• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
104
Reaction score
101
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 21

நறுமுகை, 'எல்லாரும் எதுக்கு நம்ம ரெண்டு பேரையும் மட்டும் தனியா விட்டுட்டுப் போறாங்க?' என்று உள்ளுக்குள் படபடத்துப் போனாள். அந்தத் தனிமை அவளுக்குள் ஒருவித நடுக்கத்தைத் தர, "நாமும் வெளியே போவோம் டாக்டர் சார்..." என்று அவசர அவசரமாகக் கிளம்பப் பார்த்தாள்.

ஆனால் சகாயனோ, இப்போது பணப் பிரச்சனைகளையெல்லாம் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்தவுடன், தன் புதுமனைவி நறுமுகையை லேசாக வம்புக்கு இழுத்துச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது. அவன் அங்கிருந்து அசையாமல், காலையில் அவசர அவசரமாக அவள் கழுத்தில் தான் கட்டிய அந்த மங்கல நாணைக் கூர்ந்து உற்றுப் பார்த்தான்.

"இது... நான் உன் புருஷன்னு சத்தமில்லாம சொல்லுது. ஆனா நீ என்னடான்னா, இன்னும் என்னை டாக்டர் சார்... டாக்டர் சார்னு கூப்பிட்டுட்டு இருக்காய்?" என்று லேசான குறும்போடு அவளது பாதையை மறித்துக் கேட்டான்.

அவனது அந்தத் திடீர் நெருக்கத்தில் தடுமாறிய நறுமுகை, "நான்... நான் பழகிக்கிறேன்" என்று திக்கித் திணறிச் சொன்னாள்.

"என்னையா? அதான் இன்னைக்கு ராத்திரி நல்லா பழகிக்கலாமே…” என்றவன் சிறு இடைவெளிவிட்டு, “உன் அக்காவோட புருசனை மட்டும் அத்தான்... அத்தான்னு அத்தனை அன்பாகக் கூப்பிடுறாய் தானே? உண்மையில் நான் தானே அந்த அத்தான் என்ற சொல்லுக்கு முழுத் தகுதியானவன்?" என்று அவளது விழிகளை நேருக்கு நேராக நோக்கித் தன் உரிமையைக் உணர்த்தினான் சகாயன்.

தன் முன்னே நின்று கொண்டு வெட்கமே இல்லாமல் பேசும் தன் புருஷனைப் பார்த்து நறுமுகை லேசாக முறைத்தாள். அவளது அந்தச் செல்ல முறைப்பைக் கண்டு சகாயன் இன்னும் கொஞ்சம் அவளருகே நெருங்கி வந்தான்.

"அப்புறம்... நானும் ரிதன்யாவும் ரொம்ப நெருங்கிப் பழகியிருப்போம்னு மேடத்துக்கு உள்ளுக்குள் ஒரு பயம் போல! நான் அவ கையைப் பிடிச்சு நடந்திருக்கேன்... அவ கையை என் கைக்குள்ள வச்சுப் பொத்தி வச்சிருக்கேன். மணிக்கணக்கா போன் பேசியிருக்கேன். கடைக்கு அவளைப் பல தடவை கூட்டிக் கொண்டு போயிருந்தாலும் தேர்வு அவளோடது தான். நான் காசு கொடுப்பேன். இல்லை அவளே தன் காசைக் கொடுத்து வேண்டுவாள்.அவ்வளவுதான்! அதுக்கு மேலே எங்க ரெண்டு பேருக்குள்ள வேற ஒன்னும் நடக்கல..." என்று அவள் கேட்காமல் விட்டாலும் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லி அவளது சந்தேகத்தைத் தீர்த்தான்.

அவள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், அவளது காதோரம் குனிந்து, "ஆனா... இன்னைக்கு இரவு நமக்குள்ள எந்தத் தடையும் இல்லாமல் எல்லாமே நடக்கும். அதுக்கும் கொஞ்சம் மனசளவில் தயாராகிக்கோ!" என்று அத்தனை அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவளது சிவந்த முகத்தைக் கண்டு ரசனையோடு புன்னகைத்தான்.

"என்ன பேசுறீங்க? இங்கே எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு!" என்று போலிக் கோபத்தோடு நறுமுகை தன் புதுக் கணவனை அதட்டினாள்.

"இப்படி ஒரு நாள்கூட நான் அந்த ரிதன்யாவோட அந்தரங்கமாகப் பேசினது இல்லை நறுமுகை... உனக்குத் தாலி கட்டினப் பிறகுதான் எனக்குள்ள இப்படி ஒரு உரிமையே வருதுடி. பார்... உன்னை 'டி'ன்னு கூப்பிடுறது கூட எனக்குச் சட்டென்று வந்து விழுது. நான் ரிதன்யா வேணாம் என்று முடிவெடுத்த பின், அவளை ஒரு நாள்கூட நினைச்சுப் பார்த்தது இல்லை. ஆனால், நீ என்னை இந்தக் கொஞ்ச நாளிலேயே மொத்தமாக மயக்கிட்டியேடி... எப்படிடி?" என்று அவளையே நேசத்துடன் கேள்வி கேட்டான்.

நறுமுகை மூன்று மாதத்திற்கும் மேலாக அவனுடைய பேச்சுப் பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருக்கிறாள். அப்போதெல்லாம் அவனது பேச்சில் அத்தனை கண்ணியமும் ஒரு மரியாதையும் இருக்கும். ஒரு டாக்டராக மட்டுமே அவளை நடத்தினான். ஆனால், இப்பொழுது பார்த்தால் பேச்சு 'நீ, வா, போ' என்று ஒருமைக்குத் தாவியது போதாது என்று, 'டி' வேறு அத்தனை உரிமையாகப் போடுகிறான்!

‘தன் கணவனுக்கு இப்படியெல்லாம் கூடப் பேசத் தெரியுமா?’ என்பது போல, விழிகளை அகற்ற முடியாமல் அவனையே ஆச்சரியமாகப் பார்த்தாள் நறுமுகை.

அவளது அந்த விழிப்பார்வை அவனை மொத்தமாகச் சாய்க்க, "நான் உனக்குச் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று தாலி கட்டினாலும், என் மேல துளிகூடக் கோபத்தைக் காட்டாமல் உன்னால் எப்படிடி இருக்க முடியுது?" என்று உருகிப்போன குரலில் கேட்டான்.

சகாயனைத் தனக்கு ஏன் இப்படிப் பிடித்தது? அவனின் குரல், தனக்குப் பிடித்த ஆர்.ஜே. மித்ரனை நினைவுபடுத்துவதால்தான் அவனின் மீது தனக்குக் கொஞ்சம் கூடக் கோபம் வரவில்லையா என உள்ளுக்குள் சிந்தித்தபடியே, "எனக்கும் தெரியலையே..." என்று சகாயனிடம் மெதுவாகச் சொன்னாள் நறுமுகை.

"நான் உனக்கு ஓகேவாடி?" என்று தன் குரல் லேசாக நடுங்கக் கேட்டான் சகாயன்.

"இதை தாலி கட்டுறதுக்கு முதல்ல கேட்டிருக்கணும்... தாலியைக் கட்டிட்டு இப்போ வந்து கேட்டால் என்ன அர்த்தம்?" என்று அவள் பொய்யாக முறைத்தபடியே கேலியாகக் கேட்டாள்.

"நான் அப்பவே கேட்டிருந்தால், எங்கே நீ வேணாம்னு சொல்லி என்ன நிராகரிச்சிடுவியோன்னு பயந்துட்டேன்..." என்று அவன் வார்த்தைகளை இழுக்க, "நான் முதல்லயே ஓகே சொன்னேன்தானே?" என்று நறுமுகை திருப்பிக் கேட்டாள்.

"அது சும்மா ஒரு பேச்சுக்குக் கதைச்சதுடி... நீயும் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று நினைச்சிருக்கமாட்டாய், நானும் நினைக்கலை. ரிதன்யா அன்னைக்கு ரெஸ்டாரண்டில் அப்படிப் பேசின பிறகு, எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்திடணும்னுதான் யோசித்தேன். ஆனா, என் கல்யாணம் நடக்காட்டி அம்மாவும் அப்பாவும் ரொம்பக் கவலைப்படுவாங்க... அதுதான் குறிச்ச தேதியில, உன்னைக் கேட்காமலேயே அவசரமாத் தாலி கட்டிட்டேண்டி... ஸாரிடி" என்று உண்மையான வருத்தத்தோடு அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.

தொடர்ந்து அவனே, "இப்போ இந்தப் பணப்பிரச்சனை வேற வந்து நிக்குது... அப்பா நான் பார்த்துக்குறேன்னு சொன்ன பின் பெருசா எனக்குக் கலக்கம் இல்லை என்றாலும், அந்தப் பிரச்சனையை முழுசா முடிச்சிட்டு உன் கூட நிம்மதியா, சந்தோஷமாக வாழனும்டி" என்றான் ஏக்கத்துடன்.

அவன் சொன்னதைக் கேட்கும்போது நறுமுகையின் நெஞ்சம் நெகிழ்ந்தது. உண்மையில், அன்று ரிதன்யாவின் அந்த பேச்சைக் கேட்டபின், நறுமுகையே உள்ளுக்குள் அப்படித்தான் எண்ணியிருந்தாள். சகாயன் நிச்சயம் ஏதேனும் செய்து இந்தத் திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிடுவான் என்றுதான் அவளும் எதிர்பார்த்திருந்தாள்.

அப்படியிருக்க, ரிதன்யாவோடு நடக்கவிருந்த அந்தத் திருமணம் நின்றதிலோ... அல்லது யாரும் எதிர்பாராத விதமாகத் தன்னை இந்த இடத்தின் திடீர் மணப்பெண் ஆக்கியதிலோ அவளுக்குள் ஆரம்பத்திலிருந்தே பெரிதாக எந்த மறுப்புகளும் இருக்கவில்லை. அவளது மனமும் எங்கோ ஒரு மூலையில் இந்த மாற்றத்திற்குத் தயாராகத்தான் இருந்திருந்தது.

இருந்தாலும், அவளுக்குள் இன்னும் ஒரே ஒரு சின்ன சந்தேகம் மட்டும் மிச்சமிருந்தது. சகாயன் தன் கடந்த கால நிலையை அவளாகக் கேட்காமலேயே இவ்வளவு தூரம் விளக்கிய பின்பும், அவளது பெண் மனதிற்குள் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

அவனை நேராக நிமிர்ந்து பார்த்தவள், "ரிதன்யாவைப் பிரிஞ்சதால் நீங்க மனசளவில் கொஞ்சம் கூட ஃபீல் பண்ணலையா?" என்று அவ்வளவு நேரமும் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை ஒருவழியாக அவனிடமே கேட்டுவிட்டாள் நறுமுகை.

"சில ஆட்கள் நாம ஃபீல் பண்ணக் கூடத் தகுதியில்லாதவங்கடி... நாமதான் தேவையில்லாமல் அவங்க மேல அன்பை வச்சுட்டு அப்புறம் கஷ்டத்தை அனுபவிக்கிறோம். அப்படிக் கஷ்டத்தை நான் இனிமேலும் அனுபவிக்க விரும்பலை. என்னை முழுதாக உன்கிட்ட ஒப்படைக்கணும் இல்லையா? அதுதான் நான் அவளைத் திட்டுறதுக்குக் கூட இப்போ நினைப்பதே இல்லை... அவளைப் பற்றிய நினைப்பே வரக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருக்கேன்" என்றான் உறுதியாக.

அவனது அந்த பேச்சைக் கண்டு, மனதிற்குள் சகாயனைப் பெரிதும் மெச்சத் தோன்றியது நறுமுகைக்கு.

எல்லோர் காதலும் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லையே... அதுவும் ரிதன்யாவுடனான அவனது காதல் தோல்வி அடைந்ததினால்தான், இன்று தன் வாழ்க்கையே இப்படி ஒரு அழகான பாதையை நோக்கித் திரும்பியிருக்கிறதோ என்று அவளுக்குத் தோன்றியது.

தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே நடராஜனும், ஆனந்தியும் கூட, "மகன் சூழ்நிலை கைதியாகச் செய்த தப்புக்காக எங்களை மன்னிச்சுக்கோ.." என்று தழுதழுத்த குரலில் அவளிடம் வார்த்தைகள் பல சொல்லி மன்னிப்புக் கேட்டது இப்போது அவளது நினைவுக்கு வந்தது. அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்த நிம்மதியையும், இப்போது நறுமுகையுடனான இந்தத் திருமணத்தின் மூலம் அந்தக் குடும்பத்தில் மலர்ந்திருக்கும் உண்மையான மகிழ்ச்சியையும் அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவனோடு இப்படி மனம் விட்டுப் பேசியதால், அதுவரை நறுமுகையின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அவளது மனம் லேசானது போல் இருந்தது.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom