Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
101
Reaction score
97
Points
28
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 18

திருமணமான அன்று மாலை, எல்லாரும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். சகாயனும் மித்ரனும் ஒரு அறையிலும், யாழினி, நறுமுகை, மித்ரா மூவரும் மற்றொரு அறையிலும் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கே யாழினி தன் தங்கை நறுமுகையைப் பார்த்தாள். அவளோ ஏனோ தானோ என்று ஏதோ ஒரு கடமைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டு, "என்னடி... உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கவலையோடு கேட்டாள்.

சகாயனுடனான கல்யாணத்தை இந்தச் சில மணி நேரங்களில் ஒருவாறு தன் மனதிற்குள் ஏற்றுக்கொண்டிருந்த நறுமுகை, "அதெல்லாம் இல்லைக்கா... இந்த ரிதன்யா இவ்வளவு நடந்தும் இப்போ அமைதியாகப் போனதைப் பார்த்தால்தான் எனக்கு ஏனோ சந்தேகமாக இருக்கு" என்றாள் யோசனையுடன்.

"அவ போலீஸ் பயத்துலதான் அமைதியா போயிருப்பாடி" என்று பக்கத்தில் இருந்த மித்ரா சொன்னாள்.

"எனக்கு அப்படித் தெரியலை மிதுக்கா... அவ உங்க அண்ணனை அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டா" என்றாள் நறுமுகை.

"அதுதான் அவளோட குட்டு முழுசும் மேடையிலேயே உடைஞ்சிடுச்சே! இனி சகாயன் அத்தானிடம் தன் பருப்பு வேகாதுன்னு அவளுக்கே தெரிஞ்சு போயிருக்கும்டி" என்று யாழினி சொன்னாள்.

"நீங்க எல்லாரும் இங்கேதான் தப்பா யோசிக்கிறீங்க... அவளுக்கு என்ன நடந்தாலும் டாக்டர் சாரை விட மனசிருக்காது. அந்தளவுக்கு அவளுக்கு டாக்டர் சார் மேலே இருக்கிறது காதல் இல்லை, ஒருவித வெறி! அதனால் என்ன செய்தாவது அவரை அடையணும்னுதான் அவ பார்ப்பாள்" என்று நறுமுகை கவலையோடு சொல்ல,

யாழினி படபடத்துப் போய், "என்னடி இது! நானே நீ சகாயன் அத்தானோட மனைவியா வந்துட்டாய்ன்னு இப்பதான் நிம்மதியா மூச்சு விடுறேன். இப்போ போய் இப்படி வயித்துல புளியைக் கரைக்க வைக்கிறீயேடி!" என்று பதறினாள்.

"உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா?" என்று நறுமுகை கேட்க, மித்ராவும் யாழினியும் 'என்ன' என்பது போல அவளையே பார்த்தார்கள்.

"டாக்டர் சார் மேடையில பேசும்போது, ரிதன்யா அவ பிரண்ட்கூட பேசினதைக் கேட்டேன்னு சொன்னார் இல்லையா... அந்த நேரம் நானும் அதே இடத்தில்தான் இருந்தேன்!" என்றாள் நறுமுகை.

மித்ராவும் யாழினியும் திகைப்புடன் பார்க்க,

நறுமுகை தொடர்ந்து, "ஆமாம்... உங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததுக்கு ஐந்து நாளைக்கு பின்னாடி, நானும் என் பிரண்ட்டும் அந்த ரெஸ்டாரண்ட்டுக்குப் போயிருந்தோம். டாக்டர் சாரும் அவரோட பிரண்ட்ஸ் ஒரு நாலு பேரோட அங்கே வந்திருந்தார். நான் அவரைப் பார்த்துட்டு லேசாகப் புன்னகைச்சேன். ஆனா, ஆண்கள் இருக்கிற இடம்னு எதுக்கு தேவையில்லாமல் போய் பேசணும்னு நான் என் பிரண்ட்கூடவே இருந்துட்டேன்."

"அது கொஞ்சம் பிரைவசியான ரெஸ்டாரண்ட். ஒவ்வொரு செக்ஷனுக்கும் தனித்தனியா கண்ணாடிக் கதவு போட்டிருக்கும். உள்ளே இருக்கிறவங்க வெளியே வர்றவங்களைப் பார்க்கலாம், ஆனா உள்ளே யார் இருக்காங்கன்னு வெளியே இருக்கிறவங்களுக்குத் தெரியாது. நானும் என் பிரண்டும் இருந்த மேசைக்கு நடுவில் ஒரு சிறிய இடைவெளிதான் இருந்தது. அதற்கு அடுத்த பக்கத்தில்தான் டாக்டர் சாரும் அவரோட பிரண்ட்ஸும் உட்கார்ந்திருந்தாங்க."

"அப்போதான் ரிதன்யாவும் அவ பிரண்டும் அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வந்தாங்க. ரிதன்யா முகத்தில் பல மடங்கு சந்தோஷம் தெரிஞ்சது..." என்றவள், அந்தச் சூழலை அப்படியே தன் நினைவிலிருந்து கொண்டு வந்து விவரிக்கத் தொடங்கினாள்.

அங்கே ரிதன்யாவின் நண்பி அவளிடம், "ஏண்டி... அங்க அவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு, நீ என்னன்னா கல்யாண ஷாப்பிங்கையும் விடாம இன்னைக்கும் போய் ஃபேஷியல் பண்ணிட்டு வந்திருக்க?" என்று ஆத்தாமையோடு கேட்டாள்.

அதற்கு ரிதன்யா அலட்டிக் கொள்ளாமல், "என் சகா என்னைத் தவிர யாரையும் பெருசா நினைக்க மாட்டாண்டி. நானே போய் அன்னைக்கு உன்னோடு பேச வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் அவன் அம்மாவை உசுப்பேத்தினேன், அதனால்தான் அவங்க மயங்கி விழுந்துட்டாங்கன்னு நானே அவன்கிட்ட வாக்குமூலம் கொடுத்தேன். அப்பவும் அவன் என்னைப் பேசாமல் இருக்கும்படி சொன்னானே தவிர, கல்யாணத்தை நிறுத்துறதைப்பற்றி ஒண்ணும் சொல்லலை. அவன் நான் கொலை பண்ணினால் கூட என்னை விட்டுப் போகமாட்டான்." என அத்தனை எகத்தாளமாகச் சொன்னாள்.

அவள் பிரண்டு உடனே முகம் மாறி, "ஏய்... எல்லாருக்கும் பொறுமை உடையுற நிலை வரும்டி, பார்த்து நடந்துக்கோ" என எச்சரித்தாள்.

ரிதன்யாவோ, "என் சகா என்கிட்ட காதலைத் தவிர வேறு ஒன்றும் எதிர்பார்க்க மாட்டார். எனக்குத்தான் அவரோட அம்மா, அப்பா, சகோதரர்கள்னு எல்லாரும் இருக்கிறது சுத்தமாகப் பிடிக்கலை. எல்லாம் கல்யாணம் முடியுற வரைக்கும்தான்! கல்யாணம் முடிஞ்சதும் நான் அவரை ஹனிமூன்னு லண்டன் கூட்டிட்டுப் போயிடுவேன். அதுக்கு அப்புறம் எந்த ஆம்பளை பொண்டாட்டி சேலை முந்தானையை விட்டு வெளியே வருவான்? அப்போ நாம அங்கேயே செட்டில் ஆகிடலாம்னு சந்தர்ப்பம் பார்த்துச் சொல்லிடுவேன்" என்றாள்.

தொடர்ந்து இன்னும் திமிராக, "சும்மாவே ஆம்பளைங்க எல்லாம் பொண்ணு சுகத்துக்காக எந்த எல்லைக்கும் போவாங்க... அதிலும் என்னைத் தொட்டவன் எப்படி அந்தச் சுகம் இல்லாமல் இருப்பான்? அந்தளவுக்கு அவனுக்கு நான் இன்பத்தை வாரி வழங்குவேன். அப்புறம் அவன் பொட்டிப் பாம்பாக என்னை மட்டுமே சுத்திச் சுத்தி வருவான்" என அத்தனை திமிராகச் சொன்னாள்.

அவள் தோழி அப்படியே பயந்துபோய், "என்னடி இப்படி எல்லாம் திட்டம் போடுறாய்? அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சா உன்னை விட்டுடப் போறார்" என்றாள்.

ரிதன்யா தோழி சொன்ன அறிவுரையைக் காதில் போட்டுக்கொள்ளாமல், "அவன் பிடி என்கிட்டடி... நான் நினைச்சா மட்டும்தான் அதை விடுவேன்!" என்று இறுமாப்போடு சொன்னாள்.

தன் தோழியிடம் இருக்கும் அதிக நம்பிக்கையைக் கண்டு, "அப்படி அவரை லாக் பண்ண உன் கையில என்னதான் வச்சிருக்காய்?" என்று கேட்க,

அதற்கு மர்மமான புன்னகையைச் சிந்திய ரிதன்யா, "அதுக்குச் சந்தர்ப்பம் வந்தா உனக்கே தெரியும்டி..." என நறுமுகை அந்த உரையாடலைச் சொல்லி முடித்தாள்.

நறுமுகை அன்றைய நாளின் நினைவுகளைச் சொல்லி முடித்ததும், மித்ராவிடமும் யாழினியிடமும், 'சகாயன் எதிலே ரிதன்யாவிடம் சிக்கியிருப்பான்?' என்ற கேள்விதான் குடைந்து கொண்டிருந்தது.

ஒருவேளை, சகாயனுக்குத் தெரியாமல் ஏதாவது தனிப்பட்ட போட்டோக்களை எடுத்து வைத்திருப்பாளோ என்ற சந்தேகம் எழ, யாழினி பயந்த குரலில், " ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் பிரைவட்டா ஒண்ணா இருந்த போட்டோஸ் ஏதாவது அவகிட்ட இருக்குமோ?" என்று கேட்டாள்.

அதைக்கேட்ட மித்ரா சட்டென்று மறுத்து, "அப்படி எல்லாம் இருக்கவே இருக்காது அண்ணி! அண்ணா என் அம்மாவோட வளர்ப்பு. கல்யாணத்துக்கு முன்னாடி எந்த ஒரு தப்பும் பண்ணப் போக மாட்டார்னு எனக்கு உறுதியாத் தெரியும்" என்று அண்ணன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையோடு சொன்னாள்.

"அப்புறம் வேற என்னதான் இருக்கும்?" என்று யாழினி புரியாமல் மித்ராவிடம் மீண்டும் கேட்டாள்.

அறைக்குள் அங்குமிங்கும் நடந்தபடியே யோசித்துக் கொண்டிருந்த மித்ராவுக்குச் சட்டென்று ஏதோ ஒன்று ஞாபகம் வர, அவளது முகம் அப்படியே வெளுத்துப் போனது.

அதிர்ச்சியில் தன் வாயில் கையை வைத்தவள், பதற்றத்தோடு, "அச்சோ... அண்ணாவோட கிளினிக்! அண்ணா கிளினிக் ஆரம்பிக்கும்போது அவகிட்ட பணம் கடன் வாங்கிட்டுத்தான் தொடங்கினான்!" என்றாள்.

அத்தியாயம் 19

நறுமுகைக்கு யாழினி சொன்ன சகாயனின் தனிப்பட்ட படங்களாக இருக்கும் என்று சொல்லும் பொழுது, சகாயன் இன்னுமொரு பெண்ணைக் நான்கு வருடமாகக் காதலித்து இருக்கிறான் என்று நன்கு தெரிந்த பெண் எனினும் கணவன் இன்னொருத்தியுடன் நெருக்கமாக இருந்தான் எனும் பொழுது நெஞ்சு ஒரு நிமிடம் பக் கென்று ஆனது.

அதே மித்ரா தன் அண்ணா அப்படியான ஒழுக்கத் தவறுகளைச் செய்யமாட்டான் என்று உறுதியாகச் சொன்னபொழுது மனம் தன் பாட்டில் அமைதியானதைக் கண்டு, ஒரே நாளில் கணவனின் பால் உருகும் தன்னை நினைத்து ‘என்ன விந்தை இது’ என்று யோசித்தாள்.

சகாயன் ரிதன்யாவிடம் கடன் வேண்டியிருக்கிறான் என அறிந்து, "அச்சோ... எவ்வளவு பணம் இருக்கும் மித்ரா?" என்று யாழினி பதற்றமாகக் கேட்க,

"அது கண்டிப்பா கோடியைத் தாண்டியிருக்கும் அண்ணி" என்றவளுக்கும், சகாயனை லாக் பண்ண ரிதன்யாவுக்கு இதைவிட வேறு ஒரு சிறந்த வழி இருக்க முடியாது என்பது இப்போது மிகத் தெளிவாகப் புரிந்தது. அந்தப் பணத்தை ஒரு பெரிய ஆயுதமாக வச்சுத்தான், திரும்பவும் சகாயனைத் தன் வலைக்குள் விழ வைக்கப் பார்ப்பாள் என்ற பயம் அவளுக்குள் கவ்வியது.

"பணம் குறைவாக இருந்தால் வேறு எங்கேயாவது கடன் வாங்கியாவது அடைத்துவிடலாம். ஆனால் இது கோடிக்கணக்கில் எனும் பொழுது... அந்தக் கிளினிக்கிற்கு அவ்வளவா செலவாச்சு?" என்று நறுமுகை புரியாமல் கேட்டாள்.

"நீ எந்தக் காலத்தில இருக்கிறாய் நறுமுகை? இப்போ சின்னதா ஒரு வீடு கட்டுறதுனாலே எக்கச்சக்க காசு ஆகுது. அண்ணாவோட கிளினிக் போயிருக்கிறாய் தானே... அங்கே நம்ம அண்ணா மாதிரி இன்னும் இரண்டு டாக்டர்கள் இருக்காங்க. உங்கள மாதிரி ஆட்களுக்கான பயிற்சிக்கூடம், தியான மண்டபம்னு.. அது எவ்வளவு பெரிய ஏரியா தெரியுமா?" என்று மித்ரா அதன் பிரம்மாண்டத்தை விளக்கினாள்.

"போயும் போயும் எதுக்கு சகாயன் அத்தான் அவகிட்டப் பணத்தை வாங்கினார்?" என்று யாழினியும் தன் பங்குக்குக் குறைபட்டுக் கொண்டாள்.

"எல்லாம் அந்த ரிதன்யாவோட வேலைதான் அண்ணி! அவளுக்கு அண்ணா பெரிய ஆளா இருந்தால்தானே வெளியே என் லவ்வர்னு பெருமை பீத்திக்க முடியும்? அதுக்காகவே தாராளமாகக் காசைச் செலவு செய்தாள். அண்ணாகூட, 'இது அகலக்கால் வைக்கிற மாதிரி இருக்கு, இப்போதைக்கு வேண்டாம்'னுதான் நின்றார். அவள்தான் அண்ணாவை உன்னால் முடியும் சகான்னு மைண்ட்வாஷ் பண்ணி, வற்புறுத்திக் காசைக் கொடுத்தா. அப்பாக்குக்கூட இதில் பெருசா விருப்பம் இல்லை."

"அவளோட அப்பா கட்டிடம் கட்டிக் கொடுக்கிற பில்டர் கம்பெனி வச்சிருக்கார், தெரியும்தானே? அவரும் நேர்ல வந்து, 'என் பொண்ணுக்குச் சேர்த்து வச்சிருக்கிறதை என் மருமகனுக்குக் கொடுக்கிறதுல என்ன இருக்கு?'ன்னு அண்ணாவைக் கட்டாயப்படுத்தி அந்தக் காசைக் கொடுத்தாங்க" என்று சொல்லி முடித்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தன் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

"ஒருவேளை காசைக் கொடுக்க முடியாட்டி... கிளினிக்கை இழுத்து மூடுற மாதிரி நிலைமை வருமோ?" என்று யாழினி கேட்க,

"கடவுளே... அந்த கிளினிக் டாக்டர் சாருக்கு எவ்வளவு முக்கியம்! என்னை மாதிரி எத்தனை பேருக்கு அங்க பயிற்சி கொடுத்து, அவங்க வாழ்க்கையைச் சரி செய்திருக்கார்..." என்று நறுமுகையும் தன் கணவனின் லட்சியத்தைப் பற்றி நினைத்து கவலைப்பட்டாள்.

அவர்கள் மூவரும் இப்படிப் பேசிக்கொண்டிருந்த வேளையில், "என்ன... இன்னும் கிளம்பாம இங்கே என்னதான் நடக்குது?" என்று கேட்டபடி அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு மித்ரனும் சகாயனும் உள்ளே நுழைந்தார்கள். சகாயன், நறுமுகை தனக்காகப் பார்த்துப் பார்த்துத் தேடி எடுத்துக் கொடுத்த அந்த மாப்பிள்ளைக் குர்த்தாவில் அத்தனை கம்பீரமாகத் தயாராகி வந்திருந்தான்.

அண்ணனைப் பார்த்ததும் மித்ராவுக்குள் இருந்த குறும்புக்காரத் தங்கை விழித்துக்கொண்டாள். கிளினிக் கடன் விஷயத்தை இப்போதே சொல்லி அண்ணனின் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவள், பேச்சை மாற்ற எண்ணி, "அதுவா அண்ணா... நீங்களும் ரிதன்யாவும் பிரைவட்டா ஒண்ணா இருந்திருப்பீங்களா இல்லையான்னு நறுமுகைக்கு ஒரே டவுட்! அதை எப்படி அவளுக்குக் கிளியர் பண்ணி வைக்கிறதுன்னுதான் நாங்க யோசிச்சுட்டு இருக்கோம்" என்று சகாயனிடம் அப்பட்டமாகப் பொய் சொன்னாள்.

மித்ரா சொன்னதைக் கேட்டதும், சகாயனின் கூர்மையான பார்வை சட்டென்று நறுமுகையின் முகத்தில் வந்து அப்படியே படிந்தது. அவனது பார்வையின் வீரியம் தாங்காமல், "ஐய்யோ! நான் அப்படி எதுவும் கேட்கலைங்க... நிஜமாவே நான் இல்லை!" என்று தன் கைகளை ஆட்டி அத்தனை வேகமாக மறுத்தாள் நறுமுகை.

தன் தங்கை மித்ரா வேண்டுமென்றே வம்பிளுக்கிறாள் என்பதைச் சகாயன் சட்டென்று புரிந்துகொண்டவன், நறுமுகையின் பக்கமாகத் தன் பார்வையைத் திருப்பி, "நான் அதையெல்லாம் என் பொண்டாட்டிக்கு அப்புறமாப் புரிய வச்சுக்கிறேன்... அதுக்கு நிறைய டைம் இருக்கு" என்று நறுமுகையை லேசான குறும்போடு ஏறிட்டுப் பார்த்தபடியே சொன்னான்.

அவனது அந்த என் பொண்டாட்டி என்ற ஒற்றை வார்த்தையில் நறுமுகையின் முகம் வெட்கத்தால் தானாகச் சிவந்தது.

அடுத்த நொடியே சகாயனின் முகம் அத்தனை தீவிரமாக மாறியது. அங்கிருந்தவர்களின் முகபாவனைகளை உற்று நோக்கியவன், "ஆனா, நாங்க வர்றதுக்கு முன்னாடி இங்கே ஏதோ சீரியஸா கதை போன மாதிரி உங்க முகமெல்லாம் இருக்குதே... விஷயத்தை டைவர்ட் பண்ணாம என்னன்னு நேரா சொல்லுங்க.. ஏதும் பிரச்சனையா? " என்று தன் தங்கையை நோக்கிக் கேட்டான்.

"அது வந்து..." என்று மித்ரா உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என்ற பெரிய சிந்தனையில் இருக்க... 'இந்தப் பிரச்சனையின் நேரடி சூத்திரதாரியே சகாயன் எனும் பொழுது, அவனுக்குக் கண்டிப்பாக இந்த விஷயம் தெரிந்திருக்க வேண்டும்' என எண்ணிய யாழினி, "சொல்லு மித்ரா... மறைக்காம என்னன்னு சொல்லு" என்று அவளை ஊக்கப்படுத்தினாள்.

"என்ன... யாருக்கும் ஏதும் பிரச்சனையா?" என்று மித்ரனும் அவர்களின் முகங்களைப் பார்த்துவிட்டுப் பதற்றப்பட்டான்.

"அண்ணா... நீங்க அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல ரிதன்யா பேசினதைக் கேட்டீங்க இல்லையா... அதை நறுமுகையும் நேர்ல கேட்டிருக்கா" என்று மித்ரா விஷயத்தைத் தொடங்கினாள்.

"எனக்குக் கேட்கும்போது அவளுக்கும் கேட்டிருக்கும்... அதுல என்ன இப்போ?" என்றான் சகாயன் சாதாரணமாக.

"அதில்லை அண்ணா... அவ உங்களை லாக் பண்ண ஏதோ ஒரு வழி வச்சிருக்கேன்னு அவ பிரண்ட்கிட்ட சொன்னா இல்லையா... அதுதான்..."

"லாக் பண்ணவா? என்னன்னு சொன்னா?" என்று சகாயன் புருவம் சுருக்கிக் கேட்க...

"ம்... உங்க பிடி அவகிட்ட இருக்குன்னு சொல்லியிருக்கா. அது கண்டிப்பா உங்க கிளினிக்கிற்காக அவகிட்ட வாங்கின காசாதான் இருக்கும்னு நாங்க ஊகிக்கிறோம்" என்று மித்ரா படபடவெனச் சொல்லி முடித்தாள்.

"ஓ..." என்றவனுக்கு அப்போதுதான் சில விஷயங்கள் புரிந்தன. அன்று ரெஸ்டாரண்ட்டில் ரிதன்யா தன்னை ஏதோ ஒரு பொம்பளைப் பித்தன் என்பது போல மட்டமாகப் பேச... அது அவனது நண்பர்களுக்கு முன்னால் அவனுக்குப் பெரிய அசிங்கமாகப் போய்விட்டது.

அதனால், அவள் கடைசியில் பேசிய அந்த லாக் பற்றிய வார்த்தைகளை அவன் பெருசாகக் கவனிக்கத் தவறிவிட்டான். அந்தப் பேச்சைக் கேட்ட பிற்பாடு, எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதிலேயே அவன் குறியாக இருந்துவிட்டான். அதுமட்டுமில்லாமல், கல்யாண மேடையில் ரிதன்யாவிடம் சொன்னது போல அவனிடம் வீடியோ ஆதாரம் எல்லாம் ஒன்றும் இல்லை. அது அவளைச் சும்மா மிரட்டி அங்கிருந்து விரட்டுவதற்காக அவன் சொன்ன பொய் தான்!

சகாயன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, "நம்மகிட்ட இப்போ எவ்வளவு பணம் கையில் இருக்குன்னு பார்க்கணும். அவ எப்படியும் கொடுத்த காசைத் திருப்பிக் கொடுன்னு வந்து நிற்பா" என்றவன் மித்ரனின் பக்கம் திரும்பி, "மித்ரன்... நீ போய் அப்பாவைக் கூட்டிட்டு வா" என்றான் அவசர குரலில்.

மித்ரனும் தந்தையை அழைக்கச் செல்ல, தன் தங்கை மித்ராவிடம் திரும்பி, "மித்ரா... உனக்கு யார் யார் பணம் தர முன்வருவாங்களோ, அவங்ககிட்ட எல்லாம் தயங்காமல் கடன் கேள். அது சின்ன அமௌன்ட்டாக இருந்தாலும் பரவாயில்லை, இப்போதைக்குச் சேமிப்போம்" என்றவன், மெதுவாக நறுமுகையையும் ஒரு பார்வை பார்த்தான்.

அவளுடைய சம்மதத்தைக் கேட்காமல், சூழ்நிலைக்காக அவளுக்குத் தாலி கட்டியதே அவனுக்குள் ஒரு குற்ற உணர்வாக இருந்தது. இப்பொழுது கல்யாணம் முடிந்த முதல் நாளே, இப்படி ஒரு பெரிய பணப் பிரச்சனவிலும் அவளைச் சிக்க வைத்திருக்கிறோமே என்ற சங்கடம் அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனது அந்தச் சங்கடமான பார்வையைப் புரிந்துகொண்ட நறுமுகை, அத்தனை பக்குவமாக, "எனக்கும் அக்காவுக்கும் ஒன்னும் பிரச்சனையில்லைங்க... நீங்க எங்களைப் பத்திக் கவலைப்படாம, முதல்ல அந்த ரிதன்யாவோட காசுப் பிரச்சனையை முடிக்குற வழியைப் பாருங்க" என்றாள் அத்தனை ஆறுதலாக.
 
Previous thread

Latest threads

Top Bottom