ஓருயிரென வாழ..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 15)
இத்தனை நடந்த பிறகும் ஜீவி, மகதியைப் பத்தி யோசிக்கிறா, மாமியாரைப் பத்தி யோசிக்கிறா, தன்னோட குடும்பத்தை பத்தியும் யோசிக்கிறா. இதே வெளியே இருந்து பொண்ணு எடுத்திருந்தால், முதல்ல அந்தப் பொண்ணு அம்மா வீட்டுக்கு பெட்டியை தூக்கினதும் இல்லாமல், நீ தனிக்குடித்தனம் வந்தால்தான் ஆச்சுன்னு ஒத்த காலுல நின்னு புருசனையும் கையோட கூட்டிட்டு போயிட்டே இருந்திருப்பா. ஆனால், ஜீவி சொந்த அண்ணன் பொண்ணு என்கிறதால, எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செய்யக் கூடாதுன்னு கொந்தளிக்கிற புருசனை கூட சமாதானம் பண்ணி, இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்ன்னு நிறுத்தி நிதானமா யோசிச்சு முடிவெடுக்கிறா. ஆனா மாமியார் கிழவி அதெல்லாம் எங்கே யோசிக்குது, தான் வைச்சது தான் சட்டம், அதை மீறுற திட்டம் யாருக்கும் கிடையாதுன்னு அகங்காரத்துலயும், ஆணவத்துலயும் ஆடிட்டிட்டிருக்கு. இதனால இப்ப யாருக்கு நட்டம்ன்னு போக போகத்தான் புரியும் போல.
இந்த கோகுல் ஒரு கூறு கெட்டவன். ஜீவி தான் எல்லாரையும் பத்தி யோசிக்கிறாளே தவிர, கோகுல் தன்னோட மனைவியைப் பத்தி கொஞ்சமும் யோசிக்கலை. அவனுக்கு ஆக்கிப்போட ஒரு வேலைக்காரியாவும், படுக்கிற சுகம் கொடுக்கிறவளாவும், வாரிசு பெத்துக் கொடுக்க ஒரு மெஷனாவும், தன்னை பெத்த தாய்க்கு ஒரு நர்ஸாவும் பொண்டாட்டி இருந்துட்டாப் போதும், வெட்டிப் பந்தா பணடணிட்டு ஆம்பிளைங்கிற பேருல சுத்திட்டு வருவான் போல. இப்பக்கூட அந்த மாமியார்காரி இவ தான் ரொம்ப பேசிட்டாங்கிற மாதிரியும், பையனை கைக்குள்ள போட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் போக ஐடியா பண்ற மாதிரியும் தான் சொல்லி வைச்சிருக்கிறாள்
பாருங்களேன்.
ஆனால், ஜீவிக்கு இத்தனைப் பேச்சையும், பழியையும் கேட்டுட்டு திரும்ப புருசன் கிட்ட நெருங்க எத்தனை சங்கடமா இருக்கும்..? அதே சங்கடம் தானே கௌதமுக்கும் இருக்கும்.
அவங்களோட உறவையும், அந்தரங்கத்தையும் நடுச்சபையில வைச்சு கொச்சைப்படுத்தினது எத்தனை தூரம் அவங்களோட மனசை பாதிச்சிருக்கும்...?
இதெல்லாம் யோசிக்கிறச்ச நமக்கு கஷ்டமா இருக்கும்போது
சம்பந்தப்பட்டவங்களுக்கு எத்தனை நிம்மதியின்மையை
கொடுக்கும்..?



CRVS (or) CRVS 2797