மாலையளவில் கொடைக்கானலிலிருந்து கிளம்பி வத்தலகுண்டு, தேனி வழியாக மூணாறு வந்து சேர்ந்தான் விஷ்ணு.
ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக அறை எடுத்திருக்க, காரை ஓட்டி வந்த அலுப்பில் அறைக்கு வந்ததும், தன்னைச் சுத்தம் செய்து கொண்டு, இலகு உடைக்கு மாறிக் கட்டிலில் சாய்ந்தான்.
குளிருக்கு இதமாக, ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
உடலில் அலுப்பு இருந்தாலும், ஏனோ உடனே உறக்கம் வரவில்லை.
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன், “ச்சே, என்ன இது தூக்கமே வர மாட்டேங்குது?” என்று புலம்பியபடி கட்டிலின் அருகில் டீப்பாயின் மேல் இருந்த தனது கைப்பேசியை எடுத்துப் பாடலை ஒலிக்க விட்டான்.
அங்கம் உனதங்கம் மிருதங்கம்
அது தங்கம்…
சங்கம் தமிழ்ச் சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக் கண்டு பூமியும் நின்றாடுது…
என்ற பாடல் ஒலிக்க, “ம்க்கும், அவளோட அங்கம் மிருதங்கமா, தங்கமான்னு நான் என்னத்தைக் கண்டேன்? கனவுல தான் ஒருத்தி அப்பப்ப ஓடி வருவாள். ஆனால், முகத்தைக் காட்ட மாட்டாள். கனவுல கூடக் கைக்கு எட்டாதவளை… அவள் எப்படின்னு நான் எப்ப ஆராய்ச்சி நடத்துறதாம்?” என்று புலம்பியபடி தலையில் அடித்துக் கொண்டான்.
அள்ளித் தழுவும்
பள்ளிக் குயிலே அள்ளித் தழுவும்
பள்ளிக் குயிலே…
முத்தங்களின் சந்தங்களில்
பண்பாடிடு தேனே…
“இந்தப் பாட்டைக் கேட்டால் இன்னைக்குத் தூங்கின மாதிரி தான். வேண்டாம்டா சாமி… மனுஷன் அவஸ்தை புரியாமல் இதுவேற. நான் பாட்டே கேட்கலை…” என்றபடி வேகமாகக் கைப்பேசியை எடுத்துப் பாடலை அணைத்தவன், கவிழ்ந்தடித்துப் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அவனை உறக்கம் தழுவிக் கொள்ள, ‘நம்தன… நம்தன…’ என்று பாடிக் கொண்டு வெள்ளையாடை தேவதைகள் வந்தனர்.
“இன்னைக்கும் என் தேவதேவியை நீங்க என் கண்ணில் காட்டப் போவதில்லை. அப்புறம் என்ன நம்தன… நம்தன…?” என்று கடுப்புடன் அவர்களைப் பார்த்து இடுப்பில் கை வைத்தபடி முறைத்தான் விஷ்ணு.
அவனின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனின் வெகு அருகில் வந்த தேவதைகள் ‘நம்தன… நம்தன…’ என்று பாடிக்கொண்டே அவனைச் சுற்றி மறைத்தபடி நின்றனர்.
“ஹலோ, தேவதைகளே… இன்னைக்கு என்ன இவ்வளவு பக்கத்தில் வந்திருக்கீங்க? வழி மாறித் தப்பித் தவறி வந்துட்டீங்க போலிருக்கு. ஓடிப் போங்க…” என்று மிரட்டினான்.
அவனின் அருகில் சுற்றிச் சுற்றி வந்த தேவதைகளில் ஒன்று, பின்னாலிருந்து அவனின் கண்களைக் கைகளால் மூடியது.
“ஓய், என்ன பண்ற?” என்றவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சில நொடிகளில் அவனின் கண்களை மறைத்த கையைத் தேவதை எடுத்துவிட, கண்களைச் சிமிட்டிச் சிமிட்டித் திறந்து பார்த்தவனை நோக்கி ஒரு உருவம் வந்து கொண்டிருந்தது.
ஆனால், கண்கள் மங்கலாக இருக்க, அந்த உருவத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
“நீதான் என் தேவதேவியா?” என்று கேட்டபடி அவ்வுருவத்தை நோக்கிக் கையை நீட்டினான்.
அவ்வுருவமும் அவனை நோக்கிக் கையை நீட்டியது.
இரு கைகளும் தொட்டுக்கொள்ள முயன்ற நொடி, டொட்டடொய்ங்… டொட்டடொய்ங்… என்று கேட்ட சத்தத்தில், அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் விஷ்ணு.
“ச்சை… அலாரம் அடிச்சதும் கவிழ்ந்தடிச்சுப் படுக்காமல் எழணும்னு இந்தச் சத்தத்தை வச்சது தப்பாப் போச்சே. என் தேவதேவி என் கையைத் தொட வந்தாளே… விட்டுட்டேனே… இதுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைங்கிறதா? அடச்சே! அது கூடத் தப்பு… கண்ணுக்கும் எட்டலை. கைக்கும் எட்டலை. அதான் சரியா இருக்கும். நைன்டி’ஸ் கிட்டா பிறந்து தப்புப் பண்ணிட்டேனே. கனவுல கூடக் கன்னியைப் பார்க்க முடியாமல் இது பெரிய சாபமால இருக்கு…” என்று தனியாகப் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து புலம்பித் தீர்த்தான்.
அடுத்த இரண்டு நொடிகளில் மீண்டும் அலாரம் அடிக்க, “எழுந்துட்டேன்… எழுந்துட்டேன்…” என்று எரிச்சலாக முனகியபடி சத்தத்தை அணைத்துவிட்டுப் படுக்கையை விட்டு எழுந்தான்.
****
கண்கள் சாலையை வெறித்த வண்ணம் இருந்தாலும், காரைக் கவனத்துடன் செலுத்திக் கொண்டிருந்தாலும், அவனின் நினைவோ முந்தைய இரவு வந்த கனவில் இருந்தது.
அதிலும் தன் கனவில் அவள் ஏன் வந்தாள்? என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு மூளை சூடாகிப் போயிருந்தான்.
‘அவளா இத்தனை நாளும் நான் கனவில் காணத் துடித்த என் தேவதேவி? இல்லை… அவள் என் தேவதேவி இல்லை…’ நடிகர் திலகம் போல் தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
‘அவள் எப்படி என் தேவதேவியாக இருக்க முடியும்? அதிலும் அவள்!’ என்று நினைத்தவனுக்கு முந்தைய நாள் கனவில் தெரிந்தவள் முகம் வந்து போனது.
அன்றும் அவன் கனவில் வந்த தேவதைகள் அவனைச் சுற்றி ஆடிக் கொண்டே பக்கத்தில் நெருங்கி வந்தனர்.
கனவில் கூட என்ன மனநிலையில் இருந்தானோ… சூடாகிப் போனான். பின்னே எத்தனை நாள் தான் அவனும் ஏமாந்து கொண்டே இருப்பான். தேவதைகள் வந்தால் மட்டும் போதுமா? அவனுக்கானதையும் கண்ணில் காட்டிவிட வேண்டாமா?
வாழ்க்கையில் தான், கண்ணில் எதையும் பார்க்கவில்லை என்றால் கனவிலுமா இழுபறி?
வழக்கமாக ஜொள்ளு விடாத குறையாகத் தேவதைகளைப் பார்ப்பவன், இன்று கடுப்புடன் பார்த்தான்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. உங்களையே திரும்பத் திரும்பப் பார்த்து எனக்குப் போர் அடிச்சுப் போச்சு. ஒரே ஸீனை எத்தனை முறைதான் திரும்பத் திரும்பப் பார்ப்பது? ஒன்னு ஸீனை மாத்துங்க. இல்லை, என் தேவதேவியைக் கண்ணில் காட்டுங்க. இல்லையா… நீங்க என் கனவில் நம்தன நம்தன ஆடிய வரை போதும். வேற நைன்டி’ஸ் கிட்ஸ் ரொம்பப் பேர் ஏங்கிப் போய் இருக்காங்க. அவங்க கனவில் போய் ஆடி அந்த ஏக்கத்தையாவது குறைக்கிற வழியைப் பாருங்க…” என்று வள்ளென்று கத்தினான்.
அவனின் கத்தலில் திடுக்கிட்ட தேவதைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘அவசரப்பட்டுக் கோபப்பட்டு விட்டோமோ? என் தேவதேவியை என் கண்ணில் காட்டாமலே எஸ்கேப் ஆகிடுவாங்களோ?’ என்று உள்ளுக்குள் ஜெர்க்கானாலும் வெளியே முகத்தைக் கெத்தாக வைத்துக் கொண்டு தேவதைகளை உறுத்துப் பார்த்தான்.
மற்ற தேவதைகளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு ஒரு தேவதை மட்டும் அவனின் அருகே வர, ‘அடிக்கப் போகிறதோ?’ என்று வேகமாகக் கையால் கன்னத்தைப் பொத்திக் கொண்டான்.
ஆனால், அவனின் பின்னால் சென்ற அந்தத் தேவதை கையால் அவனின் கண்ணை மூட வர, “இதோ பார்… இதான் வேணாமுங்கிறது… நீ கண்ணைப் பொத்திட்டு என்னோட தேவதேவியை முன்னால் கொண்டு வந்து நிறுத்துவ. என் கண்ணு மசமசன்னு தெரியும். என் தேவதேவியை நான் இன்னைக்கும் பார்க்காமல் ஏமாந்து போகணும். அதானே உங்க பிளான்? இந்தத் தில்லாலங்கடி வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். என் கண்ணைப் பொத்தாமல் என் தேவதேவியைக் காட்டுவதாக இருந்தால் காட்டுங்க, இல்லைனா…” என்று கறாராக எச்சரித்தான்.
தேவதைகள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கண்ணைக் காட்டினர்.
விட்டுவிட்டு ஓடப் போகிறார்கள் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவனைச் சுற்றிப் புகைமண்டலமாகச் சூழ்ந்து கொண்டது.
“தேவதைகளா… என்ன பண்றீங்க? இதுக்கு நீங்க என் கண்ணையே பொத்தியிருக்கலாம்…” என்று அவன் கண் எரிச்சலுடன் கத்திக் கொண்டிருக்கும் போது அவனைச் சுற்றியிருந்த புகை எல்லாம் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது.
கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி மெல்லப் புகைமண்டலத்தின் நடுவே நடந்து வந்தவளைப் பார்க்க முயன்றான். வெள்ளையாடை தேவதைகள், வெள்ளைப் புகைக்கு மத்தியில் இளம் மஞ்சள் நிற உடையில்… இவள் தான் உன் தேவதேவி என்று சொல்வது போல் மிதந்து வந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.
வெள்ளைப் புகைக்கு மத்தியில் மஞ்சள் உடை மட்டும் பளிச்சென்று தெரிய, காலிலிருந்து மெல்ல மெல்ல அவனின் பார்வை உயர்ந்தது.
‘மடையா! இன்னைக்குத் தான் போனால் போகுதுன்னு இந்தத் தேவதைங்க எல்லாம் உன் தேவதேவியைக் கண்ணில் காட்டியிருக்காங்க. நீ என்னன்னா பட்டுன்னு முகத்தைப் பார்க்காமல் காலிலிருந்து ஆரம்பிச்சு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? முகத்தை முதலில் பாருடா விஷ்ணு’ என்று அவனின் மனசாட்சி கொட்டு வைக்க,
‘அதானே, இனி ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது’ என்று நினைத்தவன் பட்டென்று தலையை நிமிர்த்தித் தன் தேவதேவியைப் பார்த்தான்.
இளம்மஞ்சள் வண்ண உடையில் புன்னகை முகமாக நின்று, அவனின் கையைப் பற்றத் தன் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.