- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-
| கணம் | நேரம் |
| கனம் | பளு, சுமை |
| தணி | அடங்கு(தல்), தணிந்துபோதல் |
| தனி | தனித்திருத்(தல்), துணையின்றியிருத்தல் |
| மணம் | வாசனை, கல்யாணம் |
| மனம் | உள்ளம் |
| பாணம் | அம்பு, பட்டாசு வகை |
| பானம் | நீர் உணவு |
| ஆணி | சுவரிலும், பலகைகளிலும் அடிக்கும் கூரிய இரும்புத்துண்டு, ஆணி அடி |
| ஆனி | ஒரு தமிழ் மாதம் |
| கணி | கணித்தல், கணக்கெடுத்தல் |
| கனி | பழம் |
| துணி | சீலை, துணிவுகொள் |
| துனி | துன்பம், கோபம், அச்சம் |
| உண் | சாப்பிடு |
| உன் | உன்னுடைய |
| உண்ணு | சாப்பிடு |
| உன்னு | நினைத்துப்பார் |
| ஊண் | உணவு |
| ஊன் | மாமிசம், இறைச்சி |
| பணி | வேலை, கீழ்ப்படிதல், தொழில் |
| பனி | பனி (க்காலம்), பனிபெய்கிறது |
| கண்ணான் | கண்ணையுடையவன் |
| கன்னான் | இரும்புவேலை செய்பவர் |
| காண் | பார் |
| கான் | காடு, கானகம் |
| அண்ணம் | மேல்வாய் |
| அன்னம் | பறவை இனம் |
| அரண் | மதில், பாதுகாப்பு, கோட்டை |
| அரன் | சிவன் |
| ஆண் | ஆண் இனம் |
| ஆன் | பசு |
| வன்னம் | எழுத்து |
| வண்ணம் | நிறம், அழகு, விதம் |
| அனல் | வெப்பம் |
| அணல் | தாடி, கழுத்து |
| அனைத்து | எல்லாம் |
| அணைத்து | தழுவி |
Previous thread
Next thread





























