Chithra Venkatesan
Writer✍️
புதிர் 7
காலையில் பஞ்சாயத்து குறித்து தகவல் வந்ததிலிருந்து கோபமான மனநிலையில் இருந்தாள் தீபஞ்சனா. அதே மனநிலையில் திலீபனையும் எதிர்பார்த்திருந்தாள். தேவப்பிரதாவும் வேலை முடித்து வீடு வந்தவள் தமையனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர்களை அதிகம் காக்க வைக்காமல் திலீபன் வேலையிலிருந்து வரவும்,
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? உன்னிடம் வந்து என் புருஷனோட சேர்த்து வைன்னு நான் கேட்டேனா? எதுக்கு இப்போ பஞ்சாயத்தை கூட்டின?” என்று தீபஞ்சனா கோபமாக கேள்வி கேட்க,
“நீ சொல்லித்தான் நான் செய்யணுமா? ஒரு அண்ணனா உன் வாழ்க்கையில் எனக்கு அக்கறை இல்லையா தீபா, தானா இந்த பிரச்சனை சரியாகும்னு நினைச்சா அது எப்போ சரியாகறது? அதான் இப்படி செய்தேன்.” என்று திலீபன் பதில் கூறினான்.
“அப்படியே புதுசா தங்கை மேல அக்கறை வந்துடுச்சோ, நீ செய்த காரியம் தான் என்னை இந்த இடத்தில் வந்து நிறுத்தியிருக்கு, அப்போக்கூட இது எல்லாம் என் தலைவிதி என்பது போலத்தான் போயிட்டு இருக்கேன். இதில் புதுசா எந்த குழப்பமும் செய்யாத, தயவு செய்து உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்.” என்று அவள் கையெடுத்து கும்பிட,
“இப்போதைக்கு உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கணும்னா பஞ்சாயத்து மூலம் தான் நடக்கணும் தீபா,” என்று திலீபன் அப்போதும் அதையே கூறிக் கொண்டிருக்கவும்,
“அவங்க மேல மட்டும் தான் தப்பா? முதலில் தப்பு உன் பக்கமிருந்து தான் ஆரம்பிச்சிது, இப்போ பஞ்சாயத்தில் மொத்தமா வெட்டி விட்டுடலாம்னு சொன்னா என்ன செய்வ? இல்லை அக்கா அந்த வீட்டுக்குப் போகணும்னா நீயும் திவ்யா அண்ணியோட வாழணும்னு சொன்னா என்ன செய்வ?” என்று தேவப்பிரதா கேட்டாள்.
“அப்போ தான் தீபா அந்த வீட்டில் வாழுவான்னா அதுக்கும் நான் தயாரா தான் இருக்கேன்.” என்றான் திலீபன்.
“அப்போ தீக்ஷனா? அவளோட நிலைமை என்னாகும்?” என்று தீபஞ்சனா கேட்க, திலீபன் மௌனத்தையே பதிலாக கொடுக்கவும்,
“தீக்ஷனாவை பிரிஞ்சு திவ்யாவை கல்யாணம் செய்துக்கிட்ட, அடுத்து திவ்யா வேண்டாம்னு தீக்ஷனாவோட போன, இப்போ திரும்ப தீக்ஷனாவை விட்டுட்டு திவ்யாவோட வாழப் போறேன்னு சொல்ற, இல்லை ரெண்டுப்பேரோடவும் வாழற எண்ணத்தில் இருக்கீயா? உன் கூட பிறந்ததையே நான் கேவலமா நினைக்கிறேன்.” என்றவள்,
“இங்கப்பாரு ஒரு நிலையான மனசில்லாதவனா நீ இஷ்டத்துக்கு முடிவெடுத்திட்டு அதுக்கு என் வாழ்க்கையை காரணம் சொல்லாத, நீ என்ன முடிவெடுத்தாலும் சரி என்னால திரும்ப அந்த வீட்டில் போய் வாழ முடியாது. அப்படியேன்னாலும் எங்க பிரச்சனையை நாங்க தீர்த்துக்கிறோம்,” என்று தீபஞ்சனா கூறியதற்கு,
“எப்படி தீர்க்கப் போற, பிள்ளையையும் புருஷனையும் நினைச்சுக்கிட்டு இப்படியே வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கப் போறீயா? உன்னைப்பத்தி கவலையில்லாம திரு குழந்தை மட்டும் போதும்னு இருக்கார். அதைப்பார்த்துக்கிட்டு என்னால இனியும் சும்மா இருக்க முடியாது. இந்த பஞ்சாயத்து நடந்தே ஆகணும்,” என்று திலீபனும் தீர்மானமாக கூறினான்.
“அப்படியா? அப்போ என் முடிவு என்னன்னு அந்த பஞ்சாயத்திலேயே நான் பேசிக்கிறேன்.” என்று தீபஞ்சனாவும் உறுதியாக கூறிவிட்டு சென்றாள்.
அவள் அங்கிருந்து சென்றதும், “அண்ணா, அக்கா வாழ்க்கையை சரி செய்ய நீ ஏதாவது செய்வன்னு நினைச்சேன். ஆனா நீ இப்படி ஒரு காரியம் செய்திருப்பன்னு நினைக்கல, நம்ம வீட்டுப் பிரச்சனை பஞ்சாயத்து வரைக்கும் போகணுமா?” என்று தேவப்பிரதா கேட்க,
“அவங்க வீட்டிலிருந்து அப்பா இறப்புக்கு யாரும் வரல, அப்போதே இந்த பிரச்சனை எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு, நான் தப்பு செய்திருக்கேன் தான், இல்லைன்னு சொல்லல, ஆனா அதுக்கு தீபாவையும் வீட்டை விட்டு துரத்திட்டாங்க, திவ்யா விஷயத்திலும் எந்த முடிவும் எடுக்காம இருக்காங்க, இதுக்கு முடிவு தான் என்ன? இதை பொதுவில் வைத்துக் கேட்டு தெரிஞ்சிக்கிட்டா தானே தீர்வு கிடைக்கும், திருவை விடு, புகழையாவது தீபா கூட சேர்க்க இந்த பஞ்சாயத்து அவசியம் தான் தேவா,” என்று திலீபன் கூற, தேவப்பிரதா குழப்பத்துடனே இருந்தாள்.
இங்கே இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதேநேரம் அங்கே திருமந்திரன் வீட்டிலும் இதே பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது. அனைவரும் வீட்டிற்கு வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்தனர். “திவி வேண்டாம்னு இன்னொரு பொண்ணோட போனவன், இப்போ எதுக்கு பஞ்சாயத்தை கூட்டியிருக்கான். அவனுக்கே தன் தங்கையோட வாழ்க்கையில் அக்கறை இருந்தா இப்படி செய்திருப்பானா? அப்படியிருக்க எந்த தைரியத்தில் இந்த பஞ்சாயத்தை கூட்டியிருக்கான். அவனை அப்போ நாம சும்மா விட்டது தான் தப்பு, அப்பவே அவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்திருந்திருக்கணும்,” என்று திகழ்பரதன் தான் கோபமாக கத்திக் கொண்டிருந்தான். திருமந்திரன் பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருக்க,
“இதுவும் நல்லதுக்கு தான் திகழ், அவங்க கூட்டின அதே பஞ்சாயத்தில் அந்த குடும்ப சங்காத்தமே வேண்டாம்னு மொத்தமா வெட்டி விட்டுடலாம், அதுதான் நல்லது.” என்று தமயந்தி கூறவும், திரு அமைதியாய் அவரை ஒருபார்வை பார்த்தான்.
அவரது பதிலில் திவ்யரூபா கொஞ்சம் அதிர்ச்சியானவள், “அம்மா அவசரப்படாதீங்க, ஒருவேளை திலீபன் என்னோட வாழ தயாரா இருந்தா அப்போ அண்ணியையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்கலாம்,” என்று சொல்லவும், திருமந்திரன் அவளையும் ஒருபார்வை பார்த்தான்.
திவ்யரூபாவின் பேச்சில் அதிர்ந்த தமயந்தியோ, “உனக்கு என்னடி பைத்தியமா? அவனோட வாழணும்னு சொல்ற,” என்று கேட்க,
“அதானே திவிம்மா, அவனோட நீ ஏன் திரும்பி வாழணும், அவனை உன் வாழ்க்கையில் இருந்து சுத்தமா விலக்கி விட்றது தான் உனக்கு நல்லது.” என்றான் திகழ்பரதன்.
“அப்படி உடனே என்னால மனசை மாத்திக்க முடியாது ண்ணா, நீங்க எல்லாம் பார்த்து தானே அந்த சம்பந்தத்தை முடிச்சீங்க, நீங்க அமைச்சு கொடுத்தது நல்லதா அமையும்னு தானே நம்பினேன். இப்போ அப்படி இல்லன்னு சொன்னா அதை என்னால ஏத்துக்க முடியாது. மொத்தமா வெட்டி தான் விடப் போறீங்கன்ன பரவாயில்லை. ஆனா அடுத்து என் வாழ்க்கையில் எந்த நல்லதும் எனக்கு வேண்டாம், இந்த வீட்டுப் பொண்ணாவே நான் அப்படியே வாழ்ந்துட்டுப் போயிட்றேன். இதுவா? அதுவா? நீங்களே முடிவு செய்துக்கோங்க,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
“என்ன ண்ணா, இவ இப்படி பேசிட்டுப் போறா?” என்று திகழ் திருவிடம் கேட்க,
“அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா ஒருத்தொருக்கொருத்தர் அனுசரிச்சுப் போவாங்கன்னு அப்பா சொல்லவும் தான், நானும் அப்போ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா இப்போ என்னடான்னா என் வாழ்க்கை நல்லா இல்லையா? உன் வாழ்க்கையும் நல்லா இருக்க கூடாது. நான் நல்லா வாழ்ந்தா நீயும் நல்லா வாழலாம் என்பது போலத்தான் இப்போ போயிட்டு இருக்கு, ஆனா இதில் இப்போ பாதிக்கப்பட்றது என் மகனின் எதிர்காலம் தான்,
இந்த சின்ன வயசுல அம்மாவை பிரிஞ்சு இருக்கணும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா, வீட்டுக்கு மூத்த மகனா போயிட்டதால தங்கையோட வாழ்க்கை இப்படி இருக்கும்போது, என் மனைவி, என் குழந்தைன்னு என்னால சுயநலமா யோசிக்க முடியாம தத்தளிச்சிட்டு இருக்கேன். ஆனா அவ பேசிட்டுப் போறதை பார்த்தீயா? அதான் பஞ்சாயத்தை கூட்டியாச்சே, அங்கேயே அதுக்கான தீர்வு கிடைக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு, பிள்ளையை தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றுவிட்டான்.
ஆனால் அப்போதே இந்த பஞ்சாயத்ததின் முடிவு அவன் மனைவி இந்த வீட்டிற்கு வருவதாக தான் இருக்க வேண்டுமென்று மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.
தமையன் பேசிவிட்டு சென்றதற்கு திகழ்பரதனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இதில் தமையனது வாழ்க்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதும் புரிந்தது. தமையனுக்கு மட்டும் தானா? என்று நினைத்தவன், பின் உடன்பிறந்த இருவரின் வாழ்க்கையும் சரியானால் தான் தன்னைப் பற்றி நினைக்க முடியும் என்று நினைத்து வருத்தத்தை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
பின் இத்தனை பேச்சுக்கும் தினகரன் அமைதியாக இருக்கவும், “என்ன ப்பா நீங்க எதுவும் சொல்லாம இருக்கீங்க,” என்று தந்தையிடம் கேட்க,
அவர் என்ன பதில் கூறுவார்? பிள்ளைகள் நல்லப்படியாக வாழ வேண்டுமென்று தான் நினைத்தார். ஆனால் என்னென்னவோ நடந்துவிட்டது. சிலது எதிர்பார்க்காதது என்றால், சிலது நடந்திருக்க வேண்டாமென்பது இப்போது தான் புரிகிறது. அதனால், “பஞ்சாயத்தில் வச்சே பேசிக்குவோம்,” என்று மட்டும் மகனிடம் கூறினார்.
அதைக்கேட்டு, “என்னங்க, இப்படி சொல்றீங்க?” என்று தமயந்தி அதிர்ச்சியாக கேட்க,
“வேற என்ன செய்ய சொல்ற தமயந்தி, மருமக விஷயத்தில் நாம கொஞ்சம் நிதானமா நடந்திருந்திருந்தா, இன்னைக்கு இந்த பஞ்சாயத்தும் கூடியிருக்காது. திவி மனசையும் மாத்த முயற்சி செய்திருக்கலாம், இப்போ அவ பேசிட்டுப் போறதை பார்த்தீயா? இன்னொருபக்கம் நம்ம மகனையும் யோசிக்கணுமில்ல, இதெல்லாம் எனக்கு கொஞ்சம் லேட்டா தான் புரியுது. இப்போ நிலைமை நம்ம கைமீறிப் போயிடுச்சு,” என்றார் தினகரன். உண்மையும் அதுதானே, நடந்த சம்பவங்களால் எப்போதோ இரண்டு வீட்டிலும் மகிழ்ச்சி என்பது தொலைந்து போயிருக்க, இப்போதோ கொஞ்ச நஞ்ச நிம்மதியும் காணாமல் போயிருந்தது. இந்த பஞ்சாயத்து என்ற பேச்சால் நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் முன்பு நடந்தவைகளை நினைத்துப் பார்க்க தான் தோன்றியது அனைவருக்கும்,
பெண் கொடுத்து பெண் எடுத்தாலும் இது ஜோடிகளுக்கும் ஜாதக பொருத்தம் பார்த்து தான் பரிசம் போட்டனர். ஆனால் அந்த ஜாதகப்படி, ஒருமாதம் கழித்து முதலில் திருமந்திரன், தீபஞ்சனா திருமணமும் அதன்பின் ஒருவாரம் கழித்து திலீபன், திவ்யரூபா திருமணத்தையும் நிச்சயம் செய்திருந்தனர். இரண்டு திருமணங்களுக்கிடையே இந்த ஒருவார கால இடைவெளி யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. மகள் திருமணம் முதலில் நடக்கவில்லையே என்ற சுணக்கம் தமயந்திக்கு இருந்தாலும் அவரும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ஒருமாத இடைவெளி அனைவருக்கும் திருமண வேலைகள் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இந்த ஒருமாத காலத்தில் மூன்று முறை தான் திரு தீபஞ்சனாவை அழைத்துப் பேசினான். அவளுக்கோ தயக்கத்தில் அவனுடன் அதிகம் பேசமாட்டாள். அவனது கேள்விகளுக்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் தான் பதில் கூறுவாள். அவனுமே திருமணம் முடியட்டும் என பொறுமை காத்தான்.
ஆனால் இந்த பேச்சுகள் கூட திலீபன், திவ்யரூபாவிடம் இல்லை. அவளுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் திருமணம் முடியட்டும் என்றுதானிருந்தாள். காத்திருப்பும் ஒரு சுகம் என்று நினைத்திருந்தாள்.
View attachment 202
ஒருமாத காலம் கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிட, முதலில் திருமந்திரன் தீபஞ்சனா திருமணம் இனிதாக நடந்தேறி முடிந்தது. அன்று இரவு தம்பதிகளுக்கு கிடைத்த தனிமையில், தீபஞ்சனா படப்பாய் காணப்பட்டாள். அவளை கட்டிலில் தன் அருகில் அமர்த்திக் கொண்ட திருவோ, “என்ன என்னைப் பார்த்தாலே பயப்பட்ற? நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்.” என்று அவன் கேட்டதும்,
“அய்யோ பயமெல்லாம் இல்லை, என்னன்னு தெரியல ஒருமாதிரி படபடப்பா இருக்கு,” என்றாள்.
“அது ஏன்னு எனக்கு தெரியும், நான் எப்படி நடந்துப்பேனோன்னு தானே உனக்கு பயம்?”என்று அவன் கிறக்கமாக கேட்க, அவன் கேள்வியில் நாணத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.
“என்னிடம் எதுக்கு உனக்கு வெட்கம், உன்னோட வெட்கம், பயம்,” எல்லோத்தையும் எப்படி போக்கணும்னு எனக்கு தெரியும், அதுக்கு முன்ன நாம கொஞ்சநேரம் பேசுவோம், போனில் பேசனப்பல்லாம் ஒத்த வார்த்தையில் தான் பதில் பேசிட்டு இருக்க,
முதலில் என்னைப்பத்தி சொல்றேன். சின்ன வயசிலிருந்து இப்போ வரை பெருசா எந்த கஷ்டமும் இருந்ததில்லை. என்னத்தான் அப்பா, அம்மா இருந்தாலும் வீட்டுக்கு மூத்த மகனா சில பொறுப்புகள் இருக்குன்னு உணர்ந்து தான் நடந்துப்பேன். அதேபோல தொழிலையும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் என்பது தான் என்னோட நோக்கமா இருந்தது. எப்படியோ திவிக்கு முடிஞ்சு ரெண்டு மூனு வருஷத்துக்குப் பிறகு தான் என் கல்யாணப் பேச்சை ஆரம்பிப்பாங்கன்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு என் மனைவியா நீ என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க,” என்றவன்,
“உன்னைப்பத்தி சொல்லு,” என்று கேட்க,
“என்னைப்பத்தி பெருசா சொல்ல என்ன இருக்கு, குடும்பத்தை தாண்டி பெருசா எதுவும் தெரியாது. காலேஜ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டுப்பேர் இருந்தாங்க, எப்போயாச்சும் பேசிப்போம், ஆனா அவங்களுக்கும் போன வருஷம் கல்யாணம் ஆனதிலிருந்து அதுகூட பேசிக்கறதில்ல, படிக்கும்போது நல்ல வேலைக்குப் போகணும், அப்பாக்கு உதவியா இருக்கணும்னு ஆசை இருந்தது. ஆனா அம்மா இறந்ததும் வீட்டைப் பார்த்துக்க வேண்டிய சூழல். அப்பா, அண்ணாவிடம் மரியாதை கலந்த பாசம் இருக்கும், தேவா எனக்கு அடுத்து என்பதால் கொஞ்சம் நெருக்கம்.
எப்படியோ முதலில் எனக்கு தான் கல்யாணம் செய்வாங்கன்னு தெரியும், ஆனா முதலில் நீங்க தான் பொண்ணுன்னு என்னைப் பார்க்க வந்தது. உங்களோடவே கல்யாணம் நடந்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்றாள். அவளை இதைவிட அதிக மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று அப்போதே நினைத்துக் கொண்டவன், மேலும் சிறிதுநேரம் அவளை மனம்விட்டு பேச வைத்தான்.
பின், “இப்போ பதட்டம் குறைஞ்சுதா?” என்று கேட்டவன்,
“குறையலன்னா குறைய வைக்க இன்னொரு வழி இருக்கு,” என்று சொல்லி, அவளின் கைகளை பிடித்து முத்தமிட்டான். அவனது முதல் முத்தத்தில் அவள் உடல் சிலிர்த்துப் போக, அவனோ அவள் மேனியெங்கும் அங்கங்கே முத்தமிட்டு அவளை மேலும் மேலும் சிலிர்க்க வைத்தவன், அவளின் இதழ்களில் அழுத்தமான முத்தத்தை பதிக்கவும், அவளும் அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள். அதுவே அவனுக்கு மேலும் முன்னேற ஒரு வழி அமைத்துக் கொடுக்க, அடுத்து அங்கே இரண்டு உடல்களின் சங்கமத்தில் இனிதாய் அவர்களின் இல்லற வாழ்க்கை ஆரம்பமானது.
அடுத்த ஒருவாரம் தம்பதிகளாய் அவர்களுக்கு எப்படி ஓடிப் போனதென்றே தெரியவில்லை. அத்தனையும் இனிமையான நாட்கள். ஆனாலும் பொறுப்பாய் திருமண வேலைகளிலும் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை மணமக்கள் அழைப்பு, அடுத்து வரவேற்பு என்று எல்லாம் நல்லப்படியாக நடந்து முடிந்தது. திலீபன் அனைத்து நிகழ்வுகளிலும் பிடித்தமில்லாமல் வேண்டா வெறுப்பாக தான் கலந்து கொண்டான். அனைத்தும் முடிந்து அவனுக்காக ஒதுக்கப்பட்ட அவனது அறைக்கு வந்தபோது அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. தீக்ஷனா தான் அவனை அழைத்திருந்தாள்.
புதிர் விலகும்…