ஓருயிரென வாழ..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 16)
அட ச்சே ! இந்த கோகுல் அநியாயத்துக்கு அம்மா கோண்டா இருக்கானே...இதுல தெரியாமல் பேசியிருப்பாங்கன்னு சால்ஜாப்பு வேற. ம்ஹூம்...
மகதி, நாய் வாலை (மாமியாரை) கூட நிமிர்த்திடலாம், ஆனால் உன் புருசனை திருத்தவே முடியாது போ.
ஆர்ய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிற மாதிரி கௌதம கூட ஒரு
மனைவியோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க மறுக்கிறான் பார்த்திங்களா...,? ஏன்னா, அத்தனை நாரசார பேச்சுக்களையும் நேரடியா வாங்கி கட்டிக்கிட்டது ஜீவிதா தானே, கௌதம் கிடையாதே.
என் மகனை கல்யாணமான ரெண்டே வாரத்துல நல்லா மயக்கி வைச்சுக்கிட்டாள், முந்தானையில் முடிச்சுக்கிட்டாள்.. என்கிற பேச்செல்லாம் நேரடியாக ஜீவிதாவை தாக்கின ஆயுதங்கள் தானே, அப்ப வலியும் அவளுக்கு மட்டும் தானே...? இதே வார்த்தைகளை ஜீவிதாவின் அம்மா தேவி, கௌதமை பார்த்து வார்த்தைகளை வீசியிருந்தால் அப்ப நிலைமையே தலைகீழா மாறியிருக்கும்தானே..?
ஜீவிதாவிற்கு கூட இனி தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கிடைத்திருக்காது தானே..?
ஆனால் இங்கு சபிக்கப் பட்டவர்கள் பெண்கள் மட்டுமே, அதுவும் மனைவிகள் மட்டுமே போல. இப்பொழுது கூட, இத்தனை நடந்திருந்தபோதும் கூட, அதே வீட்டிலேயே அவளின் வலியை புரிந்துக் கொள்ளாமல் தானே, அவளுக்கான நேரத்தைக் கூட கொடுக்க நினைக்காமல், அவளை ஆண்டு அனுபவிக்க இத்தனை சரச வார்த்தைகளை தொடுக்கிறான் கௌதம்...
திஸ் இஸ் ரியலி அன்ஃபேர்.
எனக்கு அப்படித்தான் தோணுகிறது. பெண்களோட வலி, மாமியார் மாதிரி பெண்களுக்கே புரியாதபோது
இந்த ஆண்களுக்கு மட்டும்
எப்படி புரிந்து விடும்.
ஆக மொத்தம், பெண்கள் ஒரு சுமைதாங்கிகள். எல்லா குப்பைகளையும் மனசிக்குள்ளேயே போட்டு, வெந்து வெந்து, இறுதியில் நொந்தே நாக வேண்டியது தான் அவர்கள் வாங்கி வந்த வரம் போல.
இதுவும் கடந்து போகும், இதுவும் மறந்து போகட்டும்ன்னு, இன்னும் எத்தனை வேதனைகளை கடப்பார்களோ, மறப்பார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம்.



CRVS (or) CRVS 2797