Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
மிகச் சிறப்பாக சண்முகியைப் பேச வைத்து, காலங்காலமாகச் சமூகம், குறிப்பாக ஆணாதிக்கச் சமூகம், பெண்களை ஒடுக்கும் முறையினை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
சண்முகி வக்கிரமாகத் தோன்றினாலும், இதில் அவர் பிழை மட்டும் இல்லை. சமூகத்தின் அழுத்தமும் கட்டுப்பாடும் ஆணாதிக்கச் சிந்தனையும் உள்ளது. அத்துடன் மனித உளவியலும் கலந்துள்ளது.
சண்முகி மிகுந்த, சிறை வாழ்வுக்குக் குறை இல்லாத, கட்டுப்பாட்டில் வாழ கட்டாயப்படுத்தப்பட்டவர். அந்தக் கட்டுப்பாடு மருமகளுக்கு நெகிழும் போது தன் நம்பிக்கை/ பழக்கம் குலையும் போது சமநிலை இழக்கிறார்.
பெண்கள் நம் சமூகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டுப்பட்டு நடக்கவேண்டும் எனப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். அது தான் தங்களுக்குச் சிறந்தது என நம்பவைக்கப்பட்டவர்கள். ஆண் வாழ்வுக்கும் பெண் வாழ்வுக்கும் ஏன் இத்தனை வேறுபாடு, ஏற்றத்தாழ்வு என அவர்கள் சிந்திப்பதைக் கட்டுப்படுத்தவே கல்வி மறுக்கப்பட்டு, குடும்பம் குழந்தை பேணல் சமையல் அவர்கள் பொறுப்பாக்கப்பட்டன.
பொறுப்பு என வந்தால் பெண்கள் தீவிரமாக அதனை நிறைவேற்றுவார்கள். ஆண்கள் இதில் குளிர் காய்ந்து, பெண்களைப் பொறுப்பாளர்களாக்கி வெளி உலகத்தை ஆண்டு வந்தனர், வருகின்றனர்.
இதில் பெண்ணுக்குப் பெண்ணை எதிரியாக்கி, பொறாமை உணர்வைத் தூண்டிவிட்டால், குடும்ப அரசியலில் மூழ்கி, ஆணைச் சார்ந்து பரஸ்பரம் பெண்ணின் முன்னேற்றத்தைத் தடுப்பர். இது தான் ஆணாதிக்கத்தின் உத்தி.
இங்கு சண்முகியும் ஒரு victim தான். தான் அனுபவிக்காத சுதந்திரம், தன்மானத்தை மருமகள் கணவன் துணையுடன் பெறுவதைக் காணமுடியவில்லை. அவரது கணவர் அவருக்கு ஆதரவு தரவில்லை. மாறாக, மகன் கணவனாக இருக்கும் போது மனைவிக்கு ஆதரவு தருவது அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. பொறாமையை ஏற்படுத்துகிறது. இது தான் அவரது உளவியல். அவருக்குக் கல்வியும் கால மாற்றத்தைப் பற்றிய பார்த்து அறிவும் இருந்து பெண் சமத்துவத்தின் தேவையும் தெரிய வரும் சூழல் வாய்த்திருந்தால் இப்படி பேசமாட்டார்
பெரும்பான்மையான ஆண்களுக்கு, கோகுல் போல பெற்று வளர்த்த தாயை எதிர்க்காமல் வேறு வீட்டுப் பெண்ணான மனைவியை அடக்குவது சுலபம். சண்முகி சொல்வது போல, நம் வீட்டுக்கு வந்தவள் நம் வீட்டு வழக்கத்தைக் கற்கட்டும் என நினைப்பவர்களே. ஆண்களுக்குத் தேவை அவர்களது சுதந்திரம், நினைத்ததைச் செய்வது, யாரும் அதைக் கேள்வி கேட்காமல் இருப்பது, குடும்பத் தலைவன் என்பதால் தானே முக்கியம் என்ற எண்ணம், குடும்பத்துக்காக நான் உழைக்கும் போது எனக்கு சாதகமாகவும் எனக்கு அப்புறமாகவும் தான் எல்லாம் என்ற எண்ணம்.
பெண்களுக்கு இவை இல்லையா, தேவை இல்லையா, அவர்கள் எந்தக் காரணத்தால் ஆண்களுக்குக் கீழானவர்கள் அல்லது இளைத்தவர்கள்? இல்லவே இல்லை. இதெல்லாம் மாற இன்னும் நூற்றாண்டுகள் செல்லும்.
உண்மையில் நம் நாட்டுத் திருமணம் என்பது இருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அமைப்பு இல்லை. அது ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கட்டுக்கோப்பாக வைப்பதற்கான ஏற்பாடு, குடும்பம் என்பது அதனைப் பாதுகாப்பாக தலைமுறை தாண்டியும் நிலைக்கச் செய்ய உதவும் இறுக்கமான அமைப்பு.
ஒரு சில மாற்றாக இருக்கலாம், பெரும்பான்மை இப்படித்தான்.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
இப்பொழுது சண்முகி பேசியதையே வீடியோ எடுத்து அமுதன் சமூக ஊடகத்தில் பகிர்ந்தால் சண்முகி என்ன செய்ய முடியும்? கூடவே ஜீவிதாவோ (செய்ய மாட்டாள் போல) அமுதனோ புகார் கொடுத்தால் கனகவேல் ஒரு கை பார்த்துவிடுவார். அமுதன் அதனைச் செய்யட்டும்.
கனவு காணவும் ஆசைப்படவும் கனவை நிறைவேற்றவும் சுதந்திரமாகச் செயல்படவும் பெண்ணாக இருப்பதே தடை என்று ஆண் பெண் யார் கருதினாலும் தடையான சூழல் ஏற்பட்டாலும் அது சமூகத்தின் பிழையே, அந்தப் பெண்ணின் பிழையன்று.
எந்த அதிகாரமும் ஆணுக்குத் தான் என்றால், உலகமே ஆணின் உரிமை என்றால், பெண்கள் இல்லாத உலகத்தில் அவர்கள் வாழ்க்கை நடத்தட்டும். பெண்களை நிம்மதியாக விடட்டும்.
கௌதம் வேறுபட்டவனாக இருக்கிறான். அதற்கு தைரியம் தேவை தான்.
தெளிவான முற்றிலும் உண்மையான அலசல் சிஸ்.கௌதம் தனிக்குடித்தனம் வேண்டாம் என்று சொல்வதன் காரணம், தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை, சண்முகியின் அடக்குமுறை இல்லாமல் ஜீவிதா வாழும் வாழ்வை அவர் கண்முன் அவர் வீட்டில் நிறைவேற்றி அவரது அதிகாரத்தை உடைக்கவே என்று தோன்றுகிறது.
தனிக்குடித்தனம் சென்றால் சண்முகி மேல் பரிதாபம் ஏற்படும், ஜீவிதா மேல் பழி விழும். சண்முகி அப்படித் தான் அனைவரையும் நம்ப வைப்பார். அந்தக் கர்வம் தான் அவருக்கு. அது தெரிந்து தான் கௌதம் சொல்கிறான்.
அந்தம்மா திருந்தாத கேஸ்சண்முகி அதிகார வெறி தான் பிடிச்சுருக்கு.... மருமகள்களை அவரோட கட்டுப்பாட்டுல அடக்கி வைக்க நினைச்சு முடியாம போக எந்த நிலைக்கும் இறங்க தயாராகிட்டாங்க .....
என்ன மாதிரியான மிரட்டல் இது
இவங்க பட்ட கஷ்டங்களை வந்த மருமகள்களும் படணுமாகேட்டா பாரம்பரியத்தை காப்பாத்துறாங்களாம்
இவங்கள எல்லாம் திருத்த முடியாது....
கௌதம் என்ன முடிவு எடுத்துருக்கான்![]()
Welcome to Nandhavanam Novels, your ultimate destination for exploring the rich and vivid creations in Tamil. Our mission is to celebrate and promote story writing, showcasing a diverse array of novels that reflect the culture, traditions, and contemporary issues of the society.
Started in 2019 by Ezhilanbu, We curate a wide selection of works, from classics to emerging voices, ensuring that every reader finds something that resonates with them. Whether you’re a lifelong fan of Tamil stories or a newcomer eager to discover its beauty, we strive to provide an engaging and enriching experience.
Explore the captivating realm of Tamil novels with us, where every story unfolds a new adventure and each page reveals a hidden gem. Enjoy your reading journey.