- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-
குறிப்பு:
'ந' (தந்நகரம்)
இந்த எழுத்து, சொல்லின் முதலில் மட்டும் வரும். இடையிலும், இறுதியிலும் பெரும்பாலும் வராது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை போன்ற கூட்டுச் சொற்களில் மட்டுமே இடையில் வரும்:
இயக்குநர், ஆளுநர், அனுப்புநர், விடுநர், ஓட்டுநர், பெறுநர், போன்றவை.
| திணை | பகுதி, பிரிவு |
| தினை | தானியவகை, தினையரிசி |
| மணை | உட்காரும் பலகை |
| மனை | வீடு, இடம், மனைவி |
| கணை | அம்பு |
| கனை | கனைத்தல், தொண்டையடைப்பைச் சரிசெய்து கொள்ளல். |
| ஆணை | உத்தரவு, கட்டளை |
| ஆனை | யானை |
| பணை | மூங்கில், முரசு, பருமை |
| பனை | பனைமரம் |
| திண்மை | வலிமை |
| தின்மை | தீமை |
| வண்மை | வளம், வழங்குதல் |
| வன்மை | வலிமை, கடினம் |
| நாண் | கயிறு, நாணம், வெட்கம் |
| நான் | தன்னைக் குறிப்பது |
| தண் | குளிர்ந்த |
| தன் | தன்னுடைய |
| எண் | இலக்கம், நினை |
| என் | என்னுடைய |
| எண்ண | நினைக்க, எண்ணிப்பார்க்க |
| என்ன? | கேள்வி |
| மண் | பூமி, நிலம் |
| மன் | மன்னன், பொருந்து |
| மாண் | பெருமை, சிறப்பு |
| மான் | ஒரு மிருகம் |
'ந' (தந்நகரம்)
இந்த எழுத்து, சொல்லின் முதலில் மட்டும் வரும். இடையிலும், இறுதியிலும் பெரும்பாலும் வராது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை போன்ற கூட்டுச் சொற்களில் மட்டுமே இடையில் வரும்:
இயக்குநர், ஆளுநர், அனுப்புநர், விடுநர், ஓட்டுநர், பெறுநர், போன்றவை.
Previous thread
Next thread