- Joined
- Sep 16, 2024
- Messages
- 741
- Reaction score
- 4,440
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 33
மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான்.
ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை.
தாமரை அந்தப் பக்கமாகச் சென்றதும், இந்தப் பக்கம் மகனுக்குக் கைப்பேசியில் அழைத்துத் தகவல் சொல்லியிருந்தார் செந்தாமரை.
தாய் கூறியதைக் கேட்டு, "இந்தச் சிவலிங்கப் பிரச்சினை வந்த பிறகு, வர்ற ஆபிசர்ஸ்லாம் மட்டும் எப்படி நேர்மையான ஆபிசர்ஸ்ஸா இருக்காங்கனு எனக்குச் சந்தேகமாவே இருந்துச்சுமா. அந்த ஆபிசர்ஸ் எல்லாரும் நம்ம கடத்தலுக்கு உதவாம இருந்தது மட்டும் இல்லாம, நம்ம மேல ஆக்ஷன் எடுக்குற அளவுக்குப் போனதால தானே அவங்களை எல்லாம் பிளான் செஞ்சி போட்டுத் தள்ளினோம். இதுக்குப் பின்னாடி ராஜாவோட வேலை எதுவும் இருக்குமோனு இப்ப தோணுது. அப்படிப் பார்த்தா நாம கொல்ல வேண்டியது ஆபிசர்ஸ்ஸை இல்லமா அந்த மாதிரி ஆபிசர்ஸ்ஸை இங்கே நியமிக்கச் சொல்லி ஏற்பாடு செய்ற இந்த ராஜாவையும் சக்தியையும் தான் கொல்லனும்" என்றவனாய், "அம்மா அந்த வக்கீல் வீட்டிலருந்து போகும் போது கையில எதுவும் எடுத்துட்டுப் போனானா?" எனக் கேட்டான்.
"ஆமா ஏதோ கவர் கைல வச்சிருந்தான்டா! நம்ம வீட்டு ஜன்னல்லருந்து பார்த்தேன்" என்றார்.
"நீ கொடுத்த பாயாசத்தை வச்சி அவங்க ஏதோ பிளான் செய்றாங்க போலயே!" என்றவன் சொன்னதும்,
"அய்யோ என்னைப் போலீஸ் புடிச்சிட்டு போய் ஜெயில்ல போட்டுடுவாங்களாடா" என்று பயந்தவராய் கேட்டார் செந்தாமரை.
"நமக்கு எதிரா எவ்ளோ எவிடன்ஸ்னாலும் அவங்க சேகரிட்டும்மா. இதோ இப்ப நாம பேசினதை அப்படியே ரெக்கார்ட் செஞ்சி கோர்ட்ல எவிடன்ஸ்ஸா புரொடியூஸ் செஞ்சாலும், மினிஸ்டர் பொண்டாட்டியும் மவனும் தப்பே செய்யலைனு தான் ஜட்ஜ் தீர்ப்பு சொல்லுவாரு. பவரு நம்ம கைல இருக்குமா. அவ்ளோ ஈசியா உள்ளே தூக்கி போட்டுட முடியுமா என்ன?" என்று தெனாவட்டாய் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் நின்றிருந்த நரசிம்மப் பெருமாள் கோவிலின் வாயிலைக் கடந்து சென்றிருந்தது மாதவனும் தாமரையும் பயணித்திருந்த ஜீப் வண்டி.
"இவங்க எங்கே இந்தப் பக்கமா போறாங்க?" என்று யோசித்தவனாய்,
"இந்த ஆபிசரம்மாவுக்கு வந்தன்னைக்கே பாயாசம் கொடுத்திருக்கனும். வந்த நாள்ல இருந்து நமக்கு எதிரா மட்டும் தான் வேலைச் செஞ்சிட்டு இருக்கா" என்று உரைத்தவன் தனது அடுத்தத் திட்டத்திற்கான வேலையைத் தொடங்கினான்.
நரசிம்மர் கோவில் தாண்டி ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கருங்கல்லாலான பழங்காலத்து பாழடைந்த மண்டபம் ஒன்று கண்ணில் பட்டது.
தங்கையா மணி மண்டபம் என்றிருந்த பெயரைப் பார்த்து அங்கே வண்டியை நிறுத்தினான் மாதவன்.
"இது தான் அவர் சொன்ன மண்டபமா?" என்று தாமரை கேட்க,
"அப்படித் தான் என் மனசு சொல்லுது" என்றவனாய் வண்டியிலிருந்து இறங்கினான்.
அவனுடன் இவளும் உள்ளே நுழைய, ஆறடி உயரத்தில் முறுக்கிய மீசையுடன் கையில் அரிவாளுடன் பழங்காலத்து வடிவில் ஓர் ஆண் சிலை இருப்பதைப் பார்த்து அதை நோக்கிச் சென்றான்.
"இந்தச் சிலையை முன்ஜென்மத்துல பார்த்ததா தோணுது கண்ணா" என்று தாமரை உரைத்ததைக் கேட்டு, "எனக்கும் அப்படித் தான் தோணுது தாமரை. இவர் தான் அந்தச் சடாமுடி சாமியாரா இருப்பாரோனு தோணுது" என்றவனாய் அச்சிலையின் எதிரே அமர்ந்தவன் அவளையும் தன்னருகே அமர வைத்தான்.
தாமரையின் கைப்பற்றித் தனது தொடையில் இணைந்த கைகளாய் வைத்தவனாய், "இப்படிக் கையைப் பிடிச்ச மாதிரியே கண்ணை மூடி தியானம் செய் தாமரை" என்றவனாய் தானும் கண்களை மூடினான்.
ஆழ்ந்த பக்தியுடன் மாதவப் பெருமாளை வணங்கியவர்களாய் தியானத்தில் மூழ்கிப் போன சமயம், அவர்களின் மனக்கண் முன் தோன்றிய சாமியாரின் முகம் அப்படியே இளமையான தோற்றம் கொண்டவராய் மாறியது. அத்தோற்றம் அப்படியே அவர்கள் எதிரில் இருக்கும் சிலைக்கு நிகர்த்ததாய் இருக்க, 'ஆஹா கண்ணா சொன்னா மாதிரி இந்தச் சிலையில் இருக்கிறது அந்தச் சாமியாரோட இளமைத் தோற்றமா?' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள் தாமரை.
அடுத்து தெரிந்த காட்சியில் இந்த இடம் நந்தவனமாய்ப் பூக்கள் சூழப்பட்டு இருக்க, இதே சிலை இன்னும் பொலிவுடன் மெருகுடன் காணப்பட்டது.
அச்சிலையின் முன் கோதையும் கருப்பண்ணனும் அவர்களது குழந்தையுடன் நின்றிருந்தனர்.
கோதைக்கு மேகலையால் ஏற்பட்ட உயிர் பிரச்சினை சரியாகி உடல்நலம் பெற்று அவள் நடமாடத் துவங்கிய காலம் அது!
"இவர் தான் என் தங்கையா ஆசான் கோதை! எனக்குச் சகலவிதமான போர் கருவிகளையும் பயிற்றுவித்தவர்! என்னுடைய பதின்வயதில், அவர் போருக்குச் சென்ற போது வீரமரணம் அடைந்தார். அவரது பூத உடல் புதைக்கப்பட்ட இவ்விடத்தில் அப்பொழுது அவரது மாணாக்கர்களான நாங்கள் சேர்ந்து அவருக்காகக் கட்டிய மணிமண்டபம் இது! கருப்பண்ணசாமி, மாதவப் பெருமாளை அடுத்து நான் வணங்கும் தெய்வம் இவர்! எனது தந்தைக்கு நிகரானவர். அவருக்கு என்று தனித்த குடும்பம் இல்லை. என்னை அவரது மகனுக்கு நிகராய் பாசம் காட்டி வளர்த்தார்" என்று கருப்பண்ணன் நெகிழ்ந்த குரலோடு அவரது நினைவுகளைப் பகிர்ந்த வண்ணமிருக்க, அந்த இடத்தில் விழுந்து வணங்கினாள் கோதை.
"இத்தனை நாள்கள் இல்லாமல் இன்று என்னை இங்கு அழைத்து வந்ததின் நோக்கம் யாது கண்ணா?" எனக் கேட்டாள்.
"இவர் வீரர் மட்டுமல்ல கோதை! தீவிர சிவபக்தர்! சிவனடியாருக்கு நிகரானவர். இவர் திருநீறு எடுத்துக் கொடுத்தால் தீராத நோயும் தீரும் என்று இவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் இவரிடம் திருநீறு போட வருவார்கள். அத்தகைய அற்புத இறைச்சக்தி மிகுந்தவரை நமது மாதவப் பெருமாள் சிலைக்குக் காவலாய் வைப்பதற்காகவே இன்று உன்னை இங்கு அழைத்து வந்தேன்" என்றவனாய், அவரின் முன் கோதையின் கையைப் பற்றியவாறு வணங்கி நின்றவன், "எங்கள் பாரம்பரிய வம்சத்தின் சொத்தான மாதவப் பெருமாள் சிலையைக் காப்பாற்றும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆசானே! மனித ரூபத்தில் எங்களால் செய்ய இயலாததை நல் ஆத்மாவாய் நல்ல சக்தியாய் உங்களால் செய்ய இயலும் என்று நம்புகிறேன்" என்று வேண்டி வணங்கி அவன் கேட்டிருந்த சமயம், அந்தச் சிலை உயிர்ப்பெற்று அவன் முன் நின்றிருந்தது.
கண்களில் ஆச்சரியம் விலகாமல் கோதை அவரைப் பார்த்திருக்க, "ஆசானே தாங்களா? என் மீதுள்ள பாசத்தினால் எனக்காகக் காட்சிக் கொடுக்க வந்தீர்களா? என்னே பேறு பெற்றேன் நான்! தன்யனானேன் ஆசானே" என்று கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் உரைத்தான் கருப்பண்ணன்.
"மாதவப் பெருமாள் சிலையைக் காக்கும் தெய்வீகப் பொறுப்பை எமக்களித்து என்னைப் புண்ணியவானாக்கி விட்டாய் கருப்பா! இப்பாக்கியத்தை எமக்களித்த உமக்கு வரமளிக்கச் சித்தமாய் உள்ளேன்! என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார்.
அவன் என்ன கேட்கவென்று புரியாது கோதையை நோக்க, "நான் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் இவரே எனது மணவாளனாய் என்னை மணமுடிக்க வேண்டுமென்ற வரமளியுங்கள் ஐயா" என்றாள் கோதை.
"அடுத்தப் பிறவியில் உனது கர்மா வேலைச் செய்யும் என்று உம் முன்னோர்கள் அளித்த சாபத்தின் தீர்வை என்னால் மாற்ற இயலாதே அம்மா! ஆனால் ஒரு வரம் அளிக்க முடியும், அடுத்தப் பிறவியில் உங்களை மீண்டும் இணைக்கும் பாலமாய் நானிருப்பேன்" என்று வரம் வழங்கியிருந்தார்.
அவர் கூறியதைக் கேட்டப் பின் தான், அவளின் முன்னோர்கள் மூலம் சாபத்திற்கான நிவர்த்தி ஏதோ அவளுக்குக் கிடைத்திருக்கிறது என்று கருப்பண்ணனுக்குத் தெரிய வந்தது.
அவ்வமயம் தாமரையின் கையினில் எறும்பு ஊறுவது போல் தோன்றவும் பட்டென மாதவனின் கையை விட்ட நொடி தியானத்தை விட்டு வெளி வந்திருந்தனர் இருவரும்.
"ம்ப்ச் ஏன் கையை எடுத்த தாமரை?" என்று அவளிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்த போது அவர்களின் எதிரில் நின்றிருந்தார் காவி உடையுடுத்திய சடாமுடி சாமியார்.
அவரைப் பார்த்ததும் இருவரின் உடலும் புல்லரிக்க, அப்படியே அவரின் பாதத்தினில் விழுந்து விட்டனர்.
"இருவரும் தம்பதி சமேதராய் தீர்க்காயுளுடன் சுகமாய் வாழ்வீர்கள்" என்று ஆசிர்வதித்து வாழ்த்தினார்.
"நான் ஏதோ சித்தர்னு இந்த ஊருக்குள்ள நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா நான் உனக்குக் கொடுத்த வாக்குக்காகப் பிறப்பும் இறப்பும் இல்லாம சுத்திட்டு இருக்கேன் கருப்பா" என்று தெய்வீகமாய்ச் சிரித்திருந்தார்.
"அப்ப நீங்க.... அப்ப நீங்க?" தான் ஒரு மனிதனிடம் அல்லாது ஏதோ ஆன்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதில் பயந்து நடுங்கியவளாய் மாதவனின் புஜங்களைப் பற்றிக் கொண்டு அவரை விழிகள் விரிய பார்த்திருந்தாள் தாமரை.
மாதவனுக்குள்ளும் அச்சம் ஏற்பட்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனத்தைத் திடப்படுத்தியவனாய் அவரைப் பார்த்திருந்தான்.
"ஆனா ஏன் அந்தச் செந்தாமரை அம்மா உங்களைப் பத்தி என்கிட்ட அப்படிச் சொன்னாங்க? உங்களால தான் அவங்க மகன் சாமியாரா போய்ட்டான்னு அழுதாங்களே! நீங்க இங்கே வாழுற மனுஷன் மாதிரி தானே அவங்க சொன்னாங்க" அவரை நம்ப முடியாத பாவனையில் இக்கேள்வியைக் கேட்டிருந்தாள் தாமரை.
"என்னை இங்கே மலைல வாழுற எல்லாருமே பார்த்திருக்காங்கமா. அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு சாமியார்! இங்கே பலருக்கும் நான் கண்ணுக்குத் தெரியுற மனுஷன்" என்று கூறிச் சிரித்தவராய்,
"உனக்கு என் மேல நம்பிக்கை வந்துடக் கூடாதுனு அந்தம்மா சொன்ன கட்டுக்கதை அது தாமரை! நான் உன்கிட்ட பிரகலாதப் பெருமாள் கோவிலைச் சீரமைக்கும் பணியைச் செய்யச் சொல்லிச் சொன்னதை அந்தம்மா பார்த்துட்டாங்க. உனக்கு என் மேல நம்பிக்கை வராம போனா நீ அந்தக் கோவிலுக்காக நடவடிக்கை எடுக்க மாட்டனு அப்படிச் சொன்னாங்க!" என்றார்.
இன்னுமே நம்பாத பார்வையுடன் மேலும் கீழுமாய் அவரை அவள் பார்த்திருக்க,
"எங்களுக்குக் கொடுத்த வாக்குப்படி எங்களைச் சேர்த்துட்டீங்க! ஆனா மாதவப் பெருமாள் சிலையைக் காப்பாத்தாம விட்டுட்டீங்களே ஆசானே" என்றவன் கேட்டதும் அவனின் ஆசானே என்ற அழைப்பு அவரின் மனத்தை நெகிழ்த்த,
"எத்தனை வருடங்கள் ஆயிற்று உனது இந்த ஆசானே என்ற அழைப்பைக் கேட்டு" நெகிழ்வுடன் உரைத்தார்.
"மாதவப் பெருமாள் சிலை இங்கிருப்பதை விட வேறு இடத்தில் இருப்பதே அச்சிலைக்கு நல்லது என்று அதனை முன்பிருந்த அரசாங்க களவாணிகளைக் களவாட விட்டு விட்டேன் கருப்பா" என்று தூயத் தமிழில் பேசியவர், "பார் நீ ஆசான் என்று அழைத்ததும் அக்கால நினைவில் அப்படியே பேசிவிட்டேன்" என்றவராய் சிரித்தவர்,
"இந்த மினிஸ்டரும் அவரோட மவனும் பொண்டாட்டியும் எமகாதகன்ங்க கருப்பா! சாமி சிலை எல்லாம் கடத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்சிட்டு இருக்காங்க. வெளிநாட்டுத் திருடன்கிட்ட நம்ம மாதவன் சிக்குறதுக்குப் பதிலா உள்ளூர் திருடனே மேலுனு களவாட விட்டுட்டேன். இல்லனா நீங்க இரண்டு பேரும் இங்க வர வரைக்கும் என்னால அந்தச் சிலையைப் பாதுகாக்க முடியாம போய்டும்னு அப்படி விட்டுட்டேன்" என்றார்.

Previous thread
Next thread