- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:
| அரம் | இரும்புக்கருவி |
| அறம் | தருமம் (அறம் செய விரும்பு) |
| ஆர | நிறைய (வயிறு ஆர) |
| ஆற | தணிய, ஆறுதல் |
| இரந்தான் | பிச்சையெடுத்தான் |
| இறந்தான் | உயிர் நீத்தான் |
| இரங்கு | வருந்து, அழு, மனமிரங்கு |
| இறங்கு | கீழே வா |
| இரைந்து | உரத்த குரலில் பேசுதல், (கண், முகம் போன்றவை) வீங்குதல் |
| இறைந்து | சிதறுதல், தண்ணீர் இறைத்து |
| உரல் | தானியம் குற்றும் கருவி |
| உறல் | அடைதல், துன்பம் உறல் |
| கர | ஒளிந்துகொள், பதுங்கு |
| கற | பால் கற |
| குரவர் | முனிவர், பெற்றோர் |
| குறவர் | ஒரு சாதி |
| குரவை | ஒருவகைக் கூத்து |
| குறவை | மீன் வகை |
| குரங்கு | வானரம் |
| குறங்கு | தொடை |
| சுரா | மதுபான வகை |
| சுறா | சுறாமீன் |
| சுருக்கு | சிறிதாக்கு |
| சுறுக்கு | வேகம் (சுறுக்காக நட) |
| செரு | சண்டை |
| செறு | கழனி |
| சிரை | தலையைச் சிரை (த்தல்), மயிர் நீக்கு(தல்) |
| சிறை | சிறைச்சாலை, அடைப்பு |
| சீரிய | உயர்ந்த |
| சீறிய | சீற்றங்கொண்ட(பாம்பு சீறியது) |
| சொரி | கொட்டு, கொடு(த்தல்) |
| சொறி | சிரங்கு, தினவு எடுத்துச் சொறிதல் |
| செரி | செரித்தல், உணவு சீரணமாதல் |
| செறி | திணி, அடை(த்துவை) |
Previous thread
Next thread





























