Writer✍️
- Joined
- Sep 25, 2025
- Messages
- 100
- Reaction score
- 97
- Points
- 28
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 16
"ஹாய் பிரண்ட்ஸ்! இன்னைக்கு நான் பேசப்போற தலைப்பு காதல். அது ஒரு முறை மட்டும்தான் மனதில் பூக்கும் என்று மற்றவர்கள் சொல்வதை இல்லை என்று மறுத்துச் சொல்லும் ஒருத்தன்தான் நானும்...
எனக்கு என் தாயின் மீதும் காதல் உண்டு, என் தங்கை மீதும் காதல் உண்டு, என் மனைவி மீதும் காதல் உண்டு, என் மகள் மீதும் காதல் உண்டு! அப்படியிருக்க, காதல் ஒருத்தரிடம் ஒருமுறை மட்டும்தான் வரும் என்று யார் சொன்னது?
அன்பு தானே காதல்.. அந்த அன்பை அளக்க அளவுகோல் ஏதும் இருக்கிறதா என்ன? நான் எல்லாரிடமுமே சமமான அன்பைத்தான் வைத்திருக்கிறேன். அந்தப் பேரன்போட உச்சக்கட்ட சந்தோஷத்துல நான் திளைச்சுட்டு இருக்கிற இந்த நேரத்துலதான்,
எனக்கே எனக்கான ஒரு ஸ்பெஷல் டே இன்னைக்கு வந்திருக்கு! ஆமாங்க, இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு நாள். என் மனம் இன்னைக்கு மிகவும் குதூகலமாக இருக்கிறது... உங்களுக்கே என் குரலிலேயே அந்த மாற்றம் நல்லாத் தெரியுதுதானே?
"இன்னைக்கு என் பிறந்தநாள்! ஆம் பிரண்ட்ஸ்... இன்றுதான் என் சுவாசம் இந்தப் பூமியில முதல்முதலாக அரும்பிய நாள். காலையில கண் விழிச்சதுமே என் அரும்பினியோட அழகான காதல் வாழ்த்தையும், என் செல்ல மகளோட அந்தப் பஞ்சு முத்தத்தையும் பரிசா வாங்கிட்டு வந்திருக்கேன். அதனாலதானோ என்னவோ, இந்த உலகத்திலேயே ஆகச்சிறந்த மகிழ்ச்சியான மனிதனா இன்னைக்கு நான் என்னை உணர்றேன்! சரி, இந்தச் சந்தோஷமான தருணத்துல உங்களுக்காக இதோ ஒலிக்கப்போகுது... அரும்பும் தளிரே' என்ற ஒரு அழகான பாடல்..." என்று மித்ரனின் இந்தத் துள்ளலான வானொலிப் பேச்சு, அவனது கலகலப்பான குரலில் சென்னை எங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, நறுமுகையின் வீட்டிலோ திருமணத்திற்கான வேலைகளும், சில முக்கிய விவாதங்களும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.
வானொலியில் ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்டுக்கொண்டே, திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தன் அக்கா யாழினியின் முகத்திற்குத் தேய்க்கக் கடலை மாவைத் தயார் செய்து கொண்டிருந்தாள் நறுமுகை.
"இவருக்கு மட்டும் எங்கேயிருந்துதான் இப்படிப் பாட்டுக் கிடைக்குதோ பார் அக்கா! மனைவியோட பெயர் பாட்டிலேயும் வாற மாதிரி, அரும்பும் தளிரேன்னு பாட்டைத் தேடிப் பிடிச்சு பிளே பண்ணி விட்டிருக்கார்!" என்று ஆர்.ஜே. மித்ரனைப் சிலாகித்துப் பாராட்டினாள் நறுமுகை.
யாழினி அவளை ஆச்சரியமாகப் பார்த்து, "ஏண்டி நறுமுகை... நீ உன் டாக்டர் சாரை ஆர்.ஜே. மித்ரன் இல்லைன்னு சந்தேகப்படுறதை முழுசா விட்டுட்டியா?" என்று கேட்டாள்.
"எங்கே அக்கா... நான் போன முறை கிளினிக் போகும்போது அவர் யார்கிட்டயோ போன்ல, ஹாய் பிரண்ட்ஸ்னு பேசினார். நான் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்! அச்சு அசல் நம்ம ஆர்.ஜே. மித்ரனோட வாய்ஸ் தான்... இன்னமும் என்னால அந்த வாய்ஸை வச்சுட்டுக் குழம்பாமல் இருக்க முடியல" என்றவள், "நீ அத்தான்கிட்ட இதைப் பத்தி உறுதியாக் கேட்டியா? எனக்கு என்னமோ அத்தான், இல்லாட்டி உன் டாக்டர் சார்... இவங்க இரண்டு பேர்ல ஒருத்தர்தான் ஆர்.ஜே. மித்ரன்னு என் மனப்பட்சி சொல்லிக்கிட்டே இருக்குடி" என்றாள்.
யாழினி லேசாகச் சிரித்து, "நான் மித்ரன்கிட்ட கேட்டுப் பார்த்திட்டேண்டி, அது வேற ஒரு ஆள்... உனக்குக் கல்யாணத்துக்கு அவர் வரும்போது நானே இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்னு என்கிட்ட சொல்லியிருக்கார்" என்றாள்.
நறுமுகை உதட்டைப் பிதுக்கி, தன் தாயின் காதுகளில் விழாத வண்ணம் குரலைத் தாழ்த்தி, "அதெல்லாம் கிடக்கட்டும் அக்கா... உன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடும்ல? எனக்கு என்னவோ பயமா இருக்கு..." என்று கவலையோடு கேட்டாள்.
யாழினியின் முகத்தில் கவலைபடர, "தெரியலைடி... நானும் மித்ரன்கிட்ட இதைப்பத்திப் புலம்பினேன். அதுக்கு அவர், அண்ணன் கல்யாணம் நடக்குதோ இல்லையோ... நான் உன் கழுத்துல தாலி கட்டிடுவேண்டி, என்னை நம்புன்னு ரொம்ப உறுதியாச் சொல்லிட்டார்." என்றாள் சற்றே நிம்மதியுடன்.
"சரி, அவங்க அண்ணாவோட அந்த லைலா மஜ்னு காதல் இப்போ என்ன லெவல்ல இருக்குதாம்?" என்று நறுமுகை கேட்டாள்.
"அவர் இப்போ ரிதன்யா கூடக் கதைக்கிறதே இல்லைப் போல இருக்குடி... ஆனா கல்யாணத்தை மட்டும் நிறுத்தாம அப்படியே வச்சிருக்கார். இதுதான் மித்ரனுக்கும் பெரிய தலைவலியா இருக்கு. அந்தப் பொண்ணு வேண்டாம்னா முழுதாகக் கல்யாணத்தை நிறுத்திட்டு, வேற நல்ல பெண்ணாப் பார்த்துத் தாலி கட்டலாம். இது என்னடான்னா... அந்தப் பொண்ணோட பேசவும் மாட்டேன், ஆனா அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா நிக்கிறாரேன்னு மித்ரன் புலம்பிட்டு இருக்கார்" என்றாள் யாழினி.
நறுமுகை சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தவள், "எனக்கு ஏதோ டாக்டர் சார் வேற ஏதோ பெரிய பிளான் பண்ணுற மாதிரித் தோணுது அக்கா... எல்லாரும் கொஞ்சம் அலர்ட்டா இருங்க!" என்று எச்சரித்தாள்.
"என்னடி சொல்ற? எனக்குப் புரியல..." என்று யாழினி புரியாமல் கேட்க,
"உண்மையா எனக்கும் சரியாத் தெரியலை அக்கா... " என்று நறுமுகை இழுக்க, அவளது அடிமனதோ அந்தத் திருமணத்தில் வேறு ஏதோ நடக்கப்போவதாக எச்சரித்துக்க் கொண்டிருந்தது.
அவளின் எண்ணத்து அலைகள் அப்படியே நடந்து சகாயன் சூடிய பொண்தாலி ரிதன்யாவின் கழுத்தில் ஏறுவதற்கு பதில் நறுமுகையின் கழுத்திலேயே சூட்டப்பட்டது.