• Copyright ©️ 2019 - 2024 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைகோர்த்து 05

  • Thread starter Thread starter mayil
  • Start date Start date
  • Replies Replies 1
  • Views Views 197

mayil

Writer✍️
சொந்த ஊரான திங்களுருக்கு வந்திருந்தனர் துளசியின் குடும்பத்தவர்கள் . அவள் இந்தியாவுக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது இப்போது. அத்தோடு லூக்காஸ் கனடா திரும்பி ஐந்து நாட்கள் தான் ஆகிறது .

துளசி ஓடிவந்து தாத்தாவையும் பாட்டியையும் கட்டிக்கொண்டாள். எல்லோர் கண்களும் ஒரு கணம் கலங்கியது.அப்போது பக்கத்து வீட்டிலிருந்து விரைந்து வந்தார் அத்தை தங்கேஸ்வரி.

” துளசி நல்லா இருக்கியாடா…இப்பதான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா உனக்கு” என்றபடி அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டார் .

நடப்பவை எல்லாவற்றையும் தங்கள் வீட்டு படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் திருச்செல்வம்.துளசி குடும்பத்தின் இந்த அபரிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டு அவர் திகைத்து நின்றது ஒருபுறம். இப்படி ஒரு உயர்ந்த நிலையை துளசி குடும்பம் அடையும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவர்.

இதில் தன் மகனின் உதவி துளசிக்கு கிடைத்தது பற்றி அவர் இன்றுவரை அறிந்திருக்கவில்லை.அது பற்றி காந்தன் தன் இன்னும் பெற்றோரிடம் வாய் திறக்கவில்லை.

“மாமா நல்லா இருக்கீங்களா” என்று கேட்டபடி வந்தாள் துளசி.

“நல்லா இருக்கேன் துளசி. நீ ரொம்ப பெரிய பிசினஸ் வுமன் ஆயிட்ட மாமாவுக்கு சந்தோசம் தான்”என்றபடி அவள் என் தலையை தடவிக் கொடுத்தார்.அவரின் செய்கையில் துளசி மனம் ஆச்சரியம் கொண்டது.ஏதோ ஒரு மூலையில் தன் மீது அவருக்கு பாசம் இருப்பதை அவரது செய்கை உணர்த்தியது அவளுக்கு.

மதிய உணவை தாத்தா பாட்டியுடன் முடித்துக்கொண்ட துளசி சாவியை பிடித்தவாறு பின் பகுதியில் இருக்கும் தங்கள் வீட்டை நோக்கி நடந்தாள்.வீட்டை நெருங்கும் சமயம் அவள் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு சஞ்சலம் மனதில் வந்து போனது.

கீழ் அடுக்கு பழைய வடிவில் இருக்க மேற்கூரையை மட்டும் அகற்றி புதிதாக மேலே தளம் எழுப்பி புதிதாக நான்கு அறைகளுடன் கூடிய இரண்டு அடுக்கு மாடி வீடாக இப்போது மாறியிருக்கிறது அவளது வீடு.

வீட்டை திறந்து உள்ளே போனவள் தனது அறைக்குள் சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள் . ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் பெருகியது. பதினைந்து வயது துளசியின் பள்ளி தோற்றம் இப்போது அவள் கண் முன்னே வந்து சென்றது.எத்தனை போராட்டங்கள் எத்தனை வீண் பேச்சுக்கள் என்று எல்லாம் பணத்துக்காக தானே என்ற சிந்தனை மட்டும் மனதில் ஓடியது

குடும்பத்தில் மூத்த பெண் குழந்தையாக பிறந்தது தான் அவள் செய்த தவறா . ஒரு அண்ணனோ தம்பியோ எனக்கு இருந்திருந்தால் என் வாழ்க்கையும் வேறு விதமாக அமைந்திருக்குமோ என்ற கேள்வி அவளது மனதில் சட்டென்று தோன்றி மறைந்தது.

பாட்டியின் பராமரிப்பில் வீடு மிகவும் நேர்த்தியாக இருந்தது. இரவு தங்கள் வீட்டில் தங்குவதாக துளசி குடும்பம் முடிவு செய்தபோது தாத்தாவின் வற்புறுத்தலால் பாட்டி வீட்டில் அவர்களோடு தங்குவதாக இறுதியில் முடிவு செய்யப்பட்டது.

பாட்டி வீட்டில், மாமா அத்தை மகள் சித்திரா அவள் கணவன் சிவகுமார் மகள் பூர்வி எல்லோரும் துளசி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அத்தை மகள் சித்ராவும் அவள் கணவனும் திங்களூரில் உள்ள தளபாட ஷோரூம்களை பார்த்துக் கொள்கின்றனர்.அத்தோடு காந்தன் மலேசியாவில் தற்போது இருப்பதால் அவனின் தொழில்களும் திருச்செல்வத்தின் மேற்பார்வையில் உள்ளது . இந்த வருடம் அவனும் ஊருக்கு வந்து குடியேற இருக்கிறான்.

எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். “ஏம்பா திருச்செல்வம் காந்தனுக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு.அடுத்து முரளிக்கு நம்ம துளசியை பார்க்கலாமே “என்று பேச்சோடு பேச்சாக சொன்னார் பாட்டி.

பாட்டி சொன்னதை கேட்டதும் துளசியின் தங்கை தயாபரி திடுக்கிட்டு போனவளாய் தமக்கையை நிமிர்ந்து பார்த்தாள் .

“இவ இப்ப எதுக்கு என்னை பாக்குறா” என்று நினைத்தாள் துளசி.

“அம்மாச்சி இப்ப எதுக்கு இந்த பேச்சு .நாளைக்கு கோயிலுக்கு பொங்கல் வைக்கும் வேலையை பாருங்க . லாங் டிரைவ் பண்ணி வந்தது ஒரே அலுப்பா இருக்கு. போய் தூங்குங்க எல்லோரும்” என்று பேச்சை முடித்து வைக்க எண்ணினாள்.

“கொஞ்சம் பொறு துளசி பாட்டி என்ன சொல்றாங்கன்னு முழுசா கேளு. அப்புறம் போய் தூங்கு நீ” என்று உடனே சொன்னார் அத்தை தங்கேஸ்வரி.

நிலைமையை உணர்ந்து கொண்டார் பொன்வண்ணன்.

“அம்மா நாளைக்கு பேசிக்கலாம் இப்ப பிள்ளைகளை தூங்க விடுங்க” என்றபடி படுக்கை அறையை நோக்கி நடந்தார்.இதுதான் தக்க சமயம் என்று உணர்ந்த துளசியும் தங்கைகளும் தங்களது படுக்கையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினர்.

“அம்மா நாளைக்கு இதுக்கு நீ ஒரு முடிவு எடுக்கிற சரியா”என்று தாயைப் பார்த்து சொன்னார் தங்கேஸ்வரி.

“என்னங்க நான் சொல்லுறது” என்று திரு செல்வத்தை நோக்கி திரும்பினார் தங்கேஸ்வரி.

“எதற்கும் முரளியை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க “என்றபடி அவர் வீட்டை நோக்கி நடந்தார்.இப்படியாக அவர்கள் பாட்டி தொடங்கிய பேச்சு முடிவு எடுக்கப்படாமல் தொடர்கதை ஆனது.

ரூமுக்குள் வந்த துளசிக்கு யோசனை முரளி பற்றிய பேச்சு வந்த போது எதற்கு தங்கை தன்னை அப்படிப் பார்த்தாள் என்ற கேள்வி தோன்ற உடனே காந்தனுக்கு போன் போட்டாள்.

சென்னையில் இருந்தபோது துளசி ஊருக்கு வந்ததை அறிந்து ஒரு முறை முரளி வந்து பார்த்துச் சென்றான் .அவன் இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறான். அவன் ஒரு நரம்பியல் நிபுணர்(நியூரோலொஜிஸ்ட் ).எதிர்காலத்தில் திங்களூரில் ஒரு ஹாஸ்பிடல் நிறுவுவதே அவனது திட்டம்.அதற்கான இடம் கூட வாங்கியாகிவிட்டது.

“என்ன துளசி திங்களூர் காத்து மலேசியாவை நோக்கி வீசுது” என்று வேடிக்கையாக தொடங்கிய காந்தனின் தொலைபேசி உரையாடல் “துளசி ஏதாவது பிரச்சினையா” என்று அவனது இயல்பான அக்கறை தலைதூக்க தொடர்ந்து கேட்டான் அவளிடம்.

“இல்லை அத்தான்…… அம்மாச்சி முரளி அத்தானுக்கு மேரேஜ் பண்றது பத்தி பேசினாங்க. அப்போ தயாபரி திடுக்கிட்டு என்னை பார்த்தாளா…. அதுதான் முரளிக்கும் தயாரிக்கும் ஏதோ ஒரு லைன் கனெக்சன் ஓடுதுன்னு நினைக்கிறேன். உங்களுக்கு இதைப் பற்றி தெரியாமல் இருக்காது ஏதாவது தெரியுமா,? அப்படின்னு தான் போன் பண்ணினேன்.என்றாள் துளசி.

“ஆமா துளசி நீ யோசிக்கிறது சரிதான். நம்ம முரளி சார் ஒரு வருஷத்துக்கு முன்ன நம்ம தயாவுக்கு ப்ரொபோஸ் பண்ணினானாம். பட் அவ என் அக்கா சொல்லுறவனதான் கட்டிப்பேன்னும் ஃபர்ஸ்ட் படிச்சு டாக்டர் ஆகிறது தான் தன்னுடைய அம்பிஷன்னும் சொன்னாளாம். அதனால சார் ரொம்ப அப்செட்.நீதான் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும் சரியா”என்றான் சிரித்தபடியே காந்தன்.

“ஓஹோ இப்படி ஒரு கதை இருக்கா அதுதான் மேடம் ஆப்செட்டா?சரி விடுங்க , காதல் புறாக்களை பிரிச்ச பாவம் நமக்கு எதுக்கு அத்தான் நானே அப்பா கிட்ட பேசுறேன்”.

“அதுக்கு முன்னாடி உன் மேரேஜ் பத்தி ஒரு முடிவு எடுக்காமல் மாமா கிட்ட இத பத்தி பேசாத துளசி.உனக்கு யாரையாவது பிடித்து இருக்கா சொல்லு….” என்று காந்தன் சொன்னதும் குறுக்கிட்டாள் அவன் மனைவி வாணி.

“துளசி உனக்கு விஷ்ணு தான் கரெக்ட் ஃபேர்.பேசாம நீ அவனையே கட்டிக்க” என்றாள்

“அக்கா எதுக்கு உங்களுக்கு இந்த கொலைவெறி . எத்தனை நாளா என்னை பழிவாங்க இந்தப் பிளானை போட்டீங்க நீங்க.இது தனியா உங்களோட பிளானா இல்ல உங்க வீட்டுக்காரரும் சேர்ந்து போட்ட பிளானா மேடம்” என்றாள் துளசி நக்கலாக.

வாணிக்கும் காந்தனுக்கும் ஒரே வயது. அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று இன்று வரை துளசி அறிந்திருக்கவில்லை.அரேஞ் மேரேஜ் போல விஷ்ணுவால் எல்லோரிடமும் காட்டப்பட்டிருந்தது. காந்தன் வாணி விஷ்ணு மூவருக்கு நல்ல நண்பர்கள் என துளசி அறியமாடடாள்.

“துளசி…. என்னை இதில் இழுக்காதே. இது வாணியோட பிளான் மட்டும் தான். என்னதான் விஷ்ணு என்னோட பிரண்டா இருந்தாலும் நான் எப்பவும் உன் சைட் தான் . பி ஸ்ரோங் ஓகே” என்று நீண்டது அவர்களின் பேச்சு.

அதேநேரம் தயாபரி தனது அறையில் யோசனையோடு படுத்திருந்தாள் . பாட்டியின் பேச்சு அவளை கலக்கமடையச் செய்தது. முரளியை பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் தமக்கையோடு சேர்த்து வைத்து பேசுவதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மனம் விட்டு முரளியோடு பேசி விடுவது தான் நல்லது என்று கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.தன்னை மீறி கலங்கிய மனதினை கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் கண்ணீரோடு உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவளையும் அறியாது முரளிக்கு அழைத்து விட்டாள் .

“தயா குட்டி எதுக்கு கூப்பிட்டீங்க? அத்தான் கூட பேசணும்ன்னு இப்பதான் தோணிச்சா”என மகிழ்ச்சி பொங்க வந்தது அவன் குரல் .

அவள் விக்கல் மேலிட அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது அவனுக்கு கேட்டது.

“தயா என்ன ஆச்சு எதுக்கு அழறே….என்னம்மா”என்றான் பரிவோடு.

“அத்தான்…… அது வந்து பாட்டி……… என்று பேச முடியாது வார்த்தை தடுமாறி நின்றாள்.

“ஓ… பாட்டி என் மேரேஜ் பத்தி பேசினாங்களா…. அதுக்கு நீ அழுவியா?நீ தான் உங்க அக்கா சொல்றவன கட்டிக்கிற ஆளாச்சே. அப்புறம் என்ன. எனக்கு ஓகே சொன்னியா இல்லையே” என்றான் கோபத்தோடு.

அவளிடம் இருந்து பதில் வராததைக் கண்டு கொண்டவன்

.”சரி இப்ப எனக்கு ஓகே சொல்றியா” என்றான் பிடிவாதமாய்.

“ம்ம் “என்று மட்டும் சொன்னாள்.

“ஹேய் நிஜமா தானா “ என்றான் மகிழ்ச்சியோடு கத்தியபடி.அப்புறம் என்ன அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே போனது.

“சரி நீ நிம்மதியா படுத்து தூங்கு. நான் எல்லாம் பாத்துக்குறேன் ஓகே. டெய்லி அத்தான் கூட பேசு சரியா.காந்தன் கிட்ட விஷயத்தைச் சொன்னா அவன் துளசி கூட பேசுவான் . ஒன்னும் பயப்படாத.லவ் யூ டி செல்ல குட்டி.” என்றான் முரளி .

தங்கள் காதல் கைகூடிய மகிழ்ச்சியில் பேச்சை தொடர்ந்தன இந்த இரண்டு காதல் உள்ளங்கள்.
 

Latest threads

Back
Top Bottom