- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:
| கரு | கர்ப்பம் |
| கறு | கோபம், வஞ்சினம் |
| கருக்கு | கூர்மை, பனங்கருக்கு |
| கறுக்கு | கோபித்தல் |
| குருகு | பறவை வகை, கொக்கு |
| குறுகு | அருகில் செல், குறை(தல்) |
| குரும்பை | காதின் அழுக்கு, தேங்காய்/பனங்காய்ப் பிஞ்சு |
| குறும்பை | ஒரு வகை ஆடு |
| கோருகிறேன் | கேட்டுக் கொள்கிறேன் |
| கோறுகிறேன் | கொல்லுகிறேன் |
| நருக்கு | பலமாய்க் குட்டு (நருக்கு எனக் குட்டினான்) |
| நறுக்கு | துண்டாக்கு |
| பெரு | பெரிய |
| பெறு | பெற்றுக்கொள் |
| பொருப்பு | மலை, ஒப்பு |
| பொறுப்பு | பாரம், உத்தரவாதம், கடமை |
| மரு | மணம், மருக்கொழுந்து |
| மறு | மாசு, குற்றம் |
| மருப்பு | தந்தம் |
| மறுப்பு | தடை, எதிர்த்தல் |
| வருத்தல் | துன்புறுத்தல் |
| வறுத்தல் | பொரித்தல், உணவுப்பண்டங்களைப் பதப்படுத்தல் |
| முருகு | அழகு, மணம், இளமை, கடவுள் தன்மை |
| முறுகு | தீய்ந்து போ(தல்) |
| முருக்கு | ஒருவகைமரம் |
| முறுக்கு | வளை(த்தல்), திரி(த்தல்), தின்பண்டம் |
| இரை | தீனி, ஒலி |
| இறை | கடவுள், சிதறு (நீர் இறைத்தல்) |
| குரை | நாய் குரைத்தது |
| குறை | கொஞ்சம், குறைத்து விடு |
| பாரை | கடப்பாரை, நீண்ட இரும்புத் துண்டு |
| பாறை | கல்பகுதி |
| பரை | பார்வதி |
| பறை | தோல் கருவி, பறை (யடித்தல்) |
Previous thread
Next thread





























