காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 5)
அட ராமா ! உண்மையிலயே விக்ரம் ஒரு டூபாக்கூர் தானா..?
நம்ப முடியலையே ? அண்ணனும் தம்பியும் கொண்டு வந்து கொடுத்த ஃபைல்ல இருக்கிற படங்கள் எல்லாமே போட்டோஷாப்பி மூலமா இவங்களே செஞ்ச போர்ஜரி வேலையா இருந்தால் ?????
அப்படியே விக்ரம மோசமானவனா இருந்தாலும் இந்த ஆதாரத்தையெல்லாம் மதுமதி கிட்ட காட்டியிருக்கலாமே ?
உடனே இல்லைன்னாலும், தன்னோட வேதனையில் இருந்து மீண்டு வந்தப் பிறாகவது மதுமதி கிட்ட அந்த லேப்டாப், போன், ஆடியோ, வீடியோ எல்லாம் காட்டியிருக்கலாமே....?
ஆனால், மதுமதியை பத்தின முழு உண்மை தெரிஞ்சப் பிறகும், அவளோட மறுப்புகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு
எல்லா உதாசீனங்களையும் துச்சமாக மதித்து, தூசியாக தட்டிவிட்டு, விடாமல் அவள் கரம் பற்றின மயூரனின் காதல் மனம் தான் மெய்சிலிர்க்க வைக்குது.
அடிப்படை பச்சாத்தாபம், பரிதாபம், இரக்கம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் மதுமதியை சீண்டி அவளின் வாயிலிருந்து வெளிப்படும் மனதை ரணப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளின் மூலம் காயப்படும்போதும் மயூரனின் காதல் மனம் அழகாக வெளிப்படுவதை காண முடிகிறது.
இல்லையென்றால்
மது வாயில் விழுந்து எழவேண்டும் என்று இவனுக்கென்ன தலையெழுத்தா சொல்லுங்கள்.
இதிலிருந்தே தெரிகிறதே மயூரனின் காதல் ரீங்காரம்.



CRVS (or) CRVS 2797