- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ல, ள, ழ, வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-
| விலங்கு | மிருகம், கையில் விலங்கிடுதல் |
| விளங்கு | ஒளிர், சிறப்புடன் இரு |
| விலக்கு | தடு, தவிர் |
| விளக்கு | ஒளி, தெளிவாக்கு, தூய்மையாக்கு |
| விலா | வயிற்றின் பக்கப் பகுதி |
| விழா | திருவிழா |
| விளா | விளாமரம் |
| பலம் | ஆற்றல், சக்தி, வலிமை |
| பழம் | கனி, பழமையான, கடந்த கால |
| பாலம் | இரு பகுதிகளை இணைப்பதற்குக் கட்டப்படும் அமைப்பு |
| பாளம் | உலோகக் கட்டி, பாளம் பாளமாய் |
| கலம் | பாத்திரம், படகு, கப்பல் |
| களம் | இடம், போர்க்களம் |
| குலம் | (மனித) இனம், வம்சம், சாதி |
| குளம் | நீர் நிலை |
| கலை | வித்தை, கலைந்துபோதல் |
| கழை | மூங்கில் |
| களை | வயலில் களையெடுத்தல், முகத்தின் ஒளி, நீக்குதல், சோர்வடைதல் (களைத்து) |
| காலை | நாள் தொடக்கம், சமயம் |
| காளை | இளமையான எருது, வீரன் |
| குலை | கொத்து, குலை நடுக்கம் |
| குழை | குழைந்து போதல் |
| சூலை | வயிற்றில் ஏற்படும் நோய் |
| சூளை | களிமண் பொருள்களை வேகவைக்கும் இடம், செங்கல் சூளை |
| மலை | பெருங்குன்று, மலைத்துப்போதல் |
| மழை | வானம் இடித்துப் பெய்கின்ற துளி, மழை பெய்தது |
Previous thread





























