Only logged in customers who have purchased this product may leave a review.
பூரண நிலவே!
பூரண நிலவே! — Preview
தங்கை சென்று கதவை அடைத்ததும் மனைவியின் புறம் திரும்பினான் நிலவேந்தன்.
அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் செல்ல, தலையைக் குலுக்கிக் கொண்டு தானும் பின்னால் சென்றான்.
அவன் கதவைச் சாற்றிவிட்டு திரும்ப, அவனின் மனைவியோ அதற்குள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘இவளைச் சமாளிப்பது கஷ்டம் போலவே?’ என்று தனக்குள் புலம்பியபடி மனைவி வரும் நேரத்திற்காகக் காத்திருந்தான்.
வெளியே வந்தவள், “பூரணி…” என்ற கணவனின் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் படுக்கையில் சென்று அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டாள்.
அவளின் அருகில் படுத்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், “ஸாரி க்யூட்டி…” என்று முனகியபடி அவளின் முதுகில் தன் அதரங்களைப் பதித்தான்.
அவள் தன் உடலை விறைக்க, அவளைத் தன் பக்கம் திரும்பியவன் இழுத்து மேலே போட்டுக்கொள்ள, “விடுங்க… விடுங்க…” என்று துள்ளினாள்.
அவளைத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன், “ப்ளீஸ் க்யூட்டி, கோபிக்காதே! காலையில் எனக்கு எவ்வளவு கில்டியா ஃபீல் ஆச்சு தெரியுமா? இதுக்கு முன்னாடி நான் இப்படி ஃபீல் செய்ததே இல்லை…” என்று வருத்தத்துடன் உரைத்தவன், தங்கை, தந்தை வெளியே இருக்கும்போது தான் அறைக்குள் இருந்ததால் வந்த குற்றவுணர்வை அவன் எடுத்துரைத்த அடுத்த நொடி கணவனை உதறிவிட்டு விலகி எழுந்தாள் பூரணா.
“க்யூட்டி?” அவன் அதிர்வுடன் அழைக்க,
“அப்ப என் கூட இருந்ததை அசிங்கமா நினைக்கிறீங்களா?” என்று முகம் சிவக்க கோபத்துடன் கேட்டாள்.
“ஏய், என்ன கேட்கிற நீ?” தானும் எழுந்து அமர்ந்து மனைவியை அதட்டினான்.
“நான் சரியாத்தான் கேட்கிறேன். உங்க மனைவி கூடத் தானே நீங்க அறைக்குள் இருந்தீங்க. அதுக்கு எதுக்கு உங்களுக்கு கில்டி ஃபீல் வருது? என்கூட இருப்பதை நீங்க அசிங்கமா நினைச்சால் தான் உங்களுக்கு அந்த ஃபீல் வந்திருக்கணும்…”
“முட்டாள்தனமா பேசாதே! நம்மோட தனிமையை நான் ஒன்னும் அசிங்கமா நினைக்கலை. வெளியில் வயசுக்கு வந்த பொண்ணை வச்சுக்கிட்டு நான் ரூமுக்குள்ள ரொம்ப நேரம் இருந்தது தான் தப்புன்னு தோனுச்சு. என்னை உன்னோட ஹஸ்பண்டா மட்டும் யோசிக்காமல் ஒரு பொண்ணுக்கு அண்ணனா, ஒரு அப்பாவுக்கு மகனா யோசிச்சு பாரு. என்னோட ஃபீலிங்ஸ் புரியும்…” என்றான்.
“நீங்க பேசறது உங்களுக்கே அபத்தமா இல்லையாங்க? உங்களை என்னோட ஹஸ்பண்டா நினைக்காமல் வேற எப்படி நினைக்க முடியும்? என் ஹஸ்பண்ட் என் கூட ரூமுக்குள் ரொம்ப நேரம் இருந்தால், அதில் என்ன தப்பிருக்கு? இதோ இப்ப கூடத்தான் நாம ரூமுக்குள்ள தனியா ரொம்ப நேரம் இருக்கோம். இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“விதண்டாவாதம் பேசாதே பூரணி. பகலில் இருப்பதற்கும் நைட் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. நீயே பார்த்த தானே முகிலி நம்ம ஹனிமூன் பத்தி எல்லாம் பேசுற லெவலுக்கு வந்துட்டாள். அப்படி இருக்கும்போது நாம பகலில் கதவை மூடிட்டு உள்ளே இருந்தால் அவளோட கற்பனை எப்படி எல்லாம் இருக்குமோன்னு எனக்குப் பயமா இருந்தது. அதனால்தான் கவனமா இருக்கணும்னு நினைச்சேன். அந்த மனநிலையுடன் என்னால் உன்கிட்ட காலையில் விவரமா அதைப் பேசக்கூட முடியலை.
காலையில் ரூமுக்குள் வந்து உன்கிட்ட இதையெல்லாம் விளக்கமா சொல்லிட்டு என்னால் உடனே கிளம்ப முடிஞ்சிருக்குமா தெரியலை. ஏன்னா, நீ சரியாக இருந்தாலும் உன் அண்மைக்குப் பழகிப் போயிருந்த நான் சரியா இருக்க முடியாதுன்னு தோனுச்சு. என்னோட இந்த ஃபீலிங்ஸை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு பூரணி…” என்றான்.
அவளுக்கு அவன் சொல்ல வந்தது புரிந்துதான் இருந்தது. ஆனாலும், அந்த வீட்டிற்கு அவள் அன்றுதான் வந்திருக்கிறாள். திருமணத்தன்று வந்திருந்தாலும் பூஜை அறையில் விளக்கேற்றி, பால், பழம் சாப்பிட்டதும் அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பி இருந்தார்கள் என்பதால், அந்த வீட்டுப் பழக்கவழக்கம் எதுவும் அவளுக்குத் தெரியாது.
அப்படியிருக்கையில் அவன் அப்படியே விட்டுவிட்டுச் சென்றது என்ன இருந்தாலும் தவறு என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அதற்கு என்ன விளக்கம் சொல்வான் இவன்? என்ற கோபமும் வர, அதை அவனிடமே கேட்கவும் செய்தாள்.
“அது என்னோட தப்பு தான். நான் அதையும் அந்த நேரம் யோசித்திருக்கணும். ஸாரி!” என்று இறங்கி வந்து மன்னிப்பு கேட்டவன், “அந்தத் தப்புக்கு தண்டனையா இதை வச்சுக்கோ!” என்றவன், அவள் இதழில் அழுத்தமாகத் தன் அதரங்களைப் பதிக்க, அதன் பிறகும் அவள் எங்கே தன் கோபத்தை இழுத்து பிடித்து வைப்பது? எப்போதும் போல அவனின் ஹாட்டில் மென்பனியாய் உருகினாள் அவள்.
***
“அண்ணா… இந்த அண்ணி என்னைத் திருடின்னு சொல்லிட்டாங்கண்ணா…” என்று அங்கே ஓரமாக நின்றிருந்த பூரணாவை சுட்டிக்காட்டி சொல்லிவிட்டு, மீண்டும் அண்ணனின் மார்பில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள்.
“வாட்! என்ன? என்ன சொன்ன?” தங்கை சொன்னதை நம்ப முடியாமல் அவளின் தோளை பிடித்து உலுக்கினான்.
“ஆமாண்ணா…” என்றவள், தன் அறைக்கு வந்து அவள் செயின் பற்றிக் கேட்டதைச் சொல்ல,
“பூரணி, என்ன இது?” என்று குரலை உயர்த்தி அதட்டிக் கேட்டான் நிலவேந்தன்.
“ஆமாங்க, கேட்டேன். என் செயின் ஒன்னை காணோம். நான் காய்ந்த துணியை வெளியே எடுக்கப் போய்ட்டு திரும்பி வரும்போது நம்ம ரூமிலிருந்து யாரோ வெளியே போனதை பார்த்தேன். ரூம் போய்ப் பார்த்தா பீரோ சரியா மூடாம திறந்து இருந்தது. சாவியும் இடம் மாறி இருந்தது. உள்ளறையைத் திறந்து பார்த்தால் என்னோட ஒரு செயினைக் காணோம்…” என்றாள் பூரணா.
“யாரோ போனாங்களாம். அது உடனே இவங்க எப்படி நான்னு சொன்னாங்க? என்னைத் திருடி வேற சொன்னாங்கண்ணா…” என்று குற்றம் சாட்டினாள் வான்முகிலி.
“என் ரூமிலிருந்து போன ஆள் எல்லோ கலர் ட்ரெஸ் போட்டிருந்த ஆள்…” என்று பூரணா சொல்ல,
“விஜயாமாவும் தான் அந்தக் கலர் ட்ரெஸ் போட்டுருக்காங்க…” என்று சட்டென்று சொன்னாள் வான்முகிலி.
“ஐயோ! அம்மா! நான் எடுக்கலைங்கமா…” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த விஜயா, “என் மேல சந்தேகமா பூரணாமா? அதுக்குத்தான் உங்க ரூம் பக்கம் நான் வந்தேனான்னு கேட்டீங்களா? என் பிள்ளை மேல சத்தியமா நான் எடுக்கலைமா…” என்று பதறித் துடித்தார் அவர்.
“இல்லை, விஜயாமா… எனக்கு உங்க மேல் சந்தேகம் இல்லை…” என்று பூரணா மறுக்க,
“அப்ப நான்தான் எடுத்தேன்னு சொல்றீங்களா? அண்ணா, பாருங்கண்ணா…” என்று கத்தினாள் வான்முகிலி.
“என்ன பண்ணிட்டு இருக்கப் பூரணி நீ? உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கலை. நீ யாரை குற்றம் சொல்றன்னு புரிந்து தான் சொல்றீயா?” என்று மனைவியை அதட்டினான் நிலவேந்தன்.
“ஏங்க, என்ன நடந்ததுன்னு முழுசா கேளுங்க. காரணம் இல்லாமல் நான் சொல்வேனா?” பூரணா கேட்க,
“அதான் இப்ப சொல்லிட்டு இருக்கீயே… உன் செயினை நீ எங்கயோ தொலைச்சிட்டு என் தங்கை மேல திருட்டுப் பட்டம் கட்டுவியா நீ? அவ்வளவு தூரத்துக்கா என் தங்கை மேல் உனக்கு வெறுப்பு. ச்சீ…” என்று அருவருப்பாக முகத்தைச் சுளித்தான்.
“ஐயோ! நான் சொல்ல போறதை முழுசா கேளுங்க. உங்க தங்கை ஒன்னும் சாதாரண ஆள் இல்லை. அவள் என்னென்ன வேலை எல்லாம் பார்க்கிறாள்னு தெரிந்தால் நீங்க தாங்க மாட்டீங்க…” என்று பூரணா தான் அறிந்து கொண்டதை சொல்ல முயல,
“ச்சீ, வாயை மூடு! பொண்டாட்டிங்கிற பெயரில் ஒரு ராட்சசியைக் கட்டி கூட்டிட்டு வந்திருக்கேன். என் தங்கை மேல் வெறுப்பைக் காட்டின. இப்ப திருட்டு பட்டமே கட்ட ஆரம்பிச்சிட்ட. மனுஷியா நீயெல்லாம்?” என்று அவன் கத்த, அதிர்ந்து போனாள் பூரணச்சந்திரா. அவன் பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் அவளைத் தாக்கியது.
“ஏங்க…” என்று அவள் அதிர,
“வாயை திறக்காதே நீ! வாயைத் திறந்த நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…” என்று ஆவேசமாக அவளை அடிக்கப் பாய்ந்தான்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வந்தாலே பிரச்சினையும் கூடவே வந்துவிடும். அதுவும் அந்த நபர் கணவனின் நெருங்கிய சொந்தமாக இருந்தால்? அந்தச் சொந்தம் இக்கதையின் நாயகன், நாயகிக்கு இடையே ஏற்படுத்தும் குழப்பமும், அதனால் கணவன் மனைவிக்குள் நேரும் பிரச்சினைகளையும் இருவரும் அதனை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்பதையும் கதையில் காணலாம்.
கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைத் தளத்தில் ரிவ்யூ & ரேட்டிங் மூலம் தெரிவிக்கவும்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5 -
ஞாபகம் முழுவதும் நீயே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.