நீங்காத பந்தமொன்று..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 1)
அட ராமா..! மஞ்சரி பிடிக்காத மருமகளா...? அதான் கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம்ன்னு பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது போல.
காபியில கொஞ்சம் சக்கரை அதிகமாயிடுச்சு, அதுக்கு எதுக்கு இந்தளவுக்கு பேசணும், அதுவும் ஒழுக்கத்தை பத்தியெல்லாம்.... அது தன் மகனையே சந்தேகப்படுற மாதிரி ஆகாதா...?
இப்ப புரியுது, அந்த வீட்டு தலைமகனுக்கும் மரியாதை இல்லை, அவன் பார்க்குற வேலைக்கும் மரியாதையில்லை, அதான் மூத்த மருமகளுக்கும் மதிப்பில்லை, அந்த வீட்டு பேத்திக்கும் மதிப்பில்லை.
மஞ்சரி என்ன உட்கார்ந்து சாப்ட்டு, சாப்ட்டு உடல் எடையை ஏத்திக்கிட்டாளா என்ன ?கர்ப்ப காலத்துலேயும், குழந்தை பிறந்த பிறகும் வர ஒரு சில பிரச்சினையால அவளோட உடல் வெயிட் போட்டுடுச்சு, அதுக்காக அவ அந்த வீட்டு மருமகள் இல்லைன்ன ஆகிடுவாளா, இல்ல சசிதரனோட பொண்டாட்டி இல்லைன்னு ஆகிடுவாளா ?
ஆனாலும், இது மாதிரி பாடி ஷேமிங், பார்க்குற வேலையை கேவலமா பேசறதெல்லாம் ரொம்பவே ஓவர். இதோ குணாளனுக்கு கூடத்தான் சுகர் இருக்கு அதுக்காக மஞ்சரியும் கிண்டல் பண்ணலாம் தானே ?
இதெல்லாம் சின்னப்புத்தித் தனம்ங்கிறது கூட அந்த வீட்டு பெரியவருக்கு புரியலைப் பாருங்களேன்.
ம்.. கொண்டவன் சரியா இருந்தால் கூரை ஏறி சண்டை போடலாம், ஆனால் இங்க தான்
கொஞ்சம் கூட மனைவியின் நலனில் அக்கறையோ, நேவ்சமோ இல்லை போலிருக்கே. அதான் வீட்டுக்கு வந்த மருமகளை கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க போல, கூடவே பேத்தியையும். இவங்களுக்கெல்லாம் ரிங் மாஸ்டர் மாதிரி ஆட்டி வைக்குற மருமகள் வந்தால் சரிப்பட்டு வரும் போல. கூடிய சீக்கிரம் வருவாள் பாருங்க, வந்து ஆட்டி வைப்பாள் பாருங்க. அப்ப தெரியும் மூத்த மருமகளோட அருமையும், பெருமையும்.



CRVS (or) CRVS 2797