எழுத்தாளர் எழிலன்பு அவர்கள் தெரிந்து எழுதினாரா, அதுவாக அமைந்ததா தெரியவில்லை.
ஒரு பெண் தன் கனவை நிறைவேற்றுவதைத் தன் முயற்சியில் செய்வதை விட, அவளது அம்முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஆண் தூண்டுதலாக, காரணமாக இருக்கிறான் என முற்போக்குவாதியாக ஆண் சித்திரிக்கப்படுவதும் ஆணாதிக்கத்தின் நுட்பமான அரசியலே.
பெண் தன்னிச்சையாக, தன் முடிவிலே இயங்கி முன்னேறுவது உண்மையில் ஆண்களைப் பதற்றப்படுத்தும். தன்னைச் சாராமல் அவள் சாதிப்பது அச்சுறுத்தும். பெண்ணின் ஆளுமையைக் குறைத்துக் காட்டும் அல்லது அதைப் பற்றி மௌனம் சாதிக்கும் ஆண்கள் பலரைப் பார்க்கலாம்.