ஹேமா கோபால்
Writer✍️
அத்தியாயம் 29
நான்கு வருடமாகக் காதலித்த அவளுக்குத் தெரியாமல் எப்படிச் சகாயன் ரேடியோ ஜாக்கி வேலை பார்த்திருக்க முடியும் எனும் நினைப்பில், "நீயா?! பொய் சொல்லாதே சகா... இவளைக் காப்பாத்துறதுக்காக நீ இப்படிப் பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறாயா?" என்று படு நக்கலாகக் கேட்டாள் ரிதன்யா.
"என் குரலே என் பொண்டாட்டிக்கு என்னை அடையாளம் காட்டிக் கொடுத்திடுச்சு ரிதன்யா. அவளும் ஒரு சின்னச் சந்தேகத்துலதான் சுத்திட்டு இருந்தா... ஆனா எனக்கு, என் பொண்டாட்டிக்கு என்னை ஆர்.ஜேவாகப் பிடிக்கிறதை விட, இந்தச் சகாயனாகவே பிடிக்கணும்னுதான் அவகிட்ட இந்த உண்மையை ஒரு மாசமாகச் சொல்லாம ரகசியமா வச்சிருந்தேன்.
நாளைக்கு அவளை நேரா என் ரேடியோ ஸ்டேஷனுக்கே கூட்டிட்டுப் போய் ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னுதான் நினைச்சேன்... ஆனா நீயே நடுவுல வந்து அவளுக்கு அந்தப் பெரிய ஷாக்கைக் கொடுத்துட்டாய். ஓகே, அதுக்கும் ஒரு பரவாயில்லை!" என்றான்.
ரிதன்யா அப்பொழுதும் நம்பிக்கையில்லாமல் பார்க்க, “என் வீட்டுல இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். நான் இரவு பத்து மணிக்குப்போய் இரண்டு ஷோக்களுக்கு வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணிக் கொடுத்துட்டு ஒரு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். அதனால உனக்குத் தெரியலை. எனக்கும் இந்த நாலு வருசத்தில் உன்கிட்ட சொல்லனும் என்று தோணலை” என்றவன், "இரு..." என்று ரிதன்யாவிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்றான்.
அவன் திரும்ப வரும் பொழுது அவனது கைகளில் நறுமுகை இரண்டு வருடங்களாக எழுதிய வாழ்த்து மடல்களும், கடிதங்களும் இருந்தன.
அவன் கைகளில் இருந்த ஒரு கடிதத்தைக் தூக்கிய பொழுதே நறுமுகைக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அது... அவள் முதன்முதலாகச் சகாயனின் பேச்சுப் பயிற்சிக் கூடத்திற்குச் சென்றபோது எழுதிய கடிதம்! 'இதை நான் என் வீட்டுப் புத்தக அலமாரியில், ஒரு புத்தகத்திற்குள் அல்லவா மறைத்து வைத்திருந்தேன்? இது இவன் கைக்கு எப்படி வந்தது?' என்பது போல நறுமுகை தன் கணவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
அவளது பார்வையைப் புரிந்து கொண்ட சகாயன் சிரித்துக் கொண்டே, "நாங்க உங்க வீட்டுக்குச் சாப்பிட வந்திருந்தப்ப, உங்க அப்பா எனக்குப் போர் அடிக்குதுன்னு சொல்லி உன்னோட புக் கலெக்ஷனைக் காட்டக் கூட்டிட்டுப் போனார். அப்போ நான் ஒரு புத்தகத்தை எடுக்கும் போது அது தவறி கீழே விழுந்தது, கூடவே இந்தக் கடிதமும் கீழே விழுந்தது" என்றான்.
நறுமுகையின் முகத்தையே பார்த்தபடியே, "எனக்கு இந்தக் கடிதத்தை எழுதும் போதே... நீ என்னை அடிக்கடி பார்த்து ரசிச்சு எழுதின மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. அதுக்குள்ள அப்படி என்னதான் எழுதியிருக்காய்னு ஒரு கியூரியாசிட்டியோட வாசிச்சுப் பார்த்தேன். அந்த கடிதத்தில் உன்னைப் பற்றி எழுதச் சொன்னால், உன் பிரியத்தில் மொத்தமாக நானும் என் குரலும் தான் எங்கே பார்த்தாலும் நிறைந்திருந்தது" என்று சொன்னவன், தன் கையிலிருந்த மற்ற வாழ்த்து மடல்களையும் கடிதங்களையும் அங்கே மேசையின் மேல் பரப்பினான்.
'இந்தக் கடிதங்கள் அவனுக்குப் போய்ச் சேர்கிறதா இல்லையா என்று எத்தனை நாட்கள் கவலைப்பட்டிருப்பாள்! எத்தனை நாள் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு வரியிலாவது ஒரு கடிதம் வராதா என்று ஏங்கியிருப்பாள்! எல்லாக் கடிதமும் அவனுக்குச் சென்று சேர்ந்துள்ளது. அப்படியிருந்தும் எதற்குத் தனக்குப் பதில் போடவில்லை?' என்பது போல நறுமுகை சகாயனைப் பார்த்தாள்.
சகாயனோ நறுமுகையைக் கவனிக்காமல் ரிதன்யாவிடம், "இதெல்லாம் நறுமுகை இந்த ஆர்.ஜே. மித்ரனுக்கு எழுதினதுதான். ஆனா, இதுல ஒரு இடத்துல கூட வல்கராகவோ இல்ல… காதல் என்றோ ஒரு வார்த்தை கூட இல்லை. என் நலன்விரும்பியா எனக்கு வாழ்த்துத் தெரிவிச்சிருக்கா… நான் ஒருநாள் நிகழ்ச்சியின் பொழுது தும்மினதால், 'நிறைய சூப் குடிங்க' என்று சொல்லியிருக்கா..
நான் பிறந்தநாள்னு ரேடியோவுல சொன்னதுக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருக்கா… அவ்வளவுதான்! இது அம்மா தன் குழந்தை மேல வைக்கிற அன்பு போலக் கலப்படமில்லாத அன்பு, அவ்வளவுதான்!" என்றவன், மேலும்,
"அப்புறம்... நான் ரேடியோவில் உண்மையான என் பிறந்த நாளைச் சொல்வதில்லை, அது என் கற்பனையைத்தான் சொல்வேன். அதே மாதிரி நான் சொன்ன அந்தப் பிறந்த நாள், நான் நறுமுகையைக் கல்யாணம் செய்யத் தயாரான அந்த நிமிடம் தான்! நான் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்ற பொருளில் சொன்னேன்.
அன்னைக்கு ரேடியோவுல என் பொண்டாட்டி அரும்பினின்னு சொன்னப்பக் கூட நறுமுகைக்கு பல்ப் எரியல பாரு. அரும்பினி என்றாலும் நறுமுகை என்றாலும் மொட்டுப் பூவாக மலருறதுன்னுதான் பொருள்!" என்றான் தனக்குள் அடக்கிய புன்னகையுடன்.
மித்ரன் மெதுவாக மித்ராவின் பக்கத்தில் நகர்ந்து வந்து, "ஏய் மித்ரா... அண்ணன் நிஜமாவே ரேடியோவுல அரும்பினின்னு பெயர் சொன்னாராடி?" என்று சன்னமான குரலில் ஆச்சரியமாகக் கேட்டான்.
அதற்கு மித்ரா, "ஆமாண்டா மித்ரன்! அண்ணன் அன்னைக்கு ரேடியோவுல அப்படிச் சொன்னப்ப, நான் அது ஏதோ சும்மா கற்பனையா ஒரு பெயரைச் சொல்லுறார்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன்" என்று தன் தலையில் அடித்துக் கொண்டே சொன்னாள்.
தன் அண்ணன் திருமணத்துக்கு முன்னாடியே இவ்வளவு பெரிய ஒரு க்ளூ கொடுத்திருக்கான், அதைக் கூடக் கண்டுபிடிக்காமல் கோட்டை விட்ட மித்ராவைத் திரும்பிப் பார்த்தான் மித்ரன். அவளது முக பாவனையைப் பார்த்துவிட்டு, "நிஜமாவே நீ ஒரு பெரிய டியூப்லைட்தான்டி!" என்று செல்லமாகக் கேலி செய்து திட்டினான்.
அங்கே நறுமுகைக்கோ, அவன் தன் கல்யாணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் ரேடியோவில் 'அரும்பினி' என்று உருகிப் பேசியது தன்னைத்தான் என்று இப்போதுதான் முழுமையாகப் புரிந்து, நெஞ்சு முழுக்கக் காதல் சுரந்தது.
அதே சமயம், பக்கத்தில் நின்ற யாழினிக்கும் அன்றைய ரேடியோ நிகழ்ச்சியும், அன்று நறுமுகை அவனின் குரலில் மயங்கி நின்றதும் அத்தோடு நின்றுவிடாமல் அவன் மனைவி மீது அவன் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் போட்ட அந்த 'அரும்பும் தளிரும்' பாட்டையும் நறுமுகை சிலாகித்துக் கூறியதும் சட்டென்று ஞாபகத்திற்கு வர, நறுமுகையைப் பார்த்து அழகாகத் தன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினாள்.
நறுமுகை சகாயனை நேருக்கு நேராகப் பார்த்து, தன் உதடுகளால் "ஃபிராடு...!" என்று சத்தமில்லாமல் வாயசைத்துத் திட்டிவிட்டு, அங்கே நின்றால் எல்லாரும் தன்னை வம்புக்கு இழுப்பார்கள் என்று வெட்கமும், தன்னிடம் இவ்வளவு நாட்களாகச் சொல்லாத சகாயனின் மீது கோபமும் கலந்த முகத்தோடு தன் அறைக்குள் ஓடி மறைந்தாள்.
மித்ரன் மெதுவாகச் சகாயனின் காதருகே வந்து, "அண்ணா... அண்ணி கையால உனக்கு இன்னைக்கு அடி கன்பார்ம்!" என்று முணுமுணுக்க,
"அவகிட்ட அடி வாங்காம வேற யார் கையாலடா வாங்குறது? என் பொண்டாட்டி கையால அடியைச் சந்தோஷமாவே வாங்கிக்கலாம்டா!" என்றான் சகாயன் அங்கே நின்ற ரிதன்யாவின் காதில் விழும்படி சத்தமாகவே.
"அண்ணா நீங்க வர வர பக்கா பொண்டாட்டி தாசனா மாறிட்டே இருக்கீங்க..." என்று மித்ரன் கிண்டல் செய்ய,
"என் வாரிசைச் சுமக்கிற என் பொண்டாட்டிக்கு நான் துடைப்பமாகக் கூட இருந்திட்டுப் போறேன்டா... அதுக்கு உனக்கு எங்கே இப்பக் குத்துது?" என்று சகாயன் அத்தனை கம்பீரமாகப் பதில் பேசினான்.
ரிதன்யாவுக்கோ அண்ணன் தம்பியின் இந்தப் பேச்சைக் கேட்கக் கேட்க உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவது போலக் கோபம் கோபமாக வந்தது.
தன்னை நான்கு வருடமாகக் காதலித்தவன், தன்னை கிஞ்சித்தும் நினையாமல், இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டு, தன் புது மனைவியோடு இணைந்து வாழ்வதோடு நிற்காமல் அவளைப் பற்றி இத்தனை பெருமையாகவும், அவளது முந்தானையில் குடியிருப்பவன் போலவும் பேசுவதைக் கண்டவளுக்கு ஆத்திரம் உச்சந்தலையைத் தொட்டது.
ரிதன்யாவின் முகத்தில் அலைமோதிய அந்த ரௌத்திரத்தைக் கண்ட நடராஜன், நிலைமை இன்னும் மோசமாவதைத் தடுக்க நினைத்து, எல்லாப் பெண்களையும் பார்த்து, "நீங்களும் கொஞ்சம் உள்ளே போங்கம்மா… இல்லை இவ அடுத்து யாரோட ஒழுக்கத்தை சந்தி சிரிக்க பேசுவா என்று தெரியலை.." என்று சொல்லி அவர்களை அறைக்குள் அனுப்பிவைத்தார்.
ரிதன்யா இந்த வீட்டை வேவு பார்க்க ஆள் வைத்தது போல், அவளையும் வேவு பார்க்க ஆள் வைத்திருந்தார் நடராஜன். "ரிதன்யா வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிட்டாள். உங்கள் வீட்டுக்குத்தான் வருவது போல இருக்கிறது" என்று அந்த ஆள் தகவல் சொல்லவும்தான் அவர்கள் காரிலிருந்து விரைந்து வந்தார்கள்.
அவர்கள் வருவதற்குள் ரிதன்யா பேசிய பேச்சும், நறுமுகையின் ஒழுக்கத்தைப் பழித்ததும் நடராஜனுக்கு அவளது தலையை வெட்டிவிடலாம் என்ற அளவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆடிட்டர் பஞ்சாட்சரம்தான் அவர் கையைப் பிடித்துத் தடுத்து, “சின்னப் பிள்ளைகள் சண்டைக்குள் நீ போகாதே.. அவங்களே சமாளிக்கட்டும்” என்று சொல்ல, இரு மகன்களுமே பேசிக்கொள்ளட்டும் நிலைமை கைமீறினால் நாம உள்ளே நுழைவோம் என்று அவர் பேசாமல் நின்றிருந்தார்.

கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com