காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 14)
கரெக்ட், மயூரன் இப்ப பேசறது தான் கரெகட் பாயிண்ட். மயிலே, மயிலேன்னா இறகைப் போடாதாம், புடிச்சு இழுத்தா தான் இறகு கைக்கு கிடைக்கும்.
அய்யோ பாவம், அம்மா பாவம்ன்னு பார்த்தால், ஆறு மாசம் பாவம் வந்து அட்வான்சா மயூரனை சுத்திக்குமாம், இனிமேல் நோ கொஞ்சல், நோ கெஞ்சல்... ஒன்லி வயலன்ஸ் தான்.


பார்த்தியா, ஒருத்தடவை அவனோட முர்கத்தனத்தையும்
மிரட்டலையும் காட்டினவுடனே
என்னாம்மா பெட்டி பாம்பா
அடங்குறா, இனிமேல் இதை மெதட்டைத் தான் ஃபாலோ பண்ணனும்.
அம்மா தாயே, பரதேவதை...
அவனோட நல்லது கெட்டதை
அவனே பார்த்துப்பான், நீ ஒண்ணும் பார்த்துக்க வேணாம், நீ பார்த்து கிழிச்சதே போதும்.
அட என் லூசே ! அவன் தான் உன்னை லவ் பண்ணி தொலைச்சிட்டானே, தவிர உன்னை வேற எவனிக்கோ விட்டுக் கொடுக்கிறதை விட தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்... இதைத்தான் கல்யாணம் பண்ண நாள்ல இருந்து எத்தனை தடவை கீறல் விழுந்த க்ராமபோன் மாதிரி சொல்லிட்டே இருக்கான், இன்னுமா உன்னோட மரமண்டைக்கு ஏறலை...?
உண்மை தானே, அவளோட காதலுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை அவனோட காதலும். அவளால விக்ரமை மறக்க முடியலைன்னா, இவனால மதுவை மறக்க முடியாது தானே?
" காதலே ஒரு பைத்தியக்காரத் தனம் தான்டி, அதில் நீ ஒரு பைத்தியக்காரி, நான் ஒரு பைத்தியக்காரன்.. அந்த பைத்தியக்காரத்தனத்தை
நாம ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்.." ஆஹா...!
என்னவொரு தத்துவம்..?
செய்யுங்க, செய்யுங்க.... நல்லா செய்யுங்க... ரெண்டு பேரும் சட்டையை கிழிச்சுக்காத வரைக்கும் நாங்களும் பார்த்து ரசிக்கிறோம்.
இவங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டாலும் க்யூட் தான், சீண்டிக்கிட்டாலும் க்யூட் தான்... மயூரனுக்கு கொடுத்து வைச்சது, பாவம் விக்ரமுக்கு கொடுத்து வைக்கலைப் போல.



CRVS (or) CRVS 2797