- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:
| கரி | யானை, எரிக்கும் பொருள் |
| கறி | மிளகு, இறைச்சி, ஆட்டுக்கறி |
| கூரியது | கூர்மையானது |
| கூறியது | சொன்னது |
| கீரி | கீரிப்பிள்ளை |
| கீறி | கீறுதல், கோடு கிழித்து |
| தரி | தரி (தரித்துக்கொள்ளுதல்), அணி(ந்துகொள்ளுதல்) |
| தறி | துணி, நெசவுத் தறி, வெட்டு |
| தெரி | தெரிந்துகொள்ளல் |
| தெறி | நீரைத் தெளி(த்தல்), சிதறு(தல்) |
| நாரி | பெண் |
| நாறி | நாற்றமடித்து |
| நெரி | நொறுக்கு, நெருக்கு (நெரிசல்), நசுக்கு |
| நெறி | வழி, முறை, ஒழுக்கம், விதி |
| பொரி | பொரி(த்தல்), நெற்பொரி,சோளப்பொரி |
| பொறி | இயந்திரம், தீட்டுதல் |
| முரி | நொய்யரிசி |
| முறி | ஒடி, அச்சு முறிந்தது, தளிர் |
| மரித்தான் | இறந்தான் |
| மறித்தான் | நிறுத்தினான், தடுத்தான் |
| மாரி | அம்மை, மழை |
| மாறி | வேறாக மாறி (விட்டது) |
| அரு | பார்க்கமுடியாதது (கடவுள் அருவமானவர்) |
| அறு | துண்டி (கயிறு அறுந்துவிடுதல்) |
| அருந்து | குடி(த்தல்) |
| அறுந்து | துண்டாகி(விட்டது) |
| உரு | உருவம் |
| உறு | அடை(தல்) |
| ஒரு | ஒன்று |
| ஒறு | தண்டி(த்தல்) |
| திரை | திரைச்சீலை, அலை |
| திறை | கப்பம் |
| உரை | சொல், பேசு, பொன்னை உரைத்துப்பார்(த்தல்) |
| உறை | பை, இருப்பிடம், பாலைத் தயிராக்கும் துளி |
Previous thread
Next thread





























