Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 309
- Reaction score
- 906
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
தேவையான பொருட்கள்
ரய்தா வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். பட் எனக்கு அப்பளம் பிடிக்கும்ங்கிறதாலயும் கண்ணனுக்கு ஆபிசுக்கு லேட் ஆனதாலயும் ரய்தா ப்ரிப்பேர் பண்ணல. கீரை பிடிக்காத குழந்தைங்களுக்கு இப்பிடி செஞ்சு குடுத்தா சாப்பிடுவாங்க. ட்ரை பண்ணி பாருங்க.
எங்க வீட்டுல செஞ்ச பாலக் புலாவ்
- அரிசி (சாப்பாட்டு அரிசி / பாஸ்மதி)
- பாலக்கீரை - 1 கட்டு
- பெரிய வெங்காயம் - நீள வாக்கில் நறுக்கியது (1)
- கொத்துமல்லி தழை - பொடியாக நறுக்கியது
- சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன் (தனியா)
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நெய்
- பட்டை
- கிராம்பு
- சோம்பு
- சீரகம்
- மிளகு
- நட்சத்திர சோம்பு
- அரிசியை அலசி வைத்துக்கொள்ளவும். பாஸ்மதி அரிசி என்றால் அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பாலக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (தண்டு வேண்டாம்)
- குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, சீரகம், மிளகு, சோம்பு, நட்சத்திர சோம்பு, பட்டை போட்டு வதக்கவும். மணம் வந்ததும் பெரிய வெங்காயத்தைப் போட்டு அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலாவைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் கீரையைச் சேர்க்கவும். கீரை தண்ணீர் விடும் வரை வதக்கிய பிறகு அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
- ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் தேவைப்படும்.
- ஹை ஃப்ளேமில் வைத்து தண்ணீர் கொதித்ததும் கொத்துமல்லி தழையைத் தூவி குக்கரை மூடி வைக்கவும்.
- ஹை ஃப்ளேமில் மூன்று விசில்கள் வந்ததும் ஐந்து நிமிடம் லோ ஃப்ளேமில் வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- பதினைந்து நிமிடங்கள் கழித்து ப்ரஷர் அனைத்தும் நீங்கிய பிறகு குக்கரைத் திறக்கவும். உதிரி உதிரியாகப் பாலக் புலாவ் தயார்.
ரய்தா வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். பட் எனக்கு அப்பளம் பிடிக்கும்ங்கிறதாலயும் கண்ணனுக்கு ஆபிசுக்கு லேட் ஆனதாலயும் ரய்தா ப்ரிப்பேர் பண்ணல. கீரை பிடிக்காத குழந்தைங்களுக்கு இப்பிடி செஞ்சு குடுத்தா சாப்பிடுவாங்க. ட்ரை பண்ணி பாருங்க.
எங்க வீட்டுல செஞ்ச பாலக் புலாவ்
Previous thread
Next thread