• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Writer✍️
Joined
Sep 18, 2024
Messages
373
Reaction score
570
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

அத்தியாயம் 9

லைக்,கமண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி
po-ok new.webp

சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம் அது. திங்கட்கிழமை வார சந்தைக்கு பேர் போன ஊரும் கூட தான்.ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு பத்து மணி வரை நடக்கும் அந்த வார சந்தை.


அந்தச் சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை. சுற்றி இருக்கும் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் காட்டில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து கூறு கட்டி விற்பார்கள்.


அப்படித்தான் சண்முகமும் தன் பத்து ஏக்கர் நிலத்தில் விளைந்த சில காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வார். அவருக்கு.அவரிடம் சிறிய ரக மோட்டார் வண்டி இருக்கிறது.அத்துடன் வீட்டில் சேர்ந்த ஒரு சிறிய மளிகைக் கடையும் நடத்துகிறார். அந்த ஊரில் சண்முகத்தின் மளிகைக் கடை என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை.


பிரதான தெருவின் அருகே உள்ளது அவர்களின் பெரிய தோட்டம்.அந்த தோட்டத்தின் முன்பக்கம் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஓட்டு வீடு அமைந்துள்ளது.வீட்டில் ஒரு பக்க சுவரை தனியாக பிரித்து கட்டி கடைக்கு வேண்டிய வசதிகளை செய்து கொண்டார் சண்முகம் .


தந்தை சந்தைக்கு கிளம்புவது தெரிந்ததும் ஓடி வந்து வண்டியின் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டாள் பத்து வயது சிறுமி அன்னக்கொடி. மாலை சந்தையில் பொருட்களை கூவி கூவி விற்பதை காண்பதற்கு அத்தனை ஆனந்தம் அவளுக்கு.



சண்முகம் சந்தைக்குக் கிளம்புவதை கண்டு பக்கத்து தோட்டங்களில் இருப்பவர்கள் சில பொருட்களை கொண்டு வந்து போய் கொடுத்தார்கள்.சண்முகமும் அவற்றை விற்றுவிட்டு அதற்கான பணத்தைக் கொண்டு வந்து உரியவர்களிடம் சேர்த்துவிடுவார்.

சண்முகத்தின் இந்த நேர்மை தான் அயலவர்கள் எல்லோருக்கும் பிடிக்க காரணம் என்பது தான் உண்மை.


அன்னக்கொடி திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் கடகடவென்று சாப்பாட்டை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு தந்தையுடன் தான் சுற்றிக் கொண்டிருப்பாள். எப்போது சந்தைக்கு போவது என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு.


அவளுக்கு மாறாக பூங்கொடி தாயுடன் போய் கடையில் உட்கார்ந்து கொள்வாள்.அவள் இப்போது பதினொன்றாம் வகுப்பு போகிறாள். அக்காவும் தங்கையும் பள்ளிக்கு வேனில் போய் வந்து விடுவார்கள். வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்து போய் மெயின் ரோட்டில் காத்திருந்து பள்ளி வேனில் ஏற்றி விட்டு வருவார் தேனாம்பாள்.


தந்தையுடன் சந்தைக்கு வந்து சேர்ந்தால் அன்னக்கொடி.விற்பனைக்கு கொண்டு போன தண்டு கீரை ,அவரைக்காய்,தேங்காய், கத்தரிக்காய்,வாழைப்பழம், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் என்று எல்லாவற்றையும் பெரிய கோணிப்பையை விரித்து கூறுகளாக அடுக்கினார் சண்முகம். தந்தையுடன் சேர்ந்து மகளும் அழகாக அடுக்க உதவி செய்தாள்.
ve.webp


இதற்கு தான் மகளை தன்னுடன் கூட்டி வருவார் சண்முகம்.கொண்டு வந்த பொருட்களை தனித்தனியாக வகை பிரித்து அழகாக அடுக்கி வைப்பது அன்னக் கொடிக்கு கை வந்த கலை.இந்த சின்ன வயதில் எத்தனை நேர்த்தியாக வேலை பார்க்கிறாள் மகள் என்று பெற்றவருக்கு பெருமை பிடிபடவில்லை.

கொண்டு வந்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு போவதுதான் வழக்கம்.


சந்தையில் விற்கும் பூக்களை ஆசையுடன் தடவி பார்க்கும் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார் சண்முகம்.பூக்கள் என்றால் அத்தனை பிரியம் அவளுக்கு.மல்லிகை, ரோஜா, சம்பங்கி என்று அன்னக்கொடி பையில் அள்ளிப் போடும் பூக்களுக்கு எல்லாம் காசை கொடுத்து கொண்டு வந்தார் சண்முகம்.


அப்படி ஒரு நாள் சந்தைக்கு போய் வரும் போது காலியாக இருந்த பக்கத்துக்கு வீட்டில் யாரோ புதிதாக குடி வந்திருப்பது தெரிந்தது.கடையை பூட்டிவிட்டு சந்தையில் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பிரித்து வைத்துக் கொண்டிருந்த தேனாம்பாள்.


“ஏங்க உங்க கடையில் சர்க்கரை வாங்க வந்தோம்.ஆனா கடை பூட்டி இருக்கு….சொல்லியபடி வீட்டு வாசலில் வந்து நின்றான் சிறுவன் தியாகராஜன்.அவனுடன் கூடவே நின்றிருந்தான் வரதராஜன் .


கடையை திறந்து சர்க்கரையை கொடுத்தார் தேனாம்பாள்.


“நீங்க தான் சுந்தரம் தோட்டத்துக்கு புதுசா வந்திருக்கீங்களா…? என்றார் சண்முகம்.


“ஆமா சென்னைல இருந்து வந்திருக்கோம்….“என்று தலையை கோதி விட்டு கொண்டு ஸ்டைலாக பதில் சொன்னான் வரதராஜன்.


இவன் என்ன இப்படி பேசுகிறான் என்று தான் பார்த்தார்கள் அக்காவும் தங்கையும்.


“எல்லாரும் ஊர்ல இருந்து சென்னைக்கு போவங்க. நீங்க என்ன சென்னைல இருந்து இங்க வந்திருக்கீங்க? என்றாள் பூங்கொடி.


“அதுவா எங்கப்பாக்கு வேலை போயிடிச்சு. அந்த வீட்டு சுந்தரம் அங்கிள் தான் அவங்க பண்ணையையும் வீட்டையும் பாத்துக்க சொல்லி எங்களை அனுப்பி வச்சாங்க…”என்றான் தியாகு.


“ஓஹ் அப்படியா…. உனக்கு எத்தனை வயது? என்று ராஜனிடம் கேட்டாள் அன்னக்கொடி.


“ஐ ஆம் தேர்ட்டின். இவன் லெவென்த் படிக்கிறான்.நான் வரதராஜன்.இவன் தியாகராஜன்….“என்று ஆங்கிலத்தில் சொல்லியபடி சொல்லிக் அண்ணனை கை கட்டினான் ராஜன்.


“ஓஹ் எங்கக்காவும் லெவென்த் தான் படிக்கிறாள் தெரியுமா ….“என்று பதில் சொன்னாள் அன்னம்.


அவன் ஆங்கிலம் உச்சரிக்கும் போது அத்தனை ஸ்டைலாக இருந்தது.அதனால் தான் பதினொன்னாவது என்று சொல்ல வந்துட்டு சட்டென்று லெவென்த் என்று மாற்றிக் கொண்டாள் .


“ நீ என்ன படிக்கிற….“ என்று அன்னக்கொடியை பார்த்தான் தியாகு.


வட்ட வடிவ முகத்தில் அழகான முட்டை கண்கள்.இரட்டை ஜடை போட்டு நீளமான ஒரு சட்டை அணிந்திருந்தாள்.ஏனோ தானோ என்று ஒருவரையும் மதிக்காமல் பேசிக்கொண்டிருந்த சின்ன பெண்ணை பார்த்ததும் பிடித்து விட்டதுஅவனுக்கு.அவள் குண்டு கன்னங்களில் வலிக்க கிள்ளி வைக்க வேண்டும் போல துடித்தன அவன் கைகள் . எனக்கும் இப்படி ஒரு தங்கை இருந்திருக்கலாம் என்று ஏக்கமாக இருந்தது அவனுக்கு.


“நான் அன்னக்கொடி அஞ்சாங்கிளாஸ்.இது எங்கக்கா பூங்கொடி. கேசவனும் மீனாவும் தான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்ஸ்.அந்த தெரு முனையில மாமரம் இருக்குல்ல அந்த வீடு தான் கேசவனோடது.அதுக்கு எதிர் வீடு மீனாவோடது…“என்று முட்டை கன்னி உருட்டி சொன்னவளை ரசனையுடன் பார்த்தான் வரதராஜன்.


‘வாய் மூடாமல் பேசுவா போல…’ என்று தான் அவன் யோசனை போனது.


“இங்க தான் ஸ்கூல் சேர போறீங்களா? என்றார் சண்முகம்.


“ஆமா……“என்று ஏதோ சொல்ல வந்தான் தியாகு.


“டேய் பெரியவனே சக்கரை வாங்கிட்டியா…சீக்கிரம் வா… ? என்று அவர்களை அழைத்தார் அன்னை நவநீதிமணி.


“அம்மா கூப்பிடுறாங்க வா ராஜன்…“ தம்பியுடன் வீட்டுக்கு கிளம்பினான் தியாகு.



“எல்லோரும் ரொம்ப நல்லா பேசுறாங்க….“ என்று தம்பியிடம் சொன்னான் தியாகு.


“ஆமா அந்த அன்னக்கொடி ரொம்ப வாய் பேசுவா போல.அதென்ன இப்படி ஒரு பேர்.புதுசா இருக்கு அன்னக்கொடி பூங்கொடி ன்னு….”என்று கேலி பண்ணி சிரித்தான் ராஜன்.


“ஏன் அதெல்லாம் நல்ல பேரு தான் போடா….” பேசியபடி இருவரும் வீட்டுக்கு வந்து சேர்த்தார்கள்.


சில நாட்களில் தியாகுவும் ராஜனும் பள்ளியில் சேர்ந்ததும், சகோதரிகள் இருவரும் போகும் பள்ளி வேனில் இவர்களும் போய் வர தொடங்கினார்கள்.இப்படியாக பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்ல நெருக்கம் வர தொடங்கியது.


பூங்கொடி படிக்கும் வகுப்பில் தான் தியாகராஜனும் சேர்ந்து கொண்டான்.அந்த வகுப்பறையில் பூங்கொடியின் மாமா மகன் சரவணனும் இருந்தான்.


தோட்டத்தை பார்த்துக் கொண்டு வேலை தேடிக் கொண்டிருந்த மோகனசுந்தரத்துக்கு ஒரு மாலில் அக்கௌன்ட் செக்ஷனில் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.அந்த வேலை சண்முகத்தின் உதவியால் தான் கை கூடியிருந்தது.


பெண் குழந்தைக்கு ஏங்கி போயிருந்த நவநீதமணி-மோகனசுந்தரம் தம்பதிகளின் ஏக்கத்தை பூங்கொடியும் அன்னக்கொடியும் தீர்த்து வைத்தார்கள்.அதிலும் துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் அன்னக்கொடி புதிதாக குடிவந்த எல்லார் மனங்களையும் திருடிக் கொண்டு விட்டாள்.


தொடரும் ......

 
Last edited:

Latest threads

Top Bottom