நந்தவனப்பூக்கள்
- Joined
- Jul 31, 2025
- Messages
- 55
- Reaction score
- 6
- Points
- 8
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்:
முதலில் இக்கதையை வெற்றிகரமாக எழுதி முடித்த இருபத்தி நான்கு எழுத்தாளர்களுக்கும் எனது பாராட்டுகள்!

இரண்டு ரிலே கதைகளில் எழுதிய அனுபவம் இருந்தாலும், நான் வாசித்த முதல் ரிலே நாவல் இதுவே! உள்ளே இருந்து ஓர் எழுத்தாளராகக் கதையைப் பற்றியப் பார்வை வேறு. வாசகர்களின் பார்வை வேறு. ஆனால், எங்களால் உங்கள் உழைப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது. உங்கள் வழங்கல் அதனைக் காட்டுகிறது.
முக்கியமாக இறுதியில் வந்த நான்கைந்து பதிவுகளில் அத்தீவிரம் நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து முடித்த பின்னர் நான் உணர்ந்ததை அப்படியே அந்தந்தப் பதிவில் போட்டிருக்கிறேன். யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று தெரியாமல் போட்டது தான்.
மொத்தமாகப் பார்த்தால், கதை நல்லாயிருந்தது. வெகு சில அத்தியாயங்களில் கொஞ்சம் தடுமாற்றம், கதை ஒரே இடத்தில் சுற்றி வந்தது போல் தோன்றியது. அதற்கு ஈடாக மற்ற அத்தியாயங்கள் அமைந்துவிட்டன.
எழுத்துப்பிழைகள் அதிகம் தெரியவில்லை. ஆனால் சந்திப்பிழைகள் இருந்தன. முக்கியமாக இதனை முடிவில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
சந்தியைப் பின் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் கூட ஒன்று போல் பிறமொழிச் சொற்களுடன் சந்தியைச் சேர்த்திருந்தீர்கள். ஒவ்வொரு பதிவிலும் இருந்ததா என்று கேட்டால், mostly yes.
உதாரணத்திற்கு, “ஃபைலைப் புரட்டினான்.” “பிரேஸ்லெட்டைத் தந்தான்.” இவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.
கடைசியில் எழுத்தாளர் பட்டியலில் எனக்குப் பரிச்சயமானவர்கள் சிலர் தான் இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்தவரை யூகங்களைத் தந்திருக்கிறேன். உங்களை யூகிக்க முடியாதபடி ஓரளவு சிரத்தை எடுத்திருக்கிறீர்கள்.
மண்டையை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு இருந்தது யூகிப்பது. ஏற்கனவே கதைக்கரு த்ரில்லர். அதில் கதையின் போக்கு, விறுவிறுப்பு, யோசனை என்று வேறு இருக்கையில் இந்த யூகத்தைச் சொல்வது எப்படி? ஆர்வமாக இருந்தபோதும் வாசிப்புக்குச் சற்றுத் தடையாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
ஒன்றிரண்டு அத்தியாயங்கள் என் எழுத்துநடை போன்று இருந்ததில் வியப்பு!
ஒரே கதையில் பலரின் எழுத்துக்களை வாசித்தது மகிழ்ச்சி!
புதிதாகச் சில நல்ல எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
ஆழமான கதைக்கருவை அழுத்தமான கதையாக விறுவிறுப்பான முறையில் வழங்கியது சிறப்பு!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

Last edited:
Previous thread
Next thread