- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:
| பரவை | கடல் (பரந்து கிடக்கும் நீர்ப்பகுதி) |
| பறவை | பறக்கும் உயிரினங்கள்(காகம், புறா) |
| மாரன் | மன்மதன் |
| மாறன் | பாண்டியன் |
| திரம் | உறுதி |
| திறம் | வலிமை |
| துரவு | கிணறு |
| துறவு | சந்நியாசம் |
| புரம் | நகர், ஊர் |
| புறம் | பக்கம், முதுகு, அப்புறம் |
| மரத்தல் | உணர்ச்சியற்றுப் போதல் |
| மறத்தல் | நினைவு இழத்தல் |
| விரகு | தந்திரம் |
| விறகு | அடுப்பு எரிக்கும் கட்டை |
| விரல் | கைவிரல் |
| விறல் | வலிமை, வெற்றி |
| இரா | இரவு, இருக்காது |
| இறா | மீன் வகை |
| பரி | குதிரை |
| பறி | பூக்களைப்பறி, மீன்கூடை பிடுங்கு |
| அலரி | செடி வகை, அலரிப்பூ |
| அலறி | கூக்குரலிடுதல், உரக்கக் கத்துதல் |
| உரி | தோல், பட்டை, உரித்தல் |
| உறி | பொருள்களை வைத்துத் தொங்கவிடும் கருவி (உறியில் வெண்ணை) |
| உரிய | சொந்தமான |
| உறிய | உள்ளே இழுக்க, (உறிஞ்சுதல்) |
| எரி | தீ |
| எறி | வீசு |
| ஏரி | நீர்ப்பகுதி |
| ஏறி | உயரத்தில் சென்று, மேலே ஏறி |
| கரை | எல்லை, கரைந்துவிடு(தல்), இளகி விடு(தல்), கடற்கரை, கூவு |
| கறை | களங்கம், கறுப்பு, அழுக்கு, குற்றம் |
| கூரை | வீட்டு மேல்பகுதி, குடிசை |
| கூறை | புதிய ஆடை, திருமண உடை |
| மரை | திருகாணியை அது பொருத்தப்பட்ட பரப்பின் மறுபக்கத்தில் உறுதியாகப் பற்றியிருக்கும் சிறு வளையம், (மரை கழன்று விழுந்துவிட்டது) |
| மறை | வேதம், மறைந்துகொள் |
Previous thread
Next thread





























