அத்தியாயம் - 4
“ஏசி போதுமா? இன்னும் கூட வைக்கட்டுமா?” என்று காரில் தன் அருகில் அமர்ந்திருந்த துளசியிடம் கேட்டான் அகத்தியன்.
“இதே போதும்!” என்று துளசி சொன்னதும் காரை எடுத்தான்.
மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு துளசியை அழைத்துக் கொண்டு தென்காசியில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தான் அகத்தியன்.
மருத்துவமனைக்குத் தானாகப் பேருந்தில் சென்று பரிசோதனை செய்துவிட்டு வருவதாகச் சொன்னவளை தனியாக விடாமல் தனது காரில் வரச் சொல்லியிருந்தான்.
பின் இருக்கையில் அமர போனவளை, பேச வசதியாக இருக்காது என்று தடுத்து, முன் இருக்கையில் அமர்ந்து வரச் சொன்னான்.
இரவு அகத்தியன் பேச நினைத்ததை முழுதாகப் பேசி முடித்திருக்கவில்லை.
அவர்களின் பேச்சுச் சத்தத்தில் அமுதினி புரண்டு படுத்து, சிணுங்க ஆரம்பிக்க, “நாளைக்குப் பேசலாம் துளசி. இப்ப எதைப் பத்தியும் நினைக்காமல் தூங்கு…” என்று சொல்லிவிட்டு மகளைச் சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு, அவனும் உறங்கியிருந்தான்.
அவன் சொன்னது புரியாமல் குழம்பியவள், அதைப் பற்றி யோசித்துக் கொண்டே உறக்கத்தைத் தழுவியிருந்தாள்.
பேச வேண்டும் என்ற அகத்தியன் சிறிது தூரம் வரை எதுவுமே பேசவில்லை.
“நைட் ஏதோ சொன்னீங்க?” என்று துளசி தான் ஆரம்பித்து வைத்தாள்.
“அத்தை உன்னைக் கட்டாயப்படுத்தலைன்னா நீ மறுமணத்தைப் பத்தி யோசிச்சிருப்பியா துளசி?” என்று கேட்டான் அகத்தியன்.
“இல்லை, யோசிருக்க மாட்டேன்…” என்று உறுதியாக மறுத்தாள் பெண்.
“ஏன்?” என்று கேட்டான்.
“எப்படி என்னால் யோசிக்க முடியும்? அதுவும் அவர் பிள்ளை என் வயிற்றில் இருக்கு. அவர் இழப்பை கூட நான் இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன். அதுக்குள்ள அம்மாவுக்கு இப்படி. நான் எதையும் யோசிக்கக் கூடிய நிலையில் இல்லை. நல்ல மனநிலையில் இருந்தாலுமே யோசிச்சிருக்க மாட்டேன். என் வாழ்க்கைக்கு என் பிள்ளை மட்டும் போதும்னு வாழ்ந்திருப்பேன்…” என்றாள் துளசி.
“என் பதிலும் அதேதான்! சுகந்தியோட இழப்பில் இருந்தே நான் இன்னும் மீளலை. கொரானா வந்து அவள் என்னை விட்டு போவாள்னு நான் கனவில் கூட நினைச்சதில்லை. அவளோட சேர்ந்து அவள் வயிற்றில் இருந்த என்னோட பிள்ளையையும் இழந்திருக்கேன். அந்த வலி எனக்கு இன்னும் ஆறா ரணமா இருக்கு.
ஆனால், அப்பா, அம்மா அதெல்லாம் புரியாமல் எனக்குப் பொண்ணு தேடினாங்க. எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லைன்னு சொன்னதை அவங்க காது கொடுத்தே கேட்கலை. பெத்தவங்களா என் எதிர்கால வாழ்க்கையை நினைச்சு அவங்களுக்கு இருந்த பயத்தையும் தப்பு சொல்ல முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை வேற இருக்காள். அவளுக்கு அந்தந்த வயசுக்கு தேவையானதையும் பார்க்கணும். அதுக்கு நீ கல்யாணம் பண்ணியே தீரணும்னு சொன்னாங்க. அப்படியும் நான் மறுத்த நிலையில் தான், அத்தைக்கு இப்படி ஆனது…” என்ற அகத்தியன் பெருமூச்சு விட்டான்.
“அம்மா… அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு என் வாழ்க்கை பற்றி அவங்களுக்கு இருந்த பயமும் காரணமோன்னு எனக்குக் குற்றவுணர்வு உண்டு…” என்று துளசி சொல்ல,
“புற்றுநோய் வந்தால் அதுக்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும் துளசி? அவங்க விதி அது!” என்றான் அகத்தியன்.
“சரியான சிகிச்சை பார்த்து அம்மாவும் கொஞ்சம் போராடியிருந்தால், அவங்க இப்ப நல்லா இருந்திருப்பாங்க. ஆனால், என்னைப் பற்றிய கவலையில் அவங்களால் போராட முடியலை. என்னை இப்படியே விட்டுட்டு போக முடியாதுன்னு அவங்க எடுத்த இந்த முடிவு எனக்கு ஏற்புடையதா இல்லைனாலும், அவங்க கடைசி நேர ஆசைன்னு சொல்லும் போது எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியலை…” என்று துளசி சொல்ல,
“நாம என்னதான் மனசில் ஒரு முடிவு எடுத்து வச்சிருந்தாலும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் நம்மை வேற ஒரு முடிவை எடுக்க வைக்குது துளசி…” என்று அகத்தியன் சொல்ல, அவளுக்கும் அது சரி என்றே தோன்றியது.
“நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதற்கான காரணம், ஒன்னு அப்பா, அம்மா என்னை இப்படியே இருக்க விடமாட்டாங்க. இன்னொரு காரணம், அத்தையோட உடல்நிலை! அதைவிட என்னோட உண்மையான காரணம் ஒன்னு இருக்கு…” என்றவனைக் கேள்வியுடன் பார்த்தாள் துளசி.
அவளின் புறம் திரும்பி லேசாகப் புன்னகைத்துவிட்டு, சாலையில் கவனத்தை வைத்தவன், “பெரியவங்க ஆசையும் நிறைவேறணும்… அதே நேரத்தில் என்னோட எண்ணமும் நிறைவேறணும்… அதுக்கு இந்தக் கல்யாணம் சரியா இருக்கும்னு எனக்குத் தோனுச்சு…” என்றான் அகத்தியன்.
“என்ன உங்க எண்ணம்?” குழப்பத்துடன் கேட்டாள்.
“நான் மனதளவிலோ… உடலளவிலோ… இன்னொரு பொண்ணு கூட வாழ தயாராகலை துளசி. தயாராவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை…” என்றான் அகத்தியன்.
“அப்புறம் ஏன்?”
“அப்புறம் ஏன் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்னு கேட்கிறாயா? நீயும், என்னைப் போல் தானே நினைச்சிருப்ப…?” என்று கேட்டு அவளின் புறம் திரும்பி புருவத்தை உயர்த்தினான்.
“சரிதான். எனக்கு என் குழந்தை போதும்! வேற யாரும் வேண்டாம்னு தான் நினைச்சிருந்தேன். இப்பவும் உங்களை என் கணவரா என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலை…” என்றாள் சாலையை வெறித்தவண்ணம்.
“உன் மனநிலை எனக்குப் புரியுது துளசி. நானும் அதே மனநிலையில் தான் இருக்கேன். கணவன், மனைவியா வாழ தயாராக இல்லாத நாம கல்யாணம் செய்துகிட்டது சரி தானே?” என்று கேட்டான்.
“ம்ம்…” என்று முனகியவள், “நீங்க உரிமையோட எனக்கு எல்லாம் பண்றதை பார்த்து…”
“பயந்துட்டியாக்கும்?” என்று கேட்டு முடித்து வைத்தான்.
“ஆமாம்! கணவன் மனைவியா வாழ விரும்புறீங்க போல… ஆனால், என்னால் அது முடியாதேன்னு பயந்து போயிருந்தேன்…” என்றாள்.
“நீ மட்டுமில்ல, என்னோட பெத்தவங்களும், என் தங்கையும் கூட அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், நீ உட்பட ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க…” என்றவனை ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“நீ என் அத்தை பொண்ணு துளசி. நமக்குள் இருக்கும் அந்த உறவு எப்படி விட்டு போகும்? நீ என் கண்ணு முன்னாடி தடுமாறி விழப்போற… பெத்தவளை இழந்து, தனியா துக்கத்தில் துடிக்கிற… அதை எப்படி நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியும்?
உனக்கு நினைவு இருக்கா… மறந்துட்டியான்னு தெரியலை… நாம சின்ன வயசில் ஒன்னா விளையாடியிருக்கோம். நம்ம வயல்களில் ஒன்னா சுத்தி வந்திருக்கோம். அதெல்லாம் பசுமையான நினைவுகள்…” என்று கண்களை மூடி லயித்துச் சொன்னவனைக் கண்டவளுக்கும் அந்த நினைவுகள் பசுமையென வந்து போயின.
“காலப்போக்கில் நேரில் பார்த்துக்கக் கூட நேரமில்லாமல் அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டு போயிட்டோம். திரும்ப நாம இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கியிருக்கோம். இதை ஒரு பந்தம்னு கூட என்னால் சொல்ல முடியலை. நாம சூழ்நிலை கைதிகள். மத்தவங்களைப் பொறுத்தவரை நாம கணவன், மனைவி!
ஆனால், நாம அத்தை பொண்ணு… மாமா பையன் உறவை மட்டும் பிடிச்சிக்குவோம். என் அத்தை பொண்ணை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதோ… அவளுக்கு எதுவும் வேணும்னா வாங்கிக் கொடுப்பதோ… செய்ய எனக்கு உரிமை இருக்கு. அதை நீயும் தடை சொல்லாதே! உனக்குத் தேவையானதை என்கிட்ட தயங்காம கேளு…” என்று முடித்து வைத்தான் அகத்தியன்.
இத்தனை நாட்களில் இப்போதுதான் துளசியின் முகம் லேசாக மலர்ந்தது.
எங்கே அவன் தன்னிடம் கணவனாக உரிமை எடுத்துக் கொள்வானோ… அவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிர்த்து அவனைத் தவிக்க வைக்க வேண்டியது வருமோ? எனப் பயந்து போயிருந்தவளுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
இந்தத் திருமணத்திற்கு அவளால் ஆரம்பத்தில் சம்மதமே சொல்ல முடியவில்லை. ஆனால், அவளின் அன்னையின் கெஞ்சல், நாளுக்கு நாள் அதிகரித்த அவளைப் பற்றிய அவரின் கவலை, அதனால் நலிந்த அவரின் உடல், கண்களில் ஜீவனைத் தேக்கி, சம்மதிக்க மாட்டாயா? என்று அவர் பார்த்த பார்வை… அவரின் கடைசி ஆசையில் வந்து நிற்க, வேறு வழியே இல்லாமல் சம்மதம் தெரிவித்திருந்தாள்.
ஆனாலும், மாமா மகனின் வாழ்க்கையில் நுழைந்து அவனின் வாழ்க்கைக்குத் தீங்கிழைத்து விட்டோமோ… என்ற உறுத்தல் அவளுக்குள் இருந்து குடைந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த உறுத்தல் காணாமல் போயிருந்தது.
அதே நிம்மதியுடன் இருவரும் மருத்துவமனை சென்றனர்.
“நீங்க இங்க வெயிட் பண்றீங்களா, நான் போய் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்?” என்று மருத்துவரை பார்க்க சொல்லும்முன் அகத்தியனிடம் கேட்டாள் துளசி.
“சரி, போயிட்டு வா…” என்று அனுப்பி வைத்தான்.
பரிசோதனையை எல்லாம் துளசி முடித்துவிட்டு வந்த போது, அவளின் முகம் லேசாக வாட்டம் கொண்டிருப்பது போலிருக்க, அருகில் சென்றவன், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? டாக்டர் என்ன சொன்னாங்க? பாப்பா நல்லாருக்குத்தானே?” என்று வரிசையாக விசாரித்தான்.
“பதட்டப்படாதீங்க, பாப்பா நல்லாருக்கு. எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்றாள் துளசி.
“அப்புறம் ஏன் உன் முகம் சோர்வா இருக்கு? உன்கிட்ட டாக்டர் எதுவும் சொல்லலையா? நான் வேணும்னா உள்ளே போய் விசாரிச்சுட்டு வரட்டுமா?” என்று கேட்டான்.
அவளின் முகத்தில் சோர்வு மட்டும் இல்லாமல், ஏதோ கவலையும் இருப்பது போல் இருந்தது. அதனாலேயே மீண்டும் மீண்டும் விசாரித்தான்.
தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ? என்று கூட நினைத்தான்.
“டாக்டர்கிட்ட எல்லாம் விசாரிக்கப் போக வேண்டாம்ங்க. நானே எல்லாம் தெளிவா விசாரிச்சிட்டேன். எனக்குத்தான் லேசா பிரசர் கூடியிருக்குன்னு சொல்றாங்க. பிரசவத்துக்குள்ள இன்னும் கூடாம பார்த்துக்கணுமாம்…” என்று விவரம் தெரிவித்தாள்.
“அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் தான் காரணமா இருக்கும். இனி எதை நினைச்சும் கவலைப்படாதே துளசி…” என்றான்.
“எனக்கு என்னோட குழந்தை பத்திரமா வேணும். அதுக்காகவே நான் இன்னும் கவனமா இருப்பேன்…” என்றாள்.
“டாக்டர் மருந்து எழுதி கொடுத்திருக்காங்களா? மருந்து சீட் எங்க? கொடு, நான் போய் வாங்கிட்டு வர்றேன்…” என்றான்.
அவன் கணவன் என்று உரிமையுடன் கேட்டிருந்தால் கட்டாயம் தயங்கியிருப்பாள். ஆனால், அப்படி இல்லை என்பதை அவன் தெளிவாக்கியிருக்க, தயங்காமல் மருந்து சீட்டை கொடுத்தவள், கூடவே பணத்தையும் கொடுத்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர, அவனும் மறுப்பு சொல்லவில்லை.
அவளை அமர சொல்லிவிட்டு, மருத்துவமனையிலிருந்த மருந்தகத்தில் மருந்தை வாங்கி வந்து கொடுத்தான்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பியதும், “உனக்கு ரொம்ப டயர்டா இருக்கா துளசி?” என்று கேட்டான்.
“இல்லையே… ஏன் கேட்கிறீங்க?” துளசி கேட்க,
“நம்ம ஷாப்பில் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. ஒரு மணி நேரம் வேலை. அதுவரைக்கும் உன்னால் வெயிட் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
“உங்களுக்கு வேலை இருந்தால் நீங்க போய்ப் பாருங்க. நான் பஸ்ஸை பிடிச்சு ஊருக்குப் போய்க்கிறேன்…” என்றாள் துளசி.
“நீ பஸ்ஸில் எல்லாம் அலைய வேண்டாம். உனக்கு வெயிட் பண்ண கஷ்டமா இருக்கும்னா நாம இப்பவே ஊருக்குக் கிளம்பலாம். நான் அப்புறமா வந்து கூட என் வேலை பார்த்துக்கிறேன்…” என்றான்.
“எனக்குக் கஷ்டமா எல்லாம் இல்லை. என்னால் உங்க வேலை கெடுதேன்னு பார்த்தேன்…” என்று துளசி சொல்ல,
“என்னோட வேலையெல்லாம் எதுவும் கெடலை துளசி. நான் கடைக்கு வரலைனாலும் வேலை அது பாட்டுக்கு நடக்கும். கல்யாணம், அத்தை இறப்பு, காரியம்னு நாலு நாளா நான் ஷாப் பக்கமே வரலை. அதான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு, சில கணக்குகள் இருக்கு… அதைக் கவனிச்சுட்டு வரணும்…” என்றான் அகத்தியன்.
“சரிங்க, பார்த்துட்டே போகலாம்…” என்றாள் துளசி.
சற்று நேரத்தில் தென்காசியில் தான் நடத்திக் கொண்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் முன் காரை நிறுத்தினான் அகத்தியன்.
‘கோல்டன் சூப்பர் மார்க்கெட்’ என்ற பெயருடன் தரை தளம், முதல் மாடியுடன் ஒடுக்கமாக இல்லாமல் நன்கு விசாலமாகவே இருந்தது.
ஏழு வருடங்களாக அந்தச் சூப்பர் மார்க்கெட்டை அகத்தியன் நடத்தி வருகிறான். தந்தை அவர்களின் வயல்களைப் பார்த்துக் கொள்ள, அவனின் பெரும்பான்மையான உழைப்பை அந்தப் பெரும் அங்காடியில் போட்டான் அவன். தினம் தனது கிராமத்திலிருந்து தென்காசிக்கு வந்து செல்வான். அவனின் முன்னேற்றத்திற்குப் பிறகும் அவன் ஏன் கிராமத்தில் இருக்க வேண்டும்? தென்காசியிலேயே ஒரு வீட்டை கட்டி இருக்கலாமே என்று கூட அவனின் உறவினர்கள் கேட்டதுண்டு. ஆனால், அவன் கிராமத்தை விட்டு, பிறந்த வீட்டை விட்டு வரத் தயாராக இல்லை. தென்காசிக்கு வந்து செல்ல வசதியாக ஒரு காரை மட்டும் வாங்கிக் கொண்டான்.
“அண்ணா வாங்க… அண்ணி, வாங்க… வாங்க…” என்று அங்கே ஐந்து வருடங்களாக வேலை பார்க்கும் ஊழியனான கபிலன் வரவேற்றான்.
“என்னடா, வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று அவனிடம் அகத்தியன் விசாரிக்க,
“அதுக்கு என்னண்ணா… சூப்பரா போகுது. அண்ணி நம்ம கடைக்கு முதல்முறையா வந்திருக்காங்க. எங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்க மாட்டிங்களா அண்ணா?” என்று உரிமையுடன் கேட்டான் கபிலன்.
“உன்னைத் துளசிக்கு தெரியாதா என்ன?அவள் இதுக்கு முன்னாடி இங்க வந்ததில்லையா என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவன், திரும்பி அவளைப் பார்த்தான்.
“தெரியும்! நான் தென்காசியில் வேலை பார்த்தபோது, வேலை முடிஞ்சு போகும் போது எதுவும் வாங்கணும்னா இங்கே வந்து வாங்கிட்டு போவேனே…” என்றாள் துளசி.
“அப்ப நீங்க கஸ்டமரா வந்து போவீங்க அண்ணி. இப்ப இந்தக் கடைக்கு ஓனரா வந்திருக்கீங்களே…” என்றான் கபிலன்.
‘தான் இந்தக் கடைக்கு ஓனர் இல்லை, தங்கள் இருவருக்கும் மனதளவில் எந்தக் கணவன் மனைவி பந்தமும் இல்லை’ என்பதைச் சொல்ல முடியாமல் லேசாகப் புன்னகைத்து மட்டும் வைத்தாள் துளசி.
“இவன் கபிலன் துளசி, நம்மகிட்ட அஞ்சு வருசமா வேலை பார்க்கிறான். நல்ல பொறுப்பான பையன். நான் கடைக்கு வரலைனாலும் இவன் எல்லா அப்டேட்டும் எனக்குச் சரியா கொடுத்திருவான்…” என்று அறிமுகப்படுத்தி வைத்த அகத்தியன், “துளசியைச் செக்கப் அழைச்சுட்டு போயிட்டு வர்றேன்டா கபிலா. டயர்டா இருப்பாள். நான் என் ரூமுக்கு அழைச்சுட்டு போறேன். குடிக்க ஏதாவது கொடுத்து விடு!” என்று சொல்லிவிட்டு துளசியை அங்கே இருந்த அலுவலக அறைக்குள் அழைத்துப் போனான்.
ஒருபக்கம் மறைவாகச் சின்னக் கதவு இருந்தது. ஆனால், உள்ளே மேஜை, நாற்காலி, கணினி, குளிரூட்டி எனச் சகல வசதிகளுடன் இருந்தது. விளக்கை போட்டதும் அறை பளிச்சென்று தெரிய, துளசி கண்களை உருட்டி பார்த்துக் கொண்டே வந்தாள்.
“உட்கார் துளசி…” என்று அவளை அமர சொல்லிவிட்டு, எதிரே இருந்த தன் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
“வெளியே இருந்து பார்க்க இந்த ரூம் ஸ்டோர் ரூம்னு நினைச்சேன்…” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தாள் துளசி.
“ஸ்டோர் ரூமும் தனியா இருக்கு… நான் கணக்கு வழக்கு பார்க்க இந்த ரூம் யூஸ் பண்ணுவேன். யாரும் என்னை மீட் பண்ணி பிஸ்னஸ் பேசுவதை எல்லாம் இந்த ரூமில் வச்சுப்பேன்…” என்றான்.
“பிஸ்னஸ் பேச வருவாங்களா?” துளசி கேட்க,
“ஆமாம், சிலர் அவங்களே தயாரிக்கும் மசாலா, ஸ்னாக்ஸ் ஐட்டம் எல்லாம் இங்கே விக்க டீல் பேச வருவாங்க…” என்றான்.
அவளிடம் பேசிக்கொண்டே கணினியை திறந்து ஏதோ வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அப்போது கதவு தட்டப்பட, “யெஸ்…” என்று குரல் கொடுத்தான்.
“அண்ணா, நம்மகிட்ட இருக்கும் கூல்ட்ரிங்ஸ் எல்லாம் அண்ணிக்கு சேருமோ என்னவோ… அதான் இரண்டு கடை தள்ளி இருக்கும் ஜூஸ் கடையில் பிரெஸ் ஜூஸ் வாங்கிட்டு வந்துட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே வாங்கி வந்த பழச்சாறை துளசியிடம் கொடுத்தான் கபிலன்.
“நல்லதுடா!” என்றவன், “பார்த்தியா, நான் கூட உனக்கு என்ன கொடுத்தால் சரியா இருக்கும்னு யோசிக்காமல் விட்டுட்டேன். ஆனால், அவன் எப்படி யோசிச்சு வாங்கியிருக்கான் பார்… கெட்டிக்காரன். இவன் இங்க வேலை பார்ப்பதால்தான் நான் இத்தனை நாள் இந்தப் பக்கம் வராமல் சமாளிக்க முடிஞ்சது…” என்றான் துளசியிடம்.
துளசி மென்புன்னகை புரிய, “அட, என்னை ரொம்பத் தான் ஓட்டுறீங்கண்ணா…” என்று சமாளிப்பாகச் சிரித்துக்கொண்டே வெளியே சென்றான் கபிலன்.
“நீ ஜூஸை குடி துளசி. நான் இந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்…” என்ற அகத்தியன் கணினியில் வேலையில் மூழ்கிப் போனான்.
அகத்தியன் சொன்னது போல் ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு, துளசியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். ஊருக்கு செல்வதற்கு முன், துளசியைக் காரிலேயே அமர சொல்லிவிட்டு ஒரு ஃபர்னிச்சர் கடைக்குள் நுழைந்தவன், சிறிது நேரத்தில் வெளியே வந்தான்.
அவன் இரவு மகளிடம் சொன்னது நினைவில் இருக்க, என்ன வாங்க சென்றான் என்று அவன் சொல்லாமலே துளசிக்கு புரிந்து போனது.
இருவரும் வீடு போய்ச் சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே அகத்தியன் வாங்கியிருந்த மெத்தை வீடு வந்து சேர்ந்தது.
“இது எதுக்கு?” என்று பார்த்ததும் சாமந்தி கேள்வி எழுப்ப,
“என் ரூமில் போட வாங்கினேன்மா…” என்றான் அகத்தியன்.
“அதுதான் எதுக்கு? ஏன் உன் பொண்டாட்டி உன் பக்கத்தில் படுக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?” என்று வெடுக்கென்று கேட்டார்.
“அம்மா…” என்று அகத்தியன் குரலை உயர்த்திய நேரத்தில், “என்ன சாமந்தி, எதுக்கு வரம்பு இல்லாம பேசிட்டு இருக்க?” என்று கேட்டபடி வெளியே சென்றிருந்த வேலாயுதம் உள்ளே வந்தார்.
“அவளை இவனுக்குக் கட்டி வைக்காதீங்கனு தலை தலையா அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா? இப்ப பாருங்க… அவ இவன் பக்கத்தில் கூடப் படுக்க மாட்டிங்கிறா போல… தனி மெத்தை வாங்கிட்டு வந்துருக்கான்…” என்று சாமந்தி கணவரிடம் கத்தினார்.
வேலாயுதம் மகனை பார்த்தார்.
“அப்பா, முன்னாடி பாப்பா மட்டும் தான் என்கூட இருந்தாள். இப்ப துளசி இருக்காள். கூடிய சீக்கிரம் ஒரு குட்டி பாப்பாவும் வரும். இரண்டு குழந்தைங்களை வச்சிக்கிட்டு எங்களுக்கும் கொஞ்சம் பிரைவைசி வேண்டாமா? எல்லாத்தையுமா உங்ககிட்ட விளக்க முடியும்? எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க. அது நடந்துருச்சு. வேற என்ன வேணும்? அதுக்குப் பிறகும் எல்லாத்திலும் தலையிட்டா எப்படி?” என்று அகத்தியன் அன்னையின் பேச்சில் எழுந்த எரிச்சலை மறத்துக் கொண்டு பதிலுரைக்க,
“அவன் தேவைக்கு என்னவோ வாங்கிட்டுப் போறான். நீ எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்கச் சாமந்தி? நம்ம பிள்ளைங்க சூழ்நிலையையும் புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கி இருக்கப் பாரு. எல்லாத்திலும் மூக்கை நுழைக்காதே!” என்று மனைவியை அதட்டிய வேலாயுதம், துளசிக்கு மருத்துவர் என்ன சொன்னார் என்பதை மட்டும் மகனிடம் விசாரித்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
அறைக்குள் சென்ற அகத்தியன் பெருமூச்சை இழுத்துவிட்டான்.
அவர்கள் பேசுவதை அறைக்குள் அமர்ந்து கேட்டிருந்த துளசி அவனின் முகத்தைப் பார்த்தாள்.
அவனின் பார்வையும் அவளைத் தீண்டியது.
‘பெரியவர்களை எத்தனை நாட்கள் இப்படிச் சமாளிக்க முடியும்?’ என்ற கேள்வி இருவரின் கண்ணிலும் தொக்கி நின்றது.