- Joined
- Sep 16, 2024
- Messages
- 751
- Reaction score
- 4,562
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 37 (நிறைவு அத்தியாயம்)
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அங்குமிங்குமாய் நடந்தவளாய் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் தாமரை.
டெல்லி மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை நரசிம்மப் பெருமாள் கோவிலில் இருந்து மாதவப் பெருமாள் கோவில் வரை ஊர்வலமாய் எடுத்து வரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாதவப் பெருமாளின் நடைத் திறக்கப்பட்டதும் பெருமாளை வணங்கியவளாய் நின்ற தாமரை, 'போன ஜென்மத்துல சாமி சிலையைத் தூக்கும் போது அவருக்கு இருந்த பலம் வேற! இப்பவும் பலமான தேகத்தோட தான் இருக்காரு. இருந்தாலும் சாமிச் சிலையைத் தலையில தூக்கிட்டு அங்கிருந்து இவ்வளோ தூரம் வரனுமே. அவர் உடம்பு தாங்குமானு கவலையா இருக்கு மாதவா? அவருக்காக நானும் விரதம் இருக்கேன். உங்களைச் சுமந்து வரக் கூடிய பலத்தை அவர் உடலுக்கு நீங்க கொடுக்கனும் மாதவா" என்று கவலையுடன் வேண்டியவளாய் கோவிலின் வாசலில் அவன் வரவை எதிர்நோக்கி நின்றிருந்தாள் தாமரை.
டெல்லி மியூசியத்தில் இருந்து சிலை வந்ததும் ராமானுஜம் இந்தச் சிலையை மீட்டெடுக்க உதவியதாகத் தாமரையையும் மாதவனையும், புதிதாய் பொறுப்பேற்று இருந்த அறநிலையத் துறை அமைச்சரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அறநிலையத் துறை அமைச்சர் இந்தச் சிலை மீட்டெடுக்க உதவிய அரசு பணியாளர்களைத் தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்த போது, இவர்கள் இருவரையும் அழைத்திருந்தார்.
அந்த விருந்தில் கலந்து கொண்ட போது அமைச்சரிடம், மாதவப் பெருமாள் சிலை தங்களின் முன்னோர் வழியிலிருந்து தங்களுக்குக் குல தெய்வமாக இருப்பதைக் கூறிய மாதவன், அப்பொழுது இவர்கள் பரம்பரையினர் சாமிச் சிலையைச் சுமந்து ஊரைச் சுற்றி ஊர்வலம் வரும் சேவையைப் புரிந்து வந்தனர் என்றும் தெரிவித்தவன், இனி வருடந்தோறும் அந்தக் கோவிலில் சிலையை மீட்டெடுத்த விழா நடத்த வேண்டும் எனவும், அந்த விழாவில் தங்களது முன்னோர்களின் சேவையை, தன்னிலிருந்து மீண்டும் தொடங்கித் தனது பரம்பரையினர் செய்வதற்குத் தாங்கள் அனுமதி வழங்கி அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றும் கோரிக்கையாய் வைத்தான் மாதவன்.
மாதவப் பெருமாள் சிலையை மாதவன் தனது தலையில் சுமந்து ஊர்வலம் வருவதைப் பற்றி அமைச்சரிடம் உரைத்ததைக் கேட்டதும் இவளுக்கு உள்ளுக்குள் கிலிப் பிடித்தது. இதென்ன சாதாரணக் காரியமா! அப்பொழுது அவனுக்கு இருந்த உடல் பலம் என்ன? இப்பொழுதும் அப்படியே செய்ய முடியுமா! என்றெல்லாம் அப்பொழுதே கவலைக் கொண்டவளாய் மாதவனைத் தனியாய் அழைத்துத் தனக்கு இதில் சம்மதம் இல்லை என்று தெரிவித்தாள். ஆனால் பேசி பேசியே அவளைச் சம்மதிக்க வைத்திருந்தான் மாதவன்.
மாதவனின் கோரிக்கையை ஏற்று அடுத்து வந்த நாளில் அமைச்சரும் அவ்வாறே அறிவிக்க, அந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாய் நடக்கத் தொடங்கியதும், மாதவப் பெருமாளிடம் இவனுக்கெனவே கோரிக்கை வைத்து விரதமிருக்கத் தொடங்கினாள் தாமரை.
சோர்வும் களைப்புமாய் நரசிம்மப் பெருமாள் கோவிலிலிருந்து மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை மாதவன் தலையில் சுமந்து வருவான் என்று எண்ணியவளாய் அவனுக்குக் குடிக்க நீர், குளுகோஸ், பழச்சாறு எல்லாம் தயாராய் எடுத்து வைத்து அவனுக்காகப் பதட்டத்துடன் அவள் காத்திருக்க, தூரமாய்க் கேட்ட செண்டை மேளச் சத்தத்தில் அவன் இக்கோவில் அருகே வருவதை உணர்ந்து தெருவை நோக்கி அவசர நடையுடன் சென்றவள், அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து வியப்புற்று நின்றாள்.
தலையில் தலைப்பாகைக் கட்டி, கைகளில் வெள்ளி காப்புகளும், கால்களில் தண்டையும் அணிந்து, உடல் முழுவதும் சந்தனமும் சவ்வாதும் பூசியவனாய், வேஷ்டியை கருப்பண்ணன் போலவே உடுத்தி, செண்டை மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப நிலம் அதிர கால்களை வேக வேகமாய்த் தூக்கி வைத்து ஆவேசமாய் ஆடியவாறு கோதையின் கருப்பண்ணனாய் தனக்குக் காட்சிக் கொடுத்து வந்தவனைப் பார்த்துப் மெய்சிலிர்த்துப் போனது தாமரைக்கு. அங்கமெங்கும் புல்லரித்துப் போக தெய்வீக உணர்வைப் பெற்றவளாய், இதயத்துடிப்பு மத்தளமாய்ப் பன்மடங்காக ஒலித்து எகிற கண்களில் நெகிழ்வான கண்ணீருடன் பேச்சற்று நின்றிருந்தாள் தாமரை. 'கருப்பா' என்று உதடுகள் உச்சரிக்க, தன்னிச்சையாய் அவளின் கைகள் எழுந்து அவனைக் கும்பிட்டன. அத்தனை அற்புதமான இறையருளை அவனிடம் உணர்ந்தாள்.
தாமரையைக் கடந்து சென்ற போது, அவளைப் பார்த்து தெய்வீகமாய்ச் சிரித்தவாறு கையை நீட்டி அருகே அழைத்தவன், அவள் கைப் பற்றியவனாய், "எம் மாதவனைத் திரும்பவும் சுமக்கிற பாக்கியத்தை எனக்குக் கொடுத்த உனக்கு, சீக்கிரம் உம் பிள்ளையைச் சுமக்கிற பாக்கியம் கிடைக்கும் தாயி" நெகிழ்வான குரலில் உரைத்தவனாய் அவளின் நெற்றியில் திருநீரிட்டு, ஏய்ய்ய் என்று அந்த இடமே அதிர கத்தியவனாய் ஆடியவாறு முன்னேறிச் சென்றிருந்தான் கருப்பண்ணனாகிய மாதவன்.
அவனின் திடீரென்ற சத்தத்தில் உடல் நடுங்கி அடங்க, நெஞ்சம் வெடித்து விடும் போன்ற அதீத ஆனந்தத்தில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் உறைந்து போய், செல்லும் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் தாமரை.
கோவிலுக்குள் சென்று மாதவப் பெருமாளை இறக்கி வைத்து விட்டு வணங்கி எழுந்தவனாய் ஓரமாய்ச் சென்று அமர்ந்து விட்டான் மாதவன்.
சுவற்றில் சாய்ந்து கண்களை மூடியவாறு அமர்ந்தவனின் உடலில் இறையாட்டத்தின் அதிர்வு இன்னும் மிச்சமிருக்க, தன்னையும் தன் மனத்தையும் நிலைப்படுத்தியவனாய் ஆழ்ந்த தியானத்திற்குள் செல்ல முனைந்த போது, யாரோ தொடும் உணர்வில் கண் திறந்து பார்த்தான்.
கண்களில் தேங்கி நின்ற கண்ணீருடன் தன்னைப் பார்த்திருக்கும் மனைவியைப் பார்த்தவன், "என்னடா பயந்துட்டியா?" என்றவனாய் அவளின் கையைப் பற்றப் போக, அப்படியே அவன் முன் மண்டியிட்டு விழுந்து வணங்கினாள் தாமரை.
"ஹே தாமரை! என்ன செய்ற?" என்றவனாய் அவளை எழுப்பி அமர வைத்தான் மாதவன்.
"உங்களுக்குள்ள நம்ம கருப்பண்ணசாமி வந்து, அவர் தான் மாதவப் பெருமாளைத் தூக்கிட்டு வந்தாரு" என்றவளாய் நடந்ததை உரைக்க, இவனுக்கு அப்படி எல்லாம் நடந்த நினைவே இல்லை.
"நிஜமா இதெல்லாம் நடந்துச்சா தாமரை? எனக்கு நான் ஆடினேன்னு ஞாபகம் இருக்கு. ஆனா உன்கிட்ட இப்படிச் சொன்னது ஞாபகம் இல்லை" என்றான்.
அந்நேரம் மாதவப் பெருமாளைத் தரிசித்து விட்டு அவர்களின் அருகே வந்து அமர்ந்தனர் சக்தீஸ்வரனும் இளவஞ்சியும்.
"என்ன ஒரு தெய்வீக ஆட்டம்! பார்க்க கண் கோடி வேண்டும்னு சொல்வாங்களே அப்படி இருந்துச்சு மாதவா" நெகிழ்ந்த குரலில் சக்தீஸ்வரன் உரைக்க, தலையசைத்து ஆமோதித்திருந்தாள் இளவஞ்சி.
"எல்லாம் மாதவப் பெருமாள் அனுகிரகம் தான். தூக்கும் போது எனக்குமே பயமா தான் இருந்துச்சு. ஆனா எப்படியோ வந்து சேர்ந்துட்டேன்" என்று சிரித்தான் மாதவன்.
இப்பொழுது அவனின் சிரிப்பை எப்பொழுதும் தான் ரசிக்கும் ரசனைப் பாவனையுடன் பார்த்தவளின் மனமோ, அப்பொழுது கருப்பனாய் வாக்கு கொடுக்கும் போது இருந்த அந்தத் தெய்வீகப் புன்னகையையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்க, 'அப்ப வேற மாதிரி இருந்துச்சே இந்தச் சிரிப்பு' என்று மனத்தோடு கூறிக் கொண்டாள்.
கருப்பண்ணசாமியாய் மாதவன் தன்னிடம் உரைத்ததைச் சக்தீஸ்வரனிடமும் இளவஞ்சியிடமும் மகிழ்வுடன் தாமரை உரைத்திருக்க, "அப்படியான ஒரு நல்ல செய்தியை இன்னிக்கு காலைல தான் நாங்க கேட்டுட்டு வந்தோம். ஆமா நானும் தங்கப்பொண்ணும் அப்பா அம்மா ஆகப் போறோம்" மகிழ்வான குரலில் உரைத்திருந்தான் சக்தீஸ்வரன்.
"வாவ் அரசி மா! சக்தி அண்ணா! கங்கிராட்ஸ்" தனது மகிழ்வைக் குரலில் தேக்கி வாழ்த்திய தாமரை, சக்தீஸ்வரனின் தங்கப்பொண்ணு என்ற அழைப்பில் வெளிப்பட்ட காதலை உவகைப் பொங்கப் பார்த்தவளாய், "அரசிமா உங்களைத் தங்கப் பொண்ணுனு தான் கூப்பிடுவாரா அண்ணா" கண்கள் மின்ன கேட்டிருந்தாள்.
சங்கோஜத்துடன் நெளிந்தவளாய் மென்னகையுடன் ஆமென இளவஞ்சி தலையசைக்க, "என் புருஷனும் இருக்காரே! தாமரையைத் தாண்டி ஒரு வார்த்தை செல்லமா வாயில வராது அரசிமா" என்றவளாய் மாதவனாய் பார்த்து இதழை சுழித்தாள் தாமரை.
"அடிப்பாவி" என்று மாதவன் அவளை முறைக்க, "உண்மையைச் சொன்னா ஏன் முறைக்கிறீங்க! சரியான கோவக்கார கருப்பண்ணசாமி தான்க்கா அவரு. கோபத்தை மட்டும் உடனே காட்டத் தெரியும். பாசத்தை மனசுக்குள்ள ஒளிச்சு வச்சிப்பாரு! முறைப்பைப் பாரு! வெவ்வவவே" என்று ஒழுங்குக் காட்டியவளாய் மாதவனை வம்பிழுத்தவளைப் பார்த்து சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் வாய்விட்டுச் சிரித்திருந்தனர்.
'வீட்டுக்கு வாடி இருக்கு உனக்கு' என்று வாயசைத்தவனாய்ச் சிரித்திருந்த மாதவனும் அவர்களை நோக்கி வாழ்த்துக் கூற, "எங்க குழந்தைப் பிறக்கிறதுக்கு முன்னாடி, நீங்களும் உங்க குழந்தையை வெளியே கொண்டு வரத் தயாராக இருக்கனும். நம்மளை மாதிரியே நம்ம பிள்ளைகளையும் அடுத்தடுத்து தலைமுறையா இந்தக் கோவிலுக்குச் சேவைச் செய்றவங்களா வளர்க்கனும்! அதுக்கு மாதவப் பெருமாளும் எம்பெருமான் ஈசனும் அருள்புரியனும்" மூலஸ்தானத்தை நோக்கி கைகளை நோக்கிக் கூப்பியவளாய் இளவஞ்சி கூற,
"அரசிமா நானும் இப்படித் தான் யோசிச்சு ஒரு ஐடியா பிளான் பண்ணேன். இப்ப இங்கே நடக்க இருக்கிற கவுன்சிலர் எலெக்ஷன்ல சக்தி அண்ணாவை நிக்க வைப்போம். இந்த ஊருல நாம ஏதாவது ஒரு அரசு பதவில இருந்தா மட்டும் தான் இங்கே நம்ம பொறுப்புல கோவில்களையும் அங்குள்ள சாமிகளையும் கொண்டு வந்து நம்மளால காப்பாத்த முடியும். இப்ப நான் ஒரு அரசு பொறுப்புல இருக்கனால தானே என் புருஷனை என்னால இப்படி அவரோட பரம்பரை வேலையைச் செய்ய வைக்க முடிஞ்சிது. அந்த மாதிரி நீங்களும் என் புருஷனும் இங்கே ஏதாவது அரசியல் பதவில இருக்கனும் அண்ணா" தீவிரமாய் உரைத்திருந்தாள் தாமரை.
இதைக் கேட்டதும் சக்தீஸ்வரன், "நானும் இதைத் தான் யோசிச்சேன் தாமரை. இந்தத் தடவை கண்டிப்பாக நான் நிக்கிறேன். நான் இந்தத் தடவை செலக்ட் ஆகிட்டேன்னா அடுத்தத் தடவை மாதவனை நிக்க வைப்போம். ஒரு நேரம் மாதவனும் அடுத்த நேரம் நான்னு இரண்டு பேரும் மாத்தி மாத்தி இங்கே பதவில இருக்கும் போது கோவில் சம்பந்தப்பட்டமான எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிக்கிட்டு பாதுகாக்க முடியும். நம்மளை ஜெயிக்க வைக்க வேண்டியது இறைவனோட பொறுப்பு" என்று உரைத்த நொடி, கோவில் மணியோசை டிங் டிங்கென அடிக்க, "சிவ சிவா" என்று சொன்ன இளவஞ்சி, "நாம பேசுறது சரி தான்னு இறைவனே நம்மளுக்கு உத்தரவுக் கொடுக்கிறாங்கப்பா" சக்தீஸ்வரனைப் பார்த்து மென்னகையுடன் உரைத்திருந்தாள்.
நால்வரும் எழுந்து மாதவப் பெருமாளைத் தரிசித்து அருளாசிப் பெற்றனர்.
அடுத்து வந்த மாதங்களில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிப் பெற்று சக்தீஸ்வரன் பதவி ஏற்றிருந்தான்.
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் சென்னையில் இருக்க, இங்கே சக்தீஸ்வரனின் பொறுப்பைக் கவனித்துக் கொண்டான் மாதவன். வாரத்திற்கு ஒரு முறை வந்து போனான் சக்தீஸ்வரன்.
இப்படியே நாள்கள் சென்று கொண்டிருக்கையில் இளவஞ்சியின் வளைகாப்பு விழாவிற்காகச் சென்னை நோக்கிக் கிளம்பிய பயணத்தில் தாமரைக்கு ஏற்பட்ட வாந்தி மயக்கத்தையும் உடல் சோர்வையும் கண்டு, அவள் உடலைப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் மாதவன்.
வெளியே பதட்டத்துடன் காத்திருந்தவனை உள்ளே அழைத்த மருத்துவர், "வாழ்த்துகள் மாதவன்! நீங்க அப்பாவாகப் போறீங்க" என்று மாதவனையும் தாமரையையும் பார்த்துச் சிரித்தவாறு உரைத்திருந்தார்.
கன்னத்தில் குழிவிழச் சிரித்தவனாய் கண்கள் மின்ன தன்னவளைப் பார்த்தவன், அவளின் உச்சந்தலையில் கை வைத்து ஆட்டியவனாய், "தேங்க்யூடா" என்றவன் அவளை ஒரு பக்கமாய் அணைத்து விடுவித்து, மருத்துவரைப் பார்த்து, "தேங்க் யூ டாக்டர்" என்றான்.
அதன் பிறகு சில நிமிடங்கள் அவளது உடல்நிலைக் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து கொண்டவன், அங்கிருந்து கிளம்பி மகிழுந்தில் ஏறிய நொடி அவளை இறுக அணைத்திருந்தான். அவளின் தோளில் தாடையைப் பதித்திருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி அவளின் தோளைத் தாண்டி முதுகை நனைக்க, அப்பொழுது தான் அவன் அழுவதை உணர்ந்தவள், அவனது முகத்தை நிமிர்த்தித் தன்னைக் காணச் செய்தவளாய், "என்னப்பா என்னாச்சு?" எனக் கேட்டாள். அவனது கண்ணீரைக் கண்ட நொடி, இவளது கண்களும் கலங்கிப் போயின.
"தேங்க்யூ டா" என்றான் மீண்டும்.
அவன் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு அவள் பார்த்ததேயில்லை.
அவனது நன்றியில் கோபமுற்றவளாய் அவனை முறைத்தவள், "எதுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டாள்.
கண்ணீரைத் துடைத்தவாறு மூக்கை உறிஞ்சியவனாய், "என்னோட அப்பா அம்மா போன பிறகு, எனக்குனு இந்த உலகத்துல யாருமில்லாம அனாதையா தான் செத்து போவேனோனு" குரல் தழுதழுக்க அவன் சொல்லி முடிப்பதற்குள், பதறி அவன் வாயை அவள் மூட, அவளின் கையைத் தனது வாயிலிருந்து எடுத்தவனாய், "நட்ட நடு ராத்திரில தூக்கம் வராம அப்படிப் பல தடவை நினைச்சி அழுதிருக்கேன் தாமரை. என் அம்மா அப்பாக்கு கூட அது தெரியாது. மெச்சூரிட்டி இல்லாத வயசுல காதல்ன்ற பேருல கல்யாணம் செஞ்சிட்டு என் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேனேனு பல நாள் வருந்தியிருக்கேன். இரண்டாவதாக நடக்கிற கல்யாணம் நல்லதா அமையனும்னு அவ்ளோ பயந்திருக்கேன். நான் பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி வரமா கடவுள் உன்னை என்கிட்ட கொடுத்துட்டாருனு நிறைய நேரம் தோணிருக்கு. என் வாழ்க்கையை நீ முழுமையாக்கிட்ட தாமரை" என்றவனாய் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன்,
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
என்று சத்தமாய்ப் பாட, நெகிழ்வுடன் வாய்விட்டுச் சிரித்தவளாய் அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், "ஏன் பொண்ணு வேண்டாமா உங்களுக்கு?" எனக் கேட்டாள்.
"பொண்ணு பொறந்தா வா வா என் தேவதையேனு பாடுவேன்" என்று அவன் கண்சிமிட்ட,
"ஓஹோ அப்ப நான்லாம் உங்க கண்ணுக்குத் தேவதையா தெரியலையோ? பொண்ணு பிறந்ததும் தேவதைனு கொண்டாடுவாராமே! அப்ப நமக்குப் பையனே பொறக்கட்டும், பொண்ணு வேண்டாம்" என்றவாறு அவள் உதட்டை சுழிக்க, சுழித்த உதட்டைப் பிடித்துத் திருகியவனாய், "அடியேய் ராங்கி ராக்காயி! பெத்த பொண்ணுக்கிட்ட போய்ப் போட்டி போடுவியாடி" எனக் கேட்டுச் சிரித்தான்.
அவனை அணைத்தவளாய் மார்பில் சாய்ந்தவள், "உங்களுக்காக யார்க்கிட்டனாலும் சண்டைப் போடுவேன். யூ ஆர் ஒன்லி மைன்" என்று கண் சிமிட்டிச் சிரித்தாள்.
அவளின் உச்சந்தலையில் கை வைத்து ஆட்டியவனாய், "காதல் ராட்சசிடி நீ" என்று சிரித்திருந்தான் அவன்.
அன்று இந்த நற்செய்தியைக் கேட்டு மாதவனின் குடும்பத்தினரும் தாமரையின் அன்னையும் அவளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தாமரையைக் கவனித்துக் கொள்ளவெனத் தாமரையின் அன்னை விமலாவும் ஆத்மநல்லூருக்கு வந்து இவர்களுடன் தங்கிக் கொண்டார்.
ஆத்மநல்லூரிலேயே தங்களுக்கெனச் சொந்த வீட்டைக் கட்டத் தொடங்கினான் மாதவன்.
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் மகளை ஈன்றெடுத்த அடுத்தச் சில மாதங்களில் மாதவனும் தாமரையும் மகனை ஈன்றெடுத்திருந்தனர்.
மருத்துவமனையில் பிள்ளையைப் பெற்ற வலியும் களைப்புமாய்க் கண்விழித்தவளிடம் கையில் இருந்த மகனை அவன் காண்பிக்க, அத்தனை வலியிலும் சோர்விலும், "நல்ல வேளை பொண்ணு பொறக்கலை" என்று தாமரை நாக்கைத் துருத்திக் கொண்டு கேலியாய் கூறியதைக் கேட்டு, "அடுத்தக் குழந்தை பொண்ணு தான் வேணும்னு மாதவப் பெருமாள்கிட்ட கோரிக்கை வச்சிடுறேன்" என்று அவளை வம்பிழுத்து அவளின் முறைப்பைப் பெற்று அவளிடம் அடியை வாங்கியவனாய்ச் சிரித்திருந்தான் மாதவன்.
மாதவன் தாமரை இருவரும் தங்களின் மகனுக்கு முகுந்தன் என்று பெயரிட, சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் ஈசனிடம் வேண்டிக்கொண்டு சிவகாமசுந்தரி என்று அவர்களது மகளுக்குப் பெயரிட்டிருந்தனர்.
சக்தீஸ்வரன் குடும்பத்தினரும் மாதவன் குடும்பத்தினரும் அவ்வூரின் கோவிலின் காவலர்களாய் தங்களது பணியைச் செவ்வனே செய்திருந்தனர்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
கருப்பண்ணனின் ஆசானின் மணிமண்டபத்தில் மாதவனின் கரத்தினைப் பற்றியவளாய் தியானத்தில் இருந்த தாமரை, கண்களைத் திறந்தவளாய், "கோதை வாழ்க்கைல அப்புறம் என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்க எவ்ளோ முயற்சி செஞ்சாலும் ஏன் தெரிய மாட்டேங்குது கண்ணா" என்று வருத்தத்துடன் கேட்டிருந்தாள் தாமரை.
"நாம தெரிஞ்சிக்க வேண்டியதா இருந்திருந்தா காண்பிச்சிருப்பாங்களே தாமரை" என்றான் மாதவன்.
அடுத்த வந்த நாள்களில் மாதவனின் பேச்சை மீறி இக்கேள்விக்கான விடையை நோக்கி தியானத்தில் அன்றாடம் அமர்ந்தவள் ஒரு நாள் கண்ட காட்சியில் பதறி எழுந்தாள்.
அன்றிரவு மாதவனை அணைத்து அழுதவளாய், "என்ன நடந்தாலும் நம்ம மாதவப் பெருமாளை விட்டுடக் கூடாது கண்ணா" என்று கூறியவளைக் கேள்வியுடன் அவன் பார்க்க, "சும்மா சொல்லனும் தோணுச்சு!" என்றவளாய் விலகியவளைத் தன்னோடு அணைத்து, "நாம இரண்டு பேரும் சேர்ந்து மாதவப் பெருமாளைப் பாதுகாப்போம். நம்ம ஆசான் அதுக்குத் துணையா இருப்பாரு" என்றான்.
பூரண ஆயுளுடன் இனி வரும் காலங்களிலும் இறைவனுக்கான தங்களின் கடமையைச் செவ்வனே செய்யெட்டும் இவர்களென வாழ்த்தி விடைப்பெறுவோம் நாமும்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
நர்மதா சுப்ரமணியம்
Previous thread