- Joined
- Sep 16, 2024
- Messages
- 741
- Reaction score
- 4,440
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 20
சந்தானமும் சௌந்தரும் சுரேன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன.
சிவநேசனைப் பார்த்துப் பேச நினைத்து அவர்கள் கிளம்பியிருக்க… பாதி வழியில் அவரை அழைத்துத் தாங்கள் அவர் வீட்டுக்குப் பார்க்க வருவதாகச் சொல்லச் செய்ய…
சிவநேசனோ தன் தம்பியுடன் ஒரு திருமண வீட்டில் இருப்பதாகச் சொல்லி, “நீங்க இப்ப எங்க இருக்கீங்க?” கேட்க,
சந்தானம் இடத்தைச் சொல்லவும், “நா தம்பி வீட்டுக்குத்தான் வர்றேன். நீங்க இப்ப இருக்கிற இடத்துக்குப் பக்கந்தான் சதா வீடு. அங்க போயிரு சந்தானம்.” என்றுவிட்டார்.
சந்தானம் எப்படித் தாங்கள் முன்னறிவிப்பின்றி மாப்பிள்ளை வீடு செல்வது என்று கொஞ்சம் தயங்கினார்.
அவர் தயக்கத்தைக் கண்ட சௌந்தரோ,
“சும்மா போகலாம் வாங்கண்ணே. பெரியவரே தம்பி வீட்டுக்கு வரச் சொல்லித்தான போறம். இதுல யோசனை பண்ண என்ன இருக்கு? நாமளும் இந்தச் சாக்குல மாப்ள வீட்டையும் ஒரு தடவை பாத்தாப்ல இருக்கும்.”
சொல்ல சந்தானம் சமாதானம் ஆனார்.
இருவரும் சுரேன் வீட்டிற்கே வந்தனர். சிவநேசன் வரவை எதிர்பார்த்துச் சில நிமிடங்கள் வெளியே மரத்தடியிலேயே காத்திருந்தனர்.
சிவநேசனும் சதாசிவமும் தாங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லவும் தான் இவர்கள் கேட்டை திறந்து உள்ளே வந்தவர்கள் அழைப்பு மணியைத் தேட…
அந்த வீட்டில் வெளி வாசல் கதவு பக்கமே அழைப்பு மணி அமைக்கப்பட்டிருந்ததை இருவரும் கவனித்திருக்கவில்லை.
ஒன்றிரண்டு நிமிடங்கள் நின்று பார்த்தவர்கள் உள் கம்பிக்கதவைத் தட்டிப் பார்க்க… உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது.
“இப்ப என்ன அண்ணே செய்ய? யாரும் வெளியே வரக் காணோம்!”
“கொழந்த அழுறதுல கேட்டிருக்காது சௌந்தரு. விடு. கதவு சும்மாத்தானே மூடியிருக்கு? வா அந்த இருக்கைல உட்காருவம். சிவா இப்ப வந்திருவாப்ல.”
இருவரும் வெரெண்டாவில் பிரவேசித்து அமரப்போக… அவர்கள் வெளியே நின்ற போது கேட்காதவை இப்போது துல்லியமாகக் கேட்கச் செய்தது.
ஹால் கதவருகே வந்திருந்தவர்கள் அங்கே நடந்ததை ஓரளவு புரிந்துகொண்டனர்.
அச்சூழ்நிலையை உள்வாங்கி ஒருவருக்கொருவர் பார்த்து நின்ற அண்ணன் தம்பி இருவரும் மற்றவர் முகத்தில் என்ன தெரிந்ததோ…
சிவநேசனிடம் பேச நினைத்ததைப் பேசாமல், அவர் வரும் வரைக்கும் காத்திருக்காமல் அங்கிருந்து வெளியேறினர்.
அவர்கள் இருந்த மனநிலையோ என்னவோ சுரேன் வீட்டினர் யாருமே சந்தானத்தையும் சௌந்தரையும் பார்த்திருக்கவில்லை.
சுரேன் கிளம்பி வரும் முன்னர் யமுனா சமையலைத் தொடரச் செல்ல… சுதாவுக்கு மாமியாருக்கு உதவப் போவதா இல்லை குழந்தையைப் பார்ப்பதா என்றிருக்க…
அவள் முகம் பார்த்த சுந்தர், “நீ ரூமுக்கு வா. கொஞ்ச நேரம் ஃப்ரீயா இரு.” எனச் சொல்லிக் குழந்தையுடன் அவனும் அவர்களின் பெட்ரூம் சென்றுவிட்டான்.
ஹாஸ்பிடல் அழைத்துத் தனக்குப் பதில் வேற யாரையும் டியூட்டி பார்க்க மாற்றிவிட சொல்லிக் கேட்டு அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான்.
மனைவியிடம் குழந்தைக்கு என்ன எப்படிச் செய்வது எனக் கேட்டுக்கொண்டு சுந்தர் அவளிடம் அப்படியே பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
முன் தினம் வெண்ணிலா வீடு சென்று வந்தது சுதாவுக்கு ஒரு பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்திருந்தது.
வெண்ணிலாவிற்கு இருக்கும் ஜனக்கட்டு ஒரு பக்கம் அவளை மிரட்டியது. இன்னொரு பக்கம் அவர்கள் வீட்டில் அத்தனை பேருமே வெண்ணிலாவைத் தாங்கிப் பார்ப்பது வேறு சுதாவுக்கு ஒரு மாதிரி காம்ப்ளெக்ஸ் உருவாக ஆரம்பித்திருந்தது.
சுதா உள்பட வீட்டிற்கு வந்தவர்களை எல்லாம் வெண்ணிலா வீடு நன்றாகக் கவனித்தது. அதில் யாருக்கும் எந்தக் குறையுமில்லை. ஆனால், அது வெண்ணிலா வீடு. அவளுக்கு அங்கே முக்கியத்துவம் இருக்கும் தானே?
அதுவும் போக அன்று அவள் தானே விழா நாயகி? பின்னே அந்த முக்கியத்துவமும் சேர்ந்துகொள்ளாதா? ஏனோ, அவள் மூளைக்கு அது எட்டவில்லை.
சுதா நல்லவள். நண்பனுக்காகப் பார்ப்பவள் தான். ஆனால், அது சாதாரணமாக இருக்கும் சுதாவின் குணம். ஏனோ, இப்போது அவள் மாறுபட்டவளாய்!
ஏற்கெனவே போஸ்ட் பார்ட்டெம் டிப்ரெஷனில் இருக்கும் சுதாவுக்கு இவை ஒவ்வொன்றும் சேர்ந்துகொண்டு இன்னும் மனநிலையைப் பாதித்தது.
சுரேன் அவளுக்கு நெருங்கிய நண்பன். அவனுடைய கவனம் கூட இப்போது வேறெங்கோ அல்லவா?
பெண்களுக்கு முதல் பிரசவம் புதிய அனுபவம். இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரசவமும் ஓர் அனுபவத்தைத் தரும். முதலாவது போல் இரண்டாவது இருக்காது.
ஏதோ ஓர் உபாதை, வருத்தம், மனநிலையெனக் கர்ப்பக்காலமும்… ஒவ்வொரு விதமான பேறுகாலமும் பெண்களுக்கு ஏற்பட்டது தான்.
பொதுவாக இப்படி அப்படியெனப் பல கதைகள் பகிரப்படும். அனுபவசாலிகள் கொடுக்கும் டிப்ஸ் தான். ஆனால், இவர்கள் அனுபவிப்பது வேறாக இருக்கலாம்.
அதுவரை தன் சொந்தமாய்… வேறு யாரும் உணர முடியாவொரு தனித்துவமான பந்தத்தைத் தோற்றுவித்தபடிக்கு இருபத்தி நான்கு மணிநேரமும் வயிற்றில் சுமந்திருந்த சிசு… திடீரென அங்கில்லாமல் போகும் போது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது.
எதையோ இழந்துவிட்ட தோற்றம்… அதைக்கொண்டு ஒரு வெறுமையான மனநிலை!
எல்லோருக்கும் இப்படிப் படுத்தும் என்றில்லை. சிலருக்குத் தெரியவே செய்யாது!
எளிதாகக் கடந்திருப்பர். சிலருக்குத் தெரிந்தாலும் அதுவும் கடந்து போகும், எந்த விதமான பாதிப்புமின்றி.
வேறு சிலருக்குப் பெரிதும் படுத்தியெடுக்கும். அந்த நேரம் அவர்கள் மனநிலைமை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
அந்த மாதிரி உள்ள இளம் தாய்மார்களுக்கு அதிகமான கவனிப்பும் ஆறுதலும் தேவைப்படுகிறது. அவர்கள் இழந்ததாக நினைப்பது தவறு என்பதை உணர்த்தி, ஒரு பாதுகாப்பான வட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.
குழந்தை பெறந்த வீட்டில் வேலைக்கா பஞ்சம்?
பல குடும்பங்களில் அந்த மாதிரி பாதிப்புக்குள்ளான பெண்ணின் இந்த நிலையை யாரும் உணர்வதில்லை.
‘நாங்கல்லாம் பெக்கலையா வளக்கலையா… குடும்பத்த பாக்கலையா? என்னமோ புதுசா பகுமானத்த காட்டுறாளுக!’
இப்படியான சாடல்களையும் குழந்தை பெற்ற அப்பெண் கடக்க வேண்டும்.
கூட்டுக்குடும்பமாக வாழும் போது பல விசயங்கள் எளிது.
இன்னதென்று தெரியாமலேயே கஷ்டமும் கடந்து போயிருக்கும்.
அங்கலாய்த்துப் போய் நொடித்துக்கொள்ளும் அப்பெரியவர்களுக்கு அந்தக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிட்டியிருக்கலாம். அக்காலமே ஒரு வரம்!
இப்போதுள்ள தனித்தீவான இந்த நியூக்ளியர் ஃபேமிலி சாபமே!
இதைத் தெரியாமல் சிலர் தனிமைக்கு ஆசைப்பட்டுத் தனிக்குடித்தனத்தை விரும்புகிறார்கள்.
ஆனால், பலருக்கு அவர்கள் விரும்பாமலேயே அது தான் அமைப்பு. அவர்களின் வேலை, வாழ்வாதாரம் இப்படி ஏதோவொன்று சொந்த ஊரென்ன, நாட்டைவிட்டே போகச் செய்துவிடுகிறது.
யாருக்கு என்ன கிட்டுகிறதோ…
காலமும் என்ன வைத்திருக்கிறதோ…
எதிர்நீச்சல் பொது விதி. யாரும் எதையும் சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்!
சுந்தருக்கு இந்த போஸ்ட் பார்ட்டெம் டிப்ரெஷன் பற்றித் தெரியாமல் என்ன?
டாக்டர் தானே… நன்றாகத் தெரியும். நேரடி அனுபவம் தானில்லை.
சுதா இங்கேயே இருந்திருந்தால் முன்னரே கண்டுகொண்டிருப்பான். இப்போது சில நாட்களாகத்தானே புகுந்த வீட்டிலிருக்கிறாள்? அதனால் சுந்தரின் கவனத்தில் வரவில்லை.
இப்பொழுது அவளைக் கூர்ந்து கவனிக்கவுமே தெரியச் செய்தது. அவளிடம் பேச்சுக் கொடுக்கவும், இன்றைய அவளின் வெளிப்பாடு எதனால் என்றும் தெரிய வந்தது.
அவளிடம் தன்மையும் மென்மையுமாகப் பேசியவன் எடுத்துச் சொல்லவும் செய்தான்.
இன்னதென்று தெரிந்தால் அவளுக்குமே பயமில்லாமல் போகும் என்று நினைத்தான். படித்தவள் தானே? எளிதாகக் கிரகித்துக்கொள்வாள் என்று நினைத்தான்.
சுதாவும் கேட்டுக்கொள்ளச் செய்தாள். மனைவியிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சுந்தருக்குள் வேறொன்றும் ஓடியது.
இப்போது சுதாவுக்கு இருப்பது?
இந்த போஸ்ட் பார்டெம் டிப்ரெஷன் மட்டுமா? இது ஒரு தற்காலிகப் பிரச்சனை தான். நாளடைவில் சரியாகிவிடும்.
ஆனால், ஆரம்பத்திலேயே சுதாவுக்கு வெண்ணிலா மீது ஏற்பட்டு இருக்கும் இப்படியானதொரு உணர்வு நல்லதில்லையே?
அதுவும் இதை அந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவள் காட்டச் செய்தாள்? அவள் என்ன நினைப்பாள்? அவளின் புரிதல் எந்தளவுக்கு இருக்கும்?
உள்ளூர ஒரு புதுக்கவலை உருவானது. தம்பியிடமும் பெற்றோர்களிடமும் இதைப்பற்றிப் பேச நினைத்தான்.
அப்படி இவன் பேசும் போது யமுனா ஒரு தீர்வைச் சொல்வதாக நினைத்து வேறொன்றை இழுத்து வைப்பார் என்று சுந்தர் யோசிக்கச் செய்யவில்லை.
ஒரு சிறு துளியேனும் அப்படி ஒரு கோணத்தில் யோசனை போயிருந்தால் கண்டிப்பாகத் தம்பியிடம் மட்டுமே பேச செய்திருப்பான்.
சுரேன் கிளம்பி வரும் போது டிஃபென் ரெடியாகியிருந்தது. வேலை செய்யும் பெண்மணியும் வந்திருக்க… அவரை வைத்துக்கொண்டு யமுனா சில நிமிடங்களிலேயே பூரி, கிழங்கு செய்து டைனிங்கில் வைத்துவிட்டார்.
சுதாவுக்கு உருளைக்கிழங்கு தர வேண்டாமென யமுனா காளான் பிரட்டலை செய்துகொண்டிருந்தார். காளான் பால் சுரக்க உதவுகிறது.
அத்துடன் சுதாவுக்குமே காளான் பிடிக்கும். யமுனா நேற்றே பட்டன் மஷ்ரூம் வாங்கி வைத்திருந்தார்.
சுரேன் அலுவலகம் செல்லும் முன்னர் அவரிடம் சொல்லிக்கொண்டு ஷூ அணியச் செல்ல…
“டேய் சாப்பிடாம கிளம்பிட்ட?”
“டைம் ஆச்சிம்மா…”
“ஆகட்டும் இப்ப என்ன போச்சி… உன்னை யாரு கேள்வி கேட்கப் போறா? இரு சாப்பிட்டிட்டுப் போ!”
“என்னைய யாரு கேள்வி கேட்கப் போறாங்களா? அது சரி… இப்படி நாங்கல்லாம் நினைச்சா டிபார்ட்மெண்ட் என்னாகும்? எனக்கும் மேல எத்தனை கேடர் இருக்கு… எப்ப வேணா கேள்வி வரும்.”
அம்மாவுக்குப் பதில் சொல்லிக்கொண்டே சுரேன் ஷூ லேஸ் கட்டி முடித்தான். அதற்குள் யமுனா இரண்டு உப்பலான பூரிகளை எடுத்து வந்தார்.
“ம்ம் ஆ காமி!” எனச் சின்ன மகனுக்கு ஊட்டச் செய்ய… அவன் வாய் திறவாமல் அம்மாவை அதிசயப்பிறவி போல் பார்த்தான்.
“அட வாயைத் திறடான்னா காணாததைக் கண்ட மாதிரிக்குப் பார்த்திட்டு நிக்கிற?”
யமுனா மகனை உரிமையாக அதட்டச் செய்ய… அவனுமே வாயைத் திறந்து ஒரு வாய் வாங்கிக்கொண்டு…
“எங்கம்மா எனக்கு ஊட்டுறது அதிசயமில்லையா… அப்போ இப்படிப் பார்க்கத்தான் செய்வாங்க!”
கேட்டுவிட்டு மட மடவென இரண்டு பூரிகளை உருளைக்கிழங்கு மசாலுடன் உண்டு முடித்தான்.
யமுனா ஏற்கெனவே வேலை செய்யும் பெண்மணியிடம் உள்ளே வைத்துச் சொல்லிவிட்டு வந்திருக்க…
அவளும் உப்பலாக இல்லாமல் இரண்டு மொறு மொறுப்பான பூரிகளை வைத்து, அதன் மேல் ஜீனி தூவி… ஒரு கிண்ணத்தில் ஆடையில்லாமல் பாலை வடிகட்டி எடுத்து வந்து தந்துவிட்டு நகர்ந்தாள்.
தட்டத்தில் வந்ததைப் பார்த்த சுரேன் அசந்துவிட்டான்.
“அம்மாவுக்கு இதெல்லாம் கூட ஞாபகமிருக்கா… கலக்குற போ!”
நக்கலடித்த மகனைத் தோளில் தட்டிய யமுனா பாலை விட்டு மொறு மொறு பூரியைப் பிட்டு அவன் வாயில் திணித்தார்.
பல வருடங்களுக்குப் பின்னர் இப்படியொரு கவனிப்பு… சுரேன் கொஞ்சமாக இளகினாலும், ‘இது எத்தனை நாளைக்கோ!’ என்று தான் அவன் மனத்தில் ஓடியது.
சுரேன் வாசல் வரவும் சரியாக அதே நேரத்தில் சதாசிவமும் சிவநேசனும் வீடு வந்து சேர்ந்தனர்.
வந்ததுமே இருவரும் ஒரே நேரத்தில், “அவங்க எங்க சுரேன்?” விசாரிக்க…
“யாரு எங்க கேட்குறீங்க ரெண்டு பேரும்? புரியல.” சுரேன் புருவம் உயரக் கேட்கச் செய்ய…
“டேய் பொண்ணு வீட்ல இருந்து வந்தாங்களே ரெண்டு பேர். பொண்ணோட சித்தப்பாவும் பெரியப்பாவும். அவங்க எங்கன்னு கேட்டா திருப்பி எங்களையே கேள்வி கேப்பியா?” சதாசிவம் மகனை முறைக்க…
“அட சும்மா இரு சதா! சுரேன் சந்தானமும் அவென் தம்பி சின்னவனும் வந்திருந்தாங்களே… இங்க இருந்து தானே பா எனக்கு போன் பேசினாங்க!”
தம்பியை அமர்த்திவிட்டு, சுரேனிடம் திரும்பி சிவநேசன் கேட்கச் செய்ய…
“பொண்ணு வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு யாருமே வரலையே பெரிப்பா… நா வீட்ல தான இருந்தேன். இங்கேயா வந்தாங்க? நல்லாத் தெரியுமா பெரிப்பா?
இப்ப ஃபோன் பண்ணிப் பாருங்க. ஒரு வேளை வீடு மாறிப் போயிருக்க சான்ஸ் இருக்கு.” சுரேன் சொல்லவும்,
“வீடு மாறிப் போக வாய்ப்பே இல்லை சுரேன். வீட்டு அடையாளத்த சரியா சொன்னாங்களே!”
சிவநேசன் உறுதியாகச் சொன்னார்.
“ஓஹ்… என்ன விசயமா வந்தாங்க பெரிப்பா?”
சுரேனுக்குப் பெரியப்பா சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் பலத்த யோசனை ஓடியது. ஒரு வேளை வீட்டில் நடந்ததைக் கேட்டு இருப்பாங்களோ?
“எத்தனை மணிக்கு இங்க இருந்தாங்க தெரியுமா?”
“எதுக்குன்னு தெரியலப்பா. அங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டிருக்கோம்னு அழைச்சி சொன்னாங்க. உங்க பெரியம்மாவும் வீட்ல இல்லை. வேறொரு விசேஷத்துக்குப் போயிருக்காளா. அதான் அவங்கள இங்க வரச் சொன்னேன். எத்தனை மணிக்கா… ஒரு...”
அவர் தோராயமாய் நேரத்தைக் கணக்கிட்டுச் சொல்ல… சுரேன் மனத்திலோ, ‘எந்த சீனில் அவங்க எண்ட்ரி கொடுத்தாங்களோ!’ ஒரு நொடி பக்குன்னு ஆனாலும், சமாளித்துவிட்டான்.
‘நம்ம பார்க்காததா! விடு விடு எதுன்னாலும் சமாளிச்சிரலாம்!’ தனக்குள் சொல்லிக்கொண்டான்.
“சரி எனக்கு லேட் ஆகிட்டு. நீங்க அவங்களுக்கு ஃபோன் போட்டு என்னன்னு கேளுங்க பெரிப்பா. கேட்டிட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க. போயிட்டு வர்றேன். பை!”
அப்பா, பெரியப்பா இருவருக்கும் பை சொல்லிவிட்டு பைக் உதைத்துக் கிளப்பினான் சுரேன்.
அவன் அலுவலகம் அடையவும் கமிஷனர் அழைக்கச் செய்ய… சுரேனை அவன் அலுவல் இழுத்துக்கொண்டது.
அன்று மாலையில் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு சர்வேஷ் சுரேனைப் பார்க்க வந்தான்.

Previous thread
Next thread