Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
88
Reaction score
93
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 6

மித்ரா நறுமுகையிடம் என்ன சொன்னாளோ, அதுதான் அங்கே மித்ரன் யாழினியிடையே நடந்தது.

இப்படித் திடுதிடுப்பெனப் பெண் பார்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னதாலேயே, எங்கே அவள் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் மித்ரன் முந்திக்கொண்டு, "எனக்கு உங்களைப் பிடிச்சிருக்குங்க... நான் உங்களை அடுத்த ஒரு வருஷம் வீட்டு வேலை எல்லாம் நானே பார்த்து உங்களைப் படிக்க விடுறேன். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி, கன்னி கழிச்சு மட்டும் விட்டுடுங்க. பிள்ளை எல்லாம் பிறகு பார்க்கலாம்" என்று எடுத்ததுமே சொல்லிவிட்டான்.

அவனின் வேகத்தையும் வார்த்தையையும் கண்டு யாழினி மிரண்டு பார்க்க, "ஹி... ஹீ..." என்று பல்லைக் காட்டியவன், "எனக்கு வேற வழியில்லைங்க... எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடந்தே ஆகணும். அதுவும் உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணோட அந்த அழகான தருணம் அமைஞ்சா இன்னும் சிறப்புதானே?

நான் வேற... நீங்க வேணாம்னு சொன்னா நான் இன்னுமொரு பொண்ணைத் தேடணும். அதுக்கு முதல்ல ஜாதகம்,குடும்பம், படிப்பு, எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா… என்று அப்பா பார்த்து நாள் கடத்தினா, என் கல்யாணம் ரெண்டு மாசத்துல நடக்காம இழுத்துடும். அப்புறம் நான் பாவம்ல?" என்றான்.

யாழினிக்கு அவனது அந்த அவசரம் ஆச்சரியத்தைத் தர, ‘எதுக்கு இரண்டு மாதத்தில் கட்டாயம் கல்யாணம் நடக்க வேண்டும்?’ என்ற எண்ணத்துடன், அதையே அவனிடம் தெளிவுபடுத்திக் கொள்ளும் விதமாக, "அது என்ன ரெண்டு மாசக் கணக்கு?" என்று கேட்டாள்.

சாதாரணமாக ஒரு பெண் பார்க்க வரும் இடத்தில், மணப்பெண் வெட்கப்படுவது போல நடிக்காமல், மிரளாமல், அவள் இவ்வளவு இயல்பாகக் கேள்வி கேட்பதே மித்ரனுக்குப் பிடித்துப் போனது. அவளது அந்தத் தெளிவான அணுகுமுறை அவனுக்குள் ஒரு நிம்மதியைத் தோற்றுவிக்க, "எங்க அண்ணாவுக்குக் கல்யாணம்..." என்றான்.

இவ்வளவு நேரமும் நடராஜனுக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும் என்று எண்ணியிருந்தவள், "அண்ணாவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் யாழினி.

"ம்... எனக்கு நாலு வருசம் மூப்பா இன்னொருத்தன் இருக்கான். செம கெத்து பார்ட்டி! எல்லாம் மில்ட்ரி மாதிரி ருல்ஸ் அண்ட் ரெகுலேசன் பேசுறவன், அவனை அடுத்த முறை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்துறேன் சரியா?

அவன் நாலு வருஷமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணப்போறான். எனக்கு எந்தப் பெண்ணையும் லவ் பண்ணப் பிடிக்கல, அதான் மிங்கில் ஆகாம சிங்கிளாவே சுத்திக்கிட்டு இருந்தேன். இப்ப அவன் ஜோடியா வந்து என்னை எப்பவும் சிங்கிள் பயல்னு நக்கலாப் பார்க்கிற மாதிரி இருக்கு. அதான் அவன் கல்யாணத்திலேயே என் கல்யாணத்தையும் முடிச்சு, நானும் மிங்கிள்னு காட்ட வேண்டாமா? அதுக்குதான் அவசரப்படுறேன்" என்று ரிதன்யாவின் பெயரை உள்ளே இழுக்காமல் சொன்னான் மித்ரன்.

"என்ன... பொறாமையா?" என்று யாழினி உதட்டுச் சிரிப்புடன் கேட்க,

"யா... அப்கோர்ஸ்!" என்று அவன் ஒப்புகொண்டதைக் கண்டு யாழினி வாய்விட்டே சிரித்தவள், "நான் உங்களை வேணாம்னு சொன்னா என்ன செய்வீங்க?" என்று அவனைக் குறுகுறுவெனப் பார்வையால் அளந்தபடி கேட்டாள்.

"உங்க கால் எங்க இருக்குன்னு காட்டினீங்கன்னா, அப்படியே விழுந்திடுவேன்!" என்று அவளது சேலைக்குள் மறைந்திருந்த காலைத் தேட,

"அச்சோ!" என்றவள், இன்னும் சேலைக்குள் தன் காலை மறைத்தபடி, "எனக்கு ஓகேங்க... கால்ல எல்லாம் விழுந்திடாதீங்க" என்று வேகமாக சிரிப்புடன் சொன்னாள்.

"அப்பாடி! எங்க என் தங்கச்சிக்குத் தெரிய கால்ல விழ வேண்டி வந்திடுமோன்னு பயந்துட்டேன். அந்தப் பிசாசு அப்புறம் வாழ்நாள் முழுதும் ஒட்டியே தள்ளிடும்" என்றவன் தங்கை எங்கே என்று பார்க்க, அவள் நறுமுகையுடன் ஏதோ புன்சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"அங்க ரெண்டு பேரும் சேர்ந்திட்டாங்க போல" என்று தன் தங்கையைப் பார்த்தபடி யாழினி சொல்ல,

"அவளுக்குச் சின்னப் பிள்ளைகளோடதான் கூட்டு" என்று சொன்னவன், தான் தங்கை என்று கதைப்பதால் யாழினி அவளைத் தன்னையும் விடச் சின்னவள் என்று எண்ணிவிடுவாளோ என்றெண்ணி, "அவ என் ட்வின்ஸ் சிஸ்டர்" என்றான்.

யாழினிக்கு சந்தேகத்துடன் "ட்வின்ஸ் சிஸ்டரா? அவங்களுக்கு அப்ப கல்யாணத்துக்குப் பார்க்கலையா?" என்று அவள் உடனே கேட்க,

"அவ என்னைவிடப் பெரிய படிப்ஸ்! அவ எம்பிஏ படிச்சிட்டுத்தான் கல்யாணம்னு வீட்ல சொல்லிட்டா. அப்பாவும் சரி படிக்கட்டும்னு விட்டுட்டார். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் அவளுக்குப் பார்க்கணும். நானும் பார்ட் டைமா எம்பிஏ படிச்சிட்டுத்தான் இருக்கேன். ஆனா நான் அவ அளவுக்குப் படிப்ஸ் இல்லைங்க... ஏதோ பார்டர் பாஸ்! அதுவும் எம்பிஏயில் போன செமஸ்டர்ல ஒரு பாடம் உத்திக்கும் என்று என் ஏழாம் அறிவு சொல்லுது... ரிசல்ட் வந்தால்தான் தெரியும்!" என்றான் மித்ரன்.

யாழினி அவன் சொன்னதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தபடி"பார்டர் பாஸா? பரவாயில்லைங்க... அட்லீஸ்ட் பாஸ் பண்ணிட்டீங்களே! கலேஜ் படிப்பில் அரியர் வைக்கிறதெல்லாம் சின்னவிசயம் " என்று கிண்டலாகச் சொல்ல,

மித்ரன் உற்சாகமாக,."அதேதான்! எங்க வீட்ல நான் தான் இந்த மாதிரி பார்டர் பாஸ். மத்தபடி எங்க அண்ணன், தங்கை எல்லாரும் பயங்கர அறிவாளிங்க. இப்போ சொல்லுங்க... உங்களுக்கு இந்தப் பார்டர் பாஸ் பையனைப் பிடிச்சிருக்கா? இல்லை இன்னும் யோசிக்கணுமா?" என்று தன் வசீகரமான கண்களால் அவளைப் பார்த்துக் கேட்டான்.

யாழினி ஒரு நிமிடம் மௌனமாக அவனைப் பார்த்தாள். அவனிடம் இருக்கும் இந்த வெளிப்படையான குணமும், எதையும் கலகலப்பாக எடுத்துக்கொள்ளும் பாணியும் அவளுக்குள் ஒரு நம்பிக்கையைத் தந்தது.

"எனக்கு ஓகே தான்... ஆனா எனக்கு ஒரு கண்டிஷன்" என்றாள் யாழினி.

மித்ரன் ஆர்வமாக முன்னே வந்து, "என்ன கண்டிஷன்? நீங்க என்ன சொன்னாலும் அக்ரீடு! காலையில காபி நானே போட்டுத் தர்றதா? இல்லை சண்டே சமையல் நானே பார்க்கிறதா? சொல்லுங்க..." என்றான்.

யாழினி சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறமும் நான் என் படிப்பைத் தொடரணும். அதுக்கு நீங்க முழு சப்போர்ட் பண்ணனும்" என்றாள் உறுதியாக.

"அய்யோ... இது ஒரு விஷயமே இல்லைங்க! ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க படிக்கிறதுக்கு நான் எல்லா உதவியும் செய்வேன். சொல்லப்போனா, நான் அரியர்ஸ் வச்ச சப்ஜெக்ட்டைக்கூட நீங்க தான் எனக்குச் சொல்லித் தரணும்" என்று அவன் சொன்ன விதத்தில் யாழினி கலகலவெனச் சிரித்துவிட்டாள்.

இவர்கள் சிரித்துப் பேசுவதை தூரத்தில் இருந்தே கவனித்த ஆனந்தி, நடராஜனின் கையை லேசாகத் தட்டி, "என்னங்க... அங்க பாருங்க, ரெண்டு பேருக்கும் நல்லா செட் ஆகிடுச்சு போல! நம்ம பையன் அவளைப் பேசிப் பேசியே கவுத்திடுவான் போலிருக்கே?" என்று மெல்லக் கிசுகிசுத்தாள்.

நடராஜன் அவர்கள் இருவரையும் பார்த்தபடி, "ஆமா ஆனந்தி... பார்த்தாலே தெரியுது. மித்ரன் அவளைச் சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கான். ஒருத்தரைச் சிரிக்க வைக்கத் தெரிஞ்சாலே போதும், வாழ்க்கை சந்தோஷமா ஓடிடும்" என்றார் மனநிறைவோடு.

அந்த நேரம் பார்த்து, மணப்பெண் அறையிலிருந்து நெடுமாறனும், யாழினியின் அம்மாவும் வெளியே வந்தார்கள். கணவன் மனைவி தனியே பேசி முடிவுக்கு வரட்டும் என்றே அவர்களைத் தனியே விட்டு வந்திருந்தார் நடராஜன்.

நடராஜன் தம்பதியைப் பார்த்த நெடுமாறன், "என்ன சம்பந்தி... ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசுறீங்க போல? பிள்ளைங்க பேசி முடிச்சுட்டாங்கன்னா, நாம நிச்சயத்தைப் பத்திப் பேசலாமா?" என்று கலகலப்பாகக் கேட்டார்.

நெடுமாறன் 'சம்பந்தி' என்று உரிமையோடு அழைத்ததிலேயே, அந்தப் பக்கமும் பச்சைக் கொடிதான் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அதுவரை இருந்த ஒரு சிறிய தயக்கமும் விலகி, அங்கிருந்தவர்கள் நால்வர் முகத்திலும் பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்ட மகிழ்ச்சி அலைமோதியது.

"வாங்க... வாங்க சம்பந்தி! பிள்ளைங்க ரெண்டு பேரும் அங்கே அவங்க உலகத்துல இருக்காங்க. நாம இங்க அடுத்த வேலையைப் பார்ப்போம்" என்று உற்சாகமாகச் சொன்னார் நடராஜன்.

ஆனந்தியும் பூங்குழலியும் ஏற்கனவே பேசி அறிமுகமானவர்கள் இப்பொழுது சம்பந்தி என்ற உறவுக்குள் இருவரும் நுழைந்துவிட்ட மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருக்க, அங்கே வந்த பஞ்சாட்சரம், "யாழினி ஓகே சொல்லிட்டாளாடா?" என்று நெடுமாறனிடம் ஆவலாகக் கேட்டார்.

தன் போனைத் தூக்கிக் காட்டிய நெடுமாறன், அங்கே மித்ரனிடம் யாழினி நேரில் பேசிக்கொண்டே இருந்தாலும், தந்தைக்கும் ரகசியமாக ஓகே என்ற மெசேஜைத் தட்டிவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

"அவளுக்குப் பிடிச்சிருந்தா மேலே பேசுவோம்னு சொன்னேன் தானே? அதான் இப்ப சம்பந்திகிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்" என்று பெருமிதத்துடன் சொன்னார் நெடுமாறன்.

மகளின் சம்மதம் மெசேஜ் மூலமாகத் தந்தைக்கே முதலில் வந்து சேர்ந்த அந்தத் தொழில்நுட்ப யுகத்தின் சுவாரஸ்யத்தைக் கண்டு பஞ்சாட்சரமும் சிரித்தபடி, "அப்போ சரி... இனி அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்!" என்று சொன்னவருக்கும் யாழினி இன்னொரு மகள் போலத்தான் எனவே அவளின் கல்யாணம் கூடி வந்ததால் மகிழ்ச்சி தடம் பிரண்டு ஒடியது.
 
Previous thread

Latest threads

Top Bottom