- Joined
- Sep 16, 2024
- Messages
- 746
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் - 2
View attachment 653
சூரியன் மெல்ல உச்சிக்கு வரத் தொடங்கியிருந்த காலைப் பொழுது. முந்தைய இரவின் மழை, தற்போதைய வெயிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. அது புறநகர்ப் பகுதி என்பதால் பெரும்பாலான வீடுகள் தனித் தனி வீடுகளாகவே இருந்தன. எல்லா வீட்டின் முன்பும் சிறியதாக தோட்டப் பகுதி இருந்தது. தென்றல் மென்மையாக மேனி வருட, காரில் அமர்ந்திருந்த காக்கிச் சட்டைகளை அது கலைக்கவில்லை. திலீப்பின் கவனம் பாதையிலும், பிரதாபின் கவனம் கையில் இருந்த கோப்பிலும் பதிந்திருந்தது.
“சார்” என்றழைத்த திலீப், “அந்த வீடு இருக்க ஏரியா வந்தாச்சு. இந்த தெருதான்” என்றான்.
“ம்ம். இவ்வளவு பக்கமா? ரெண்டும் ஒரே நகருக்குள்ளதான் வரும் போலவே” அதைக் கேள்வியாகவும், பதிலாகவும் சொல்லிக் கொண்டான்.
“ஆமா, சார். இது விவேகானந்தா நகர். தெருவும், பிரிவும்தான் வேற வேற. வண்டியில போனா டென் மினிட்ஸ் டிஸ்டன்ஸ்தான்”
“கவனிச்சேன்” என்ற பிரதாப், தன் கையில் இருந்த கோப்பில் மீண்டும் பார்வையை ஓட்டி மனதிலும், தன் அலைபேசியிலும் எதையோ குறித்துக்கொண்டு கோப்பை மூடி வைத்தான்.
அலைபேசியில் கூகிள் செயலியை திறந்து அந்தப் பகுதியின் வரைபடத்தை பார்வையிட்டான்.
தன் முன்னிருந்த வீட்டையும், முன்தின இரவு கொலை நடந்த வீட்டையும் வெவ்வேறு நிறங்களில் வட்டமிட்டு வைத்தான்.
பிரதாபின் பார்வையில் திலீப் காரை சற்று தள்ளி ஓரமாக நிறுத்தினான். அவன் கண்கள் அந்தப் பகுதியை துல்லியமாக ஆராய்ந்தன.
திலீப் சென்று வீட்டைத் திறக்க, பிரதாப் ஒரு முறைக்கு இரு முறையாக வீட்டைச் சுற்றி வந்தான். அவன் கையில் இருந்த கோப்பில் இந்த வீட்டில் இருந்து எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், வீட்டின் மதில் சுவர் தொடங்கி, சுற்றுப் பாதை வரைக்கும் பார்வையால் அளவிட்டு பின்னரே வீட்டினுள் நுழைந்தான்.
அங்கே அளவில் மிகச் சிறியதாக இருந்த தோட்டப் பகுதியை கடக்கையில் ஏதோ மஞ்சளாக பளிச்சிட, காலால் நெம்பி அதைக் கையில் எடுத்தான்.
“வீடு வாடகைக்கு” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகை அது.
இங்கும் வீட்டினுள் குற்றம் நடந்த இடம் என காவல்துறை கட்டம் கட்டி அடைத்திருக்க, அதைத் தவிர்த்து வீட்டின் மற்றப் பகுதிகளை பார்வையிட்டான்.
திலீப் அவனோடு நடந்தபடி, “இந்த மர்டர் போன சனிக்கிழமை நடந்திருக்கு சார். இந்த ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டும் பேரும் பிரைவேட் கம்பெனில வேலைப் பார்த்தவங்க. ஒரு நாலு வருஷத்துக்கு முன்னதான் வேலையை விட்டிருக்காங்க” என்று அவனுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
“அவங்க பையன் பாரின் போய் எத்தனை வருஷமாச்சு திலீப்? அந்த டீடெயில் ஃபைல்ல இல்லையே? அவர் ஃபேமிலி பத்தியும் எதுவும் மென்ஷன் பண்ணல. வொய்? அவரை விசாரிக்கலையா நீங்க?”
“சார். அது..”
“நீங்க விசாரிக்க முன்ன முந்திக்கிட்டு அவர் மேலிடத்துக்கு மூவ் பண்ணிட்டாரா?”
“சா..ர்” என்று திகைத்து, “மேலிடத்துக்கு மூவ் பண்ணாலும் விசாரிக்காம இருப்போமா சார். அதெல்லாம் ஆபீசியலா என்கொயர் பண்ணோம் சார்.”
“ஃபைல்ல இல்லையே திலீப்” என்று பிரதாப் சொல்லிக்கொண்டே நகர, “நான் இன்னைக்கே அப்டேட் பண்ண சொல்றேன். இல்ல, நானே பண்ணிடுறேன் சார். கண்டிப்பா” என்றான் அவசரமாக அவனைப் பின் தொடர்ந்தபடி.
“அந்த பையனையும் அவங்க ஃபேமிலியையும் நாம மீட் பண்ண அரேஞ்ச் பண்ணிடுங்க”
“டன் சார். நாளைக்கு மார்னிங்... இல்ல சார், இன்னைக்கு ஈவ்னிங் ஸ்டேஷன் வர சொல்றேன்”
“இல்ல, அவங்க எங்க தங்கியிருக்காங்க கேளுங்க. நாமளே போய் பார்த்திடுவோம்”
“ஓகே சார்”
“இவங்க வீடு எப்போலருந்து காலியாருக்கு?”
“மூனு மாசமா..”
“இதுக்கு முன்னாடி இருந்த டெனண்ட்?” என்று கேட்டபடியே வீட்டை விட்டு வெளியில் வந்தான் பிரதாப்.
“கணவன், மனைவி, குழந்தைன்னு சின்ன ஃபேமிலி இருந்திருக்காங்க சார். குழந்தை ஸ்கூலுக்கு பக்கமா வீடு வேணும்னு மாறி போயிருக்காங்க.”
“ம்ம்”
“அவங்களையும்…”
“பார்த்திடுவோம் திலீப்.”
“ஓகே சார்” என்றான் திலீப் விரைப்பாக. இயல்பாக இருவரும் ஒரே அலைவரிசையில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருந்தனர்.
பிரதாப் கைகளை பின்னே கட்டியபடி அந்த வீட்டை ஏறிட்டு, “வீட்டு டிசைன் நல்லாருக்கே திலீப்” என்றான்.
ஒரு கிரவுன்ட் மனையில், ஒன்று போலவே ஒற்றை சுவரை மையமாக கொண்டு இரட்டை வீடுகள் எழுப்பப்பட்டிருந்தன. வெளிப்புற தோற்றமும் ஒன்று போல் இருந்தன.
“ஒரே பையன்னு தானே சொன்னீங்க திலீப்?”
“ஆமா சார். ஆனா, வீடு வாடகைக்கு விடுறதுக்காக பிளான் பண்ணி இப்படிக் கட்டியிருக்காங்க. பின்னாடி அவங்க பையனுக்கு துணைக்கும் வருமானத்துக்கும் ஒரு வழியா இருக்கும்னு. இப்போ வாடகைக்கு விட்டா அந்தப் பெரியவங்களுக்குப் பாதுகாப்பா இருக்கும்னு..”
“குட் ஐடியா” என்றவனின் வார்த்தையில் இருந்த மெச்சுதல் அவன் பார்வையில் இல்லை.
அந்தத் தெரு முழுக்க பார்வையிட்டு, பக்கத்து தெருவையும் சுற்றி வந்து பின்னரே அங்கிருந்து கிளம்பினார்கள்.
“சாரங்கனைப் பார்க்கணும் திலீப்”
“ஃபாரன்சிக் ஆபீஸ்தான் போறோம் சார்” என்றான்.
அரை மணி நேரத்தில் தடயவியல் துறை அலுவலகத்தில் சாரங்கன் முன்னிருந்தார்கள்.
“வாங்க சார். பிளீஸ் சிட்” என்று என்று இருவருக்கும் இருக்கையை கைக் காண்பித்தார்.
“மார்னிங் மர்டர் விஷயம்னா என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது சார். ஐ நீட் சம் டைம்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் சாரங்கன்.
“பிளீஸ் டேக் யுவர் டைம். நாங்க பேச வந்தது லாஸ்ட் வீக் நடந்த மர்டர் பத்தி” என்ற பிரதாப், “உங்க ரிப்போர்ட் படிச்சேன் சாரங்கன். கிளியரா இருக்கு. நோ டவுட்ஸ். பட் உங்க வியூ பாயிண்ட்ல எனக்கு கிரைம் சீனை விவரிக்க முடியுமா?” என்று கேட்டான்.
“கண்டிப்பா” என்றவர், தன் கணினியை அவர்களை நோக்கித் திருப்பினார். அதில் அவரின் அறிக்கை இருந்தது.
“கிரைம் சீன்ல பிங்கர் பிரிண்ட் கிடைக்காதது ஓகே. ஆனா புட் பிரிண்ட் கிடைக்காதது மழை பெஞ்சதுனாலயா?” பிரதாப் தன் சந்தேகத்தை கேட்டு தொடங்கி வைக்க, படபடவென பேசத் தொடங்கினார் சாரங்கன்.
“எஸ். அன்னைக்கு ஹெவி ரெயின் இல்லைனாலும் புட் பிரிண்ட்ஸ் அழிஞ்சு போற அளவுக்கு நல்ல மழைதான். பொதுவா இப்போல்லாம் பிங்கர் பிரிண்ட் கிடைக்காத அளவுக்கு பிளான் பண்ணிதான் பாதி கிரைம் நடக்குது. ஆனா, இந்த கேஸ் கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா வித்தியாசமா செய்யப்பட்டிருக்கு”
“அந்த வாய் தைச்சது சொல்றீங்களா? இல்ல கண்ணை டிரில் பண்ணதையா?” திலீப் கேட்க, “எல்லாத்தையும் ஒழுங்கா செஞ்சதை சொல்றார் சாரங்கன்” என்றான் பிரதாப்.
“எஸ். கரெக்ட். சரியான பாயிண்ட்டை பிடிச்சீங்க.” என்று மேஜையில் தட்டிய சாரங்கனின் உதட்டில் சுவாரசிய புன்னகை தோன்றி மறைந்தது. திலீப் பக்கவாட்டில் திரும்பி பிரதாபை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“எல்லாமே பக்காவா பிளான் பண்ணி பண்ணது போலருக்கு. போல இல்ல. அப்படித்தான்னு அடிச்சு சொல்லுவேன். எங்க ரிப்போர்ட்டும் அதையேதான் சொல்லுது” என்றார் அவர்.
“வீட்டு மெயின் டோர் உடைக்கப்படல. பின்பக்க கதவு பூட்டியே இருந்தது. அதுல இருக்க பிங்கர் பிரிண்ட்ஸ் கொலையான கப்பிள்ஸோடது மட்டும்தான். சோ, நார்மலா கதவு திறந்து வீட்டுக்குள்ள போய் இருக்க சாத்தியங்கள் அதிகம்.”
“மாடி வழியா உள்ள போய் இருக்கவும் சான்ஸ் கம்மி. ஏன்னா வீட்டு சுவர் ரொம்ப ஹைட். இல்லையா?”
“எக்ஸாட்லி. அந்த ஏரியால மழை பெஞ்சா தண்ணி தேங்கும்னு வீடு ஹைட் ஏத்தி கட்டியிருக்காங்க. அது போக நம்ம சர்ச்ல மாடியில எந்த தடயமும் கிடைக்கல. இன்பாக்ட் வீடு முழுக்கவே எதுவும் சிக்கல. கொலை நடந்த பெட்ரூம், ஹால் ரெண்டும்தான் சந்தேகத்துக்குரிய ப்ளேஸஸ்”
“ஆனா, அங்கேயும் எதுவும் வைப் அவுட் பண்ணப்படல? ஃபோர்ஸ்டு எண்ட்ரியும் இல்ல”
“அதே. மெயின் டோர் வழியா உள்ள வந்திருக்காங்க. எதையும் ஒதுக்கல, தொடைக்கல, நகர்த்தல. இட் வாஸ் க்ளீன் இன் அண்ட் அவுட்.”
“அப்படியிருக்கும் போது அந்த பெட்ரூமை எதுக்காக அப்படி கலைக்கணும்?” திலீப் சத்தமாக யோசிக்க, “அது கலைச்சா மாதிரி இல்ல. எதையோ தேடி கிடைக்காத கோபத்தில் பண்ணது போல இருந்தது அந்த போட்டோஸ் பார்க்கும் போது” என்ற பிரதாபிற்கு அமர்ந்த நிலையில் சல்யூட் வைத்தார் சாரங்கன்.
“சரியா சொன்னீங்க பிரதாப். குரங்கு பூமாலைய பிச்சு போட்டது போல போடாம, ஒரு வேகத்துல அவசரத்துல எல்லாத்தையும் எடுத்து கீழ போட்டு எதையோ தேடி, அது கிடைக்காத கோபத்தில் மிச்சத்தை தூக்கி வீசியிருக்க போல தெரியுது.” என்று சொல்லிக் கொண்டே அதை செயலிலும் விளக்கினார்.
“அந்த லேடி கையில் வெயின் கட் பண்ணியிருக்கு, உதடு தைச்சுருக்கு, ஆணுக்கு கண்ணு டிரில் பண்ணியிருக்கு. ஆனாலும் அந்த வீட்ல மூனாவது ஆளோட பிளட் சாம்பிள் கிடைக்கல. அந்த வீட்டோட பாத்ரூம், ஹால், கிச்சன் சிங் எல்லாத்தையும் செக் பண்ணி சாம்பிள் எடுத்திருந்தோம். நோ லக். ஒத்த மசுர கூட மறந்து விட்டுப் போகல. ஸ்ட்ரேஞ். தரை முழுக்க அவ்ளோ ப்ளட் இருந்தும் புட் பிரிண்ட் இல்ல. ரொம்ப கவனமா வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்பின மாதிரி இருக்கு” என்றவர், “இன்னைக்கு கேஸ் கூட கிட்டத்தட்ட அதே போலருக்கு. நம்மை சேலஞ்ச் பண்ணலன்னா அதெப்படி கிரைம் லிஸ்டில் வரும் சொல்லுங்க?” என்று கேட்க, பிரதாபின் உதடுகள் லேசாய் புன்னகையின் சாயல் காண்பித்து இயல்பாகியது.
அதிலும் உதட்டை ஊசி கொண்டு தைக்கையில் எத்துணை கவனம் செலுத்தியிருந்தால் தன் விரலில் குத்திக் கொள்ளாமல் தப்பித்திருக்க முடியும்? நகை, பணம், திருட்டு என்ற ரீதியில் சிந்தித்தால் அது பொருந்திப் போகவே இல்லை.
திருட வந்தவனுக்கு தான் எதிர்பார்த்து வந்தது கிடைக்காவிடில் என்ன செய்திருப்பான்? படுக்கை அறையில் கிடைக்காத பொருளை மற்ற அறைகளில் தேடிப் பார்த்திருக்க வேண்டும். அல்லது கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்திருக்க வேண்டும். ஒன்றுமே சிக்கவில்லை எனில் அந்த வீட்டுக்குள் வந்த சுவடு தெரியாது வெளியில் நழுவியிருக்க வேண்டும். ஆனால், அங்கே அப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக கோபத்தில் கொலை செய்தது போலவும் இல்லாமல் அத்தனை குரூரமாக, அவசரத்தில் செய்தது போலவும் இல்லாமல், அவ்வளவு ரத்தமும், வெறியும் என்று அதை நினைக்க நினைக்க கொலையாளியை பிடிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்று பிரதாபின் உள்ளுணர்வு சொன்னது.
0.99% தான் உலக நியதி. எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், எத்தனை திட்டமிட்டு ஒரு செயலை நிகழ்த்தியிருந்தாலும், நூலிழையில் ஒரு தடயத்தை தவற விட்டிருப்பான். அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு தன் காற்சட்டை பையில் வைத்திருந்த பொருள் நினைவு வந்தது. அதை மெதுவாக தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
சட்டெனத் தலையைத் திருப்பி அவன் திலீபை பார்க்க, “நான் வெளில வெயிட் பண்றேன் சார்” என்று எழுந்து வெளியில் சென்றான் அவன்.
“சொல்லுங்க பிரதாப்” மேஜையில் முன்னோக்கி சாய்ந்து சாரங்கன் கூர்மையான பார்வையுடன் வினவ, அவர் முன் தன் இடக்கரத்தில் இருந்த மின்னிய பொருளை வைத்தான் பிரதாப்.
“கோல்ட் செயின்? கிரைம் சீனில் இருந்ததா? மை காட், இது எப்படி எங்க பார்வையில் இருந்து தப்பிச்சது?”
“செயின் இல்ல. பிரேஸ்லெட். இன்னைக்கு கிரைம் சீன்ல கிடைச்சது. கட்டிலுக்கு அடியில...”
“மென்ஸ் பிரேஸ்லெட் சார். இது போல சைக்கிள் செயின் மாடல் பொதுவா ஆண்கள் கையிலதான் இருக்கும்.”
“பட் அந்த பிறை நிலா போலருக்க டிசைன்? அதென்னவா இருக்கும்னு கெஸ் பண்ண முடியல சாரங்கன். அதுவும் இல்லாம இது இறந்தவங்களுக்கு சொந்தமானதா கூட இருக்கலாமே?”
“யா. அப்படியும் இருக்கலாமே”
“பிரேஸ்லெட் ஹூக் உடைஞ்சுருக்கு. அதுனால நகைக்கடை சீல் மிஸ்ஸிங். இப்போ இந்த நகை எங்க வாங்கினது, எங்க செஞ்சதுன்னு எப்படிக் கண்டுபிடிக்க?”
“கண்டுபிடிப்போம்” என்றார் சாரங்கன்.
அந்தப் பிறை நிலாவில் பதிந்திருந்த ஆங்கில எழுத்தை அவர் கூர்ந்து நோக்க, “இந்த லெட்டர் பாருங்களேன். ‘எம்’ போலவும் இருக்கு, ‘என்’ போலவும் இருக்கு. அது உடைஞ்சுருக்கதுனால என்ன லெட்டர்னு சரியா கண்டுபிடிக்க முடியல” என்றான் பிரதாப்.
அந்த நகையை நாலைந்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, கை ரேகை சோதித்து, அது கிடைக்காமல் உதடு பிதுக்கி ஏமாற்றத்துடன் பிரதாபிடம் திருப்பிக் கொடுத்தார். ஒருவேளை அந்த நகை கொலையுண்டவர்களுடையதாக இருந்தால், அவர்களின் மகளிடம் காண்பித்து கேட்க வேண்டும் என்று வாங்கி கைக்குட்டையில் பத்திரப்படுத்தினான் அவன்.
“எங்களுக்கு மூனு நாள் டைம் குடுங்க. அதுக்குள்ள ரிப்போர்ட் தந்திடுறோம். இன்னைக்கு நடந்த கொலையில் ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பார்ப்போம்.”
“டைம், இப்போ நம்ம கைல அதான் நமக்கு தேவையான அளவு இல்ல சாரங்கன். ஐ ஆம் சாரி. உங்க வேலையை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா, இந்த கேஸ்ல ஏதாவது கண்டுபிடிச்சா, ரிப்போர்ட் ரெடி பண்ற வரைக்கும் வெயிட் பண்ணாம..”
“நான் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன் பிரதாப்” என்றார் உறுதியாக.
“சீக்கிரம் மீட் பண்ணுவோம் சார்” என்று விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தான். அங்கே அவனுக்காக காத்திருந்தான் திலீப்.
“திலீப்..”
“சார்”
“இந்த டெட் பாடீஸை ஃபர்ஸ்ட் பார்த்தவர்..”
“இப்பவும் ரெண்டு டைம் கால் பண்ணிட்டேன். ஆன்சர் பண்ணல.”
“எங்க வேலை பார்க்கிறார் சொன்னீங்க?”
“சார், அவங்கது கொலை நடந்த வீட்ல இருந்து ஐஞ்சாவது வீடு. மார்னிங் வாக்கிங் போனப்போ வீட்டு கதவு திறந்திருக்கவும் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளப் போய் இருக்கார். அவரை ஆல்ரெடி விசாரிச்சுட்டோம். ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க. அதான் வீட்ல ஆள் இல்ல. நீங்க சொன்னதால மார்னிங்..”
“திலீப்..”
“சார், அவர் பைக் ஷோரூம்ல மேனேஜர். ஈவ்னிங் வீட்டுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணாம, நேரா ஷோரூம் போய் பார்த்திடலாம்”
“ம்ம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படிச்சேன். பெத்தாலஜிஸ்ட் பார்க்கணும்” என்று பிரதாப் சொல்லி முடிக்கையில் அவர்களின் வாகனம் அரசு மருத்துவமனை செல்லும் பாதையில் திரும்புவதை உணர்ந்தான் அவன். அவனது அலைபேசி அடிக்க, அது தனிப்பட்ட அழைப்பு என்பதால் உடனடியாக ஏற்று, “முக்கிய வேலையில் இருக்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அரசு மருத்துவமனைக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை. அவர்கள் தேடிச் சென்ற துறை கட்டிடம் கடைசியில் சற்றே வெளிச்சத்துடன் கண்ணில் பட்டது. அங்கு வாசலில் காத்திருந்தவர்களைப் பொருட்படுத்தாமல் இருவரும் உள்ளே சென்றார்கள்.
திலீப் மருத்துவரை சந்திக்க தேடிச் செல்ல அவனைப் பின் தொடர்ந்தான் பிரதாப். பத்தே நிமிடத்தில் மருத்துவர் வைஷ்ணவியின் முன்னிருந்தார்கள்.
ஆரம்ப அறிமுகங்கள் முடிந்து நேரத்தை வீணடிக்காமல் வந்த வேலையை கவனித்தார்கள்.
“போன வாரம் நடந்த இரட்டை கொலையில் உங்க ரிப்போர்ட் படிச்சுட்டேன் டாக்டர். இருந்தாலும் நீங்க ஒருமுறை சொல்லுங்க.” பிரதாப் கேட்க, “ஓகே. ரெண்டு பேர் கை, காலும் கட்டிப் போடப்பட்டிருந்திருக்கு. அந்தக் காயம் மணிக்கட்டில் கணுக்காலில் தெரியுது. அவங்களா உட்கார்ந்திருக்கணும், போராடின தடயங்கள் இல்ல.” என்று சொல்லத் தொடங்கினார்.
“ஓ.”
“கட்டி போட்டுட்டு முதல்ல கை நரம்பு கட் பண்ணியிருந்திருக்கணும். சாதாரணமா பாக்க கை மணிக்கட்டுல வெயின் கட் பண்ணது போல இருக்கும். ஆனா ரேடியல், அல்நார் நர்வ் ரெண்டும் சரியா கட்டாகியிருக்கு. அதுனால ப்ளட் லாஸ் அதிகமாகி, வலி மரத்து போய் மயக்க நிலைக்கு போகவும், அந்நேரம் உதட்டை ஸ்டிச் பண்ணியிருந்திருக்கணும். உதட்டு தையல் ஒரு சர்ஜன் போட வேண்டியதை நர்ஸ் போட்டது போல இருந்தது பார்க்க. அது பதட்டம் காரணமா இருக்கலாம். அது தவிர உடம்புல வேறெங்கேயும் காயங்கள் இல்ல. நோ ட்ரேசஸஸ் ஆஃப் பிசிக்கல் அப்யூஸ். வயிற்றில் விஷம் இல்ல. எந்தவித போதைப் பொருளும் கொடுக்கப்படல. ரெண்டு பேருக்கும் பயத்துல அட்ரலின் அதிகமா சுரந்திருக்கு. மத்தபடி..” என்று சொல்லி தோள் குலுக்கிய மருத்துவர்,
“அப்புறம் அந்த கண்ணு டிரில் பண்ணப்பட்டவருக்கு.. அவர் இறந்ததுக்கு துல்லியமான காரணம் இதயம் நின்னது. கார்டியாக் அரெஸ்ட்” என்றார்.
“ஓ? அது வயசுனாலயா, அதிர்ச்சியினாலயா?..” பிரதாப் கேட்க, “ரெண்டும். ஏற்கனவே பலவீனமான ஹார்ட்தான். ஸ்டண்ட் வச்சுருக்கு” என்றார் வைஷ்ணவி.
இரண்டாம் இரட்டை கொலையும் அவரிடம்தான் பிரேத பரிசோதனைக்கு வந்திருந்தது. இன்னமும் பரிசோதனையை தொடங்கவில்லை அவர்.
“இன்னைக்கு வந்த கேஸும் அதே போலதானே டாக்டர்” என்று திலீப் கேட்க, “அப்படிச் சொல்லிட முடியாது” என்றான் பிரதாப். அதையே ஆமோதித்தார் மருத்துவர்.
“மேற்பார்வைக்கு பார்க்க அப்படித்தான் இருக்கு. ஆனா, நான் முழுசா அட்டாப்ஸி பண்ணிட்டுதான் எதையும் கன்பார்மா சொல்ல முடியும்” என்றார்.
அவரிடம் மேலும் சில நிமிடங்கள் அது குறித்து பேசி, குழம்பி, தெளிந்து வெளியே வந்தார்கள்.
இரண்டாம் இரட்டை கொலையின் தடயவியல் துறை அறிக்கையும், உடற்கூறாய்வு அறிக்கையும் வர குறைந்த பட்சம் நான்கு நாள்களேனும் ஆகும் என்பதால் அவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். அதற்குள் அக்கம், பக்கம் மற்றும் மற்ற வழிகளில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் அலுவலகம் திரும்பினான்.
அவன் எதிர்பார்த்தபடி அந்த வேலை அத்தனை எளிதாக இருக்கவில்லை. எப்போதும் காப்பானை விட கள்ளன் புத்திசாலியாகதான் இருக்கிறான். இரண்டு இரட்டை கொலை விசாரணையும் பரபரவென்று நடந்தாலும் இன்னமும் குற்றவாளியைப் பாதி தூரம் கூட அவர்கள் நெருங்கவில்லை என்று அவனது உள்ளுணர்வு சொன்னது.
கிட்டத்தட்ட இருபத்தைந்து நாள்கள் கடந்திருந்தன. வேலையே கதி என்று கிடந்தவன், இன்றுதான் தனிப்பட்ட வாழ்விற்கு நேரம் ஒதுக்கியிருந்தான்.
மழைக் கால மாலை நேரம். தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்து காத்திருந்தவனை கலைத்துச் சென்றது காற்று.
அவன் கண்கள் எதிரே இருந்த கட்டிடத்தில் நிலைத்திருக்க, காற்றாய் கீழிறங்கி வந்துக் கொண்டிருந்தாள் அவள்.
பச்சை நிற சேலை அணிந்து உயர்த்தி போடப்பட்ட கொண்டையுடன், கண்களில் கண்ணாடியுடன் வந்தவளை கண்டதும், “குட் ஈவ்னிங் மிஸ்” என்று விடுவோமோ என்று அதிர்ந்து, அதன் விளைவாக உதட்டில் தோன்றிய புன்னகையை அவனது தலைக்கவசம் கனகச்சிதமாக மறைத்துவிட்டது.
பக்கவாட்டு படிகளில் இறங்கும் போதே அவனைக் கவனித்துவிட்டன அவள் கண்கள். ஆனாலும் அவனை நேராக நோக்கவில்லை.
அவளுக்கு எதிரே தேநீர் கோப்பைகளுடன் நடந்த சிறுவனை நிறுத்தி, “என்ன ராமலிங்கம், ஆளையே பாக்க முடியல?” என்று வினவினாள். கேள்வி சிறுவனுக்கு என்றாலும் பார்வை அவன் மேல் படிந்து விலகியது. மீண்டும் அரும்பிய புன்னகையை அடக்கினான் காவல்துறை அதிகாரி.
“எனக்கு பீவர் மிஸ். நான் நாலு நாள் லீவு” என்று சொன்ன சிறுவன், “என் பேர் ராம் மிஸ். ராமலிங்கம் இல்ல” என்றான்.
“சரிங்க ராம். இப்போ பீவர் சரியா போச்சா? நாளையில இருந்து ஒழுங்கா கிளாஸுக்கு வரணும். ஓகே?” என்று கேட்டாள். வேகமாக தலையசைத்தான் சிறுவன்.
அவளும் விலகி அவனை நோக்கி வந்தாள்.
“நாளைக்கு ஞாயித்துக்கிழமை. எப்படி கிளாஸுக்கு வருவான் மிஸ்?” அவள் நெருங்கியதும் பிரதாப் கேட்க, “ம்ம். நடந்து வருவான். இல்லனா வராம இருந்து உங்களைப் போலவே நொண்டி சாக்கு சொல்வான்” என்றாள், நேரடியாக. அந்த தாக்குதலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சட்டென திணறி அதை மறைத்து, “கையில என்ன பார்சல்?” என்று கேட்டான்.
“இது கேமமைல் டீ பேக்ஸ். சென்டர்ல என் கூட வேலை பார்க்குறவங்களுக்கு வாங்கினது. இன்னைக்கு அவங்க வரல. அதான் குடுக்க முடியல…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “அதென்ன டா அவங்களை மட்டும் மிஸ் சொல்ற. என்னைப் பார்த்தா மட்டும் அண்ணா சொல்ற? இனிமே மிஸ் சொல்லாம அவங்களையும் அக்கான்னு சொல்ற புரிஞ்சுதா?” என்று ராமை நிறுத்தி மிரட்டிக் கொண்டிருந்தவனின் பேச்சு எரிச்சலான குரலில் தேய்ந்து அவள் செவியில் விழ, திரும்பி அவர்களைப் பார்த்தாள். சிறுவனின் கையை இறுக்கி பிடித்து நிறுத்தியிருந்தார் அந்த ஆசிரியர்.
“ஒரு நிமிஷம். இப்போ வந்துடுறேன்” என்று பிரதாபிடம் கெஞ்சலாக அவள் சொல்ல, “ம்ம்” என்று அவன் சொன்னதும், ராமை நோக்கி விரைந்தாள் நைனிகா.
“மனோகர், அவனை விடுங்க! இதென்ன சின்ன பையன் கிட்ட போய்… விடுங்க! நீ போ ராம்” என்றவள், “இந்தாங்க மனோகர்” என்று தன் கையில் இருந்த தேநீர் இலைகள் அடங்கிய பையை அவனிடம் கொடுத்து விட்டு, திரும்பி பிரதாப்பிடம் வந்தாள்.
அவன் முன் கைக் கட்டி நின்றாள். அவள் கோபமாக இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். பின்னே அவள் அழைக்கும் போதெல்லாம் வேலையை காரணம் காண்பித்து தவிர்த்திருந்தானே. அவர்களுக்குத் திருமணம் நிச்சயம் முடிந்த பிறகு ஒரு முறை கூட இருவரும் தனிமையில் சந்திக்கவேயில்லை. அவளுக்கு அது பிரச்னையில்லை. அவன் பேசாததுதான் பிரச்சினை என்பது அவனுக்கும் புரிந்தேயிருந்தது.
“பிளீஸ்” என்று கண் காட்டினான்.
“பிளீஸ் வந்து பிளீஸ் பண்ற மாதிரி சொல்லணும் ஆபீஸர். இப்படி ஆர்டர் போல சொல்ல கூடாது” என்றாள் முறைப்புடன்.
“பிளீஸ்” என்ன முயன்றும் அவன் குரலில் மாற்றம் வரவில்லை. கஷ்டம்தான். அவள் அப்படியே நிற்க, அவன் கண்கள் சுற்றுப்புறத்தை கூர்ந்தன. அதைக் கண்டதும் படக்கென பின்னே வந்து அவனைப் பிடிக்காமல் வண்டியில் ஏறியமர்ந்தாள்.
பத்து நிமிட பயண தூரத்தில் இருந்த சிறிய உணவகத்தின் முன் நிறுத்தினான். அவள் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
“காஃபி, டீ?” அவன் கேட்க,
“இத்தனை நாள் நீங்க டீ, காஃபி குடிக்கவே இல்லையா? சோறு, தண்ணி, தூக்கம் அப்புறம்..”
“ஹேய், ஹேய்.. நிறுத்து” என்றான் பதறி அவசரமாக. கோபம் போல கண்ணில் கனல் பார்வையுடன்.
“அப்புறம் உங்க சீனியர் ஜூனியர் கிட்டலாம் பேசாமலா இருந்தீங்கன்னு கேட்க வந்தேன். அதுக்கு போய் ஹேய்னு கத்துறீங்க. ச்ச” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மேஜையை லேசாக தட்டியவன் உதடுகள் எதையோ முணுமுணுத்தன.
“இங்க பாரு. அவங்ககிட்ட பேசுற மாதிரி உன்கிட்ட பேச முடியாது இல்லையா?”
“ஒரு நாள்ல, இருபத்து நாலு மணி நேரத்துல..” என்று இழுத்தவள், “என்கிட்ட பேச உங்களுக்கு பத்து நிமிஷம் கூட கிடைக்கலையா இத்தன நாள்ல?” என்று அவனை நேராகப் பார்த்து கேட்டாள்.
“அது அப்படியில்ல..”
“வேற எப்படி?”
“ப்ச்” என்று சலித்து, மறுநொடியே “சொதப்பிட்ட டா பிரதாபா” என்று அவன் சத்தமாக புலம்ப, சிரிப்பை அடக்கி சீறும் பார்வை பார்த்தாள்.
மெல்ல அவள் புறமாக சாய்ந்து, “உன் ஜாப் இன்டர்வியூ என்னாச்சு? எப்படிப் பண்ண?” என்று கேட்டான்.
“அது..” என்று அவள் ஆரம்பிக்கையில் அவனது அலைபேசி அடித்தது.
“போச்சு..” என்று முணுமுணுத்தான். அவன் கை அனிச்சையாக அலைபேசியை எடுக்க, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்.
“முக்கியமான கால்” என்று சொல்லி அழைப்பை ஏற்று, “சொல்லு திலீப்” என்றான்.
அந்தப் பக்கம் சொல்லிய தகவலில் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உடல் மொழியில் மாற்றம் தெரிந்தது.
“நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம். நீங்க ஃப்ரீயானதுக்கு அப்புறமா” என்றாள்.
“இல்லல்ல. காஃபி குடிச்சுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பலாம்”
“பிளீஸ் பிரதாப். கிளம்புங்க, நான் கோபிச்சுக்க மாட்டேன்” என்றாள் புன்னகையுடன். அவள் கண்கள் அவனையே பார்த்திருந்தன. ஒரே மாதத்தில் சோர்ந்திருந்தவனை வாட்ட மனம் வரவில்லை அவளுக்கு.
“இது கேமமைல் டீ பேக்ஸ். நைட் குடிங்க”
“நைட்டா?”
“எஸ். இது குடிச்சா நல்லா தூக்கம் வரும்.” என்றாள்.
“ஓகே” என்று வாங்கியவன் முகத்தில் புன்னகையின் சாயல்.
“இது உன் ப்ரெண்ட்டுக்கு வாங்கினதா தானே சொன்ன?”
“எஸ். அவங்க ரொம்ப நாளா சரியா தூக்கம் இல்லன்னு சொல்லவும் இத சஜெஸ்ட் பண்ணேன். உங்களை மாதிரியே டீ குடிச்சா எப்படி தூக்கம் வரும்னு சந்தேகமா கேட்டு அவங்க அசால்ட்டா இருக்கவும் நானே ஆர்டர் பண்ணி..”
“எனக்கு குடுத்துட்ட?”
“இல்ல. அவங்களுக்கும் குடுத்துட்டேன். உங்க முன்னாடி தானே குடுத்தேன். இன்ஸ்டிடியூட் வாசல்ல.. அப்புறம் உங்களுக்கும் சேர்த்துதான் ஆர்டர் போட்டேன்.”
“ம்ம்” இருவருக்கும் தேநீர், சிற்றுண்டி சொன்னான். அது வரவும், “உன் ஜாப் இன்டர்வியூ” என்று அவன் திரும்ப கேட்கையில், மீண்டும் அவன் அலைபேசி அடித்தது.
“கொஞ்சம் டைம் குடு திலீப், வர்றேன்” என்றான் இறுக்கமாக.
“சூசைட் தானே? அதே ஏரியா, அதுக்கேன்..”
“இல்ல சார். சூசைட் பண்ணிக்கிட்ட லேடி அவங்க வாயையும், கண்ணையும் கட்டிட்டு எதுக்கு கை நரம்ப அறுத்துக்கணும்?” என்று திலீப் கேட்க, சடாரென இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் பிரதாப்.
“பிரதாப்” என்று அவள் பதற, “கிளம்பலாம். இன்னொரு நாள் வர்றேன். பிராமிஸ்” என்று பரபரத்தவன், “பிளீஸ்” என்றான். அவள் கிளம்பினாள், கோபமாக.
***
முதல் எபிக்கு இன்னும் யாரும் சரியான பதில் சொல்லலை மக்களே...
க்ரைம் கதை மற்றும் என் சைட் என்றதும் உங்க கெஸ் எல்லாம் சிலரை சுற்றி மட்டுமே இருந்தது.
ஆனால், அதையும் தாண்டி ட்ரை பண்ணலாம். மத்த சைட் ரைட்டர்ஸ், பழைய ரைட்டர்ஸ், புது ரைட்டர்ஸ் எல்லாம் கலந்துதான் இந்தப் போட்டியில் எழுதுறோம்.
இப்ப நிறைய ரைட்டர்ஸ். கண்டுபிடிக்க முடியாது... அதனால் 25 பேரோட லிஸ்டும் கொடுங்கனு கேட்கிறீங்க. ஆனால், நாங்க லிஸ்ட் கொடுக்காம சிலரையாவது நீங்களா கெஸ் பண்ணி கண்டுபிடிக்கணும்னு எதிர்பார்க்கிறோம்.
சோ, கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.
லிஸ்ட் கண்டிப்பா கொடுப்போம். ஆனால் அது இப்ப இல்லை. உங்களால் கதை முடிந்த பிறகும் சிலரை கூட கண்டுபிடிக்க முடியலை என்ற நிலை வந்தால், அப்ப லிஸ்ட் கொடுக்கப்படும். இப்ப கொடுத்தா குத்துமதிப்பா ஒரு பதில் சொல்வீங்க. போட்டியும் வைத்து, பதிலும் நாங்களே கொடுத்து, அதுக்குப் பரிசும் சுலபமா வேணும் என்றால் எப்படிங்க மக்களே...

கொஞ்சம் முயற்சி செய்ங்க. இப்ப எழுதாம கொஞ்சம் பிரேக் விட்டவங்க. நிரம்ப ஆக்டிவா எழுதுறவங்க, மற்ற போட்டியில் கலந்து வெற்றி பெற்றவங்க, நம்ம சைட், நம்ம சைட் இல்லாத ஆட்கள் என்று எல்லாரும் கலந்த கலவையே இந்த ரிலே போட்டி.

இந்த எபி எழுதியவங்க யாரா இருக்கும்? கெஸ் பண்ணுங்க.
இந்த எபி எழுதியவங்க இன்னொரு கண்ணாமூச்சி ஆட்டமும் ஆடுறாங்க. அது என்னன்னா... இந்த எபி எழுதியது யாருன்னு கூட எழுதுற மத்த ரைட்டர்ஸ்க்கு கூட தெரியாது. அவங்களுக்கே சஸ்பென்ஸ் வச்சிருக்காங்க இந்த ரைட்டர்.
கூட எழுதும் ரைட்டர்ஸுக்கு கூட தெரியாமல் பெயர் மறைத்து எழுதும் இந்த ரைட்டரோட ரைட்டிங் வச்சு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் சரியான பதில் சொல்லவும் மக்களே..

Previous thread
Next thread