ஆனாலும், சகாயனின் பக்கத்தில் ரிதன்யா தீக்பிரமையில், என்ன நடந்தது என்றே புரியாமல் சிலையாக சமைந்து நிற்பதைக் கண்டு மித்ரனுக்குள் ஒரு நடுக்கம் பரவியது.
ஆனால் சகாயனோ படு கூலாக நறுமுகையைப் பார்த்து, "நான் உனக்குத் தாலிகட்டிட்டேன் நறுமுகை... இனி நீதான் உன் புருஷனை எந்தவிதத் தீய சக்தியும் அண்டாமல் பத்திரமாப் பார்த்துக்கணும்" என்றான்.
அப்போதுதான் அந்தத் திகைப்பிலிருந்து மெல்ல மீண்டாள் ரிதன்யா. அவளது முகம் அப்படியே மாற, சகாயனை நோக்கி, "சகா... என்ன காரியம் செய்து வச்சிருக்க நீ?!" என்று அத்தனை ஆக்ரோஷத்தோடு உறுமினாள்.
அதற்கும் சகாயன் துளியும் பதற்றப்படாமல் படு கூலாகவே, "எனக்கு லண்டனுக்கு ஹனிமூன் போறதுக்கு இஷ்டம் இல்லை ரிதன்யா... அதுதான்! என் கூட மூணாருக்கு யார் ஹனிமூனுக்கு வருவாங்களோ, அவங்களுக்கே தாலி கட்டிட்டேன்!" என்றான்.
அவன் சொன்னது அங்கிருந்த மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும், ரிதன்யாவுக்கு மட்டும் அது நன்றாகப் புரிந்தது. அவள் அப்படியே திகைத்துப் போய், "லண்டன் ஹனிமூனா?!" என்று பயந்த குரலில், சகாயனைப் பார்த்து வார்த்தைகள் தந்தியடிக்கக் கேட்டாள்.
சகாயன் அவளை ஏறிட்டுப் பார்த்து லேசாகப் பெருமூச்சொன்றை வெளியிட்டவன், "நான் என் அம்மா உன்னாலதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகும், காதலிச்சவளைத்தானே கல்யாணம் கட்டணும்னு நினைச்சேன்... உன்னை வேணாம்னு சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்குக் கொடுத்துட்டு அதை மீறுற மாதிரி ஆகிடுமேன்னுதான் பேசாம இருந்தேன் ரிதன்யா..." என்றவன், ரிதன்யாவை அர்த்தம் பொதிந்த பார்வையோடு,
"ஆனா, நீ என்னை ஹனிமூன்னு லண்டன் கூட்டிட்டுப் போய், அங்கேயே நாட்களைக் கடத்தி, அங்கேயே செட்டில் ஆகுறதுக்குத்தானே பிளான் போட்ட? அதுக்காகத்தானே உன் அப்பா அம்மாவை அங்கே அனுப்பி, நமக்கு வேலை, வீடுன்னு எல்லாத்தையும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு வரச் சொன்ன? அந்த விஷயம் எனக்கு எப்பவோ தெரிய வந்திச்சோ, அப்பவே நான் என் காதலை வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்!" என்றான் சகாயன்.
ரிதன்யாவின் முகம் ஒரு கணம் வெளிறிப் போனாலும், அதை மறைத்துக் கொண்டு, "யாரோ சொன்ன பொய்யை வச்சுக்கிட்டு இப்படியா..." என்று அவள் மழுப்ப முயன்றாள்.
"யாரும் சொல்லல ரிதன்யா, உன் வாயால நீயே பேசினதைத்தான் கேட்டேன்!" என்று சகாயனின் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது.
எப்படி சகாயனுக்குத் தெரிந்தது என்று புரியாமல் அவள் திடுக்கிட்டுப் பார்க்க,
"உயிர் நண்பர்களா இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனை என் உடம்பு அழகால மயக்கி, நான் சொல்றதைக் கேட்க வச்சிடுவேன்னு உன் பிரண்ட்கிட்ட நீ பெருமையா பேசினியே... என்ன கருமம் ரிதன்யா அது? கேட்கவே அருவருப்பா இருந்துச்சு!" என்று முகத்தைச் சுளித்து, தன் மனதில் இருந்த அத்தனை விரக்தியையும் வெளிப்படுத்தினான் சகாயன்.
"உன் அழகால என்னை மயக்குறதுக்கு வேற ஒரு பெயர் இருக்கே ரிதன்யா... அதுக்கு எதுக்கு கல்யாணம் என்ற புனிதமான பந்தம்? கல்யாணம்ங்கிறது அன்பால ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய விஷயம்.
உனக்கு என் குடும்பத்துல நான் மட்டும்தான் வேணும், மத்த ஒருத்தரும் வேணாம்னு நினைச்சிருந்தா, நீ யாரையாவது ஒரு அனாதைப் பையனைப் பார்த்துக் காதலிச்சிருக்கணும்! நீ வேணா சொல்லலாம், நான் உனக்கு ஒரு பெஸ்ட் லைஃப் பார்ட்னர்னு... ஆனா, எனக்கு இப்போ உன்னை எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆளாகக் கூடப் பார்க்க முடியல. அந்தளவுக்கு நீ ஒரு வேஸ்ட்டான பொண்ணா என் கண்ணுக்குத் தெரியுற! அதனாலதான், எனக்கு எப்போவுமே பெஸ்ட்டான ஒருத்தியை நானே செலக்ட் பண்ணிக்கிட்டேன்." என்ற சகாயன் அப்படியே தன் பக்கத்தில் திகைத்து நின்ற நறுமுகையை ஏறிட்டுப் பார்த்தான்.
"இவ இருக்காளே... இவகிட்ட ஒருமுறை பேச்சுக்கு, என்னை நீ கல்யாணம் பண்ணிக்குவியா?ன்னு கேட்டேன். அப்போ அவ தனக்காக யோசிக்காம, என் குடும்பத்தோட நிம்மதிக்காக யோசிச்சு 'சரி'ன்னு சொன்னா. ஆனா, அப்போ எனக்கு நறுமுகையை என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வர்ற உத்தேசம் துளிகூட இல்லை. ஆனா, உன்னோட உண்மை முகம் எல்லாம் எனக்குத் தெரிஞ்ச பிறகு, இந்தக்கல்யாணத்தை நிறுத்தணும்னுதான் நான் பிளான் பண்ணினேன்."
சகாயன் லேசாகப் புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்து, "அப்போ என் தங்கச்சி மித்ரா, அண்ணனை அப்படியே கடத்திக்கொண்டு போய் நறுமுகைக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?ன்னு தன் பிரண்ட்கிட்ட ஐடியா கேட்டுட்டு இருந்தா. அதை நான் தற்செயலா கேட்டப்போதான் தோணுச்சு... எதுக்காகக் கடத்திக்கொண்டு போய் ஒரு கள்ளக் கல்யாணம் பண்ணணும்? சொந்தங்கள் எல்லாரும் இருக்கும்போதே, இதே மேடையில வச்சு நேர்மையா கல்யாணம் பண்ணுவோம்னுதான் இந்த மேடை வரைக்கும் நான் அமைதியா வந்தேன்!" என்றான்.
சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நிற்க, ரிதன்யாவின் தந்தை கோபமாக ஏதோ பேச வர, சகாயன் கையை உயர்த்தி அவரைத் தடுத்தவன், "உங்களுக்கு எல்லாம் தோணலாம்... இப்படிப் பெண்ணையோ, பெண்ணைப் பெற்றவர்களையோ கேட்காம, மேடையில வச்சு தாலிகட்டுனா இதுவும் திருட்டுக் கல்யாணம்தானேன்னு? ஆனா நான் அப்படிச் செய்யலையே! நான் தான் என் மாமனார், மாமியார்கிட்ட இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்து முறைப்படி சம்மதம் கேட்டுட்டேனே! அதுமட்டுமில்ல... இதோ, என் பொண்டாட்டி நறுமுகை இப்போ கட்டியிருக்காளே இந்த முகூர்த்தப் புடவை, இது அவளுக்காக நான் பார்த்துப் பார்த்துத் தேடி எடுத்த புடவையாக்கும்!" என்று சகாயன் கம்பீரமாகச் சொல்லி முடிக்க...
சகாயன் சொல்லி முடித்ததும், அங்கிருந்த எல்லோரினது பார்வையும் சட்டென்று மேடைக்குக் கீழே இருந்த நெடுமாறனையும் பூங்குழலியையும் ஆக்கிரமித்தது.
நெடுமாறன் தன் நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நின்று, பக்கத்திலிருந்த நடராஜன் மற்றும் ஆனந்தியிடம்,
"மாப்பிள்ளை சகாயன் இரண்டு நாளைக்கு முன்னாடி எங்ககிட்ட தேடி வந்து பேசினார். அங்கிள்... நான் காதலிச்சவள் கானல் நீரா இருக்கிறாள். எனக்கு என் வாழ்க்கையும் என் குடும்பத்தோட நிம்மதியும் ரொம்ப முக்கியம். அதுக்கு உங்க இரண்டாவது மகளான நறுமுகையை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா? உங்க இரண்டு பொண்ணுங்களுமே ஒரே வீட்ல மருமகளா, ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம்னு அத்தனை உருக்கமா கேட்டார்."
"உண்மை சொல்லணும்னா, ரிதன்யா உங்க குடும்பத்துக்கு மருமகளா வந்தா அந்த வீடோட நிம்மதி என்னவாகுமோன்னு ஏற்கனவே எங்களுக்கு ஒரு பதபதைப்பு இருந்துகிட்டேதான் இருந்தது. அதனால்தான், மாப்பிள்ளை சகாயனே வந்து நறுமுகையைக் கேட்டபொழுது, நாங்க எதுவுமே யோசிக்காம மறுப்புச் சொல்லாம சம்மதிச்சோம்" என்று அத்தனை பெரியவர்கள் முன்னிலையிலும் உண்மையை உடைத்துச் சொன்னார் நெடுமாறன்.
இதைக்கேட்ட நடராஜனின் நெஞ்சில் இருந்த பாரம் எல்லாம் அப்படியே இறங்க, "ரொம்ப தேங்க்ஸ் சம்பந்தி! என் மகனோட வாழ்க்கையையும், எங்க குடும்பத்தோட நிம்மதியையும் காப்பாத்திட்டீங்க..." என்று நடராஜன் நெகிழ்ச்சியோடு சொல்ல, ஆனந்தியின் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
தன் கணக்குகள் அனைத்தும் தப்பாகி, தான் கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராய் போனதால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றாள் ரிதன்யா. அவளது முகம் கோபத்தால் சிவந்து போக, மேடையில் நின்ற அனைவரையும் சுட்டு எரிப்பது போலப் பார்த்து,
"என்னடா... எல்லோருமாச் சேர்ந்து என்னை ஏமாத்தப் பார்க்கிறீங்களா?! சகா... நீ பெரிய புத்திசாலின்னு நினைப்பா? நீ எனக்கு அனுப்பின மெசேஜ், உன்னோட போன் டீடைல்ஸ் எல்லாத்தையும் வச்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்தினதுக்காக உன்னை அரெஸ்ட் செய்ய வைக்கிறேன் இரு!" என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
அவளது இந்த மிரட்டலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தாலும், சகாயனோ தன் முகத்தில் இருந்த அந்தப் புன்னகையை மாற்றவே இல்லை.
"நீ எனக்கு எதிரா போலீஸுக்குப் போறது இருக்கட்டும் ரிதன்யா... நான் ஏற்கனவே உன்னைப் பத்தி போலீஸ்ல சொல்லிட்டேன். நீ உன் பிரண்ட்கூடப் பேசினியே, அந்தக் கேவலமான உரையாடலை வீடியோ ஆதாரமா எடுத்து போலீஸ்ல கொடுத்தும் வச்சுட்டேன். அப்புறம் நீ என்ன மெசேஜ் எல்லாம் வச்சு மிரட்டுறது? நானே எல்லா மெசேஜையும் போலீஸ்ல காட்டி, ஒரு டாக்சிக் பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டேன் சார், என்னை எப்படியாவது காப்பாத்துங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா உடனே கால் பண்ணச் சொன்னாங்க... இப்போ கால் பண்ணவா?" என்று அவளது முகத்திற்கு நேரே கேட்டு அதிரவைத்தான் சகாயன்.
பிறகு தன் பக்கத்தில் நின்ற தங்கையைத் திரும்பிப் பார்த்து, "மித்து மா... அண்ணாவோட போன் எங்கே?" என்று கேட்டான். மாப்பிள்ளைக் குர்த்தாவில் போன் வைப்பதற்கு இடம் இல்லாததால், அதைத் தன் தங்கையிடம் முன்கூட்டியே கொடுத்து வைத்திருந்தான் சகாயன்.
"இதோ இருக்கு அண்ணா!" என்று தன் கைப்பையிலிருந்து அத்தனை சந்தோஷமாகப் போனைக் எடுத்து நீட்டினாள் மித்ரா.
போனை கையில் வாங்கிய சகாயன், "இப்போ போலீஸுக்குப் போனைப் போடவா? இல்லை அமைதியா இந்த இடத்தைக் காலி பண்ணுறீயா?" என்று ரிதன்யாவைப் பார்த்து கேட்டான்.
சகாயனின் அந்த மிரட்டலில் ரிதன்யாவுக்கு வேறு வழியே இல்லாமல் போனது. அவளது கர்வம் எல்லாம் அடங்கி, தலைகுனிந்தபடியே தன் பெற்றோரோடு அந்த மண்டபத்தை விட்டு அப்படியே வெளியேறினாள்.
சகாயன், மேடையில் நடந்த இந்த எதிர்பாராத பிரச்சனைகளால் திகைத்து அலைப்புற்றிருந்த ஐயரின் பக்கம் திரும்பி, "ஐயர் அவர்களே... சடங்குகளை விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடங்குங்க" என்று பக்குவமாகச் சொன்னான்.
பிறகு மெதுவாகத் தன் முகத்தைத் திருப்பி, யாழினிக்கும் மித்ராவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்த நறுமுகையைப் பார்த்தான். அவளது முகத்தில் இன்னும் அந்தத் திகைப்பு மாறவில்லை.
அவளைப் பார்த்துத் தன் உதட்டில் ஒரு குறும்புப் புன்னகையை வரவழைத்த சகாயன், "புருஷனைத் தீய சக்திகளிடம் இருந்து காப்பாத்தக் கேட்டா... உன்னையே காப்பாத்த நான் தான் வரணும் போல! சரி, வா வந்து உட்காரு..." என்று உரிமையோடு அழைக்க, அங்கிருந்த அனைவரது முகத்திலும் ஒரு நிம்மதியான சிரிப்பு அரும்பியது.

Previous thread