• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

4 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 24
  • Views Views 3K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,562
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் - 4
View attachment 662

பல ஒலிவாங்கிகளின் முன் கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியனுடன் பிரதாப் நின்று கொண்டு இருந்தான்.

“இந்த தொடர் கொலைகளால் சென்னை மக்களே பீதியில் இருக்காங்க. ஆனா காவல் துறை எந்த முயற்சியும் எடுத்ததா தெரியலையே சார்!” என்று ஒரு செய்தியாளர் வினவ பிரதாப் கோபத்தை அடக்கியபடி இறுகி நின்றான்.

கமிஷனர், “விசாரணை நடந்து கொண்டு தான் இருக்குது” என்றார் நிதானமாக.

“இதையே தான் சார் கிட்டதிட்ட ஒரு மாசமா சொல்லிட்டு இருக்கிறீங்க. ஆனா கொலைகள் நடந்துட்டே தான் இருக்குது. உயிர்கள் போய்கிட்டே தான் இருக்குது” என்று அந்த செய்தியாளரும்,

“இந்த தொடர் கொலைகளுக்கு காவல் துறையின் மெத்தனம் தான் காரணம்னு மக்கள் நினைக்கிறாங்க சார்” என்று இன்னொருவரும்,

“ஆமா மக்களுக்கு போலீஸ் மேல இருக்கும் நம்பிக்கையே குறைந்துட்டு வருது” என்று இன்னொருவரும் கூற,

கமிஷனர், “எங்க வேலையை நாங்க சரியா தான் செய்துட்டு இருக்கோம்.. பொது மக்கள் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு வாரம் மட்டும் பொறுத்து கொள்ள கேட்டுகிறேன். அதற்குள் இந்த கேஸ் முடிவுக்கு வந்திடும்”

“வரலைனா?”

“வரும்” என்ற கமிஷ்னர் பிரதாப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “தேங்க்ஸ்” என்று கூறி கிளம்பியதும் பிரதாப்பும் கிளப்ப,

“நீங்க எதுவும் சொல்லலையே ஏசிபி சார்?” என்றார் ஒரு நிருபர்.

பிரதாப் திரும்பி, “ஒரு வாரம்” என்றுவிட்டு கிளம்பினான்.

உள்ளே சென்றதும் கமிஷ்னர், "என்ன பிரதாப்? எதுவும் முன்னேற்றம் இருக்குதா இல்லையா? நமக்கு ஒரு வாரம் தான் டைம் இருக்குது. அதுக்குள்ள கில்லர கண்டு பிடி அண்ட் இனி எந்த கொலையும் நடக்காம பார்த்துக்கோ”

"விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன் சார்." என்றான் வேகமாக.

"பேச்சில் இருக்கும் வேகம் உன் செயலிலும் எப்போதும் இருக்குமே. இப்போ என்ன ஆச்சு பிரதாப்? உன்னோட சாதுரியத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. ஆனா இந்த மீடியா சாவடிக்கிறான்க. சீக்கிரம் ஏதாவது செய் மேன்.”
“சாரி சார். சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன்”

“ஐ நோ, யூக்கேன் டூ இட் மை பாய்."

“ஷூர் சார்.” என்று கூறி சல்யூட் செய்து கிளம்பினான்.

வண்டியை திலீப் ஓட்டிக்கொண்டு இருக்க, அவன் அருகே இருந்த பிரதாப் தீவிர சிந்தனையில் இருந்தான்.

“இந்த மீடியா ரொம்ப பேசுறாங்க சார்”

“இது என்ன புதுசா! விடுங்க. நம்ம வேலையைப் பார்ப்போம். சுந்தரியோட கணவன விசாரிக்கச் சொன்னேனே. என்னாச்சு?"

"அவர் எதுவும் சொல்ற நிலைமையில் இல்லை. கொஞ்சம் இடிஞ்சு போய்த் தான் இருக்காரு. ஆனால் அது முன்னாள் மனைவி இறந்ததிற்கான வருத்தம் போல் தெரியவில்லை. தன் ஒரே மகள் தாயும் இல்லாமல் தந்தை தான், இருந்தும் இல்லாமல் இருக்கும் நிலையில் இருப்பதை நினைத்து மட்டுமே."

"அவ்வளவு கவலைப்படுகிறவர் அவரே கூட்டிட்டு போய் வளர்க்கலாமே." என்றவனின் கேள்விக்கு,

"இந்த மனைவியை விட்டுப் பிரிந்த பிறகு அவர் வேறொரு திருமணம் முடித்து விட்டார். அதனால் தன்னோடு தன் பெண்ணை அழைத்துச் செல்வது நிறைய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என யோசிக்கிறார் போல."

"சரி அது அவங்க கவலை. நமக்கு இருக்கிற அதிகப்படியான வேலையில், இதையெல்லாம் நம்ம தலையில போட்டுக்க வேண்டாம்." என்றவன், "அந்தப் பிரேஸ்லெட் பற்றி அவர்கிட்ட விசாரிக்க சொன்னேனே! என்னாச்சு?"

"ஆமா சார், செகண்ட் கிரைம் ஸ்பாட்டில் உங்களுக்கு கிடைத்த பிரேஸ்லெட் போல இருக்குதுனு சொன்னீங்களே! நான் கேட்டதுக்கு அவர் ஒரு வினோதமான பதில் கூறினார். அது அவருடைய அம்மாவின் பிரேஸ்லெட் தானாம். அவரின் மறைவுக்கு பிறகு அவரின் நியாபகார்த்தமாக இவர் கையில் அணிந்து கொண்டதாகக் கூறுகிறார்."
"ம்ம்." என்று சிந்தனையுடன் இழுத்தவன், "அது எங்கு வாங்கினது என்று கேட்டீங்களா.?"

"கேட்டேன் சார். ஆனால் அதைப் பத்தி எந்த விவரமும் அவருக்குத் தெரியாது என்று சொல்கிறார். அதுமட்டுமில்லை அவரை விசாரிச்ச போது அவர் கையில் அந்தப் பிரேஸ்லெட் இல்லை."

“அதுக்கு என்ன சொன்னார்?”

"நான் எதுவும் கேட்பதற்குள்ளாக, அவரின் கையை நான் பார்ப்பதைக் கண்டு அவரே அதன் கொக்கி உடைந்து விட்டதால் அதை அணியவில்லை என்று கூறினார்."

"ஓஹோ.! உடைந்து விட்டதாமா...? ஆனா அது எப்படி இரண்டாவது கொலை நடந்த இடத்தில் இதே போன்று ஒரு பிரேஸ்லெட் இருந்தது. அதுவும் உடைந்த நிலையில்?"
“அதை பத்தி அவரிடம் கேட்க வில்லை சார்” என்ற திலீப், "ஒருவேள நமக்கு கிடைத்த பிரேஸ்லெட் சுந்தரி கணவனோடதா இருக்குமா சார்?” என்றான்.

“இருக்கலாம். இல்லை வேற யாரோடதுமா கூட இருக்கலாம். அந்த பெங்களூர் மருமகன், சுந்தரி கணவன் பிரேஸ்லெட் இரண்டையும் போட்டோவில் தான் பார்த்தோம். ஸோ பின் பக்கம் தெரியாததால், நம்மகிட்ட இருக்க பிரேஸ்லெட்டும் அதுவும் ஒன்னானு உறுதியா சொல்லிட முடியாது. இன்னும் தீவிரமா விசாரிக்கணும்” என கூறிக் கொண்டவனுக்கு அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியாத நிலையில் தலை வெடித்து விடும் போல் இருந்தது.

"இரண்டாம் கொலை சம்பவத்திற்கு ஆளானவர்களின் பெண்ணை விசாரிக்க சொன்னேனே! என்னாச்சு?"

"இன்னும் இல்ல சார். அம்மா அப்பா இறப்புக்கு வந்தவங்க பாடியை வாங்கி காரியம் செய்துட்டு உடனே கிளம்பிட்டாங்க. அந்த நேரத்தில் அவங்களை விசாரிக்க முடியலை. அவங்க கணவர் அவசர அவசரமா எல்லாம் செய்துட்டு கிளம்பியது போல தோணுது சார். விசாரணைக்கு அவங்களை வரச் சொல்லித் தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் அவங்க இன்னும் வரல."

"ஏன்.?"

"அவங்களோடது காதல் திருமணம் போல. பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. திருமணம் முடித்த கையோடு அவர்கள் இங்கு வந்தபோது பெண்ணின் கணவரை அந்தப் பெண்ணின் தகப்பனார் அடித்து விட்டதாக அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தெரிந்தது. அதில் அவர் மிகுந்த கோபம் கொண்டு சென்றதாகத் தகவல். அதனால் அந்தப் பெண் வரவில்லை என்று நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு வர விருப்பம் இருந்தாலும், கணவனின் அனுமதி கிடைக்காததால் வராமலும் இருந்திருக்கலாம். எல்லாமே யுகம் தான் சார்..."

"யூகத்திலேயே எல்லாத்தையும் பார்க்க முடியாது திலீப். அந்தப் பெண் உடனே வர வேண்டும் என்ற அவசியத்தை அவர்களுக்குத் தெளிவாகக் கூறி புரிய வையுங்கள். அந்த பெண்ணோட கணவரும் வரணும் சொல்லுங்க.
போலீஸ் இன்வெஸ்டிகேசனுக்கு கூப்பிட்டும் வரவில்லை என்றால் அதுவும் அஃபென்ஸ் தான். அதையும் அவங்களுக்கு தெளிவாக சொல்லுங்க. ஒவ்வொரு சிறு தகவலும் நமக்கு இப்போது மிக அவசியம். நமக்கு நேரமும் ரொம்ப குறைவா இருக்குது. இன்னைக்கு ஈவ்னிங்கே அவங்க இங்கே இருக்கணும்"

“ஈவ்னிங்?”

“எஸ்.. அவங்க வெல் டு டூ பாமிலி தானே! ப்ளைட்டில் வர சொல்லுங்க. பெங்களூரில் இருந்து கிளம்பி இங்கே ஈவ்னிங் வர மாதிரி மூணு ப்ளைட்ஸ் இருக்குது. இல்லை காரில் வந்தா கூட நைட் எட்டு மணிக்குள்ள வந்திடலாம்”

"ஓகே சார். சொல்லிடுறேன்"

"நீங்க அந்த பொண்ணு தொடர்பில் இல்லைனு சொல்றீங்க, ஆனா அந்த பொண்ணு கணவன் குழந்தையோட இருக்க போட்டோ இறந்தவங்க வீட்டில் இருந்ததே! ஸோ முழு தொடர்பில்லைனு சொல்ல முடியாது. அம்மா கூட பேசிட்டு தான் இருந்து இருக்கணும். அன்னைக்கு நீங்க நேரில் பார்த்தப்ப அந்த மருமகன் கையில் பிரேஸ்லெட் இருந்ததா?" என்று யோசனை உடன் கேட்க.

சற்று யோசித்த திலீப், “பார்த்த மாதிரி தான் சார் தோணுது” என்றான்.

“அன்னைக்கே நான் உங்க கிட்ட அந்த பிரேஸ்லெட் காட்டி இருக்கணும். நீங்க கொஞ்சம் அலெர்ட்டா இருந்து, மருமகன் கையில் இருந்த பிரேஸ்லெட் உன்னிப்பா கவனிச்சு இருப்பீங்க”

“அதான் அந்த போட்டோவில் தெரியுதே சார்! அன்னைக்கே மருமகனை நீங்க நேரில் பார்த்து இருந்தா நீங்களே கவனிச்சு இருப்பீங்க. நீங்க போஸ்ட் மார்டேம் டாக்டரை பார்க்க போன நேரத்தில் மருமகன் வந்துட்டு கிளம்பிட்டார். நானும் சாதாரணமா விசாரிச்சிட்டு அவங்களை கிளம்ப விட்டுட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் ஆர் நைட் எட்டு மணிக்குள்ள வர வச்சிடலாம் சார்.” என்றவன்,

“நீங்க என் கிட்ட சொல்லாததிற்கு காரணம் எனக்கு புரியுது சார். சில மணி நேரத்தில் என் மேல் முழு நம்பிக்கை வந்திடாதே! அதான் அன்னைக்கே சொல்லி இருக்க மாட்டேங்க. நம்பிக்கை வந்ததும் சொல்லிட்டீங்க” என்றான் சிறு புன்னகையுடன்.

“சாரி திலீப். நீங்க சொன்னது போல தான் நானும் யோசிச்சேன்”

“அட விடுங்க சார்.. சாரிலாம் சொல்லிட்டு” என்றபோது இருவருக்குள் நல்ல புரிதல் மலர்ந்தது.

‘தப்பு செய்துட்ட பிரதாப்! அன்னைக்கே திலீப் கிட்ட சொல்லி இருந்தா இப்போ இந்த பிரச்சனையே இல்லை.’ என்று மனதினுள் நினைத்த பிரதாப் பிறகு, ‘பார்த்துக்கலாம்’ என்று நம்பிக்கையுடனே கூறி கொண்டான்.
பின்பு யோசனைகள்...

"சுந்தரியின் மகள் இப்போது எங்கே இருக்கிறா.? எப்படி இருக்கிறா.?" கேட்டான் பிரதாப்.

"சுந்தரியின் வீட்டில் தான். சார், அவளின் தாத்தா பாட்டியுடன் இருக்கிறாள். இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரல சார். இன்னும் இரண்டு நாளில் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லப் போவதாகச் சுந்தரியின் பெற்றோர் சொல்லிட்டு இருந்தாங்க."

"ஓஹ். அவங்க கிளம்புவதற்கு முன் எனக்கு அந்தப் பெண்ணிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளனும்."

"விசாரிக்கப் போறீங்களா சார்.?"

"ஒரு சின்னப் பெண்ணிடம் விசாரணைனு செல்ல முடியாது. தகவல் சேகரிப்பு என்று வேண்டுமென்றால் சொல்லலாம்." என்று தெளிவாகக் குழப்பியவனை பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் திலீப்.

"சுந்தரி வீடு இருக்கும் ஏரியா போங்க" என்றான் பிரதாப்.

அவர்கள் வாகனம் சுந்தரி வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையவும், “வண்டியை ஓரமா நிறுத்துங்க திலீப். ஒரு வாக் போகலாம்” என்றான்.

இருவரும் இறங்கி நடந்தனர். ஒவ்வொரு வீட்டையும் தனது கூர்விழிகளால் நோக்கியபடி சென்றான் பிரதாப்.

அப்போது அவர்கள் எதிரே வந்து கொண்டு இருந்த நடுத்தர வயதில் இருக்கும் ஒரு பெண்மணி இவர்களை பார்த்ததும் சிறு பயத்துடன் தனது வேகத்தை கூட்டினார்.

அதை கவனித்த திலீப், “சார்” என்று அழைக்க,

“போலீஸ் பார்த்ததும் சிலருக்கு வர நார்மல் பயம் தான் அவங்க கிட்ட தெரியுது” என்ற பிரதாப், “மேடம்” என்று அழைத்து இருந்தான்.

அவர் அதிர்வுடன் திரும்ப, “ரிலாக்ஸ். சில கேள்விகள் மட்டும் தான் கேட்க போறேன். தெரிந்தா பதில் சொல்லுங்க” என்றான்.

அப்போதும் தெளியாத பயத்துடன் தலையை ஆட்டினார்.

“உங்க வீடு எங்க இருக்குது?”

“இந்த தெரு தான்”

“இந்த தெருவில் இறந்த போன சுந்தரியை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும்”

“உங்க வீடு சுந்தரி வீட்டில் இருந்து எத்தனாவது வீடு?”

“நாலு வீடு தள்ளி மஞ்ச கலர் வீடு”

“சுந்தரி ஆள் எப்படி?”

“அது.. நல்லவ தான்”

“பயப்படாம சொல்லுங்க.. நீங்க தான் சொன்னீங்கனு யாருக்கும் தெரியாது.. பொதுவா சுந்தரி வீட்டுக்கு யாரெல்லாம் வருவாங்க?”

“நான் அப்படி எல்லாம் கவனித்தது இல்லை”

“சரி.. கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க”

தெருவை சுற்றி பார்த்த அந்த பெண்மணி எச்சிலை விழுங்கியபடி பயத்துடன், “ஒரு ஆள் வரதை பார்த்து இருக்கிறேன். அது யாரு என்னலாம் எனக்கு தெரியாது” என்றார்.

“சரி.. அவருக்கு என்ன வயசு இருக்கும்? பார்க்க எப்படி இருந்தான்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னை விட்டுடுங்க சார். நான் காய் வாங்க தான் வந்தேன்”

“சரி கிளம்புங்கமா.. தேங்க்ஸ்” என்றதும் அவர் விட்டால் போதும் என்று வேக எட்டுகளை வைத்து கிளம்பினார்.

“என்ன சார் விட்டுட்டீங்க?” என்று திலீப் வினவ,

“அவங்க பயத்தில் இருக்காங்க. ஒருவேளை அந்த ஆள் கொலைகாரனா இருந்து தன்னை எதுவும் செய்திடுவானோனு பயப்படுறாங்க. விடுங்க பார்த்துக்கலாம். தெரு ஆரம்பித்தில் மூணாவது வீட்டில் சிசிடிவி பார்த்தேன். ஒரு வாரதுக்கான புட்டேஜ் வாங்குங்க. இந்த தெருவில் வேற எந்த வீட்டில் சிசிடிவி இருந்தாலும் புட்டேஜ் வாங்குங்க. நான் சுந்தரி வீட்டுக்கு போய் விசாரிக்கிறேன்”

“சரி சார்”


அடுத்து பிரதாப் சுந்தரியின் வீட்டில் அவரின் மகள் முன்பும் பெற்றோரின் முன்பும் அமர்ந்திருந்தான். சுந்தரியின் முன்னாள் கணவரும் அங்குதான் அமர்ந்திருந்தார்.

அவரின் கைகளை ஒரு முறை பார்த்த பிரதாப் பின்பு அவரை ஏறிட்டு "உங்க பிரேஸ்லெட்ட பார்க்கணும். ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வந்து காட்டுங்க." என்றான். அதில் யோசனையாக முகத்தைச் சுருக்கினாலும் சரியென ஒப்புக்கொண்டார் அவரும்.

சுந்தரியின் தாயாரைப் பார்த்து பிரதாப், “வீட்டு வேலை செய்ற அம்மா இன்னைக்கு வரலையா?” கேட்டான்.

“அவங்களுக்கு உடம்பு சரி இல்லை. அதான் வரலை”

“ஹ்ம்ம்” என்றபடி தன்முன் அமர்ந்திருந்த சிறு பெண்ணைப் பார்த்தவனுக்கு மனம் லேசாக வலித்தது. அழுதழுது முகம் சிவந்து பாவமாக அமர்ந்திருந்தாள். மிஞ்சிப் போனால் பதினான்கு அல்லது பதினைந்து வயது தான் இருக்கும் இந்த வயதில் பெற்றோர் இல்லாமல் வளர்வது எவ்வளவு வலி என்பதை உணர்ந்தவனாக அந்தப் பெண்ணையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க.

"எங்க அம்மா கொஞ்சம் கோபக்காரவங்க தான். ஆனா அவங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம்." என்றாள் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே.

"கோவக்காரங்கன்னா.? என்ன சொல்ல வரமா.?" என்றவனின் கேள்விக்கு,

"அவ கொஞ்சம் முன் கோபி சார். அதைத் தான் பேத்தி சொல்றா." என்றார் அவளின் அருகில் அமர்ந்திருந்த சுந்தரியின் தந்தை.

பின் அவளிடம் குனிந்து, "சார் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு பாப்பா." என்றார் மெதுவான குரலில்.

"முன்கோபம்னா எதுக்கெல்லாம் கோவ படுவாங்க உங்க பெண்?" எனப் பேத்தியை எதையும் சொல்ல விடாமல் தடுக்கும் பெரியவரைப் பார்த்தே தன் கேள்விகளைத் தொடுத்தான் பிரதாப்.

"சின்ன, சின்ன விஷயத்துக்கும் அவளுக்கு ரொம்ப கோவம் வரும் சார். பால் பாக்கெட் சீக்கிரம் வரலனா, காய்கறி காரவங்க கேட்ட காய்கறியைக் கொண்டு வந்து தரவில்லை என்றால், வாடகை கொடுக்கிறவங்க லேட்டா வாடகை கொடுத்தா. இப்படி எல்லாத்துக்குமே அவளுக்கு ரொம்ப கோவம் வரும்." என்றார் அவர்களின் அருகில் அமர்ந்திருந்த சுந்தரியின் கணவர்.

தன் அருகில் அமர்ந்திருந்த தகப்பனை ஏறிட்டும் பார்க்கவில்லை பெண் என்பதை குறித்துக் கொண்டான் பிரதாப்.

"சரிமா உங்க அம்மாக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம்னு ஏன் சொல்ற.? அவங்க தற்கொலை தானே செய்துகிட்டாங்க?" என்ற பிரதாப் பின் கேள்வியில் வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

"இல்ல, இல்ல எங்க அம்மா தற்கொலை பண்ணிக்கல. தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அவங்க கோழையும் இல்ல. ரொம்ப ரொம்ப தைரியமானவங்க. யார் வந்தாலும் எதிர்த்து நிப்பாங்க. அப்படிப்பட்டவங்கள கொலை செஞ்சுட்டாங்க. அதுவும் கொடூரமாகக் கொலை செஞ்சிருக்காங்க." என்று ஆவேசம் வந்தவளை போலக் கத்தியவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து ஓடியது.

"எப்படிமா அவ்வளவு உறுதியாக உங்க அம்மா கொலை தான் செய்யப்பட்டு இருக்காங்கன்னு சொல்ற?" என்ற பிரதாபின் கேள்விக்கு,

"ஏன்னா அவங்களுடைய இடது கை நரம்பு வெட்டப்பட்டிருந்தது. அவங்களே தற்கொலை பண்ணிக்கிறதா இருந்தா அவங்களுடைய வலது கை நரம்பு தான் வெட்டப்பட்டு இருக்கணும். ஏன்னா எங்க அம்மா ஒரு லெப்ட் ஹேண்டர்." என்றாள் வேக வேகமாக.

இது மிகவும் புது தகவலாக இருந்தது அவனுக்கு. கேள்வியாகப் பெரியவர்களை நிமிர்ந்து பார்க்க,

"ஆமா சார் என் பொண்ணு இடது கைப்பழக்கம் உள்ளவள் தான். ஒரு காய் நறுகிறதா இருந்தாலும், ஒரு பொருளை எடுத்து வைப்பதாக இருந்தாலும், அவளுக்கு இடது கைகளால் தான் வேலை செய்ய முடியும். பெரும்பாலும் வலது கையால் எந்த வேலையும் செய்யமாட்டாள். ஒரு சிறு டம்ப்ளரை தூக்குவது என்றாலும் அவளுக்கு வலது கையில் பலமே இருக்காது." என்றார் மெதுவான குரலில் சுந்தரியின் தாயார்.

"எங்க அம்மாவை நேருக்கு நேர் எதிர்க்கத் திறன் இல்லாமல் கோழை போல அவங்களை இப்படி கொலை செஞ்சிருக்காங்க. நீங்க அவர்களைச் சீக்கிரமா கண்டுபிடிக்கணும்." என்று கூறியவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

"கண்டிப்பா பிடிக்கிறேன். நீ யாரையும் சந்தேகப்படுறியாமா?" என்ற பிரதாப் பின் கேள்வியை முடிக்க விடாமல்.

"சார் சார் பொண்ணு ரொம்ப சிரமப்படுறா ப்ளீஸ் இதுக்கு மேல வேற எதுவும் கேட்காதீங்க என்றவாறு அவளின் பாட்டி அவளை அணைத்து கொண்டு உள்ளறைக்கு அழைத்துச் செல்ல வேறு எதுவும் கேட்க முடியாத நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான் பிரதாப் சக்கரவர்த்தி.
அவனுக்கும் உறுதியாக இது கொலைதான் என்ற சந்தேகம் இருந்ததால் இது பெரிதாக அவனைத் தாக்கவில்லை.

கொஞ்சம் முன்னேறிச் செல்லும் இடமெல்லாம் ஏதேனும் தடை வந்து தடுப்பதால் அதற்கு மேல் நகர முடியாமல் தேங்கி நின்றது விசாரணை.

அங்கிருந்து வெளியேறிய பிரதாப் அந்த வீட்டு வாசலில் இருந்த மரத்தின் நிழலில் நின்றபடி, ‘சுந்தரி வீட்டில் வேலை செய்த லேடி சுந்தரியை அமைதி, எந்த வம்புக்கும் போகாதாவர் போல அன்னைக்கு சொன்னாங்க. ஆனா இந்த பொண்ணும், சுந்தரி கணவனும் சுந்தரி ஷார்ட் டெம்பர்டுனு சொல்றாங்க. வேலை செய்ற லேடியை தீவிரமா விசாரிக்கணும்’ என்ற யோசனையில் இருந்தபோது அங்கே திலீப் வந்தான்.

“நீங்க சொன்ன வீட்டில் வாங்கிட்டேன் சார். இந்த பக்கம் சுந்தரி வீட்டை தாண்டி ரெண்டு வீட்டில் சிசிடிவி இருக்குது ஆனா ஒரு வீட்டில் ஆள் இல்லை, ஸோ ஒரு வீட்டில் தான் வாங்க முடிந்தது”

“குட்.” என்ற பிரதாபின் பார்வை ஓர் இடத்தைக் கூர்ந்து கவனித்தது.

அதைப் பார்த்த திலீப், "என்ன சார்?" என்று அவன் விழி செல்லும் பார்வையை தொடர்ந்து பார்த்தவன் கேட்க.

"அங்கு ஒரு இஸ்திரி வண்டி நிக்குது பாத்தீங்களா.? போய் அவன கூட்டிட்டு வாங்க."

"ஓகே சார்." என்றபடி திலீப் செல்ல அங்குத் தனியே நிற்பதற்கு பிரியப்படாமல் பிரதாப்பும் அவனின் பின்னே சென்றான்.

இவர்கள் சென்றபோது வண்டி மட்டுமே அங்கு நின்று இருந்தது. அதில் நிற்க வேண்டிய ஆளைக் காணவில்லை.

"இப்போ தானே பார்த்தேன். அயன் பண்ணிட்டு இருந்தான். அதுக்குள்ள எங்கே போனான்.?" என்று கேட்டபடி சுற்றிலும் பார்க்க, இஸ்திரி வண்டி நின்றிருந்த இடத்தில் அருகில் இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த பிரதாப் அவரை நோக்கிச் செல்ல,
பொதுவாகக் காவல்துறையினரை பார்த்தால் ஏற்படும் லேசான பதற்றம் அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டது.

"இங்கே இஸ்திரி போட்டுக்கிட்டு இருந்தாரே அவரை எங்க காணோம்.? இங்க தான் ரொம்ப வருஷமா இருக்காரா.?”

"அதுதான் சார் நானும் பாக்குறேன். காலையிலிருந்து நைட்டு வரைக்கும் இங்கே தான் இருப்பாரு. ரொம்ப வருஷமாலாம் இங்க இல்ல. இப்போ நாலஞ்சு நாளா தான் இங்க இருக்காரு." என்றவரின் பதிலைத் தலையசைத்து கேட்டுக் கொண்டவன்.

" நாளைக்கு அவனை நம்ம ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வாங்க." என்றபடி ஜீப் நோக்கி சென்றான்.

"எனக்கும் அவன் மேல ஒரு சந்தேகம் இருக்கு சார். ஏனோ அவன் முழியே சரியில்லை." என்று திலீப் கூற,

அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த பிரதாப்பிற்கு சிந்தனை முழுவதும், 'இப்படி தொடர் கொலைகளைச் செய்வது யார்.? அவனின் நோக்கம் என்ன.? எதற்காக இந்தக் கொலைகள்.? எப்படி தடயமே இல்லாமல் ஒருவனால் குற்றத்தைத் தொடர்ந்து செய்ய முடியும்?' என்பதுதான்.

'வரேன்டாச் சீக்கிரம் வரேன்.' என்று தனக்குள்ளாகக் கர்ஜித்தவனின் சிந்தனையைக் கலைப்பது போல அவனின் அலைபேசி அடிக்க, எடுத்து யார் என்று பார்த்தவனின் சூழல் மாறி, இதழில் புன்னகை நிறைந்திருந்தது.

புன்னகை முகத்துடன் நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் பட்டான் இஸ்திரி போடுபவன். சில அடி தூரத்திலிருந்த குப்பை வண்டியின் பின் மறைந்து நின்று இவர்களை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தான். பார்வையை கூர்மையாக்கி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் சரியாக இவர்களை எட்டிப் பார்க்கும் நேரத்தில்,

"டேய் உன்னத்தான் இங்க வா." என்ற பிரதாபின் அழுத்தமான அதிகார குரலில் திடுக்கிட்டவன் திரும்பி வேகமாக ஓட்டம் எடுக்க. அவனை விரட்டிப் பிடிக்க மின்னலெனப் பாய்ந்திருந்தான் பிரதாப் சக்கரவர்த்தி.

*****

கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் மக்களே...

இரண்டாம், மூன்றாம் எபிக்கு இன்னும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை. ஆனால், நன்றாகவே முயற்சி செய்கிறீர்கள். அதற்கு பாராட்டுக்கள்.

சிலரோட எழுத்துக்கள் எல்லாம் உங்களுக்குப் பரிச்சயமாகத்தான் இருக்கும். அதனால் இன்னும் முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முன்பே சொன்னதுதான்... எழுத்தாளர்களின் பட்டியல் இப்போது தரப்படமாட்டாது.

உங்களால் இன்னும் சிலரையாவது கண்டுபிடிக்க முடியுமென்று நம்புகிறேன்.

அதோடு எழுத்தாளரின் பெயரை சொல்வதுடன், ஒவ்வொரு அத்தியாயமும் எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு எழுத்தாளர் எழுதியதை இன்னொரு எழுத்தாளர் கோர்வையாக கொண்டு வரும் எங்கள் முயற்சி மெனக்கெடலான ஒன்று. சின்ன லாஜிக் தவறுகூட நடந்துவிடக்கூடாது என்று அவ்வளவு முயன்று எழுதுகிறார்கள்.

அதனால் ஒவ்வொருவரின் உழைப்பிற்கும் பலனாக உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து 25 எழுத்தாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.🙂🙂🙂
 
அருமையான பதிவு
 
Interesting epi🤩🤩🤩🤩
சுந்தரி வீடு & பெங்களூரு பொண்ணு வீடு மட்டும் தான் செக் பண்றாங்க.....
திலீப் சொன்ன first கேசுலா அப்படி யாரையும் விசாரிக்கலயே?????
சுந்தரி பொண்ணுக்கு அவ அப்பாவை பிடிக்கல போலவே......
பிரேஸ்லெட் ஓகே.....அந்த first வீட்டு garden லா எடுத்த பொருள் என்ன?????
அதை இன்னும் சொல்லவே இல்ல திலீப் கிட்ட கூட?????
 
பார்க்குற எல்லார் மேலயும் சந்தேகப்படற மாதிரி தான் இருக்கு. எல்லாரும் போலீசுக்கு அதிர்ச்சியாகி பயப்படுவதை பார்த்தா எல்லார்க்கும் சுந்தரி கொலையிலே ஏதோ தெரிஞ்சி இருக்கு.
அந்த எஸ்திரி வண்டிக்காரன் ஏன் அப்படி திருச்சி ஓடுறோம் அவனுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கா? நாலு நாளா தான் அங்க இருக்கான்னா சுந்தரியோட வீட்டு வேவு பார்த்து கொலைகாரனுக்கு சொல்லி இருக்கணும் இப்பவும் போலீஸ் எப்படி விசாரிக்கிறாங்கன்னு சொல்லத்தான் அங்க இருக்கணும்.
அருமையான ரைட்டிங் கொலையாலியையும் கெஸ் பண்ண முடியல ரைட்டரையும் கெஸ் பண்ண முடியல
 
பிரதாப் விசாரிக்கும் முறை நல்லா இருக்கு அயர்ன் பண்ற ஆளை விசாரிச்சா ஏதாவது க்ளூ கிடைக்குமா?
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 4)


அய்யோ ராமா ! படிக்கிற எங்களுக்கே மண்டையை பிச்சுக்கலாம் போல இருக்கு.
இதுல பார்ட் பார்ட்டா எழுதிறவங்களோட நிலைமை..
ஒண்ணும் சொல்றதுக்கில்லை போங்க. எந்த பக்கம் போனாலும் முட்டுச் சந்துல முட்டிக்கிட்டு நிக்குற நிலைமை தான். பிரஸ்லெட் விஷயத்துலயும் லீட் கிடைக்கலை, செத்துப் போனவங்க சம்பந்தப்பட்ட ஆளு கிட்ட விசாரிச்சாலும் லீட் கிடைக்கலை, அட.. லவ்வாவது பண்ணலாம்ன்னு காதலியோட ப்ளேட் போட பார்த்தால்.. அதுவும் பொறுக்காம இஸ்திரிகாரன் அப்பத்தான் ஓட்டம் எடுக்கிறான், எத்தனை கொலையோ ? என்ன விசாரணையோ போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Interesting epi🤩🤩🤩🤩
சுந்தரி வீடு & பெங்களூரு பொண்ணு வீடு மட்டும் தான் செக் பண்றாங்க.....
திலீப் சொன்ன first கேசுலா அப்படி யாரையும் விசாரிக்கலயே?????
சுந்தரி பொண்ணுக்கு அவ அப்பாவை பிடிக்கல போலவே......
பிரேஸ்லெட் ஓகே.....அந்த first வீட்டு garden லா எடுத்த பொருள் என்ன?????
அதை இன்னும் சொல்லவே இல்ல திலீப் கிட்ட கூட?????
கார்டனில் என்ன பொருள் சொல்றீங்க பா? வீடு வாடகைக்குன்னு ஒரு போர்ட் பார்த்துட்டு அதை ஓரமா தூக்கி போடுவான். வேற என்ன 🤔 🤔 நீங்க சொல்லும் இடம் எதுன்னு ஸ்கிரீன் ஷாட் போட முடியுமா?
 
நைஸ் 🤩🤩🤩
 
பிரதாப் விசாரணை சூப்பர். சஸ்பென்ஸ் போகுது. பிரவீணா இருப்பாங்க.
 

Latest threads

Top Bottom